மின்னம்பலம் - Kavi :முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். cm stalin admitten in apollo hospital
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை இன்று (ஜூலை 21) வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை தொடக்கி வைத்து மாவட்டம் மாவட்டமாக சென்று வருகிறார். ஜூலை மாதத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று வந்தார்.
அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார். இந்தசூழலில் தான் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைய அறிவாலயம் வந்த போது முதல்வர் ஸ்டாலின் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றிருந்தார்.
இந்தநிலையில் திடீரென முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 கருத்து:
கவலை வேண்டாம் தத்தி சுடலைக்கு அப்போலோவில் சங்குதான்
கருத்துரையிடுக