tamil.eenaduindia.com/News/ :கொழும்பு: கடந்த முறை இலங்கையில் சுனாமி வந்தபோது மீன்வலையில் பாம்புகள் சிக்கியதுபோல மீண்டும் அவ்வாறு பாம்புகள் சிக்கியதால் மட்டக்களப்பு மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின், நாவலடியில் இன்று காலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகின்றது.
அண்மைக் காலமாக, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் சிரமத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களுக்கு, இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
அத்துடன் நாட்டில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை இலங்கையில் சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெருமளவிலான பாம்புகள் மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்தன.
தற்போது மீண்டும் அதேபோல மட்டக்களப்பு மீனவர்களிடம் ஏராளமான பாம்புகள் சிக்கியுள்ளதால் சுனாமி தாக்குதல் பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறாக பெருமளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.div dir="ltr" style="text-align: left;" trbidi="on">

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக