வெள்ளி, 3 ஜூலை, 2015

பெண்நீதிபதியிடம் தவறாக நடந்த ஆண் நீதிபதி சஸ்பென்ட்! ஹோட்டல் ரூமில் .....நீதிபதிகள் மாநாட்டிலாம்...

சிம்லா: நீதிபதிகள் மாநாட்டிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி, மாநாடு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன், பெண் நீதிபதியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்ற நீதிபதி, பெண் நீதிபதியிடம் தவறாக நடக்க முயன்றதை அடுத்து, நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இருவரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம், 11 - 13ம் தேதிகளில், குலு மணாலியில் நடைபெற்ற மாநாட்டிற்காக, 8 ஆம் தேதியே பெண் நீதிபதியை அந்த நீதிபதி வரவழைத்துள்ளார். இதையடுத்து ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற அந்த நீதிபதி, பெண் நீதிபதியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி மீதான புகார், உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து, தலைமை நீதிபதி மன்சூர் அகமது மிர், நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் 2 மாதத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார் Read more :tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: