
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி வரும் வெள்ளிக் கிழமைக்குள் அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். சென்னை போலீசார் லீனாவை கைது செய்த போது அவரது வீட்டில் 12க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த கார்கள் எப்படி வாங்கப்பட்டது என்று போலீசார் லீனாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கார்கள் அனைத்தும் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லீனாவிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்
செய்யப்பட்டுள்ள முன்னணி மலையாள நடிகை லீனா மரியாபால் கார்களை திருடி விற்பது தனது தொழிலாக கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. காதல் கணவருடன் இணைந்து சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.19 கோடி பெற்ற அவர், அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி தப்பி ஓடிய அவரை சென்னை போலீசார் கைது செய்தனர். லீனா மரியாவின் காதலன் தப்பி ஓடிவிட்டான். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லீனா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கதறி அழுததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக