

ஈடுபட்டதாகக் கூறி பிரபல நடிகை லீனா மரியா பால் மற்றும் அவரது காதலனை டெல்லி மற்றும் சென்னை போலீசார் நேற்று கைது செய்தனர். டெல்லி பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து ஆயுதங்கள், சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கடிகாரங்களை பறிமுதல் செய்தனர். தேசிய விருது பெற்ற ரெட் சில்லிஸ் மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர் லீனா மரியா பால். மெட்ராஸ் கேப், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கோப்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரது காதலன் பெயர் பாலாஜி. பல்வேறு மோசடிப் புகார்களில் இவர் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இவருடன் சேர்ந்து லீனாவும் மோசடியில் ஈடுபட்டதாக பிரிவு 420, 120பி, 406 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக போலீசார் இருவரையும் தேடி வந்தனர். அப்போதுதான் இருவரும் டெல்லி அருகே பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. 6 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லி பண்ணை வீட்டை முற்றுகையிட்டு, லீனா - பாலாஜியை கைது செய்தது. அப்போது அவர்களிடம் 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 9 சொகுசு கார்கள் மற்றும் 81 விலையுயர்ந்த கைகடிகாரங்களை கைப்பற்றினர். சென்னையில் ரூ 19 கோடியை மோசடி செய்ததாக பாலாஜி - லீனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ 76 லட்சம் மோசடி செய்ததாக மற்றொரு வழக்கும் இவர்கள் இருவர் மீதும் உள்ளது.
tamil.oneindia.i
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக