ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

அஸ்ஸாமில் 7 புட்பால் கிரௌண்டுகள் அளவிற்கு detention camp உருவாகி கொண்டிருக்கிறது.

சுமதி விஜயகுமார் : எழுதுவதற்கு நிறைய இருக்கிறது. எதை விடுவது என்று தான் தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது. பொருளாதார நெருக்கடி,
தனியார் மயம், மொழி திணிப்பு, 5 வகுப்பு குழந்தைகளுக்கு பொது தேர்வு, சாலை விபத்து, சாதிய கொடுமைகள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவை அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேலையில் ஒரு செய்தியை பார்த்த போது சற்று அதிர்ச்சி கூடுதலாகவே இருந்தது.
சில வருடங்களுக்கு முன்பு, அரசியலில் நாட்டம் இல்லாத பொழுது எனக்கு ஒரு கொள்கை இருந்தது. 'ஒரு தினம் ஒரு திரைப்படம்'. ஒரு படமாவது பார்க்காமல் என் நாளை நான் முடித்ததே இல்லை. எதோ ஒரு படம் என்றும் பார்க்க மாட்டேன். தேடி, அலசி, ஆராய்ந்து நல்ல படங்களை தான் பார்ப்பேன். அதில் டாக்குமெண்டரிகளும் அடக்கம். அப்படி தேடி தேடி பார்க்கும் படங்களிலும் மனதில் நின்ற படங்களிலும் அதிகமானவை, ஹிட்லரின் படங்கள். ஹிட்லரின் நாஜி படையால் உயிரிழந்தவர்களின் பற்றிய கதைகள்.
ஒரு டாக்குமென்டரியில் ஒரு 80 வயது நிரம்பியவர் தன் கதையை சொல்லி கொண்டிருந்தார். அவர் யூதர். அவரும் அவரின் தங்கையும் இருக்க இடமில்லாமல் வீதியில் தான் வசித்து வந்தார்கள். கடுமையான பஞ்சம் பசி. அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு ஒரு சிறிய ரொட்டி துண்டு கிடைக்க அதை இருவரும் எடுத்துவந்து தாங்கள் வசிக்கும் வீதி ஓரத்தில் அமர்ந்தார்கள்.
இன்னும் சற்று நேரத்தில் இருட்டி விடும், தூங்கி விடுவோம். காலையில் எழுந்ததும் மிகவும் பசிக்கும். அப்போது இதை பகிர்ந்து உண்ணலாம் என்று இவர் சொல்ல. அந்த குழந்தையோ எனக்கு இப்போவே ரொம்ப பசிக்குது என்று சொல்லி இருக்கிறது. இவர் பல சமாதானங்களை சொல்லி உறங்க வைத்திருக்கிறார். காலையில் பார்க்கும் போது பசியில் அவள் இறந்தே போய் விட்டாள். ரொட்டியை அவளின் மேல் வைத்துவிட்டு வேறு வீதிக்கு சென்று விட்டேன் என்று சொல்லி முடிக்கும் போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அவருக்கு வயது 7. அவர் தங்கைக்கு 5. அந்த நாஜி படையால் பாதிக்க பட்ட கோடானு கோடி கண்ணீர்களில் இவர் ஒரு துளி.
அப்படி பட்ட ஒரு சர்வாதிகாரியை ஒடுக்க ஒரு சில நாடுகளை தவிர உலகமே ஒன்று கூடியது. அதில் ஒரு நாடு அமெரிக்கா. அதெல்லாம் மிக பழைய கதை. காலங்கள் உருண்டோட நாஜி படையின் மிக பிரபலமான concentration camp அமெரிக்காவில் நிறுவப்பட்டது. நாஜி படையின் camp யூதர்களுக்கு என்றால் அமெரிக்காவின் camp முதலில் அமெரிக்கா சந்தேகிக்கும் ஆட்களை சிறை வைப்பதற்கு என்று இருந்தாலும், இப்போது iilegal immigrants காக. ஹிட்லரை எதிர்த்த உலகம் இதை வாய் மூடி வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருக்க காரணம் இருக்கிறது. அமெரிக்காவின் முதல் concentration camp ஐ வெளிச்சத்திற்கு கொண்டு வந்த Julian Assange இன்று சிறையில். அதற்கு தற்கால பெயர் detention camp
Concentration/Detention camp என்றால் என்னவென்றும் அதில என்ன நடக்கும் வேண்டும் தெரியாதவர்கள் கொஞ்சம் நேரம் செலவழித்து தேடி பாருங்கள். இரவு தூக்கம் வராது. பிள்ளைகளை தாயிடம் இருந்து பிரித்தும், கணவன் மனைவியை பிரித்தும் தனித்தனியாய் சிறை வைப்பதுதான் தற்பொழுதைய எழுதப்படாத சட்டம். இந்தியாவில் இத்தனை பிரச்சனைகள் இருப்பதாய் பட்டியல் இட்டு விட்டு இப்போது ஜெர்மனி அமெரிக்காவின் concentration camp பேச வேண்டிய அவசியம் என்ன.
இந்திய தேசம் பல பெருமைகளை(? ) கொண்டது. அதில் ஒன்று, இது காந்தி தேசம். அதாவது அகிம்சை தேசம். அந்த தேசத்தில் தான் 7 புட்பால் கிரௌண்டுகள் அளவிற்கு detention camp உருவாகி கொண்டிருக்கிறது. அஸ்ஸாமில் சட்ட விரோதமாக குடியேறிவர்கள் இருக்கிறார்கள் என்று கருதி லட்சக்கணக்கான மக்களுக்கு தாங்கள் இந்தியர்கள் தான் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை சமர்ப்பிக்க கடிதம் அனுப்பி உள்ளது இந்திய அரசு. அதில் 110 வயதாகும் முதியவரும் அடக்கம். அடுத்த 48 மணி நேரத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கடிதம் வர, தன் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு செல்லம் அதற்குள் பணம் எப்படி புரட்டுவது என்பது அந்த முதியவரின் கவலை.
டிஜிட்டல் இந்தியா அப்படி சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று கடிதம் அனுப்பியதில் இந்திய அரசில் பணிபுரியும் விஞ்ஞானியும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களும் அடக்கம். அக்கா இந்தியர் என்றும் தங்கை இந்தியர் இல்லை எனவும் இந்த அரசு முடிவெடுத்து இருக்கிறது. இப்போது நீங்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி ' இவ்வளவு அவசரமாக, தகவல்களை சரி பார்க்காமல் மக்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? '
எல்லா அடக்கு முறைகளுக்கும் அடிபணிந்து கொண்டிருக்கும் மக்களாகிய நாம், அந்த detention campன் மரண கூக்குரலுக்கு பதில் சொல்ல தயாராகி கொள்வோம்

கருத்துகள் இல்லை: