ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

மஹ்ஸா அமீனியின் கொலை - ஈரானிய அரசு வெளியிட்ட போலி வீடியோ

 Rishvin Ismath  :  இலங்கை இந்தியா போன்ற ஜனாநாயக நாடுகளில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு ஈரானின் அராஜக இஸ்லாமிய ஆட்சிக்கு சொம்படிக்கும் அரைகுறைகளும், கூலிக்கு மாரடிக்கும் கோமாளிகளும் ஹிஜாப் அணியாததால் அடித்துக் கொல்லப்பட்ட மஹ்ஸா அமீனி குறித்து பொய்களையும், அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர்.
மஹ்ஸா அமீனி இருதயக் கோளாறினால் பயங்கி விழுந்து இறந்து போனதாக ஈரானின் அரசு பொய்யான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது,
அதிகம் எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோவில் இருப்பது மஹ்ஸா அமீனி என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை.
குறித்த வீடியோவை BBC மட்டுமின்றி, மஹ்ஸா அமீனியின் குடும்பத்தினர் உட்பட ஈரானிய மக்களே நிராரகரித்து விட்டனர்,


அத்துடன் ஈரானிய மக்கள் தமது போராட்டத்தைத் ஓய்வின்றித் தொடருகின்றனர்.
ஈரானிய அரசு வெளியிட்டுள்ள போலியான வீடியோவில் மஹ்ஸா அமீனிக்கு இருதயக் கோளாறு ஏற்பட்டதாகக் குறிப்பிடப் பட்டிருந்தாலும் மஹ்ஸா அமீனி கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களுடன் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டே மரணமானார். இந்தத் தகவல்களுக்கு மேலதிகமாக தனது மகளுக்கு எவ்வித இருதயக் கோளாறுகளும் இருந்ததில்லை என்று மஹ்ஸா அமீனியின் தாயார் தெரிவித்துள்ளார்.
..
மஹ்ஸா அமீனியின் கொலையை மூடி மறைக்க பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களும், கொலையுண்டவர் மீதே பழியைப் போடும் குரூரர்களும் அந்தக் கொலையைச் செய்த கொலைகாரர்களுக்கு ஈடானவர்களாகவே கருதப்படல் வேண்டும். நேற்று ஈரானில் நடந்த கொலையை இன்று இலங்கை, இந்தியாவில் மூடி மறக்க பாடுபடுபவர்கள் நாளை தமது நாடுகளில் கொலைகள் செய்ய முற்படக் கூடும். சஹ்ரானின் பாதையில் செல்லும் பலர் தற்பொழுது உருவாக்கி வருகின்றனர், அவர்கள் ஆங்காங்கே தலை காட்டுகின்றனர். சஹ்ரானை வழி நடாத்திய மதவெறியே இவர்களையும் வழி நடாத்துகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. பயங்கரவாதம் ஆபத்தானது, அதனை மூடி மறைப்பவர்களும், நியாயப் படுத்துகின்றவர்களும், ஆதரிக்கின்றவர்களும் கூட மனித வாழ்க்கைக்கு ஆபத்தானவர்களே.
..
மஹ்ஸா அமீனியின் கொலை தொடர்பாக ஈரானிய அரசு வெளியிட்ட போலி வீடியோ மற்றும் போராட்ட

கருத்துகள் இல்லை: