ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் வேகம் குறைந்து வருகிறது. மூன்றாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தயாநிதி மாறன் மீது எந்தத் தவறும் இல்லை என்று சி.பி.ஐ. சொல்லிவிட்டது. இதன் பின்னணியில் பெரிய அளவில் அரசியல் விளையாட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். மத்திய அமைச்சர் சிதம்பரம், பிரதமர் பெயர்களை கனிமொழியின் வழக்கறிஞர் சொன்ன பின்னர்தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு தீவிரமானால், மத்திய அரசில் உள்ள வி.வி.ஐ.பி.க்கும் பிரச்னை வரும். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவாம். கடந்த ஒன்றாம் தேதியே ஷாமீனில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியை, முப்பெரும் விழாவுக்கு முன்பாக வெளியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் டெல்லியில், இம்மாத இறுதியில்தான் ஷாமீன் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்களாம். அதனால்தான் முப்பெரும் விழா 30-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக