பின்னர் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் 5 மாத கருவை கலைக்க செய்து, அந்த சிசுவை கல்லறையில் உள்ள தோட்டத்திலேயே புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர அவர்கள் பிரச்சனையை கிளப்பியபோது மாணவி தகவல் போலீசார் வரை சென்றது
மாணவியின் பெற்றோரிடம் போலீஸ் விசாரித்தது. அவர்களிடம் புகார் வாங்கியது போலீஸ். அதன் அடிப்படையில் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விமலா, பாதரியார் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் சில சதை துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அங்கேயே சோதனை செய்த டாக்டர், டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுதொடர்பாக பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பெண் ஆய்வாளர் விமலா ஆகியோர்தலைமறைவான பாதரியாதை தேடி வந்தனர்.
இதற்கிடையே
போலீசாரால் தேடப்பட்ட பாதிரியார் செல்வன், தேனி மாவட்டம் உத்தமபாளையம்
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தார். அவரை வருகிற 26ந்
தேதி நெல்லை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், அதுவரை மதுரை
மத்திய ஜெயிலில் அடைக்கவும் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பாதிரியார் செல்வனை மதுரை மத்திய ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.
செய்தி: பரமசிவம்
படங்கள்: ராம்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக