செவ்வாய், 26 செப்டம்பர், 2023

50 முறை துப்பாக்கிச்சூடு.. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை குறித்த சிசிடிவி காட்சிகள்? பரபர தகவல்

tamil.oneindia.com - Mani Singh S  : ஒட்டாவா: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட காட்சிகள் அங்குள்ள குருத்வாராவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதாகவும் அதை வைத்து கனடா அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம். இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது.


ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே கடும் மோதல் போக்கு உருவாகியிருக்கிறது. தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. இதன் காரணமாக இருநாடுகளின் தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழல் நீடிக்கிறது.

கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கனடா விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குவதகாக பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தால் , இந்தியா - கனடா இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆதாரங்கள் எதையும் கனடா வழங்கவில்லை என்று இந்தியா கனடாவை குறை கூறியிருந்தது. ஆனால், கனடா பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது என ட்ரூடோ கூறினார். இவ்வாறாக இருநாடுகளுக்கும் இடையே வார்த்தை மோதலும் தடித்து வருகிறது.

இந்த நிலையில், தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவும் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் இந்த சிசிடிவி காட்சி பதிவுகளை வெளியிட்டு இருக்கிறது. 90 நொடிகளை கொண்ட அந்த வீடியோவில் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. அதாவது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே வைத்து ஹர்தீப் சிங் நிஜ்ஜார் தனது வாகனத்தில் இருந்த போதுதான் இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்தியா கனடா மோதல்.. திடீரென உள்ளே வரும் அமெரிக்கா? அந்த 5 பேரும் சொல்லும் மேட்டரை நோட் பண்ணுங்க இந்தியா கனடா மோதல்.. திடீரென உள்ளே வரும் அமெரிக்கா? அந்த 5 பேரும் சொல்லும் மேட்டரை நோட் பண்ணுங்க

செடான் ரக கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கின்றனர். அடையாளம் தெரியாத நபர்கள் சுமார் 50 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது 34 குண்டுகள் பாய்ந்ததாகவும் அங்கிருந்த சில குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து குருத்வாராவின் தன்னார்வலர் புபிந்தர்ஜித் சிங் கூறுகையில், குருத்வாரா அருகே நான் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தேன்.

அப்போது, பட்டாசு சத்தம் போல கேட்டது. பிறகு உடனடியாக துப்பாக்கி சூடாக இருக்கலாம் என நினைத்தேன். அவசர அவசரமாக ஓடிச்சென்று நிஜ்ஜாரின் பிக் அப் டிரக்கை சென்று திறந்து பார்த்தேன். நிஜ்ஜாரின் தோளை பிடித்து இழுத்தேன். வாகனத்தின் கண்ணாடி முழுவதும் ரத்த கறைகளாக இருந்தது. தரையிலும் தோட்டாக்கள் சிதறிக்கிடந்தன" என்றார்.

நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து போலீசாருக்கு உள்ளூர் நேரப்படி இரவு 8.27 மணிக்கு தகவல் தெரியவந்ததுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்படது தொடர்பான ஒட்டுமொத்த நிகழ்வுகளும் குருத்வாராவில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளதாம். இந்த புட்டேஜ்ஜை கைப்பற்றி கனடா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
The Washington Post reported that the footage of the killing of Khalistan terrorist Hardeep Singh Nijjar was recorded on the CCTV camera in the Gurdwara there and the Canadian authorities are investigating it.
 

கருத்துகள் இல்லை: