வெள்ளி, 28 ஜூலை, 2023

சுய இன்பம் இரு பாலாருக்கும் நல்லதா? சுய இன்பம் பற்றிய உண்மை விளக்கம்

zeenews.india.com - Yuvashree : ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல்-காமம் போன்றவை தவிர்க்க முடியாத உணர்வுகள். அதிலும் காமம் என்று வந்துவிட்டால் இச்சை கொள்வதில் ஆண்களை பெண்கள் மிஞ்சிவிடுவதாக ஒரு கருத்து உள்ளது.
ஆண்கள்தான் அதிகம் சுய இன்பம் அடைவர் என நாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், பெண்களுக்குள்ளும் அடிக்கடி சுய இன்பம் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும், சமூக கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்கள் இது குறித்து அதிகம் பேசுவதில்லை. உண்மையாகவே சுய இன்பம் நம் உடலுக்கு நண்மை பயக்கிறதா..?
இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன..?
 இங்கே தெரிந்து கொள்வோம்.
சுய இன்பம் என்றால் என்ன..?


சுயஇன்பம் என்பது பாலுறவு இன்பம் அல்லது உச்சியை அடைவதற்காக ஒருவரின் சொந்த பிறப்புறுப்புகளைத் தொடுவது. இது, பாலியல் சுய-தூண்டுதலை விவரிக்கப் பயன்படும் சொல். தனிநபர்கள் தங்கள் பாலுணர்வை ஆராய்வதற்கும் அவர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இது ஒரு சாதாரண மற்றும் ஆரோக்கியமான வழியாக பார்க்கப்படுகிறது. இதை நல்ல முறையில் செய்தால் உடலுக்கு நன்மைகளும் அடிக்கடி செய்தால் பின்விளைவுகளும் ஏற்படுகின்றன. முதலின் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க | மின்னல் வேகத்தில் எடை குறைய வேண்டுமா? இந்த ஸ்பெஷல் பானத்தை குடிக்கவும்

சுய இன்பத்தால் ஏற்படும் நன்மைகள்:
ஆண்களுக்கு ஏற்படும் பலன்கள்:

-ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோயை சுய இன்பம் குறைப்பதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

-ஆண்களை பொருத்தவரை, சுய இன்பம் அவர்களின் உச்ச நிலையை அடைய உதவுவதுடன் அவர்களின் இல்லற வாழ்வையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுமாம்.

-படுக்கையறையில் தங்கள் பார்ட்னருடன் நீண்ட நேரம் உடலுறவு புரிய சுய இன்பம் ஆண்களுக்கு உதவும் என சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

-சில சமயங்களில் ஆண்களுக்கு தூக்கம் வரவழைக்கவும் சுய இன்பம் உதவுகிறதாம்.
-மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சுய இன்பம் குறைக்கும்.
பெண்களுக்கான பலன்கள்:
-படுக்கையறை சுகத்தை அதிகரிக்க உதவும்.

-மாதவிடாய் சமயங்களில் வயிற்று வலியை கட்டுப்படுத்த சுய இன்பம் உதவுவதாக கூறப்படுகிறது .
-ஆண்களை போலவே பெண்களுக்கும் சுய இன்பம் நீண்ட நேரம் உடலுறவு புரிய உதவுகிறது.
-உடலில் நிதானத்தை கொண்டு வரலாம்.
-பெண்களுக்கு அவர்களின் உச்சநிலையை அடைய உடலுறவு உதவாத சமயங்களில் கைக்கொடுக்கிறது சுய இன்பம்.

அதிக சுய இன்பம்:
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு சிலருக்கு சுய இன்பம் என்பது அதிக அளவில் செய்ய வேண்டும் என்று தோன்று. இது பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளில் கொண்டு போய் விடும். அல்லது அடிக்கடி உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஆண்கள்:
-அடிக்கடி சுய இன்பம் அடைவது உங்களின் படுக்கையறை வாழ்க்கையை பாதிக்கும்.
-இயற்கையான உடலுறவை உங்களால் அனுபவிக்க முடியாமல் போகலாம்.
-அதிக சுய இன்பம் உங்களுக்குள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
-தனிப்படுத்தப்படுவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
-உங்கள் பார்ட்னருடன் ஆன உறவை அதிக சுய இன்பம் கெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பெண்கள்:
-பெண்கள் அதிகம் சுய இன்பம் செய்வதால் அவர்களுக்கு உடலுறவில் பெரிதும் ஆர்வம் இல்லாமல் போகலாம்.

-இயற்கையான படுக்கையறை வாழ்க்கையை அதிக சுய இன்பம் பாதிக்கும்.
-அதிக சுய இன்பம், உள்ளுக்குள் இருக்கும் கோபம், குற்ற உணர்வு போன்ற விஷயங்களை தூண்டி விடலாம்.
-இதுவே உங்கள் இயல்பு வாழ்வை பாதிக்க நேரலாம்.
 

கருத்துகள் இல்லை: