வியாழன், 4 ஆகஸ்ட், 2022

திரையுலக ஃபைனான்சியர் - ஐடி ரெய்டு..கண், விரல் ரேகை லாக் பிரச்சினை..13 மணி நேரம் காத்திருந்து கதவை திறந்த ஐடி அதிகாரிகள்


முக்கியஸ்தர்கள் வீட்டில் ரெய்டு..11 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல்
tamil.filmibeat.co Abdul Muthaleef  : ஐடி ரெய்டு..கண், விரல் ரேகை லாக் பிரச்சினை..13 மணி நேரம் காத்திருந்து கதவை திறந்த ஐடி அதிகாரிகள்@ சென்னை: திரைத்துறையினர் இல்லங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக இந்த ரெய்டு நடக்கிறது.

இதில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் கதவில் நவீன லாக் அமைக்கப்பட்டிருந்ததால் கதவை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.கதவை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக 13 மணி நேரம் அதிகாரிகள் காத்திருந்தனர்.2 ஆம் நாளாக தொடரும் வருமான வரித்துறை ரெய்டு ! தமிழ் திரையுலகைச் சார்ந்த முக்கிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இல்லங்களில் வருமானவரித்துறை ரெய்டு தொடர்ந்து 2 வது நாளாக நடந்து வருகிறது. திரைத்துறையில் இதுபோன்று மொத்தமாக முன்னணி தயாரிப்பாளர்கள் இல்லம், அலுவலகங்களில் சோதனை நடந்ததில்லை. நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்டு இரண்டாம் நாளாக தொடர்கிறது.

முக்கியஸ்தர்கள் வீட்டில் ரெய்டு..11 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல்

முக்கியஸ்தர்கள் வீட்டில் ரெய்டு..11 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல்

நேற்று நடந்த ரெய்டில் திரையுலகைச் சேர்ந்த ஃபைனான்சியர் பண்டாரி என்பவர் புரசைவாக்கம் இல்லத்திலும் ரெய்டு நடந்தது. அப்போது அங்கு கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இது சுமார் 11 கோடி ரூபாய் வரை இருக்கும் என்கின்றனர். அன்புச்செழியன், தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, அன்புச்செழியனின் தம்பி வீடுகள் அலுவலகங்களிலும் ரெய்டு இரண்டாம் நாளாக தொடர்கிறது.

அன்புச்செழியன் சகோதரர் வீட்டின் நவீன லாக் வசதி

அன்புச்செழியன் சகோதரர் வீட்டின் நவீன லாக் வசதி

இந்த ரெய்டில் குறிப்பிடத்தக்க விஷயம் வருமான வரித்துறை அதிகாரிகள் இதுவரை சந்திக்காத ஒரு விஷயமாக இருந்தது. ரெய்டு வழக்கம் போல் காலை 7 மணிக்கு அனைத்து இடங்களிலும் தொடங்கி விட்டது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகரில் வசிக்கும் அன்புச்செழியன் தம்பி வீட்டுக்கும் ஒரு டீம் சென்றது, ஆனால் வீடு பூட்டியிருந்தது. ஊழியர்களிடம் கேட்டதில் சரிவர பதில் இல்லை. சாவியை வாங்கிவரச் சொல்லியும் அலட்சியம் காட்டியதால் அதிகாரிகள் எச்சரித்தப்பின் சாவகாசமாக காலை 11 மணிக்கு சாவியை கொண்டு வந்து தந்தனர்.

உள்ளே காத்திருந்த அதிர்ச்சி

உள்ளே காத்திருந்த அதிர்ச்சி

4 மணி நேரம் ஆன நிலையில் சாவியை வாங்கி உள்ளே சென்றவர்களுக்கு உள்ளே உள்ள கதவு பையோமெட்ரிக் டோர் லாக் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது கண் கருவிழி அல்லது கைரேகை மூலம் மட்டுமே திறக்கக்கூடிய ஒன்று ( விக்ரம் படத்தில் ஏஜெண்ட் டினா பூட்டுவாரே அதுபோல்). இதனால் சமபந்தப்பட்டவர் வந்து கண்விழி அல்லது கைரேகை வைத்தால் மட்டுமே கதவை திறக்க முடியும் என்கிற நிலையில் கதவை திறக்க முடியாமல் என்ன செய்வது என தடுமாறிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர் யார் என விசாரித்து அவரை அழைத்து வரச் சொன்னார்கள். ஆனால் அவர் மதுரையில் இருந்தார்.

விட்டு விட்டும் போக முடியாது, 13 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்

விட்டு விட்டும் போக முடியாது, 13 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்

இதனால் கடுப்பான அதிகாரிகள் உடனடியாக அவரை அழைத்து வரச்சொன்னார்கள். ரெய்டு என்று வந்தப்பின்னர் திரும்பி போக முடியாது என்பதால் சம்பந்தப்பட்ட நபர் வரும்வரை காத்திருந்தனர் அவர் 13 மணி நேரம் கழித்து இரவு 8 மணிக்கு வந்தார். வந்தப்பின்னர் அவர் மூலம் கதவு திறக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவசர அவசரமாக ரெய்டுக்குச் சென்றனர். இரவு 8 மணிக்கு ஆரம்பித்த ரெய்டு விடிய விடிய நடந்து 2 ஆம் நாளாக தொடர்கிறது.

இது என்ன புது தினுசான பிரச்சினை

இது என்ன புது தினுசான பிரச்சினை

இது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புது அனுபவமாக இருந்துள்ளது. இனி இதையும் தவிர்க்கும் வகையில் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டுச் செல்வார்கள். இல்லையென்றால் இதேபோல் 13 மணி நேரம் யார் காத்திருப்பது என்கிற கேள்விதான் எழும்.

கருத்துகள் இல்லை: