jesudas6

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

சைவ சமயத்தை சேர்ந்த ‘கிறிஸ்துவருக்கு’
இம்முறை சாகித்திய அகடாமி விருது
அருளப்பட்டிருக்கிறது.
‘ஆரூத்ரா தரசினம்’ நாளில் அறிவிப்பு வந்தது தற்செயலானதல்ல.
என்று சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பற்றி நேற்று face book ல் எழுதினேன்.
Tnfishermen Voices என்கிற பெயரில் பெரியார்-டாக்டர் அம்பேத்கர் கருத்துக்களை வீச்சோடு face book ல் எழுதும் விவாதிக்கும் தோழர், நான் எழுதியதை மறுத்து எழுதினார். பெரும்பாலும் எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான கருத்தொற்றுமை இருந்ததால் என் எழுத்துக்களுக்கு விரும்பம் தெரிவித்தே வந்திருக்கிறார். அநேகமாக நான் எழுதியதை அவர் மறுத்து எழுதியது இதுதான் முதல் முறை.
தோழர் Tnfishermen Voices அவர்களின் ஆதங்கமும் அது குறித்த என்னுடைய விளக்கமும்:
Tnfishermen Voices தோழர் அவரின் மண்ணின் மனம் மாறாத எழுத்தை தேடலை முதலில் பெரியாரிய சிந்தனையாளர் ஆகிய நீங்கள் பாராட்டுங்கள் பிறகு விமர்சனம் செய்யுங்கள் அவர் எங்கேயும் தன்னை பார்ப்பான்களின் பினாமி என்று தன்னை அழைத்து கொண்டாதாக நான் பார்கவில்லை
வே மதிமாறன் நான்கு மாதங்களுக்கு முன், காக்கைச் சிறகினிலே… இதழில் வந்த அவருடைய பேட்டியை படித்ததினால்தான் இப்படி குறிப்பிட்டு இருக்கிறேன்… 

அந்தப் பேட்டி அவரை இன்னொரு ஜெயமோகனாக அடையாளம் காட்டியது.
1475771_10201225875624230_2103532770_nTnfishermen Voices ஈழ விடுதலையை பி ஜே பி மூலமாக பெற்று விட முடியும் என்கிற நம்பிக்கையில் முயற்சி செய்யும் தமிழீழ ஆதரவாளர்கள் போல் மீனவ விடுதலை பிராமிணர்கள் மூலம் கிடைக்கும் என நினைகிறாரோ என்னவோ.
வே மதிமாறன் இலக்கியத்தில் தனக்கான அங்கீகாரம் பார்ப்பன, இந்து ஆதரவில்தான் கிடைக்கும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்.
Tnfishermen Voices எழுத்தாளர் என்கிற முறையில் முதலில் பாராட்டுங்கள் பிறகு விமர்சனம் செய்யலாம் என்பதே எம் வேண்டுகோள் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவரின் வழிகளில் விமர்சனம் இருக்கலாம் அவரின் தேடல் அவரின் எதிர்பார்ப்பு ஒன்றுதான் அது நெய்தல் நில மக்களின் விடுதலை
வே மதிமாறன் கர்நாடக சங்கீதத்தில் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு ஜேசுதாசுக்கு தன் திறமை மட்டும் போதுமானதாக இல்லை. மாறாக அவர் ஒரு தீவிர இந்து இறைநம்பிக்கையாளராக அதை விட தீவிரமான பார்ப்பன ஆதரவாளராக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே தன்னுடைய கிறிஸ்துவ இறைநம்பிக்கையை ரகசியமானதாக மாற்றிக் கொண்டார் ஜேசுதாஸ்.
ஜேசுதாஸ் என்கிற பெயரே இந்து பெயர் என்பதுபோல்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அவர் ஒரு சிறந்த அய்யப்ப பக்தராகதான் அடையாளமாகியிருக்கிறார்.
அவருடைய மகன் விஜய் ஜேசுதாசும் மாலைபோட்டு மலைக்கு போக வர இருக்கிறார்.
ஜேசுதாஸ் குருவாயூரப்பன் மீது அளவு கடந்த பக்தி கொண்டவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார்,
ஆனால் அவருக்கு அந்தக் கோயிலினுள் போவதற்கு அனுமதி கிடையாது.
ஒரு கிறிஸ்துவர் சர்ச்க்குப் போவது ரகசியமானதாகவும், இந்துக் கோயிலுக்குப் போவது பகிரங்கமாகவும் மாறியிருக்கிற அவலத்தில் இருக்கிறது, ஜேசுதாஸ் திறமைக்கான அங்கீகாரம்.
கர்நாடக சங்கீதத்திற்கும் ‘நவீன’ கலை இலக்கியத்திற்கும் இருக்கிற இந்த ஒற்றுமை தற்செயலானதல்ல; அதுதான் அந்த இலக்கிய, கலைகளுக்குள் இருக்கிற அரசியல்.
சுயமரியாதை வீரர் நாமகரிப்பேட்டை கிருஷ்ணன் போன்ற மேதைகளுக்கு கர்நாடக சங்கீதத்தில் கிடைக்காத மரியாதை, அதே சமூகத்தில் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்மிக்கு கிடைத்ததற்கான ரகசியமும் அதுவே.
தமிழகத்தைப் பொருத்தவரை, பார்ப்பனிய ஆதரவோடு பெரியார் எதிர்ப்பு சேர்த்துக்கொண்டால், fast food பாணியில் மிக விரைவில் அங்கீகாரம் கிடைக்கும். அதை விட வேகமாக பிரபலமாகலாம்.
இவ்வளவு ஏன்?
இன்றுகூட புத்தக விற்பனை நிலையங்களும் பதிப்பகமும் நடத்துகிற ‘நவீன’ இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட  நண்பர்கள் face book ல் தங்கள் கடைகளின் விளம்பரங்களை  தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.
மறந்தும் பெரியார்-அம்பேத்கர் நூல்கள், அவர்களின் சிந்தனையை பின்னணியாக கொண்ட புத்தகங்கள் தங்கள் கடை