ஞாயிறு, 22 மார்ச், 2015

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க இயலாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

புதுடில்லி மார்ச் 21 பகவத் கீதைஎன்னும் நூலை தேசிய நூலாக அறிவிக்க இயலாது என்று கூறி வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மத அமைப்புசார்பில் நடந்த ஒரு கூட்டத்தில் வெளி விவகாரத்துறை அமைச் சர் சுஸ்மா சுவராஜ் பேசும்  போது; விரைவில் பகவத் கீதையை தேசிய நூலாக அரசு அறிவிக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தேசிய அளவில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத் தியது.  சில இந்துமத அமைப்புகள் கூட மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் இதற்கு வலு ஊட்டுவதுபோல் மோடி வெளிநாட்டிற்கு செல் லும் போதெல்லாம் அங் குள்ள தலைவர்களின் கையில் வலுக்கட்டாய மாக பகவத்கீதையை திணித்துவிட்டு வருகிறார்.

அரசின் தேசிய நூல் பற்றிய கொள்கை முடிவுகள் தெளிவில்லாத பட்சத்தில் வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் என்பவர் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் என்று அரசுக்கு ஆணையிடக்கோரி பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த பொதுநலமனு வெள்ளிக் கிழமையன்று விசார னைக்கு வந்தது.  இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கூறியதா வது:
ஒரு நூலை தேசிய நூலாக அறிவிக்கவேண் டும் அல்லது அதை தவிர்க்கவேண்டும் என் பதை நீதி மன்றம் வலி யுறுத்த முடியாது. இந்திய சமூகம் என்பது பல்வேறு மதம் மற்றும் இனங் களைக் கொண்ட நாடு. அரசு எடுக்கும் எந்த ஒரு செயலும் அனைத்து சமூகத்தினருக்கும் இணக்கமான ஒன்றாகத் தான் இருக்கவேண்டும். சமூக நல்லிணக்கம் சார்ந்த பிரச்சனைகளில் அரசின் முடிவு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக இருக்கவேண்டும்.
பகவத் கீதை என்பது ஒரு மதத் தினரின் புனித நூல், நீதி மன்றம் இந்த விவகாரத் தில் எந்த ஒரு கருத்தும் சொல்லமுடியாது. அரசு அரசியல் சாசனப்படி செயல்படும், ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய் கிறோம் என்று கூறினார்.

viduthalai.in/

கருத்துகள் இல்லை: