தனது பிரித்தானிய கணவருடன் தேன்நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அனி தீவானி (28) , மற்றும் இவரது கணவரான ஸ்ரயன் (30) ஆகியோர் இருவாரங்களுக்கு முன்னர் மும்பையில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இருவரும் தங்களது தேன் நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றனர்.சனிக்கிழமை இரவு இருவரும் தங்கள் இராப்போசனத்தை முடித்துவிட்டுத் தங்கள் காரில் தங்கியிருந்த விடுதிக்கு புறப்பட்டனர்.இதன்போது அவர்களது காரை வழிமறித்த துப்பாக்கிதாரிகள் இருவர், கார் சாரதியை வெளியே இழுத்துத் தள்ளிவிட்டு காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ரயனிடம் உள்ளவற்றை கொள்ளையடித்த அந் நபர்கள், அவரையும் காரிலிருந்து கீழே தள்ளி காரை மறுபடியும் ஓட்டிச் சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்க பொலிஸார் தேடல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அதன்போது அனி தீவானியின் சடலம் சுடப்பட்ட நிலையில் அவர்கள் பயணம் செய்த காரின் பின் இருக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேரிப்பகுதியொன்றில் கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இவரது உடைமைகள் அனைத்தும் இதன்போது கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் இவர் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சுடப்பட்டிருக்கலாம் அல்லது கத்தியால் குத்தப்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்க பொலிஸார் இக்கொலை தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரினதும் குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.இக்கொலைச் சம்பவம் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக