நெல்லையில் வேளாண்மைத் துறையில் பணியாற்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், சி.பி.சி.ஐ.டி விசாரணை மந்தமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ விசாரணைக் கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் சூழலில், முத்துக்குமாரசாமியின் சமூகமான சைவ வேளாளர்களும் கொந்தளித்து எழுந்துள்ளனர். தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பாக பாளையங்கோட்டையில் மார்ச் 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசியவர்கள், 'நேர்மையான அதிகாரி முத்துக்குமாரசாமியின் மரணத்தின் பின்னணியில் இருப்பவர்களை சி.பி.சி.ஐ.டி பாதுகாக்கிறது. குற்றவாளிகள் யார் என்பது தெரிந்திருந்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால், சி.பி.ஐ விசாரணையில் மட்டுமே நியாயம் கிடைக்கும்’ என்பதை வலியுறுத்தினார்கள்.
அகில இந்திய ராகுல்காந்தி ரத்ததான கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான பிரம்மா, ''முத்துக்குமாரசாமியின் மரணத்தில் நிறைய மர்ம முடிச்சுகள் உள்ளன. அவர், 'தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா’ என்ற மர்மம் இன்னும் விலகவில்லை. ரயில் முன் பாய்ந்தது உண்மை என்றால், அவரது உடல் சரியாக இரண்டு துண்டுகளாகக் கிடந்தது எப்படி? குற்றவாளிகள் யார் என்பது தெரிந்திருந்தும் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவே சி.பி.சி.ஐ.டி தயங்குகிறது.
இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சுதேசி இயக்கத்தின் தலைவரான பந்தல் ராஜா, தனது கைக்கு வந்து சேர்ந்த ஒரு மர்மக் கடிதத்தின் நகலை நம்மிடம் கொடுத்தார். டைரி பேப்பரை கிழித்து எழுதப்பட்டு இருந்த அந்தக் கடிதத்தில்... ''எனது பெயர் கணேசன். பாலபாக்யா நகரில் குடியிருந்து வருகிறேன். அன்பு சமூகத்தினருக்கு, முக்கியமான தகவல். நமது இனத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி ரயிலில் அடிபட்டு இறந்தார். அதைத் தூண்டியவர்கள் சில கொலைகாரர்கள். இதுதொடர்பாக பாலபாக்யா நகரில் வைத்து வாக்குவாதம் நடந்தது.
இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் கேபிள் சுப்பையாவைத் தொடர்பு கொண்டோம்.
''அ.தி.மு.க-வில் நெல்லை மாவட்ட விவசாய அணி பொருளாளராக இருக்கிறேன். எனக்கு, முத்துக்குமாரசாமி கறுப்பா, சிவப்பா என்றே தெரியாது. நெல்லையில் இருக்கும் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர், என்னை வீழ்த்துவதற்காக இப்படி ஒரு காரியத்தைச் செய்துள்ளார். அதிகாரியை வீட்டுக்கு வரச்சொல்லி மிரட்டும் அளவுக்கு நான் செல்வாக்கு படைத்தவன் அல்ல. சாதாரணத் தொண்டன்தான். இந்த வழக்கு யாரை நோக்கிப் போகப் போகிறது என்பது உண்மையை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதை திசை திருப்புவதற்காகவே என்னை இந்தப் பிரச்னையில் சேர்த்து முடிச்சுப் போடுகிறார்கள். இந்த மொட்டைக் கடிதங்களை இரண்டு மூன்று பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் இவர்களும் இதில் சிக்குவார்கள்' என்று சொன்னார்.
யார் இந்த நபர்? அந்த நபரையும் பத்திரிகைகள்தான் கண்டுபிடித்துத் தர வேண்டுமா? .vikatan.com
பி.ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக