புதன், 3 ஆகஸ்ட், 2022

"5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு"- ஆ.ராசா குற்றச்சாட்டு!

நக்கீரன் செய்திப்பிரிவு  : 5ஜி ஏலம் தொடர்பாக, டெல்லியில் இன்று (03/08/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வைச் சேர்ந்த நீலகிரி தொகுதியின் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா,
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றிருக்கிறார்.
ரூபாய் 5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம் ரூபாய் 1.50 லட்சம் கோடிக்குத்தான் சென்றுள்ளது.
எஞ்சிய பணம் எங்கே சென்றது என்று மத்திய அரசுதான் பதிலளிக்க வேண்டும். 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் குறித்து மாநில அரசுகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும். 2ஜி-யில் ஊழல் எனக் கூறியது பொய் என்பது அம்பலமாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் செய்ததாக சிஏஜி அறிக்கையின் அடிப்படையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சில மாதங்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துகள் இல்லை: