ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு போட்டியிடும் ஈ.பி.டி.பி. வேட்பாளர் வைரமுத்து பரமானந்தராசா (வயது 54) என்பவர் இன்று மாலை 2.45 மணியளவில் வல்வெட்டித்துறை சமரபாகு எனுமிடத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களால் தாக்கப்பட்டு வால்வெட்டுக்கும் இலக்கானார்.
இச்சம்பவம் குறித்து பிரதேச வாசிகள் கருத்துக் கூறும் போது பரமானந்தராசாவை தாக்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த சிவாஜிலிங்கத்தின் அடியாட்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பரமானந்தராசா தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவருகிறது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி.யினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக