வியாழன், 19 செப்டம்பர், 2024

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார்.. 11.30 மணிக்கு அறிவிக்க.....

 tamil.oneindia.com  -  By Shyamsundar I : நாளைக்கு எல்லோரும்.. சென்னைக்கு வாங்க.. ஸ்டாலின் அனுப்பிய "அவசர" மெசேஜ்.. உதயநிதிக்கு போகும் பவர்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை.. செப்டம்பர் 20ம் தேதி துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அவசர மெசேஜ் ஒன்று முதல்வர் ஸ்டாலின் சார்பாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகும் டாப்பிக்தான் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக். நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக போகிறார்.. 11.30 மணிக்கு அவரை துணை முதல்வராக அறிவிக்க போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தன.



சற்று நேரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்பு உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிப்பதில்.. ஸ்டாலினுக்கும் பெரிய ஆர்வம் இல்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரிய விருப்பம் இல்லாமல் இருந்தது.

உதயநிதியே துணை முதல்வர் பதவி வேண்டாம் என்ற மனநிலையில்தான் உள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் பதவிக்கே ஏகப்பட்ட போன்கால்கள், அதிகாரிகள் மீட்டிங் என நேரம் விரையமாவதால், துணை முதல்வரானால் 90 சதவீத முதல்வர் பணிகளை செய்ய வேண்டிய நிலை வருவதை அவரே ரசிக்கவில்லை என்றெல்லாம் கூறப்பட்டது. தமிழக அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதிலும் துணை முதல்வர் பதவி பற்றி முடிவு எடுக்கப்படவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று துணை முதல்வர் பதவி பற்றிய அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஏன் நேற்று அறிவிப்பு வரவில்லை.. ஸ்டாலின் நேற்று எடுத்த முடிவு என்ன? முக்கிய நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பிய அவசர மெசேஜ் என்ன என்று பார்க்கலாம்.

ஸ்டாலின் ஆலோசனை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார். துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் பங்கேற்று உள்ளார்.

அதன்படி.. இந்த மீட்டிங்கில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது தொடர்பாக மூத்த தலைவர்கள் எல்லோரும் சப்போர்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது திமுகவில் சீனியர் vs ஜூனியர் பிரச்சனை உள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் திமுகவில் இந்த சீனியர் - ஜூனியர் விவகாரத்தை கிளம்பிவிட்டார்.

அப்போதே அது பெரிய அளவில் பூதாகரமாகியது. இந்த நிலையில்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகும் பட்சத்தில் அது திமுகவில் சில சீனியர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த மீட்டிங்கில் சீனியர்கள் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவதற்கு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஏன் தாமதம்?: ஆனால் நேற்று நாள் சரியில்லை என்று அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பதவிக்கு வருவது நம் குடும்பத்தில் ஒரு நல்ல காரியம். அது நல்ல நாளில் நடக்க வேண்டும். எனவே வெள்ளிக்கிழமை வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

அவசர அழைப்பு: இப்படி குடும்பத்தில் கிரீன் சிக்னல்.. சீனியர்கள் கோரிக்கை காரணமாக உதயநிதியை துணை முதல்வராக்கும் முடிவிற்கு ஸ்டாலின் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கட்சி அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும் மூத்த தலைவர்கள் நாளை சென்னையில் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் இதையடுத்து அவசர மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: