கேரள மாநிலத்தில் தொடங்கி பின்னர் இந்தியா
முழுவதிலும் உள்ள மாணவர்கள் அனைவரும் பங்கேற்ற போராட்டம் ‘கிஸ் ஆஃப் லவ்’.
இப்போராட்டத்தை மையமாகக்கொண்டு வெளிவந்துள்ள படம் ‘சர்வோபரி பாலக்காரன்’.
அனுப் மேனன், அபர்ணா பாலமுரளி, அனு சித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை சுரேஷ் பாபு எழுத, வேணுகோபன்
இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ‘கிஸ் ஆஃப் லவ்’ போராட்டம் குறித்த கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 2014 அக்டோபர் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பொது இடத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததற்காக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினரால் காதலர்கள் தாக்கப்பட்டனர். கலாச்சார சீர்கேட்டில் ஈடுபட்டதற்காக காதலர்கள் தாக்கப்பட்டனர் என காரணம் கூறப்பட்டது. இந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சமூக வலைதளங்களில் ‘கிஸ் ஆஃப் லவ்’ என்ற பெயரில் முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு காதலர்கள் தாக்கப்பட்டது குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
‘கிஸ் ஆஃப் லவ்’ போராட்டத்துக்கு ஆதரவாக முகநூலில் பிரசாரம் செய்யப்பட்டதோடு கொச்சி, மெரைன் டிரைவ் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக இளைஞர் அணி, SDPI, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு மதவாத அமைப்புகளுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர். மேலும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தங்கொடுத்துக்கொண்டனர். கிஸ் ஆஃப் லவ் போராட்டத்தை கேரளா மட்டுமல்லாது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா என இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் கையிலெடுத்தனர்.
இதனையடுத்து ‘கிஸ் ஆஃப் லவ்’ போராட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி நீதிமன்றம் பொதுவெளியில் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது குற்றமல்ல என்று தீர்ப்பினை வழங்கியது. இதன் காரணமாக தற்போது வெளியாகியுள்ள ‘சர்வோபரி பாலக்காரன்’ படத்தில் ‘கிஸ் ஆஃப் லவ்’ போராட்டம் குறித்தும், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை மையமாகக் கொண்டும் படத்தை உருவாக்கியுள்ளனர் படக்குழு.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக