யாழ்ப்பாணம் அராலித்துறையில் பஸ்ஸொன்று கடல் நீரேரிக்குள் (களப்பு) வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 28 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம்-அராலித்துறைக்கிடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்ஸொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று மாலை நடைபெற்றுள்ளது.பயணிகள் பஸ் முன்னால் வந்த லொறியொன்றுடன் மோதியதன் காரணமாகவே விபத்து நடைபெற்றுள்ளது. அதனையடுத்து பஸ் கடல் நீரேரிக்குள் வீழ்ந்துள்ளது. பொதுமக்களின் உதவியுடன் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக