வியாழன், 24 ஜூலை, 2014

சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை ! கோடம்பாக்கம் மாபியாக்கள் கையில் ?

தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்குள் இயக்குனர் ராம் அடைந்த மனவருத்தங்களை உணர்வது அவ்வளவு எளிதல்ல என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். ஜிகர்தண்டா திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதால், தற்போது தன்னைப் போலவே துன்பப்பட்டுவரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆறுதல் கூறி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் இயக்குனர் ராம்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு,தங்களின் படம் “ஜிகர்தண்டா” அறிவித்த தேதியில் இருந்து (ஜீலை 25) அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போவதாக இப்போதுதான் கேள்விபட்டேன்.தங்கமீன்கள் வெளிவருவதாக தினசரி இதழ்களில் விளம்பரம் வந்த தேதி ஜீலை 26, போன வருடம்.  கோடம்பாக்கம் மாபியாக்களை மீறி பல படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன அதில் அங்காடி தெருவும் ஒன்று

ஆனால் அதுவும் தள்ளிப் போனது. இறுதியில் ஆகஸ்ட் 30ல் திரைக்கு வந்தது.தின செய்தித்தாள்களில் தேதியிட்டு விளம்பரம் வந்தபின் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் சொன்ன தேதி சொன்ன நேரம் வந்து சேரும் என்று நாம் சொல்லிய பின் தேதி மாறினால் எத்தனை மனவருத்தம் ஏற்படும் என்பதையும் அது எத்தனை பெரிய சுமையாய் அழுத்தும் என்பதையும் போன வருடம் இதே நாட்களில் நான் உணர்ந்தேன். அனுபவித்தேன்.
ஏன் தள்ளிப் போனது என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சொல்லச் சொல்ல என்ன எரிச்சல் ஏற்படும் என்பதையும் கண்டுணர்ந்தேன்.இன்றைய உங்களின் இரவு எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. கவலைப்படாதீர்கள், தடைகளை தாண்டி பெருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்கும். சாதனையாக மாறும்.உங்களின் “பீட்சா” இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள் மதுரைக்கு ஜிகர்தண்டா எப்படியோ அப்படி தமிழ் சினிமாவிற்கு உங்கள் ஜிகர்தண்டா இருக்கும் என நான் நம்புகிறேன்.>பிரியங்களுடன் ராம்(’போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை’, என்ற வார்த்தையைக் கேட்டாலே பத்திகிட்டு வருது. எப்பத்தான் மாறுமோ?)

கருத்துகள் இல்லை: