ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தினமலர்: ஆர் கே நகரில் அதிமுக வெற்றி ... கருத்து கணிப்பு கூட EVM இயந்திரத்திலா ?

தினமலர்: சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, 55 சதவீதம்; தி.மு.க.,வுக்கு, 40 சதவீதம்; தினகரனுக்கு, 3 சதவீதம் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, உளவுத்துறை எடுத்துள்ள, 'சர்வே'யில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின், ஏப்ரல், 12ல், ஆர்.கே.நகரில் நடக்க இருந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன்; சசிகலா அணியில் தினகரன்; தி.மு.க., சார்பில் மருதுகணேஷ் போட்டியிட்டனர். சாதகமாக இல்லை!அந்த தேர்தலில், தினகரனின், 'தொப்பி' சின்னம், அதிக ஓட்டுகளை பிரிக்க இருந்ததால், மதுசூதனனை வீழ்த்துவது, தி.மு.க.,வுக்கு சுலபமாக இருக்கும் என, அக்கட்சி எதிர்பார்த்தது.
தற்போது, பன்னீர், பழனிசாமி அணிகள் ஒன்றிணைந்துள்ளன. இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க.,வும், அவர்களுக்கு கிடைத்துள்ளது.
தினகரன் அணியினருக்கு, களம் சாதகமாக இல்லை. இதனால், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி உறுதி என, கட்சியினர் நம்புகின்றனர். ஆளுங்கட்சியில், வேட்பாளர் தேர்வில் நீண்ட இழுபறிக்கு பின், மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதன்பின், தொகுதியில் உளவுத்துறை ரகசிய சர்வே எடுத்துள்ளது.
ஒரு சாதாரண பைனான்சியரை தேடி பிடிக்க முடியாத உலாவல் துறை மக்களின் மனதை கண்டுபிடுச்சு ரிப்போர்ட் குடுப்பாங்களாம்!   அப்படியாவது நாமும் ஜெயிக்கிற குதிரை மேல் பணம் காட்டுவோம் என்று மக்கள் மனதை மாற்ற இப்படி ஒரு செய்தி.. எம் ஜீ ஆர் நூற்றாண்டு விழாவுக்கே கூட்டம் சேர்க்க முடியவில்லை . இந்த லட்சணத்திலிவனுங்க ஒட்டு கேக்க  போனால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடி விடுவாயங்க 
அதில், 'பழனிசாமி ஆட்சி மீதான, அதிருப்தியை தாண்டி, அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியில், 55 சதவீத ஓட்டுகளை பெற்று, மதுசூதனன் வெற்றி பெறுவார்' என, கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்தபோது நடந்த, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., 53 சதவீதம்; திருப்பரங்குன்றத்தில், 55 சதவீதம்; தஞ்சையில், 54 சதவீதஓட்டுகளை பெற்றுள்ளது.
எனவே, ஆர்.கே.நகரிலும், 55 சதவீத ஓட்டுகளில் வெற்றி பெறும் என, கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம், இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு பின், மதுசூதனனுக்கு, தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.
ஆதரவு
அதாவது, ஏப்., மாதம், தி.மு.க.,வுக்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெரிய அளவில் இல்லை. தற்போது, தி.மு.க.,வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பலமாக உள்ளது. தினகரன், தீபா பிரிக்கும் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
இருப்பினும், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில், தி.மு.க., 39 சதவீதம்; திருப்பரங்குன்றத்தில், 35 சதவீதம்; தஞ்சையில், 40 சதவீத ஓட்டுகளை பெற்றதுபோல், ஆர்.கே.நகரிலும், அக்கட்சி, 40 சதவீத ஓட்டுகளை பெற வாய்ப்பு உள்ளது.
தினகரனுக்கு, தற்போது ஆளுங்கட்சி ஆதரவு இல்லை. ஆர்.கே.நகரில், அவரது ஆதரவாளர்களில், வெற்றிவேலை தவிர, மற்ற நிர்வாகிகள் அனைவரும், பழனிசாமி அணியில் உள்ளனர்.< 'ஸ்லீப்பர் செல்'</>சமீபத்தில், திருச்சியில் நடந்த, தினகரன் அணி மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற, ஆர்.கே.நகர் பகுதி செயலர், சந்தானம், கார் விபத்தில் இறந்துவிட்டார்.
தற்போது, தினகரனின் ஆதரவாளர்களாக கருதப்படும், ஆர்.கே.நகர் தொகுதி வட்ட நிர்வாகி களுக்கு, ஆளுங்கட்சி தரப்பில் வலை வீசப்பட்டு உள்ளது.எனவே, தினகரனிடம் எஞ்சியுள்ள ஆதரவாளர்களில், சிலர், 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்பட துவங்கியுள்ளனர்.அவர்களின் வாயிலாக, தினகரனை, 'டிபாசிட்' இழக்க வைக்கும் வியூகத்தையும், ஆளுங்கட்சி வகுத்துள்ளது.
இந்த முறை இரட்டை இலையை, தினகரன் எதிர்ப்பதால், அவருக்கு, 3 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்க வாய்ப்புள்ளதாக, சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது.இவ்வாறு ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: