tamil.oneindia.com - kalai-mathi
தருமபுரி: 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி அரூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம்
- சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி,
திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து நிலம்
கையகப்படுத்தப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலத்தை கொடுக்க முடியாது என விவசாயிகள் கதறி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் உள்ள காளிப்பேட்டையில் நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளை சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் உள்ள காளிப்பேட்டையில் நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளை சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.