செவ்வாய், 10 அக்டோபர், 2023

இஸ்ரேல் ஹைபா துறைமுகம் அதானி கட்டுப்பாட்டில் மோடியின் இஸ்ரேல் காதலுக்கு இதுதான் காரணம்

தினமலர் : இஸ்ரேல் துறைமுகத்தில் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அதானி குழுமம்
புதுடில்லி : இஸ்ரேலின் 'ஹைபா' துறைமுகத்தில் வேலை செய்து வரும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வரை அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசா மலைக்குன்று பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த சனிக் கிழமை முதல் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், இங்கு உள்ள ஹைபா துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது.
இதற்கு, பதிலளிக்கும் விதமாக அதானி குழுமம், இஸ்ரேலில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்; எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் தாக்குதல்கள், தெற்கு இஸ்ரேலில் நடந்து வருகின்றன.ஆனால், தங்களது துறைமுகம் மேற்கு இஸ்ரேலில் அமைந்துள்ளது என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு தொடக்கத்தில் ஹைபா துறைமுகத்தை, அதானி குழுமம், 9,960 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, அதானி குழுமத்தின் துறைமுக வர்த்தகத்தில், ஹைபா துறைமுகத்தின் சரக்கு கையாளும் பங்கு 3 சதவீதம் மட்டுமே. எனினும், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயரும் என அதானி குழுமம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை: