Yazh V M : [முன்குறிப்பு: திமுக என்ன செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்று நான் கூற இதை எழுதவில்லை. மாறாக என்ன சந்தர்ப்பம் கிடைத்தாலும் திமுக ஆட்சியைக் குறை சொல்வதையும், திராவிடம் மற்றும் பெரியார் வெறுப்பை வெளிப்படுத்துவதையும் எதிர்க்கவே எழுதுகிறேன்.]
சமீபத்தில் BSP கட்சியின் மாநிலத் தலைவர் Armstrong படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வன்மையான கண்டனங்களும் ஆழ்ந்த இரங்கலும்!
இது ஒரு personal vengeance ஆ ஆருத்ரா பிரச்சனையில் Armstrong சம்பந்தப்பட்டதால் கொல்லப்பட்டாரா ?
என இனி தான் தெரியும்.
அதற்குள் ஒரு சில முற்போக்காளர்கள் / அப்படி தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் இது திராவிடக் கட்சி ஆட்சியில் தலித் தலைவருக்கு நடந்த அவலம் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட ஒழுங்கில் சரியில்லை என்றும், சமூக நீதி முலாம் பூசிக் கொண்டு அதற்கு எதிராக செயல்படும் கட்சி தி. மு. க என்றும் பலர் தங்கள் திராவிட ஒவ்வாமையை பல விதமாக வெளிப்படுத்துகின்றனர்.
ரஞ்சித் ஒரு அறிக்கையையே வெளியிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் தலித் ஆதரவாளர்கள் போலக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் வெளிப்படுத்தி இருப்பது திராவிட இயக்க ஒவ்வாமையை மட்டுமே !
முதலில் சட்ட ஒழுங்கு சரி இல்லை என்ற பிரச்சனையைப் பற்றி யோசிப்போம். ஒரு நாட்டில் / மாநிலத்தில் ஒரு கொலை கூட நடக்காமல் இருக்க வேண்டுமானால் முதலில் அடிதடி, ரவுடியிசம், கட்டப் பஞ்சாயத்து, திருட்டு போன்ற இன்ன பிற குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். உலகின் முன்னேறிய நாடுகள் என்று கூறப்படும் பல ஐரோப்பிய நாடுகளில் கூட குற்றங்களும் கொலைகளும் நடக்கத் தான் செய்கின்றன. எந்த கட்சி ஆட்சியில் உள்ளது என்பதைப் பொறுத்து இவை நடப்பதில்லை.
உதாரணமாக 2005 ஆம் ஆண்டு ADMK ஆட்சியில் இருந்த போதே ADMK MLA சுதர்சனம் திருட்டுக் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது ADMK ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை என சொல்லப் பயன்படாது. அது போலவே இப்போது நடந்த கொலையில் பெரிய ஊழலும் அதையொட்டிய ரவுடியிசமும் சம்பந்தப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையை வாழ்நாள் பணியாகக் கொண்ட பலரோடு பழகியுள்ள போதும் யாரும் துப்பாக்கி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. துப்பாக்கி கலாச்சாரமும் தென்னிந்திய மாநிலங்களில் கிடையவே கிடையாது. ஆனால் Armstrong 20 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கியை வைத்திருந்ததாக investigation journalist நக்கீரன் பிரகாஷ் அரண் செய் சேனலின் பேட்டியில் கூறியுள்ளார். ஏன் ? எதற்காக ? Armstrong அவர்களுக்கே வெளிச்சம்! ஏதோ பிரச்சனை இருந்துள்ள காரணத்தால் துப்பாக்கி வைத்திருந்தார் என assume செய்வோம். எனவே, ஏதோ பிரச்சனை இருந்துள்ள காரணத்தால் நடந்த இக்கொலை திமுக, அதிமுக, விசிக என யார் ஆட்சியில் இருந்தாலும் நடந்திருக்கலாம்.
ரஞ்சித் உள்ளிட்ட தலித் விடுதலை பேசுவதாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் இது ஜாதிப் பிரச்சனை போலக் காட்டி திராவிட மண்ணில் தலித் களுக்குப் பாதுகாப்பில்லை என ஒரு narrative ஐ கட்டமைக்க முயல்கின்றனர். கொலை செய்யப்பட்ட Armstrong அவர்களும் தலித். அவரைக் கொலை செய்தவர்களில் பெரும்பாலானோரும் தலித். இது ஜாதிப் பிரச்சனையே அல்ல!
ஜாதிப் பிரச்சனையும் அல்ல, சட்ட ஒழுங்கு பிரச்சனையும் அல்ல என்னும் போது ரஞ்சித் போன்றோருக்கு என்ன தான் பிரச்சனை? திராவிடம் என்ற சொல்லும் பெரியாரும் தான் பிரச்சனை. ரஞ்சித் உள்ளிட்ட தலித் விடுதலை பேசுவதாகத் தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் தலித்கள் அனைவரும் தங்களின் சுய ஜாதிப் பற்றிலிருந்து முதலில் வெளி வந்துவிட்டார்களா? என யோசிப்பதுண்டா ? இல்லை. இவர்களில் பலர் பறையர் , பள்ளர் , அருந்ததியர் , இன்னும் பல ஜாதிகள் எனப் பிரிந்தே அவரவர் பிரச்சனைகளைப் பேசுவது போன்ற தோற்றத்தில் அவரவர் ஜாதி அரசியலையே செய்கின்றனர்.
இப்படி தனித் தனியாக ஜாதி ஜாதியாகப் பிரிந்து அரசியல் செய்யும் தலித் அமைப்புகள் தங்களை ஜாதி ஒழிப்பு வீரர்கள் போலக் காட்டிக் கொள்வது தான் சோகமான விஷயம். பறையர், பள்ளர், அருந்ததியர், etc.. எனப் பிரியாமல் ஒற்றுமையாக தலித் அரசியல் என்ற ஒற்றை அரசியலைக் கூட செய்ய முடியாதவர்கள் தான் சமூக நீதி மண்ணில் , பெரியார் மண்ணில் தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை என முழங்குபவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளர் ஜாதிப் பெண்ணைக் காதலித்த பறையர் ஜாதிப் பையன் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட போதும் அருந்ததியர் பையனைக் காதலித்த பறையர் ஜாதிப் பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட போதும் இவர்கள் வாயே திறக்கமாட்டார்கள் ; பக்கம் பக்கமாக அறிக்கை எழுதி வெளியிட மாட்டார்கள். ஆனால் திராவிடம், சமூக நீதி, பெரியார் போன்றவற்றுக்குக் களங்கம் விளைவிக்க ஏதோ சம்பந்தமில்லா சந்தர்ப்பம் கிடைத்தாலும் பக்கம் பக்கமாக அறிக்கை எழுதி வெளியிடுவார்கள் .
Armstrong கொலை ஜாதிப் பிரச்சனையே இல்லை என்றாலும், முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினாலும் இந்த ஜாதிக் குழுக்கள் தங்கள் திராவிட வெறுப்பை, பெரியார் எதிர்ப்பை காட்டிக் கொண்டே இருக்கின்றனர். ஏனெனில் இது தான் அவர்களின் ஜாதி ஒழிப்பு அரசியல் ! sorry ஜாதி அரசியல் !
தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், ஜாதீய ஒற்றுமை ஜாதியை ஒழிக்கப் பயன்படாது. மாறாக அது ஜாதி என்னும் கொடிய அமைப்பு மேலும் வலுப் பெறவே உதவும். அதாவது திராவிடர்களுக்கு ஜாதிப் பற்று இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு ஜாதிப் பற்று இருந்தாலும் அது ஒன்றே! இதைப் புரிந்து கொள்வது தான் ஜாதி ஒழிப்புக்கான முதல் படி. அதையெல்லாம் புரிந்து கொள்ள மாட்டோம்.
அம்பேத்கரியவாதி என்று கூறிக் கொண்டு ஜாதி ஜாதியாக இணைந்து கொண்டு ஜாதி என்னும் அமைப்பிற்கு உரத்தைப் போட்டுக் கொண்டு திராவிட வெறுப்பை மட்டும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்துவோம் என்ற ரஞ்சித் போன்றோரின் புரட்சி பாரத அரசியலும் அறிக்கைகளும் ஒரு நாளும் ஜாதி ஒழிப்பிற்கு வழி வகுக்காது. திராவிட வெறுப்பிற்கே உரமளிக்கும். அது தான் அவர்கள் விருப்பம்.
ரஞ்சித் போன்றவர்களின் பெரியார் & திராவிட வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட புரட்சி பாரத அரசியலை விமர்சித்து 2017 க்கும் முன்பிருந்தே காட்டாறு Kaattaaru இதை அடையாளம் கண்டு, அவருக்கு மறுப்புகளை எழுதி வந்துள்ளது. 'சுயஜாதித் துரோகிகளின் தலைவர் தான் பெரியார்’ என்பதால் தன் ஜாதியினரை மட்டும் இணைத்துக் கொண்டு அரசியல் செய்வோருக்குப் பெரியார் எதிரியாகவும் திராவிடம் என்ற சொல் வெறுப்பிற்குறியதாகவும் இருப்பதில் ஆச்சரியமில்லை.
1 கருத்து:
ரஞ்சித் மட்டுமல்ல ஜாதி அரசியல் செய்யும் எல்லோரும் அவரவர் சாதி சார்ந்த பரம ஏழையோ / படிக்காத பெண்ணையோ, தான் அல்லது தனது வாரிசுகளுக்கு மணமுடிக்க முதலில் முன் வருவார்களா ? அன்றைக்கு ஔவைப் பாட்டி சொன்னதென்னவோ ஈகை எனும் குணம் பற்றி, “சாதி இரண்டொழிய வேறில்லை “ இன்றோ அது பணம் பற்றி, இரண்டே சாதிதான் இன்று “ஏழை, பணக்காரன்” பணக்காரன் ஒரு போதும் ஏழையை ஏற்க மாட்டான். பணமிருந்தால் போதும், சாதிய வேறுபாடு குறுக்கே வராது, இதுதான் எதார்த்தம்,
இந்த பொங்குதல்கூட ஆம்ஸ்ட்ராங் போன்ற பணம் படைத்த ஆட்களுக்குத்தான், அரியலூர் ஏழைச் சிறுமி 2016 கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் இவர்களின் பொங்கல், புளியோதரை எல்லாம் எங்கே போயிற்று ? வழக்கறிஞர் திரு. வைகை, கம்யூனிஸ்ட் வாசுகி போன்றோர் இதனை முன்னெடுத்து நீதி தேடி தந்தனர்.
கலைஞரின் Empathy, Ethosதில் கிஞ்சித்தும் இல்லாத இவர்களெல்லாம் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள அவ்வப்போது குரைக்கத்தான் வேண்டியுள்ளது.
கருத்துரையிடுக