ஞாயிறு, 14 நவம்பர், 2010

மகன் நீதிமன்றில் ஆஜராகும் வரை பெற்றோர் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவு


திருமணம் செய்வதாக ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு புரிந்த இளைஞனின் பெற் றோரை குறித்த இளைஞனை மன்றில் ஆஜர்செய்யும்வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டுள்ளார். வெளிநாடு ஒன்றிலிருந்து வருகை தந்த மந்திகையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே இடத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரைத் திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.இதற்கமைய பெற்றோரும் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இந்த நிலையில் மணற்காட்டுப்பகுதிக்குக் அந்த யுவதியை அழைத்துச் சென்ற அந்த இளைஞன் பெண்ணின் ஒப்புதல் இன்றி பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார்.அந்த இளைஞனை கடந்த மூன்றாம் திகதி முதல் காணம்த பெண்ணின் வீட்டார் பருத்தித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அந்த இளைஞன் கனடாவிலிருந்து வந்த ஒரு பெண்ணைக் கொழும்பில் திருமணம் செய்ததை அறிந்து இளைஞனின் பெற்றோரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யதனர்.மகனை   மன்றில் ஆஜராக வைப்பதாகப் பெற்றோர் வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால் அந்த இளைஞன் தொடர் ந்தும் தலைமறைவாகவே இருக்கிறார்.இவ் வழக்கின் விடயங்களை ஆராய்ந்த நீதிபதி குறித்த இளைஞன் மன்றில் ஆஜர்செய்யும்வரை பெற்றோரை விளக்க மறியலில் வைக்குமாறும் இளைஞனை உடனடியாகக் கைது செய்து ஆஜர்செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் இவ்வழக்கினை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை: