புதன், 10 நவம்பர், 2010

பிரிட்டனும் பிரான்ஸும் இராணுவ கூட்டை உருவாக்குகின்றன. By Julie Hyland


பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு பற்றிய உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள இராணுவ உறவுகளில் ஒரு “புதிய அத்தியாயம்” என்று விவரிக்கப்படுகிறது.

உடன்பாடுகளில் உள்ள கட்டமைப்பில் உள்ள கீழ்க்கண்டவை அடங்கியுள்ளன:

• ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 5,000 படையினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இணைந்த கூட்டு முன்னோடிப் படை, பயிற்சிக்காகவும், தேவையானால் செயற்பாடுகளுக்காவும்.

• விமானங்களை எடுத்துச் செல்லுபவற்றை பகிர்ந்து கொள்ளுதல்: காரணம் கூட்டாக உடன்படும் செயற்பாடுகளுக்கு ஒரு “ஒருங்கிணைந்த தாக்குப் படையை” வருங்காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு.

• சைபர்-தாக்குதல்களை சமாளிக்க அதிக ஒத்துழைப்பு மற்றும் ஆளில்லாத வான்வழி ட்ரோன்களை அபிவிருத்தி செய்தல்.

• பயிற்சி, பராமரிப்பு, மற்றும் A4000M போக்குவரத்து விமானம் தொடர்பாக வளங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

அடுத்த 50 ஆண்டுகளில் அணுசக்தி பாதுகாப்பு, சோதனையில் ஒத்துழைப்பை பெருக்குவதற்கான பிரிட்டனில் சோதனைத் தொழில்நுட்பத்திற்கு ஒரு மையத்தை நிறுவவும் மற்றொன்றை சோதனை நடத்துவதற்கு பிரான்சில் நிறுவி அபிவிருத்தி செய்வது.

இந்த உடன்பாடுகள் “முன்னோடி இல்லாத தன்மை உடையவை” மற்றும் “வரலாற்றுச் சிறப்புடையவை” என்று பாராட்டப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருக்கும் விரோதப் போக்கின் பின்னணியிலும், குறிப்பாக அரசியல் பொருளாதாரத் துறைகளில் ஐரோப்பிய போக்கு இருக்கும் நிலை, பிரான்ஸ்-ஜேர்மனி கூட்டு மற்றும் இங்கிலாந்தின் அமெரிக்காவுடனான “சிறப்பு உறவுகள்” உள்ள நிலையில் அணுசக்தித் துறை ஒத்துழைப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1960களில் பிரான்ஸ் தன்னுடைய சுயாதீன அணுசக்தித் தடுப்பு முறைகளை பெருக்கத் தொடங்கியது; ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோலின் கீழ் நேட்டோவில் இருந்தும் விலகியது.

சிக்கன நடவடிக்கை நேரத்தில் கடினமான நடைமுறையை ஒட்டிய விளைவாகத்தான் இந்த உடன்பாடுகள் அனைவராலும் விவரிக்கப்படுகின்றன. மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உடன்பாடுகளை “சிக்கன இருதரப்பு உடன்பாடு” என்று கூறியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஏனெனில் இரு நாடுகளும் பொதுச் செலவுகளைக் குறைக்க முற்படுகின்றன. பிரிட்டனின் பாதுகாப்பு மந்திரி, “இங்கிலாந்தும் பிரான்சும் கடுமையான நிதி நிலைமையின் உண்மைகளை எதிர்கொள்கின்றன, நம் சிறந்த நலன்களுக்கு நாம் ஒன்றாக உழைத்து திறன்களை வளர்ப்பதுதான் நம் நாடுகளுடைய தேவையாகும்” என்று கூறினார்.

பிரான்சில் பாதுகாப்புச் செலவுகள் 2012 மற்றும் 2025க்கு இடையேயான உண்மைக் கணக்கில் 1 சதவிகிதம்தான் உயர்கிறது. பிரிட்டனின் கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் அரசாங்கம் சமீபத்தில் ஒரு மூலோபாய பாதுகாப்பு ஆய்வை வெளியிட்டது; இதில் செலவினங்கள் 8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன; அவற்றுள் 17,000 இராணுவத்தினரின் பணிநீக்கமும் அடங்கும்.

இதன் விளைவாக, பாரிஸும் லண்டனும் செயற்பாட்டிற்கு என ஒவ்வொன்றும் ஒரு விமானம் தாங்கியான Charles de Gaulle மற்றும் Queen Elizabeth இனையே தசாப்தத்தின் இறுதியில் வைத்திருக்கும் 2020 ஐ ஒட்டி Queen Elizabeth விற்கப்பட்டுவிடும் அல்லது செயல்புரியாது. அப்பொழுது அதற்குப் பதிலாக புதிய விமானம் தாங்கியான HMS Prince of Wales செயல்படத் தொடங்கும். ஹரியர் தாக்குதல் விமானத்தை செயல்படுத்தப் போவதில்லை என்ற முடிவை ஒட்டி இங்கிலாந்து ஒரு தசாப்தத்திற்கு விமானம் தாங்கும் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தும் திறனைக் கொண்டிருக்காது.

இரு நாடுகளும் “இடைச் செயற்பாடுகளுக்கு” உடன்பட்டுள்ளன. இதில் ஒரு பிரிட்டிஷ் விமானம் தாங்கிக் கப்பல், உதாரணத்திற்கு, பாக்லாந்தில் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட முடியும், அதே நேரத்தில் ஒரு பிரெஞ்சு விமானம்தாங்கி ஆபிரிக்க கடலோரப் பகுதியில் செயல்புரியலாம். இதன் முக்கியத்துவம் நேட்டோ, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு இரு நாடுகளும் ஒன்றின் கப்பல் செயல்படாவிட்டால் மற்றொன்றின் கப்பல் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியும்.

HMS Prince of Wales 2020 ஐ ஒட்டி பணியில் இறங்க உள்ளது; அப்பொழுது HMS Queen Elizabeth பாவனைக்கு உதவாததாகிவிடும் அல்லது விற்கப்பட்டுவிடும். Queen Elizabeth விமானம் தாங்கும் கப்பல் புதுப்பிக்கப்பட்டு குறைந்த தன்மை உடைய “catand trap” விமானங்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும். அவை தற்பொழுது பிரெஞ்சு, அமெரிக்க கடற்படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. இது பிரிட்டிஷ் விமானம் தாங்கும் கப்பலை பிரான்சின் Rafale ஜெட்டுக்களை ஏற்றிச் செல்ல வகை செய்யும்.

பிரான்ஸ், பிரிட்டனின் திட்டமிடப்பட்டுள்ள புதிய A330 ஏர் டாங்கர்களை வாடகைக்கு விடும் உடன்பாடு ஒன்றைத்தவிர, பாரிஸ் Charles de Gaulle ஐ மாற்றி அமைக்கும் திட்டத்தையும் கொண்டது. இதனால் அது 2010ல் இங்கிலாந்து வாங்க இருக்கும் புதிய கூட்டுத் தாக்குதல் விமான ஜெட்டுக்களைப் பயன்படுத்த முடியும். தன் Bréguet Atlantique கடலோர ரோந்து விமானத்தை பயன்படுத்தச் சொல்லவும் பாரிஸ் முன்வந்துள்ளது. இது இங்கிலாந்தின் முடிவான அதன் Nimrod ரோந்து விமானத்தை அகற்றிவிடுவதால் ஏற்படும் இடைவெளியை பூர்த்தி செய்யும்.

நிதியத் தடைகள் இரு நாடுகளையும் ஒன்றாகக் கொண்டுவந்ததில் பெரும் பங்கு கொண்டுள்ளன என்பதில் ஐயமில்லை. இராணுவச் செலவினங்களில் குறைப்புக்கள் இருந்தாலும் அவை பொதுவாக வேலைகள், ஓய்வூதியங்கள், பொதுநலச் செலவுகள் ஆகியவற்றின்மீது இங்கிலாந்திலும் பிரான்சிலும் நடத்தப்படும் தாக்குதல்களோடு ஒப்பிடும்போது மிகக் குறைவானவையே.

ஆனால் வரவு செலவுத்திட்ட கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், லண்டன் மற்றும் பாரிசின் நோக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தங்கள் இராணுவ ஈடுபாடுகளைத் தொடரும் திறனைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்று உள்ளது. அங்கு அவை இரண்டாம் மற்றும் நான்காம் பெரிய இராணுவப் பிரிவுகளை வழங்கியுள்ளன. மற்றும் உலகெங்கிலும் இவற்றின் படைகள் உள்ளன. அவர்கள் நோக்கம் படைகளை இணைத்து தங்கள் உலகக் கொள்ளை நோக்கங்களைப் பாதுகாப்பதாகும்.

இங்கிலாந்தின் பாதுகாப்பு மீளாய்வு அறிக்கை “உலகில் காணப்படாத அளவிற்கு மிகத் திறனுடைய, அணுசக்தி உந்துதல் பெற்ற வேட்டையாடி-கொல்லும் நீர்மூழ்கிக்கப்பல் தொகுப்புக்களைப் பெறுவதற்கு” உறுதி செய்கிறது. அவை இரகசியமாக உலகின் பெருங்கடல்களில் செயல்படுகின்றன. Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் நிலத்தில் உள்ள இலக்குக்கள் மீது செலுத்துகின்றன, மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களையும் சாதாரண கப்பல்களையும் தாக்கி கடல்பாதை திறந்திருக்குமாறு செய்கின்றன, அணுசக்தித் தடுப்புத் தளவாடங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கின்றன, இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள நம் இராணுவப் பிரிவுகளுக்கு மூலோபாய உளவுத்துறைத் தகவல்களைக் கொடுக்கின்றன.” எனக்குறிப்பிட்டுள்ளது.

பாரிஸும் லண்டனும் தங்கள் குறைந்துவிட்ட இராணவத் திறன் பற்றி தீவிரமாக உணர்ந்துள்ளன. இது அமெரிக்காவிற்கு எதிராக என்று இல்லாமல் சீனா போன்ற எழுச்சி பெற்றுவரும் நாடுகளின் படைகளுக்கு எதிராகவும் பொருந்தும். இன்னும் பரந்த அளவில், இப்பொழுது பிரச்சினை நடுத்தர நாடுகள் இராணுவச் செலவுகளுக்கு எப்படி நிதி அளிக்க முடியும், அதே நேரத்தில் தங்கள் கணிசமான ஏகாதிபத்திய பசிக்கு மக்கள் கிளர்ச்சி இல்லாமல் தீனி போடமுடியும் என்பதுதான்.

இன்னும் அதிக ஒத்துழைப்பு இத்திசையில் முதல் படி என்று காணப்படுகிறது. இங்கிலாந்தும் பிரான்ஸும்தான் ஐரோப்பாவில் அணுவாயுதங்களை கொண்ட நாடுகள்; இரண்டுமே ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். தங்கள் தேசியச் செலவுகளில் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக அவை பாதுகாப்புச் செலவுகளுக்கு ஒதுக்குகின்றன. பிரிட்டனும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த இராணுவச் செலவுகளில் 45 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. அதன் இராணுவ ஆராயச்சி, வளச்சியில் 70 சதவிகிதம் கொண்டுள்ளன மற்றும் மொத்த இராணுவத்தின் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டுள்ளன.

கருத்துகள் இல்லை: