Seshathri Dhanasen : IPAC, சுனில் நிறுவனங்களால் வரும் சிக்கல்:
சென்ற ஆந்திரா தேர்தலில் IPAC முழுக்க ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக வேலை பார்த்தது.
ஜெகன் 175 சீட்களில் 151 சீட் ஜெயித்தார்.
அதன் பின்னர் பல்வேறு காண்ட்ராக்ட்கள் IPAC நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன.
தற்போதும் IPAC நிறுவனம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வேலை செய்வதாக தான் சொல்கிறது
ஆனால் தற்போது அதே பிரஷாந்த் கிஷோர் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் கூட்டணிக்கு வேலை பார்க்க ஒப்பந்தம் செய்யபட்டு இருக்கிறார்.
கேட்டால் IPAC இல் இருந்து நான் வெளியேறி விட்டேன் என்று சொல்கிறார்.
ஆனால் சந்திரபாபுவிடம் பேசி கொண்டு இருக்கிறார்.
அதிலும் நீங்கள் குப்பத்தில் மட்டும் அல்லாது வேறு ஒரு தொகுதியிலும் நில்லுங்கள் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்.
பவன் கல்யாண்க்கும் 2 தொகுதியை suggest செய்து இருக்கிறார்.
இவங்க ரெண்டு கட்சிக்கும் பெரிய தலைவலியாக இருக்கப்போவது IPAC வைத்து இருக்க கூடிய டேட்டா.
அவர்களிடம் 2019 இல் 18 வயது முதல் 90 வயது வாக்காளர்கள், அவர்களின் geo location, வட்ட, மாவட்ட, நகர கட்சி ஆட்கள் என்று அனைவரின் டேட்டாவும் இருக்கிறது.
அதனை வைத்துகொண்டு தான் 2024இல் விளையாட போகிறார்கள்.
கட்சிகளாக ஒரு data scientist டீம் வைக்காமல் இருந்தால் கடைசி வரை இவர்களின் தேவை இருந்து கொண்டு தான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக