செவ்வாய், 15 ஜனவரி, 2013

போலி பத்திர விவகாரம் அல்லது மன்னார்குடி மோசடி விவகாரம்

“அந்த பணம் நம்மதுதான்”கடலை வியாபாரி ராமலிங்கத்தை ஏதோ ஒரு கேஸில் உள்ளே போட ஏன் இந்த துடிப்பு?

Viruvirupu
“அந்த பணம் நம்மதுதான்”
தமது அமெரிக்க கருவூலப்பத்திரங்கள் மூலம் திடீரென பணக்காரராகி ஊர்மக்களையும், டில்லி வருமானவரி துறையினரையும் கவர்ந்துவிட்ட தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கத்தை எப்படியாவது கைது செய்து விடுவதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமன்றி, தமிழக அரசுகூட, இவரை உள்ளே தள்ளுவதில் குறியாக உள்ளது. (ஏன் திடீரென்று?)
ரூ.27,500 கோடி அமெரிக்க கருவூலப்பத்திரங்கள் போலியானவை என்று பார்க்ளேஸ் வங்கி சொன்னாலும், இன்னமும் எழுத்து பூர்வமாக கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அது வந்து சேர்ந்தால், மத்திய அரசால் அவர் கைது செய்யப்படுவார் என்கிறார்கள். (எப்படி? அந்த பத்திரங்களை வைத்து யாரையும் ஏமாற்றவிவையே?)
தமிழக அரசு தன் பங்குக்கு அவர் மீதுள்ள பழைய வழக்கை தூசி தட்டத் தொடங்கியுள்ளது.
ராமலிங்கம் பழைய வியாபாரத்தின்போது மன்னார்குடியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரை ரூ. 5,500க்கு மோசடி செய்திருந்தார் என்பதே பழைய வழக்கு. (அந்த தொகை 4 லட்சம் என்று வேறு ஒரு தகவல் உண்டு) இந்த தொகையை அவர் திருப்பி கொடுக்காததால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கில் ராமலிங்கம், “என்னிடம் எதுவுமே இல்ரை” என்று கோர்ட்டு மூலம் திவால் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இப்போது, ரூ.27,500 கோடி அமெரிக்க கருவூலப்பத்திரங்கள் நிஜமானவை. அவை என்னுடையவைதான் என்கிறார். அதை வைத்துக்கொண்டு, இவரை பிடித்து உள்ளே போடலாமா என விசாரித்து வருகிறது, தாராபுரம் போலீஸ்.
மொத்தத்தில், போலி பத்திர விவகாரம் அல்லது மன்னார்குடி மோசடி விவகாரம் என ஏதாவது ஒரு வழக்கில் ராமலிங்கத்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவது புரிகிறது.
இதற்குள் ‘வேறு கதை’ ஏதோ ஒன்று நிஜமாக உள்ளது.

கருத்துகள் இல்லை: