2011 ஜூலை மாதம் அதாவது இந்த மாதம் 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற சிறப்பு ஜூலை மாதமாக எண்கணித ஜோதிடர்களால் குறிப்பிடப்பட்டடுள்ளது.அந்த வகையில் இந்த ஜூலை மாதத்தில் 5 வெள்ளிக்கிழமைகள், 5 சனிக்கிழமைகள் மற்றும் 5 ஞாயிற்றுக் கிழமைகள் என்பன அசாதாரணமாக வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அசாதாரணமாக ஏற்பட்டுள்ள இந்த நாட்களின் வரிசை 823 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் முக்கியமானதொரு காலச்சக்கர மாற்றம் என குறிப்பிட்டுள்ள எண்கணித ஜோதிட நிபுணர்கள் இந்த காலச்சக்கர மாற்றத்தினால் சில முக்கிய மாற்றங்கள் உலகில் நிகழும் எனவும் எதிர்வு கூறியுள்ளனர்.குறிப்பாக அரசியல் மாற்றங்களும், ஆட்சி மாற்றங்களும், பொருளாதார மாற்றங்களும் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ள எண்கணித ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த மாற்றம் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வியை சந்திக்கும் என்றும் எதிர்வுகூறும் நிபுணர்கள் பொருட்களின் விலை வாசி அதிகரிப்பு ஏற்படும் என்றும் இதன் பிரதிபலிப்பு இன்றும் ஒன்றரை (1½) ஆண்டில் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை எதிர் கொள்ளும் என்றும் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் மக்களின் வருமான அதிகரிப்புக்கும் சாத்தியங்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக