திருப்பூர்: சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாடகி சின்மயி. இவர் டிவிட்டர்,
பேஸ்புக் வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக
அளித்த புகாரின்பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார், அவிநாசியைச் சேர்ந்த
ராஜன் என்கிற ராதாமணாளன் என்பவரை கைது செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில்
ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் இருக்கும் அவர் மீது
கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 1ம் தேதி அவிநாசி, கைகாட்டிப்புதூரில் உள்ள அவரது வீட்டில்
சோதனையிட்ட போலீசார், லேப்டாப், சி.டி.க்கள், இணைய தள இணைப்புக்கான மோடம்
உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. விசாரணை தொடர்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக