வடக்கில் அரசாங்கத்தி னால் மேற்கொள்ளப் படும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவ தற்கும், தேர்தல் பிரசாரங் களில் கலந்துகொள்வ தற்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று நாள் விஜயத்தை மேற் கொண்டு இன்று யாழ்ப்பாணம் செல்கிறார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவி ருத்திப் பணிகள் பலவற்றை அவர் அஙகுரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட்டங்க ளில் கலந்துகொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். 20 ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி, அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத் தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார். இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். |
திங்கள், 18 ஜூலை, 2011
ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக