
இவர் ஓய்வுபெற்றதும், புதிய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் பணியை முடித்துத்தருவார் என்றார். ஆனால் உறுதியளித்தபடி யாருக்கும் வேலை தரவில்லை. மாறாக, சிலருக்கு மட்டும் கடந்தாண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றினார். மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி, காரைக்குடி மண்டல முன்னாள் மேலாண் இயக்குநர் பாபு, தற்போதைய மேலாண் இயக்குநர் ரங்கராஜ் உள்ளிட்டோர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இதேபோல் திருப்பத்தூரைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், சுப்பையா பணத்தை வாங்கி ஏமாற்றியதால் அவர்மீது நடவடிக்கை கோரி மனுச் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.விமலா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அரசுத் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, மனுக்கள்மீதான விசாரணையை ஆகஸ்ட் 23க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். minnambalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக