வானம், போடா போடி என சிம்புவின் இரண்டு படங்கள் வெளிவர இருக்கும் நிலையில் தற்போது 'வேட்டை மன்னன்' என்ற மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. உத்தமபுத்திரன் படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டார் சிம்பு. தனுஷ் நடித்திருக்கும் உத்தமபுத்திரன் படத்தை சிம்புவும் தனுஷும் அருகருகில் அமர்ந்தவாறு பார்த்தனர். படத்தின் காமெடிக் காட்சிகளை ரசித்து மகிழ்ந்தார் சிம்பு.
அப்போது அவர் தான் நடிக்கும் வேட்டை மன்னன் படத்தைப் பற்றியும் பேசினார். தற்போது நான் நடிக்கும் படங்கள் கொஞ்சம் வித்யாசமாய் இருக்கிறது. மீண்டும் ஒரு அதிரடி மசாலா படத்தில் நடிக்கலாம் என நினைத்தேன். வேட்டை மன்னன் அப்படிப்பட்ட ஒரு படமாக இருக்கும். எல்லா வகையான படங்களிலும் நடிக்கலாமே என நினைப்பதில் தவறில்லையே. இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரிக்க, நெல்சன் இயக்குகிறார்.
வானம் படத்தில் சிம்புவோடு பரத் இணைந்து நடித்திருக்கிறார், வேட்டை மன்னன் படத்தில் சிம்புவோடு ஜெய் நடிக்கிறார். சந்தானம் இதிலும் காமெடியில் கலக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கும் யுவன்தான் இசை. லிங்குசாமி ஆர்யாவை வைத்து இயக்கும் 'வேட்டை' படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. இப்போது சிம்பு, தான் நடிக்கும் இந்தப் படத்திற்கு 'வேட்டை மன்னன்' என டைட்டில் வைத்திருக்கிறார்.
இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது, அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படத்திற்கு வேட்டையன் என்ற டைட்டிலை தான் வைத்தோம். ஆனால் அந்த டைட்டிலை இயக்குனர் பி.வாசு பதிவு செய்து வைத்திருக்கிறார். அதனால் வேட்டை ராஜா என மாறி, இப்போது வேட்டை மன்னனாக முடிவாகி இருக்கிறது என்று சொன்னார். இந்தப் படத்தில் மூன்று நாயகிகள், சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள், இன்னொரு நடிகை ஹாலிவுட் நடிகையாம். படத்தின் சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டைலில் அமைக்க இருக்கிறார்கள். வேட்டை ஆரம்பிச்சாச்சு டோய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக