ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஜெயலலிதா: காங்கிரஸ் கூட்டணி இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார்.


"மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொண்டால் எந்தவித நிபந்தனையும் இன்றி காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவைக் கொடுப்போம்' என்கிற ஜெ.வின் மனம் திறந்த பேட்டி இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

பல நாட்களுக்கு முன்பே ஜெ. சந்திப்புக்கு டைம்ஸ் நவ் செய்தியாளர்கள் நேரம் கேட்டிருந்த நிலையில், திடீரென 11-ம் தேதி காலை வந்துவிடும்படி முதல் நாள் மாலையில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. அதுவும்கூட மரியாதை நிமித்தமான சந்திப்புக்கான நேரம் என்றுதான் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் சேனல்காரர்கள் எதற்கும் தயாரான நிலையில் போயிருக்கிறார்கள். தன் பேட்டிக்கான டைரக்ட ராக ஜெயலலிதாவே மாறியிருக்கிறார். கேமரா எங்கே வைக்க வேண்டும்... எந்த ஆங்கிளில் இருக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் அவரே தீர்மானித்திருக்கிறார். கூடவே ஜெயா டி.வி.யின் இரண்டு கேமராக்களும் ஜெ. பேட்டியை ஷூட் செய்திருக்கின்றன. பேட்டிக்கான அறைக்கு ஜெ. வந்தபோது அங்கிருந்த அனைவரையும் வெளியேறச் சொல்லி... அவர் வந்து அமர்ந்த பிறகு செய்தியாளர்களை மீண்டும் அனுமதித்திருக்கிறார்கள். ஜெ. வரும்போது அந்த அறையில் யாரும் இருக்கக்கூடாது என்பது பொதுவாக நடைமுறையில் இருக்கும் விதி என்று அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.

எப்போதும் ஒருவித இறுக்கத்துடனே இருக்கும் ஜெ. இந்த முறை பேட்டி எடுக்கச் சென்றவர்களிடம் ரொம்பவே நெருக்கம் காட்டி யிருக்கிறார். ஜெயா டி.வி. ஊழியர்களிடமும் இன்முகம் காட்டினாராம். பேட்டியை தொடங்கும் முன்பாகவே தன்னோடு பேசிய டைம்ஸ் நவ் சேனல் எடிட்டர் ஆர்னப் கோஸ்வாமியிடம்... தன்னைப் பற்றி அந்த சேனலில் ஒளிபரப்பான செய்தி ஒன்றுக்கான எதிர்ப்பையும் அழுத்த மாக தெரிவித்திருக் கிறார்.

தன்னிடம் கேட் கப்பட்ட 12 கேள்வி களுக்கும் தயக்கமோ, தடுமாற்றமோ இல்லா மல் பதில் கொடுத் திருக்கிறார். பேட்டி முழுக்க காங்கிரஸ் கட்சித்தலைமையின் கவனத்தை எப்படி யாவது தன் பக்கம் திருப்பி விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.

""ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்தால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது. ஆட்சிக்கவிழாமல் இருக்க தி.மு.க.வின் 18 எம்.பி.க்கள் எண்ணிக் கையை சமன் செய்ய வேண்டும். எங்களிடம் 9 எம்.பி.க்கள் இருக் கிறார்கள். ஒத்த கருத் துடைய மற்ற கட் சித்தலைவர்களிடம் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக் கையையும் சேர்த்தால் 18க்கு மேலும் ஒன்றி ரண்டு கூடுதலாக இருப்பார்கள்''’’ என்று வெளிப்படையாக ஜெ. சொன்னபோது பேட்டி எடுத் தவரே ஒரு நொடி அதிர்ந்தார்.

""நீங்கள் கூட்டணியை மாற்றி அமைப்பது குறித்து பேசுகிறீர்கள். அப்படி என்றால் காங்கிரசை ஆதரிக்க நிபந்தனை எதையும் விதிப்பீர்களா?'' என்று கேள்வி எழுப்பப்பட, ""என்னுடைய தரப்பிலிருந்து எந்த நிபந்தனையும் இருக்காது'' என காங்கிரஸ் கட்சிக்கு உறுதி கொடுத்தார் ஜெ. காங்கிரஸ் அரசு கவிழாமல் காக்கும் அளவிற்கான எம்.பி.க்கள் தன்னிடம் இருக்கிறார்கள் என்பதை ஒரு முறைக்கு இருமுறை அழுத்திச் சொன்ன ஜெ., ஒத்தக்கருத்துடைய கட்சிகள் பெயரை சொல்ல மறுத்துவிட்டார்.

மத்தியில் கூட்டணி பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டால் அதைப்பற்றி காங்கிரஸ்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார்.

சோனியா காந்தி குறித்த தன் விமர்சனங்கள்தான் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைப்பதில் சிக்கலாக இருக்கிறது என்பதால் அதிலும் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதை வெளிப் படுத்தினார் ஜெ. ""அரசியலில் பழைய பிரச்சினைகளை மறக்காமல், பின்னோக்கி பார்த்துக்கொண்டிருந்தால் முன்னேறி செல்ல முடியாது. எனவே கடந்த காலங்களில் நடந்தவைகளை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும்'' என்று சோனியாவுக்கு தன் கருத்தை வெளிப்படுத்தினார் ஜெ.’’


இப்படி வெளிப்படையாக காங்கிரசுக்கு மெசேஜ் கொடுத்திருக்கும் ஜெ.வின் மனநிலை என்ன என்பதை அறிய கடந்த ஒரு வாரத்தில் அவரை சந்தித்த சிலரிடம் பேசினோம்.“ ""ஜெயலலிதாவைப் பொறுத்த வரை காங்கிரஸ் கூட்டணி இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறார். விஜயகாந்த் தரப்பில் இருந்து அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருப்பதால் அவர்களை எதிர்பார்க்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் ஜெ. கம்யூனிஸ்ட்டுகளும் நம்பிக்கையான கூட்டணிக்கட்சியாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். அதே போல ம.தி.மு.க.வின் ஒரு எம்.பி.யையும் 18 பேர் லிஸ்ட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை அவர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஜெ.வை கொண்டு வர முயற்சிக்கும் அ.தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் ஆலோசனைப்படியே இந்தப் பேட்டியை கொடுத்தாராம்.

சோனியாவுடன் சமரசம் செய்ய விரும்புவதையும், நிபந்தனையற்ற ஆதரவு என்பதையும் வெளிப் படையாக அறிவியுங்கள் என்று ஜெ.யின் டெல்லி நண்பர்கள் கருத்தை தன் பேட்டியில் பிரதிபலித்து விட்டார். ஜெ.வைப் பொறுத்தவரை வரும் தேர் தலிலும் தோல்வி என்றால் பெரிய நெருக்கடி உருவாகும் என்று நினைக்கிறார். அந்த நிலையைத் தவிர்க்க கூட்டணி ஆட்சிக்கும் தயார் என தன் மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தன்னோடு வராவிட்டாலும் கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க.வை நிர்பந்திக்கும். அப்போது அவர்களுக்குள் பிரச்சினை வந்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று நம்பு கிறார். எல்லாவற்றையும் விட குருப்பெயர்ச்சி தனக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்கிற நம்பிக்கையிலேயே இப்படி ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறார்'' என்கிறார் கள் அந்த முக்கிய பிரமுகர்கள்.

-சகா

கருத்துகள் இல்லை: