செவ்வாய், 28 மே, 2013

Oxygen போதாமையால் மருத்துவமனையில்18 குழந்தைகள் மரணம் ஐதராபாத்தில்

Despite India's rapid economic growth, its healthcare system has remained in the doldrums and is struggling
with high rates of child and maternal deaths India accounts for a fifth of all newborn deaths from such preventable diseases as diarrhoea and pneumonia.
சித்தூர்: ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில், நிலோபர் அரசு குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததாலும், மருத்துவர்கள் பற்றாக்குறையாலும் கடந்த 24 மணி நேரத்தில் 18 பச்சிளம் குழந்தைகள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இறந்த குழந்தைகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மருத்துவமனை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுத்தனர். 18 குழந்தைகள் இறந்தது இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: