ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

'தம்பிகளை பார்த்துக்கோங்க' சித்தியின் உச்சகட்ட கொடுமை: தஞ்சை மாணவி வழக்கில் திருப்பம்

tamil.samayam.com : தஞ்சை கிறிஸ்துவ பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட மாணவி தனது சித்தியால் அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்ததும் விடுதியில் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டதற்கு கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கான அழுத்தமே காரணம் என்று பாஜகவினரும், இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை அவசர அவசரமாக எடுத்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தற்போது அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.


இந்நிலையில், தற்கொலை காரணம் குறித்து பரபரப்பப்பட்டு வரும் மத காரணங்களுக்கு மத்தியில், லாவண்யா தனது இரண்டாவது தாயான சித்தி சரண்யாவால் அனுபவித்த சித்ரவதைகளை குறித்து பாட்டி அங்கயற்கரசி தழுதழுத்த குரலால் விவரித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் வடுக்கர்பட்டியைச் சேர்ந்தவர் அங்கயற்கரசி. இவரது மகள் கனிமொழி. கனிமொழிக்கு தனது 16 வயதிலேயே முருகானந்தம் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் லாவண்யாவும் இரு மகன்களும். இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு லாவண்யாவின் தாய் கனிமொழி தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னர் முருகானந்தம் சரண்யாவை உடனடியாக இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லாவண்யாவின் பாட்டி அங்கயற்கரசி, பேத்தி, பேரன்கள் மூன்று பேரின் வாழ்க்கையை நினைத்து பார்க்காமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மருமகனிடம் முறையிட்டுள்ளார். மேலும், நாங்கள் வரதட்சணையாக கொடுத்த நிலத்தை பேர பிள்ளைகள் மீது எழுதி வையுங்கள் என்றும் கேட்டுள்ளார். ஆனால், முருகானந்தம் அதற்கு சம்மதிக்கவில்லை. லாவண்யாவின் தாத்தாவும் அதற்காக போராடி பார்த்துள்ளார். இந்நிலையில், தாத்தா, பாட்டியிடம் இருந்து மூன்று பிள்ளைகளையும் முருகானந்தனும் சித்தி சரண்யாவும் பிரிக்க முடிவு செய்துள்ளனர்.
முருகானந்தன் சரண்யாவுடன் அதே கிராமத்தில் வசித்து வந்தாலும், பேரக்குழந்தைகளிடம் பேசாமல், பார்க்காமல் தாத்தா பாட்டி இருவரும் இருந்துள்ளனர். ஏன்? என்று அங்கயற்கரசியிடம் கேட்டதற்கு, ''
சரண்யா வந்த பிறகு சில நாட்கள் பேரக்குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடன் பேசியதற்காகவும், என் வீட்டிற்குச் சென்றதற்காகவும் பேரக்குழந்தைகளை சரண்யா தொடர்ந்து அடித்து தாக்கினார். அதனால் நான் அவர்களுடன் பேசுவதையும் அவர்களின் தெருவில் செல்வதையும் நிறுத்தினேன். என்னால் என் பேரக்குழந்தைகள் அடிபடுவதை நான் விரும்பவில்லை, ”என்று அவர் கூறினார்.

மேலும், லாவண்யா இறந்த பிறகு, போலீஸ் இரண்டு முறை என் வீட்டிற்கு வந்து, சித்திரவதை பற்றி எனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டார்கள். நான் அதே ஊரில் வசிக்க வேண்டியிருப்பதாலும், முருகானந்தம் உறவினர் என்பதாலும் எனக்கு எதுவும் தெரியாது என்றேன். ஆனால், போலீசார் ஏற்கனவே இந்த விவரங்களை சேகரித்துள்ளனர், என்னால் மறைக்க முடியவில்லை, எனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர்களிடம் கூறினேன். நான் எதற்கும் பொய் சொல்லவில்லை, பயப்பட வேண்டியதில்லை'' என தெரிவித்தார்.


அத்துடன் லாவண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நானும், என் கணவரும், என் இளைய மகனும் பேத்தியை பார்க்கச் சென்றோம். அவள் அதிகம் பேசவில்லை, ஆனால் அவள் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று என்னிடம் கேட்டாள். நான் அவளுக்கு பால் வாங்கி கொடுத்தேன். ஏம்மா இப்படி பண்ணிட்டே? என்று எனது மகன் கேட்டதற்கு, அவள் எந்த பதிலும் கூறவில்லை. இரு தம்பிகளை கவனித்துக் கொள்ளுமாறு மட்டும் என் மகனைக் கேட்டுக்கொண்டாள், ” என்று அங்கையற்கரசி நினைவு கூர்ந்தார்.

மேலும், கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வரும் வரை தனது மூன்று பேரக்குழந்தைகள் கிராமத்தில் இல்லை என்று கூறிய அங்கயற்கரசி “லாவண்யா ஒரு உறைவிடப் பள்ளியில் கொண்டு விடப்பட்டார் என்றும் இரண்டு பேரன்கள் பக்கத்து கிராமத்தில் உள்ள அவர்களின் அத்தை வீட்டில் விடப்பட்டதாகவும் கூறினார்.

ஊரடங்கின்போது ஒருநாள் லாவண்யா இங்கே இருந்தபோது, தண்ணீர் எடுப்பதற்காக வந்திருந்தாள். நான் அவளை அடையாளம் காணவில்லை. ஆனால், அவள் என்னை அடையாளம் கண்டு பேசினார் என்று கூறிய அங்கயற்கரசி, அதற்காகவும், லாவண்யாவை சரண்யா தாக்கியதாக தெரிவித்தார். முன்னதாக, லாவண்யாவின் கையில் தீக்காயமும், கன்னத்தில் தாக்கப்பட்ட காயங்களும் இருந்தன. அதுகுறித்து கேட்டபோது, லாவண்யா எதையோ திருடிவிட்டதாக கூறி, சித்தி சரண்யா பேத்தியின் உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றி தண்டனை கொடுத்ததாகவும், கடுமையாக அடித்து தாக்கியதாகவும் தெரிவித்தார் என பாட்டி அங்கயற்கரசி விளக்கினார்.

கருத்துகள் இல்லை: