காவல்துறை எஸ்.பி.யாக இருந்த பிரேம்குமார் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.காவல்துறையில் எஸ்.பி.யாக இருந்த பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து தூத்துக்குடியில் வசித்து வருகிறார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர், அவ்வப்போது சென்னையில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த அவருக்கு திடீரென நாடித்துடிப்பு குறைவாக இருந்ததால் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணிக்கு அவர் காலமானார்.
காங்சி சங்கரராமன் கொலை வழக்கில் பிரேம்குமார் விசாரணை நடத்தி வந்தார். அப்போது அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோரை கைது செய்தவர் பிரேம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக