ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பல்கலைத்தென்றல் சிறிதர் பிச்சையப்பா காலமானார்.
20.02.2010 - சனிக்கிழமை
எமது நாட்டின் கலைத்துறையை பல்வேறு இடங்களுக்கு எடுத்துச்சென்ற கலைஞர்களுள் ஒருவரான பல்கலைத்தென்றல் என அழைக்கப்படும் சிறிதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை எட்டு மணியளவில் கொழும்பில் காலமானார்.
பிரபல நாடகக் கலைஞராக எழுத்தாளராக நடிகராக பாடகராக பாடலாசிரியராக இயக்குனராக மிமிக்ரி கலைஞராக மற்றும் ஓவியராக என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு தன்னை முழுமையாகக் கலைத்தாய்க்கு அர்ப்பணித்தவர் சிறிதர் பிச்சையப்பா. இறக்கும்போது அவருக்கு வயது 47.
ஈழத்து இலக்கியத்திறக்கு அடித்தளமிட்டுக் கொடுத்த கலை இலக்கியவாதிகளில் பெரும் மதிப்பிற்குரிய ஒரு தார்மீகக் கலைஞர் சிறிதர் பிச்சையப்பா. இலங்கையின் சிறந்த நாடகக் கலைஞரான அவர் தனக்கென்று ஒரு துறையில் தடம் பதிக்காமல் முழு கலையுலகையுமே தனது ஆளுமையின் கீழ் வைத்திருந்த, இலங்கையின் புகழ்மிக்க மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தொகுத்து வந்த வானொலி மாமாதான் சிறிதரின் கலையுலக வாழ்வுக்கு வழி சமைத்துக் கொடுத்தவராவார்.

தனியே நாடகத்துறை என்றில்லாமல் ஆயகலை அறுபத்திநான்கையும் தனக்குள்ளே புதைத்து வைத்துத் திறம்பட செயற்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டிருந்த அவர் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே அனைத்துக் கலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற பாரதியின் கூற்றுக்கு ஒரு முறை எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய இவர் மெல்லத் தமிழ் இனிச் சாகாது ஆனால் பாதிப்பு வரும். அதனையும் தன்னால் மாற்றியமைக்க முடியும் என தன்னம்பிக்கையுடன் தெரிவித்து செயற்பட்ட தமிழ் கலைஞராவார்.

சிங்கள தொலைக்காட்சி நாடகங்களைக் கூட ஒரு காலத்தில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய சிறிதர் இலங்கையின் ஈழத்தவர் கலையம்சத்தை தென்னிந்திய கலைத்துறையுடன் ஒப்பிட்டுக் கூறும் அளவுக்கு தொண்ணூறுகளில் தென்னிந்திய திரையுலகின் பின்னணியில் ஈழத்துப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். தமிழுக்காகவும் தனக்காகவும் எதிர்காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு ஒரு இறுவெட்டு ஒரு தொலைக்காட்சி நாடகம் ஆகிய மூன்றையும் தனது பெயரில் வெளியிட வேண்டும் என்பதே இவரது இறுதி ஆசையாக இருந்தது.

சிறிதர் பிச்சையப்பா என்ற இம்மாபெரும் கஞைன் புலிகளின் தாக்குதலில் தனது ஒரு கண்ணை இழந்தவர் என்ற விடயம் பலரும் மறந்துவிட்ட நிகழ்வாகும். காரைதீவில் இடம்பெற்ற இசைநிழ்ச்சி ஒன்றில் அவர் கலைக்குழுவினருடன் பங்குபற்றிக் கொண்டிருந்தபோது புலிகள் நடாத்திய கைக்குண்டுத் தாக்குதலில் தனது ஒரு கண்ணை பறிகொடுத்தபோதும் தனது கலைவாழ்க்கையிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.

சிறிதர் பிச்சையப்பா என்ற மாபெரும் கலைஞரின் மறைவு ஈழத்துக் கலையுலகுக்குப் பேரிழப்பு என்பது நிதர்சனமானது என்றால் கூட அது மிகையல்ல. சிறிதரது பூதவுடல் கொழும்பு போதனா வைத்தியசாலையில் இருந்து எடுத்துவரப்பட்டு செக்கட்டித் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.

கருத்துகள் இல்லை: