வியாழன், 21 நவம்பர், 2024

EXIT POLL : மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்ற போவது யார்?

 மின்னம்பலம் - christopher  ; மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் இன்று (நவம்பர் 20) முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை வரும் நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பாஜக – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மஹாயுதி கூட்டணி என்ற பெயரில் களமிறங்கின.

புதன், 20 நவம்பர், 2024

நடிகை கஸ்தூரிக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

 மாலை மலர் :  பார்ப்பனர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.
எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மன்னார் அரசு மருத்துவ மனையில் மகப்பேறின் போது தாயும் குழந்தையும் உயிரிழப்பு! முற்றுகையிட்ட மக்கள்.

 தமிழ் மிரர் : மன்னார் அரசு மருத்துவ மனையில் மகப்பேறின் போது தாயும் குழந்தையும் உயிரிழப்பு! இருவரின் உடல்களும்  யாழ் அரசு பொதுமருத்துவ மனைக்கு  அனுப்பி வைப்பு
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் வசிப்பது தினமும் 40 சிகரெட் புகைப்பதற்கு சமம்..

 ராஜா ஜி  :  டெல்லியில் வசிப்பது தினமும் 40 சிகரெட் புகைப்பதற்கு சமம்..
தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?
டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
அரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப்  ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது.
டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது.
 இதனால் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இவை மட்டுமின்றி சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் காற்றின் தரம் தாறுமாறாக குறைந்து வருகிறது.

செளதி அரேபியா: ஃபேஷன் ஷோவில் சீற்றம் அடைந்த இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அடிப்படைவாதிகள் - பின்னணி என்ன?

BBC : சௌதி அரேபியாவில் சமீபத்தில் நடந்த ஃபேஷன் ஷோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஷன் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட மேடையின் வடிவமைப்பு, புனித கபாவின் தோற்றத்தை ஒத்திருந்ததே இந்த சர்ச்சைக்கு காரணம்.
சௌதி அரேபியாவில் நடைபெற்ற ‘ரியாத் சீசன்' என்னும் வருடாந்திர கலாசார விழாவில், மேடை அலங்கரிப்பின் ஒரு பகுதியாக கபாவை ஒத்திருக்கும் கண்ணாடி அமைப்பு ஒன்று வைக்கப்பட்டது.
மெக்காவில் இருக்கும் கபா இஸ்லாமியர்களால் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தார் மனைவி சாய்ரா பானு!

 தினமலர் - நமது நிருபர் : சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்து செல்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் விருது வாங்கிய அவர், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இன்றும் அவர் பிசியாக உள்ளார். 1995ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்தார். திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

ஹரியானாவில் ஹைட்ரஜன் ரயில் விரைவில் சோதனை ஓட்டம் த

Latest Tamil News

தினமலர் : புதுடில்லி, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலின் முதல் சோதனை ஓட்டத்தை, ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் தயாரிக்கப்படுகிறது.

அம்பேத்கர் மலை வாழ் பழங்குடி மக்களுக்கு முழுக்க முழுக்க எதிராக இருந்தார்?

 முகமது ஜமீல் : மலை வாழ் பழங்குடி மக்களுக்கு முழுக்க முழுக்க எதிராக இருந்த அம்பேத்கரை,
 மலைவாழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட அம்பேத்கரை,
 மலைவாழ் மக்களிடம் வம்படியாக திணிக்கும் வேலையை மகா லட்சுமி என்ற ஆசிரியை செய்கிறார்..
தோழர் மகா லட்சுமியின் சேவைக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்..
ஆனால் நீங்கள் முன்னிறுத்தும் அம்பேத்கர் அப்படி பட்டவர் இல்லை.....
பழங்குடியினர் தங்கள் அரசியல் அதிகாரத்தை பெறும் அளவிற்க்கு அறிவு இல்லாதவர்கள் என்றும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு பத்தி தெரியாதுனும் நான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பத்தி பேசல, மேலும் அவர்களுக்கு பிரிட்டீஸ் அரசு கொடுத்து இருந்த இட ஒதுக்கீட்டையும் பறிச்சு இருக்காரு அம்பேத்கர்.  வேணும்னா ஒரு 20 வருசம் கழிச்சு மலைவாழ் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்னு பரிந்துறைக்குறாரு

செவ்வாய், 19 நவம்பர், 2024

அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.100 கோடி கேட்கிறார்கள்” : திண்டுக்கல் சீனிவாசன்!

 மின்னம்பலம் -christopher :  அதிமுக கூட்டணிக்கு வருபவர்கள் ரூ.50 கோடி, ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள் என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று (நவம்பர் 19) தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணியை முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் மாவட்டந்தோறும் கள ஆய்வுக் குழு மூலம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது.
அந்த வகையில் திருச்சி சோமரசம் பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் கள ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இலங்கையின் புதிய கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ! மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர்

news first tamil

 :இலங்கையின் புதிய கடல் தொழில் , நீரியல் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
இவர் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழராவார்.
இவர் தனது கடமையை பொறுப்பேற்ற பின்பு ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியை இந்த காணொளியில் காணலாம் .

அமெரிக்க சட்டமீறல் குடியேற்றவாசிகள் வெளியேற்றம் மற்றும் தேசிய 'அவசரநிலை' பிரகடனம் செய்ய திட்டம் - டொனால்ட் டிரம்ப் அதிரடி

 மாலை மலர் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான குடியேறிகள் மீது கடுமையான போக்கை டிரம்ப் கையாண்டார்.

நடிகை கஸ்தூரிக்கு மாற்றுத்திறனாளி மகன் இருப்பதால் ஜாமீன் வழங்க கோரிக்கை

 மாலை மலர் :  வன்கொடுமை தடுப்பு சட்டம் போல் பிராமணர்களை பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசுகையில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு

Hindu Tamil : சென்னை: ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வீராங்கனை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மேலும், கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.

திங்கள், 18 நவம்பர், 2024

திருச்செந்தூர் கோயிலில் பழம் கொடுக்க வந்தவரை மிதித்த கோயில் யானை தெய்வானை! பாகன் உள்பட 2 பேர் பலி

 tamil.oneindia.com -Mani Singh S : தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை மிதித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 பாகன் மற்றும் அவரது உறவினர் என 2 பேரும் உயிரிழந்துள்ளனர். கோவில் யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. முருகனின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்குகிறது.
இந்த கோவிலில் 25 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையின் பெயர் தெய்வானை.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி ! புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு !

 ilakkiyainfo.com : ஜனாதிபதி அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி ! புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு !
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக  ஜனாதிபதி முன்னிலையில்  பதவியேற்றுக் கொண்டார்.
    பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
    விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக  பதவியேற்றுக் கொண்டார்.
    பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

சென்ற நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞான தீர்க்கதரிசி பெரியார்தான் .. ஆர்த்தர் கிளார்க் அல்ல !

No photo description available.

இன்று வளர்ந்த நிலையில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்ப்புக்களை பற்றி 1938 இலேயே தந்தை பெரியார்  தீர்க்க தரிசனமாக கூறியிள்ளார் .
சென்ற  நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞான தீர்க்கதரிசி பெரியார்தான்  .. ஆர்த்தர் கிளார்க் அல்ல !
இனிவரும் உலகம்"* எனும் தலைப்பில் *" சமுதாய விஞ்ஞானி "தந்தை பெரியார்* அவர்கள் 1938 லேயே கூறியது :
போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமுமாகவே இருக்கும்!
( flight Metro trains high speed cars and bus)
கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்!
(cell phones laptops and tabs)
ரேடியோ ஒவ்வொரு தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்!
( headphones and Bluetooth instruments)
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத் தக்க சவுகரியம் ஏற்படும்!
( WhatsApp and video calling systems)

விஜய் தர்மபுரியில் போட்டி - 2026 சட்டமன்ற தேர்தல் த.வெ.க. தலைவர் தர்மபுரியில் போட்டி ?

 மாலை மலர் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சி கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. த.வெ.க. கொள்கைகள் மற்றும் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய உரை குறித்து அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு மற்றும் ஆதரவுக்குரல் எழுப்பினர்.
கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே, த.வெ.க. கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர்களுக்கு ஆதரவானவர் அல்ல! ஊடகங்கள் எப்போதும் அவரை தவறாகவே காட்டுகின்றன

 ராதா மனோகர் : ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றி எப்போதும் ஒரு எதிர்மறையான கருத்தையே அமெரிக்க ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் உண்மையில் டொனால்டு ட்ரம்ப் போர்களுக்கு ஆதரவானவர் அல்ல.
2020 தேர்தல் பிரசாரத்தின் போது ; அமெரிக்க அரசின் மத்திய கிழக்கு போர்களை பற்றி தெளிவாக விமர்சித்துள்ளார்.:
எங்களால் (அமெரிக்காவால்) நாசமாய் போன நாடுகளை பாருங்கள்.
ஆப்கானிஸ்தான் முற்று முழுதாக அழிந்து விட்டது
நாங்கள் அங்கே என்ன செய்கிறோம்?
அங்கிருந்து வெளியேறுங்கள்
நாங்கள் ஒரு போதும் இராக் மீது படையெடுத்திருக்கவே கூடாது
நாங்கள் மத்திய கிழக்கை குலைத்துவிட்டோம்
நாங்கள் பொய் சொன்னோம்
அங்கு பெரும் மனித அழிவுக்கான ஆயுதங்கள் இருப்பதாக கதை கட்டினோம்

ஞாயிறு, 17 நவம்பர், 2024

நடிகர் தனுஷ் அம்மா நடிகைகளையும் விடாதவர்! பாடகி சுசித்ரா அதிரடி

 தினமணி : நடிகர் தனுஷை கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார் நடிகை சுசித்ரா.
தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரிய அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது. தென்னிந்தியளவில் முன்னணி நடிகையான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளைப் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் ஒப்புதல் கேட்டிருக்கின்றனர்.
ஆனால், தனுஷ் தரப்பிலிருந்து ரூ. 10 கோடி கேட்டதாக விக்னேஷ் சிவன் கூறியதுடன் பிரச்னையை தீவிரப்படுத்தி வருகிறார்.

18,000 தமிழர்களே உள்ள மாத்தறையில் 148370வாக்குகளை சரோஜா பெற்றார்! 53835 வாக்குகளை அக்ரம் இலியாஸ் பெற்றார்

May be an image of 1 person and text
May be an image of 1 person and text
May be an image of 1 person and text

மாத்தறை மாவட்டத்தில் 18,000 தமிழ் வாக்காளர்களே உள்ளனர்!
ஆனால் அங்கு வெற்றி பெற்ற சரோஜா சாவித்திரி பால்றாஜ் அவர்கள் பெற்ற வாக்குகள் 148 370!
சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல - அவர்கள்  திராவிடர்கள்தான்!
Siraj Hakkeem :  சுனில் ஹந்துன்நெதி -  A great man with a broad mind...
கடந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட ஹந்துன்நெதி அவர்கள் 37,236 வாக்குகள் பெற்று சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அப்போது NPP எதிரிகள்  அவர் மாத்தறை சந்தியில் வடை விற்பது போன்று ஒரு மீம்ஸ் கிரியட் பண்ணி பரவ விட்டனர். அதற்கு ஹந்துன்நெதி புன்னகையுடன் இது ஒரு நல்ல தொழில் தானே, நான் மத்திய வங்கியை கொள்ளையடிக்க வில்லை என்று பதில் அளித்தார்...

சனி, 16 நவம்பர், 2024

பிராமணர் என்று யாருமே கிடையாது” - விவரித்த இராம சுப்பிரமணியம்

nakkheeran.in ‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கஸ்தூரி பேசியது கேவலமான பேச்சு.
அவர் பேசியது தெலுங்கர்களைக் கேவலப்படுத்தும் வகையில் இருக்கிறது.
அவரின் சொல்லாடல் மிகவும் மோசமாக இருந்தது. கஸ்தூரி சர்ச்சைக்குரிய ஆள்.
ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது.

உத்தரபிரதேச மருத்துவமனையில் தீ விபத்து... 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

 மின்னம்பலம் செல்வம் : உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லெட்சுமிபாய் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைப் பிரிவில் 54 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில், நேற்று (நவம்பர் 15) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது - தனிப்படை போலீசிடம் சிக்கினார்!

 tamil.oneindia.com - Nantha Kumar R  : சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
kasturi tamil actress hyderabad
இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

இலங்கை 40 தமிழ் எம்பிக்கள் வெற்றி! புதிய நாடாளுமன்றத்தில்.....

May be an image of 1 person and crowd

ராதா மனோகர் : இலங்கை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியல்  2024 general election
40 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி!
Anuradhapura District அனுராதபுரம் மாவட்டம்
NPP-  ஜேவிபி கட்சி +  தேசிய மக்கள் அதிகாரம்
Wasantha Samarasinghe – 251,639
Sena Nanayakkara – 86,150
Susil Ranasinghe – 72,508
Susantha Kumara – 71,695
Bhagya Sri Herath – 63,551
P D N K Palihena – 52,507
Thilina Samarakoon – 49,730

SJB சஜித் கட்சி  சமாஜி பலவேகயா
Rohana Bandara – 46,399
Suranga Rathnayaka – 24,348

வெள்ளி, 15 நவம்பர், 2024

இலங்கை தமிழ் வாக்காளர்களின் தேர்தல் அதிர்ச்சி வைத்தியம்! தோல்வியை தழுவிய பழம்பெரும் அரசியல்வாதிகள்

 Thesam Jeyabalan  : தமிழ் வாக்காளரின் மின் அதிர்ச்சி வைத்தியத்தில் 5 பா உக்கள் இரு அமைச்சர்கள் உட்பட 11 பேர் அகற்றப்பட்டுள்ளனர்!
இலங்கை எங்கும் என்பிபி சுனாமி! தமிழ் தேசியவாதம் வடக்கு கிழக்கில் மரண அடிவாங்கியது!! தமிழரசு சாணக்கியன் தேர்தலில் விசேட சித்தி!!!
சென்ற பாராளுமன்றத்திற்கு தெரிவான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், ஜனா, பிள்ளையான், ராமநாதன் அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, செல்வராஜா கஜேந்திரன், எம் ஏ சுமந்திரன் இத்தேர்தலில் தங்கள் ஆசனங்களை இழந்துள்ளனர். விக்கினேஸ்வரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் இருவரும் பார்பெமிட் விவகாரம் வெளியானதும் தாங்களாகவே தோல்வியை எதிர்பாரத்து தேர்தலில் இருந்து விலகினர். இரா சம்பந்தன் மரணத்தை தழுவினார். இப்படியாக இலங்கைப் பாராளுமன்றத்திலிருந்து 11 பழைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.