செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

இருதரப்புமே அடிப்படைவாத கூட்டம்தான்... உண்மையில் அந்த பிள்ளைகள் அப்பாவிகள்.

 Rubasangary Veerasingam Gnanasangary :  அவரவர் விரும்பிய உடைகள் அணிவது அவரவர் விருப்பம்.
புலி பட்டியலில் பாராளுமன்றம் சென்ற தங்கேஸ்வரி கதிராமன் ஒருநாள் பஞ்சாபியோட (தப்பா நினைச்சிடாதேங்க - சுரிதார் உடை அணிந்து),
 பாராளுமன்றம் சென்றபோது dress code மீறப் பட்டிருந்தமையால் அவருக்கு அமர்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப் பட்டிருந்தது.
இந்த வீடியோவில் உள்ள இஸ்லாமிய மாணவிகளும் அந்த பாடசாலையின் சீர் உடையை அணியவில்லை. அதி தீவிர இந்து வலதுசாரிகள் மாணவர்களைத் தூண்டி அந்த மாணவிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
இது சமகாலத்தில் கர்நாடகாவின் உடுப்பியில் நடந்து வருகிறது.
என்னைப் பொருத்தமட்டில் இருதரப்புமே அடிப்படைவாத கூட்டம்தான்.


இந்த உடை விடயத்தில் என்னால் யார் பக்கமும் நிற்க முடியாது.
நீங்கள் சிறுபான்மை மதக் குழுவினர் என்கின்ற காரணத்தினால் மட்டும் உங்க அடிப்படைவாத பிற்போக்குத் தனங்களுக்கு ஆதரவாக இருக்க முடியாது.
அதை காரணமாக வைத்தே மறுதரப்புத் தீவிரவாதம்  பலம் பெறும். அதனால் மனிதநேயம் மட்டுமே பெரிய பின்னடைவுகளை சந்திக்கும்.
உண்மையில் அந்த பிள்ளைகள் அப்பாவிகள். மதம் என்னும் பேயே எல்லாவற்றுக்கும் காரணம்.
Being a minority is not a privilage.
நாளைக்கே நீங்க பெரும்பாண்மை ஆகினால் எங்களையும் பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாது என்பீங்க. எங்கள் மீதும் சரியா சட்டத்தை திணிப்பீங்க.

கருத்துகள் இல்லை: