ஒட்டு இயந்திரத்தில் பாஜக- திருட்டு தனம் செய்திருப்பது
ஆதரத்துடன் அம்பலமானது
=========================
வீடியோவில் நீங்கள் பார்க்கும் சகோதிரி உத்தர பிரதேச உள்ளார்ச்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டவர்
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவருக்கு கிடைத் வாக்குகளின் எண்ணி்கை 0
எனக்கு எந்த வாக்களரும் வாக்களிக்கவில்லை என்பதை ஒரு வாதத்திர்காக ஒப்பு கொண்டாலும் நான் எனது சின்னத்திற்கு அளித்த வாக்கு எங்கே போனது
எனது குடும்ப உறுப்பினர்கள் எனது சின்னத்திற்கு அளித்த வாக்கு எங்கே போனது
எனது சின்னத்திற்கு நான் அளித்த வாக்கே எனது கணக்கில் பதியாமல் இருப்பதே ஓட்டு இயந்திரத்தில் யோகி கூட்டம் திருட்டு தனம் செய்திருப்பதற்கு போதிய சான்றாகும் என அவர் கூறியுள்ளார்
இவ்வளவு திருட்டு தனம் செய்தும் பாஜக- உத்திர பிரதேசத்தில் 198 நகர சபைகளில் 130 நகர சபைகளில் படுதோல்வியை சந்தித்தது
சனி, 2 டிசம்பர், 2017
அம்ருதா + ஜெயலலிதா + ரஞ்சனி + சைலஜா + சசிகலா + லலிதா .. பல உண்மைகளும் பல பொய்களும் ...
இது சம்பந்தமாக நம்மிடம் பேசியவர்கள், ‘ஜெயலலிதாவின் சகோதரி என்று சொல்லிவந்த சைலஜாவின் மகள்தான் அம்ருதா. இவ்வளவு நாளாக ஜெயலலிதாவைப் பெரியம்மா எனச் சொல்லிவந்தவர்,
இப்போது அம்மா எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அற்குக் காரணமாக எல்லோரும் பெங்களூருவில் இருக்கும் ரஞ்சனி ரவீந்திரநாத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்த ரஞ்சனி ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவுக்கு உறவுக்காரர். இவர் அடிக்கடி கார்டன் பக்கம் வந்து போனபடிதான் இருந்திருக்கிறார். அதனால் சசிகலாவுடன் நல்ல நட்பும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மாதத்துக்கு முன்பு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவையும் இந்த ரஞ்சனி சந்தித்தாராம். சிறைக்குள் இருந்த சசிகலாவுடன் சில விஷயங்களைப் பேசியிருக்கிறார். ரஞ்சனியும் தற்போது அம்மா என உறவு கொண்டாடும் அம்ருதாவும் ஆரம்பத்திலிருந்தே நெருக்கமாக இருந்தவர்கள்தான். ரஞ்சனி சிறைக்குள் சசிகலாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, அம்ருதாவை அழைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதாவை சந்தித்திருக்கிறார்.
‘ஜெயலலிதாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது உனக்கும் தெரியும். அந்தக் குழந்தை யாருன்னு உனக்கு தெரியுமா? நம்ம அம்ருதாதான் அந்தக் குழந்தை. இது சம்பந்தமாக அம்ருதா கோர்ட்டுக்கு போகப் போறா. அவளுக்கு நானும் துணையா இருக்கப் போறேன். அம்ருதா உடனடியாக டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கச் சொல்லியும் கேட்கப் போறா..’ என்று சொல்லியிருக்கிறார்.
புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது .. நெல்லை ... இது ஒரு ஊழல் பாலம்?
நடு இரவில் கைது செய்து Kalaignar Karunanidhi யை சார்ஜ் சீட் கூட போட முடியாத கோபாலபுரம் பாலம் வழக்கில் ஜெயலலிதா செய்தாரே ..
இப்போது பாலம் இடிந்தே விட்டது இதில் யாரை கைது செய்ய வேண்டும் ..அந்த துறையை அப்போது மாறி மாறி வைத்து இருந்த #OPS #EPS இருவரையும் ஆட்சி மாறியவுடன் புதிய அரசு கைது செய்ய வேண்டும் என்றால் சரியா .
தீக்கதிர் :நெல்லை அருகே திருக்குறுங்குடி ஆற்றுப்பாலம் வெள்ளத்தால் உடைந்தது. நெல்லையில், கொடுமுடியாறு அணை நிரம்பியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், நம்பியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் திருக்குறுங்குடி ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டே ஆகிய நிலையில், பாலம் உடைந்தது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டி
tamilthehindu : ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் களமிறக்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர டிடிவி தினகரன், ஜே.தீபா, கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் நடிகர் விஷாலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக சார்பில் யார் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
Keywords
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கரு.நாகராஜ
கண்களும் விரல்களும் இல்லாமையால் ஆதாரும் இல்லை! தொழுநோயாளிக்கு பென்சன் ரத்து!!
நக்கீரன்: :கண்களும், விரல்களும் இல்லாத காரணத்தால் ஆதார் பெறமுடியாத தொழுநோயாளி ஒருவருக்கு பென்சன் ரத்தான அவலம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில்
உள்ள தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் சஜிதா பேகம் (வயது
65). இவர் கடந்த பத்து ஆண்டுகளாக தொழுநோய் பாதிப்பு காரணமாக அந்த
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில தினங்களாக அவரது
குடும்பத்தினர் அவரைப் பார்க்கச் செல்வதில்லை. அவரது கை மற்றும் கால்
விரல்கள் தொழுநோயால் சிதைந்துவிட்டன. வயது காரணமாக பார்வையையும்
இழந்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் ராஜாஜிநகர் உதவி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து, தங்களது ஆதார் விபரங்களை சமர்ப்பிக்காததால் பென்சன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் முதல் உங்களுக்கு பென்சன் கிடைக்காது என கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

ஆர் கே நகரில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டி
tamilthehindu : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவும், 24-ம் தேதி தேர்தல் முடிவும் வெளியாகவுள்ளது. < ரஜினி மற்றும் கமல் இருவருமே அரசியலில் இறங்கவுள்ளதால், ஆர்.கே.நகர் தேர்தலில் இவர்களுடைய பங்களிப்பு என்பது சுத்தமாக இருக்காது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக விஷால் போட்டியிடவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 4-ம் தேதி மனுத்தாக்கல் செய்யவும் விஷால் முடிவு செய்திருக்கிறார்.
ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், டிடிவி தினகரன், பாஜக என நான்குமுனைப் போட்டி நிலவி வந்த நிலையில் விஷால் போட்டியிடுவதால் தற்போது ஐந்துமுனைப் போட்டி உருவாகியுள்ளது.

கடலுக்கு சென்ற 2,000 மீனவர்களை காணவில்லை என கன்னியாகுமரி மீனவர்கள்....
தண்டோரா குழு :கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,000 மீனவர்களை காணவில்லை என கன்னியாகுமரி மீனவர்கள் புகார் தெரிவுத்துள்ளார்.
;கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல் கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஒகி புயல் வீசியதால் அவர்கள் கடலில் சிக்கிக்கொண்டனர். இதற்கிடையில், கிட்டத்தட்ட புயல் குறித்த முன்னறிவிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் கடலில் மாட்டிகொண்ட அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிட்டதட்ட 2000 மீனவர்கள் கடலில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் இருந்து, விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். மீனவர்கள் மீட்பு நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் படைகளை அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினார்.
11 கப்பல்கள் மூலம் மீனவர்களை மீட்கும் பணி தீவிரம்’ - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
ஹெலிகாப்டர் அனுப்பட்டுள்ளதாக அரசு கூறுவதை மீனவர்கள் நம்பவில்லை! ஏனெனில் அங்கிருந்து தப்பி கரை ஒதுங்கிய மீனவர்கள் அப்படி ஒரு ஹெலிகாப்டரம் தாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள் !
விகடன் இ.கார்த்திகேயன்ஏ.சிதம்பரம் :
கன்னியாகுமரி கடல்பகுதியில் உருவான ‘ஒகி’ புயலால் மாயமான மீனவர்களை, 3 பெரிய கப்பல் உட்பட 11 கப்பல்கள் மூலம் தேடும்பணி போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் ஒகி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஒகி புயலின் சீற்றத்தால் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போனதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீனவர்களை மீட்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுவரை எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் மூலம் 837 மீனவர்கள், 71 மீன்பிடி படகுகளில் குஜராத், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு உள்ளிட்ட கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பாகக் கரை ஒதுங்கியுள்ளனர்.
அவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக அந்தந்த மாநில அரசுகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.<>33 படகுகளில் மீன்பிடிக்கச் சென்று கடலில் சிக்கியுள்ள 85 மீனவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த மீனவர்கள் தங்கு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி கடலில் ஏராளமான மீனவர்களை காணவில்லை? 737 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர்?
சுமார் 500 க்கும் அதிகமான மீனவர்களை காணவில்லை என்று கன்யாகுமரி மக்கள் தெரிவிப்பு ... கடல் படை கப்பல் கடல் சீற்றம் காரணமாக இன்னும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பதாக தெரிவிகின்றனர் ,,, நிலைமை படு மோசம். மீனவ குடும்பங்கள் கண்ணீர் ...
tamilthehindu :ஒக்கி புயலால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களில் 737 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் அளித்துள்ளார்.
கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், 29-ம் தேதி ‘ஒக்கி‘ புயலாக உருவெடுத்தது. தொடர்ந்து அதே இடத்தில் புயல் மையம் கொண்டிருந்ததால், அன்று நள்ளிரவு முதல், வியாழக்கிழமை மாலை வரை 80 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று இம்மூன்று மாவட்டங்களையும் தாக்கியது. தொடர்ந்து கனமழை கொட்டத் தொடங்கியது.
குறிப்பாக ஒக்கி புயலின் தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டம் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்துத் தரக் கோரி சின்னத்துறை மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் மீட்கப்படுவது குறித்துப் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ''திருச்சூரில் 52 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் 66 மீன்பிடி படகுகளுடன் 685 மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்டுள்ளோம்.
மொத்தத்தில் 737 மீனவர்கள் கடலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீனவர்கள் இதுகுறித்து மேலும் அச்சம்கொள்ளத் தேவையில்லை'' என்றார் ஜெயக்குமார்.
ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....திசம்பர் 2, 1933
Devi Somasundaram :
திராவிடர் கழகம்.
திக என்று சுருக்கமா அழைக்கப்படும் இந்த இயக்கம் தமிழ் நாட்டின் ஒவ்வொரு ஜீவனோடும் எதோ ஒரு வகையில் தன் தொடர்பை கொண்டிருப்பதன் அந்த இயக்கம் நீர்த்து போகாமல் பாதுகாப்பதில் அதன் தலைமைக்கு உள்ள பல சிக்கலான நிலைகளை தாண்டி சாதித்து வரும் தோழர் வீரமணி அய்யாவின் சாதனை பங்கு நிச்சயம் மகத்தானது..
தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளை பாதுகாப்பதன் மூலம் சமுக நீதியை நிலை நிறுத்த தன் முயற்சியை எந்த சிக்கலான கால கட்டத்திலும் கை விடாத போராளி அய்யா வீரமணி.
யார் உதவிக்கு வருகிறார்களோ அவர்களை விமர்சிப்பது தான் அறசீற்றம் என்பதை அடிப்படை கொள்கையாய் கொண்ட சமுக மனோ பாவத்திற்கு கட்சிகளும் விலக்கில்லை என்பது அறிந்ததே.

ஒரே நேரத்தில் முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!
minnambalam.com :முஸ்லிம்
பெண்கள் திருமணப் பாதுகாப்பு மசோதா’ என்ற புதிய சட்ட முன்வரைவை மத்திய
அரசு தயாரித்துள்ளது. அந்த வரைவில் ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறி
மனைவியை விவாகரத்து செய்யும் கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை
விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி, திருமண பந்தத்திலிருந்து ஆண்கள் எளிதாக விவாகரத்து பெறுகின்றனர். பொது இடங்களில், சமூக வலைதளங்களில் விவாகரத்து செய்வது, ஆண் குழந்தை இல்லை எனக் கூறி பெண்களை விவாகரத்து செய்வது என ஆண்கள், பெண்களைக் கைவிடுகின்றனர். இதனால், முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, முத்தலாக் விவாகரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ரா பானு என்ற பெண், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுபோன்று முத்தலாக் முறைக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

மருத்துவர் ராமதாஸ் :இலவச அரிசி திட்டத்தை நிறுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதன் விளைவாக, புத்தாண்டு முதல் பொது வினியோகத் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலவச அரிசித் திட்டம் கூட ரத்து செய்யப்படலாம், மற்ற உணவு தானியங்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தலித் ஆளுமை அன்னை மீனாம்பாள் நினைவேந்தல்
நாள் : 30.11.2017
நேரம்: மாலை 5:30
இடம்: SIGA, Don Bosco Hall, Taylors Road, Kilpauk, Chennai. Contact number 9841071903
நீதிகட்சி பவளவிழா மலர் - 1992 : காவல்துறையில் துணை ஆணையாளராக பதவியாற்றி ஓய்வுபெற்ற அவரது மகன் தயாசங்கர் இல்லத்தில்தான் மூதாட்டியார் அவர்கள் இருந்து வருகிறார்கள். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்துடன் துவக்கத்தில் தொடர்பு கொண்டு உயிரோடு இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவராக இருக்கக்கூடியவர் என்பதால், நீதிக்கட்சி பவள விழா மலரில் அவரை நேர்முகமாக கண்டு பழைய நினைவுகளை புதிய தலைமுறையினரின் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அவாவில் அவரைச் சந்தித்தோம்.

ஜெயாவின் அண்ணன் வாசுதேவன் : ஜெ.விற்கு மகள் இருக்கிறார் ; சசிகலா, நடரஜனுக்கு தெரியும்
வெப்துனியா :மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்
மகள் என அம்ருதா என்பவர் கூறியிருக்கும் நிலையில், ஜெ.வின் அண்ணன் முறையான
வாசுதேவன் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.
;தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னுடைய உறவினர்தான் ஜெ.விற்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டார் என லலிதா கூறியிருந்தார்.
இந்நிலையில், பெங்களூரில் வசித்து வரும் ஜெ.வின் அண்ணன் வாசுதேவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:எனது தந்தை ஜெயராமன் இரண்டாவதாக வேதம்மாள்
என்கிற சந்தியாவை திருமணம் செய்து கொண்டார்.
;தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னுடைய உறவினர்தான் ஜெ.விற்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டார் என லலிதா கூறியிருந்தார்.
வெள்ளி, 1 டிசம்பர், 2017
ஆர் கே நகரில் தலைக்கு 500 ரூபாய்? டோக்கன்கள் வழங்கப்படுகிறது ... (படங்களுடன் )
நக்கீரன் : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டி.டி.வி. தினகரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக அவர் எம்.ஜி.ஆர். - ஜெ. நினைவிடத்தில் சென்று மரியாதை செய்துவிட்டு, தேர்தல் அதிகாரி உள்ள அலுவலகம் வரை ஆதரவாளர்களுடன் சென்றார். ;டி.டி.வி.
தினகரனுக்கு ஆதரவாக வந்தவர்களில் ஒரு பெண் தனது கையில் உள்ள நோட்டில் ஏதோ
எழுதிக்கொண்டே சென்றார். இன்னொருவர் டோக்கன் வழங்குவதுபோல சீட்டுகள்
வைத்திருந்தார். இந்த நிலையில் தலைக்கு ரூபாய் 500 பணம் கொடுத்து ஆட்களை
திரட்டியுள்ளதாகவும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து
வந்துள்ளதாகவும் ஆளும் கட்சியான அதிமுக குற்றம் சாட்டியது. ஆளும் கட்சியின்
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் விசாரணையில்
ஈடுபட்டுள்ளனர்.&>செய்தி, படங்கள்: அருண்பாண்டியன்,,,படங்களின் மேல் கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்
மனநலம் பாதித்த இளம்பெண்கள் காணாமல் போகும் மர்மம்! கடத்தப்படுகிறார்களா?
நக்கீரன் :புதுக்கோட்டை
நகருக்குள் மனநலம் பாதித்த இளம் பெண்கள், சிறுமிகள் வந்தால் சில நாட்களில்
நகரில் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்கள் அடுத்த ஊர்களுக்கு
சென்றுவிடுகிறார்களா அல்லது கடத்தப்படுகிறார்களா என்ற வினா நகர மக்களிடம்
எழுந்துள்ளது.இந்நிலையில்தான்,
புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவராக பதவி ஏற்றுள்ள மருத்துவர்
கார்த்திக் தெய்வநாயகம் மனநலம் குறித்து அரசு மற்றும் தன்னார்வ தொண்டு
நிறுவனங்களுடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
;அப்படி ஒரு நிகழ்ச்சியாக கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் உள்ள காவல் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சாலைகளில், சுற்றி வரும் மனநலம் பாதித்தவர்களை பிடித்து முறையாக வழக்கு பதிவு செய்து எங்களிடம் ஒப்படைத்தால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்து அவர்களுக்கும், அவர்களை ஒதுக்கிய குடும்பத்தினருக்கும் ஆலோசனைகள் வழங்கி சமூகத்தால் மதிக்கப்படும் மனிதராக அனுப்பி வைப்போம் என்று கூறப்பட்டது.

மைக்கல் ராயப்பன் :சிம்புவால் நடுத்தெருவில் நிற்கிறேன்: ஏஏஏ தயாரிப்பாளர்
Siva -Oneindia Tamil
: சிம்புவால் நடுத்தெருவில் நிற்கிறேன்: ஏஏஏ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்- வீடியோ
சென்னை: சிம்புவால் வீடு, வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன் என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார்.
இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் கூறியதாவது,
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஸ்க்ரிப்ட்டை முழுமையாக கேட்ட பிறகே நடிக்க சம்மத்தித்தார் சிம்பு. ஒழுங்காக டேட்ஸும் கொடுக்கவில்லை, படப்பிடிப்புக்கும் வரவில்லை.
கதைப்படி படத்தையும் முறையாக எடுக்கவிடாமல் தொல்லை கொடுத்தார். படத்தின் பாதி வேலைகள் முடிந்த நிலையில் இதை இரண்டு பாகமாக எடுக்குமாறு கூறினார் சிம்பு.
2ம் பாகத்தில் சம்பளம் வாங்காமல் சும்மா நடிக்கிறேன். எது நடந்தாலும் நான் பொறுப்பு என்று சிம்பு கூறினார். முதல் பாகத்திற்கு அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்தோம்.
ஒபாமா: மன்மோகன் சிங் இந்திய பொருளாதார நவீனத்தின் அடிக்கல் ! மோடியும் மன்மோகனும் ,,,,
டெல்லியில் இன்று (டிசம்பர் 1 ) நடைபெற்ற கருத்தரங்கில், பிரதமர் மோடியுடனான நட்பு குறித்து ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எனக்கு மோடியைப் பிடிக்கும், நாட்டின் எதிர்காலம் குறித்த பார்வை அவரிடம் உள்ளது. அதிகாரத்துவத்தின் கூறுகளை அவர் நவீனப்படுத்திவருகிறார்” என்று பாராட்டிய அவர், தான் மன்மோகன் சிங்கிடம் அதிகம் நட்பு பாராட்டியதாகவும் கூறினார்.
“மன்மோகன் சிங் எனது முக்கிய நண்பர். 2008ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது என்னோடு இணைந்து பணியாற்றிய முக்கியக் கூட்டாளி அவர். பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதற்காக மன்மோகன் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம், இந்தியப் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதற்கான அடிக்கல்” என்று மன்மோகன் சிங்கை ஒபாமா பாராட்டினார்.
சீரியலை பார்த்து தீ நடனம் ஆடிய சிறுமி உயிரழப்பு ,,, நந்தினி சீரியல் போலவே வீட்டில் நெருப்போடு விளையாடிய
மின்னம்பலம் : கர்நாடக மாநிலத்தில் 7 வயது சிறுமி டிவி சீரியலைப் பார்த்து, அதேபோல் தீ நடனத்தை ஆட முயற்சி செய்ததில் உடல் கருகி உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹரா பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்- சைத்ரா. கூலி தொழில் செய்து வரும் இவர்களின் மகள் 7 வயது பிரார்த்தனா. இச்சிறுமி அப்பகுதியில் உள்ள தூய மேரி கான்வெண்ட் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்துவந்தாள்.
இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், பிரபல தமிழ் இயக்குநரின் தயாரிப்பில் பல்வேறு மொழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் “நந்தினி” என்ற சீரியலை அவர்களின் தாய் மொழியான கன்னடத்தில் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த சீரியலைத் தொடர்ச்சியாக பார்ப்பது பிரார்த்தனாவின் வழக்கம்.

தீபா : சந்தியா ஜெயராம் தம்பதிகளின் சொத்துக்கு .. நானும் என் அண்ணனும்தான்?
சந்தியா ஜெயராம் தம்பதிக்கு ஜெயகுமார், ஜெயலலிதா என்ற இரண்டு பேர் மட்டுமே சட்டப்பூர்வமான வாரிசு. வேறு யாரும் உரிமை கோரினால் அவர்கள் கண்டிப்பாக போலியானவர்கள்தான்
வெப்துனியா :மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் கூறியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார்.>ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னுடைய உறவினர்தான் ஜெ.விற்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டார் என லலிதா கூறியிருந்தார்.

ஒக்கி புயல் வலுவடைந்தது: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும்
மாலைமலர் :அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த ஒக்கி
புயல் வலுவடைந்திருப்பதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி
மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: அரபிக்கடலில் கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஒக்கி புயல் காரணமாக, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனற எச்சரிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஒக்கி புயல் வலுவடைந்து லட்சத்தீவுகளை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது. இன்று காலை நிலவரப்படி அரபிக்கடலில் மினிகாயில் இருந்து (லட்சத்தீவு) சுமார் 110 கி.மீ. வடக்கு-வடகிழக்கே மையம் கொண்டிருந்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவு பகுதியை கடக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவு, கேரளம் மற்றும் தமிழக பகுதிகளில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையைப் பொருத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மற்ற ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜெயாவின் தோழி கீதா: அம்ருதா சோபன் பாபு + ஜெயலலிதா மகள்தான் ... அம்ருதாவுக்கு டி என் ஏ சோதனை நடத்துங்கள் ..
tamiloneindia :: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த மகள்தான் தற்போது உரிமை கோரும் அம்ருதா என ஜெயலலிதாவின் தோழி கீதா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மறைந்த உடன் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்; அவரது மரணத்துக்கு நீதி தேவை என நீதிமன்ற கதவுகளைத் தட்டியவர் அவரது தோழி கீதா. ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டி வருபவர் கீதா.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகள் நான்; ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரு அம்ருதா உச்சநீதிமன்றத்துக்குப் போனார்.
அவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.
இதனிடையே ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா என்பவரும் சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் குழந்தை பிறந்தது; ஜெயலலிதாவுக்கு பிரசவமே நாங்கள்தான் பார்த்தோம் என அதிரடியாக குண்டுகளை வீசினார்.
ஆர்.கே.நகர் நடிகர் விஷால் போட்டி.. கமல்ஹாசன் சார்பாக...?
ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் முடிவு. சுயேச்சையாகப் போட்டியிடும் அவர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. @News18TamilNadu
.ietamil.com/tamilnadu : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கமல்ஹாசன் சார்பாக நடிகர் விஷாலை வேட்பாளராக அறிவிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. கமல் தரப்பில் இருந்து விஷாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைத்தேர்தலின் போது, போட்டியிட்ட அதிமுக சார்பில் மதுசூதணன், திமுக சார்பில் மருது கணேஷ் ஆகியோரும், டிடிவி தினகரன் சுயேட்ச்சையாகவும் போட்டியிடுகிறார். இவர்கள் மூவரும் நாளை வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது, நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை விமர்சனம் செய்தார்.

வைரமுத்துவைக் கவர்ந்த மோடி வித்தை!
மின்னம்பலம் - களந்தை பீர் முகம்மது :
‘சிந்தனைக்
களஞ்சியம்’ என்ற நூலின் பெயர், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர்
எம்.எஸ்.கோல்வல்கரின் ‘சிந்தனைக் கொத்து’ நூலை நமக்கு ஞாபகப்படுத்துவது.
நம் ஞாபகம் தடம் புரண்டு அது கவிதை நூலில் வந்து முடிகிறது.
‘சிந்தனைக் களஞ்சியம்’ கவிதைகளை யாத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. குஜராத்தி மொழி பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஒருவர் பிரதமராக இருக்கும் காலத்திலும் தன்னைக் கருவியாகக்கொண்டு அவர் கவிதை இயற்றியிருக்கிறார் என்பது குறித்து குஜராத்தி மொழி நெஞ்சு விரித்திருக்கும்.
சிந்தனைக் களஞ்சியம், தமிழில் மொழிபெயர்ப்பாகியிருக்கிறது. தமிழுக்கு இன்னும் பல்லாயிரம் அயல்மொழிக் களஞ்சியங்கள் வந்துசேர வேண்டிய நிலையில் இந்தக் களஞ்சியம் வேகமெடுத்து வந்திருக்கிறது. அது நம் கவனத்துக்கு இருவரைக் கொண்டுவருகிறது. ஒருவர் அதன் கர்த்தா; பிறிதொருவர் அசல் தமிழ்க் கவிஞரான வைரமுத்து.

குற்றச்செயல்களில் உத்தரப்பிரதேசம் முதலிடம்!
இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் நடைபெறும் குற்ற ஆவணங்கள் குறித்த பட்டியலை வெளியிடுகிறது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
நாட்டில் மொத்தமாக 2016ஆம் ஆண்டில் 30,450 கொலைகள் நடந்துள்ளன. இது 2015ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 5.2 சதவிகிதம் குறைவாகும். 2015ஆம் ஆண்டில் 32,127 கொலைகள் நடந்துள்ளன. குற்றங்கள் அதிகமாக நடந்த மாநிலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களே முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் நடந்துள்ள மொத்த குற்றச்செயல்களில் 9.5 சதவிகிதம் உத்தரப்பிரதேசத்தில்தான் நடந்துள்ளன.
அருணாச்சல பிரதேசம் 88 மாணவிகளின் ஆடைகளைந்து நிற்கவைத்த ஆசிரியர்
தினமலர் :இடாநகர்: அருணாச்சலில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி, 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி, அவர்களை, சக மாணவர்கள் முன், நீண்ட நேரம் நிற்க வைத்து, தண்டனை கொடுத்த கொடூரம் நடந்து உள்ளது.
விமர்சனம்: அருணாச்சல பிரதேசத்தில், பபும் பாரே மாவட்டத்தில், சகாலி என்ற நகரத்தில், காந்தி பாலிகா வித்யாலயா என்ற, தங்கி படிக்கும் வசதியுடன் கூடிய தனியார் பள்ளி உள்ளது. சமீபத்தில், இந்த பள்ளியில், தலைமை ஆசிரியரையும், சில மாணவர்களையும் பற்றி, தரக்குறைவாக விமர்சித்து எழுதப்பட்டிருந்த ஒரு காகிதம், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் கிடந்தது. இதைப் படித்து பார்த்த தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும், கடும் ஆத்திரம் அடைந்தனர்.
கொடூர தண்டனை: ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் இந்த காகிதம் கிடந்ததால், அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவியர் தான், இதை எழுதியிருப்பர் என, ஆசிரியர்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து, அந்த இரண்டு வகுப்புகளிலும் படிக்கும், 88 மாணவியரையும் வரவழைத்து, மற்ற மாணவியர் முன் நிறுத்தினர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அகற்றிய ஆசிரியர்கள், உள்ளாடைகளுடன், அந்த மாணவியரை நீண்ட நேரம் நிற்க வைத்தனர்.

மதுசூதனனின் Flashback... கொலை.. அசிட் வீச்சு..அடிதடி....
tamiloneindia : தமிழகத்துக்கே ஆசிட் வீச்சு கலாசாரத்தை அறிமுகப்படுத்திய ஆர்.கே.நகர் மதுசூதனன் வரலாறு ;
அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த பிறகு சென்னையில் அக்கட்சியினர் அரங்கேற்றிய அத்தனை அராஜகங்களிலும் அடிப்பட்டவர்தான் இன்றைய அதிமுக அவைத் தலைவரும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருமான மதுசூதனன். குறிப்பாக தமிழகத்துக்கே ஆசிட் வீச்சு கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர் என்கிற கடந்த கால வரலாற்றுப் பெருமை மதுசூதனனுக்கு உண்டு.
26 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் அதிமுகவின் இன்றைய அவைத் தலைவர் மதுசூதனன்.
அதிமுகவில் ஜெயலலிதா தலையெடுத்த காலங்களில் மன்னார்குடி குடும்பத்தின் திவாகரன், தினகரன் சபாரி போட்டுக் கொண்டு ஜெ.வுக்கு அருகில் இருந்திருக்கலாம். ஆனால் தொண்டர் பலத்தையும் குண்டர் பலத்தையும் திரட்டுவதற்கு அப்போது தேவைப்பட்டவர் வடசென்னை மதுசூதனன்தான்.

24 வயதில் 18 வழக்குகள்! – வடசென்னை விஜி,,, CCTV Footage-
சென்னையில் நேற்று (29.11.2017)
பட்டப்பகலில் ரவுடி விஜியைக் கொலை செய்த கும்பல், ரத்தம் படிந்த கத்தி,
அரிவாளுடன் சர்வசாதாரணமாக சாலையில் நடந்துசெல்கின்றனர்.
சினிமா படப்பிடிப்பு என்று முதலில் கருதிய அப்பகுதி மக்களுக்கு, அது நிஜம் என்றதும் உள்ளுக்குள் உதறல் ஏற்பட்டிருக்கிறது.<
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன்
நகரைச் சேர்ந்தவர் விஜி என்ற விஜயகுமார். 24 வயதாகும் இவர், காசிமேடு
பகுதியில் படகு பழுதுபார்க்கும் வேலை செய்துவந்தார். அதன்பிறகு கஞ்சா சப்ளை
செய்துவந்தார்.
அப்போது, வடசென்னையைக் கலக்கிவரும் பிரபல
ரவுடி ஒருவருடன் விஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு
கூலிப்படையாக செயல்பட்ட விஜி, அதன்பிறகு ரவுடி சாம்ராஜ்ஜியத்தில்
கால்பதிக்கத் தொடங்கினார்.
கழுத்து நிறைய செயின்களுடன் லோக்கல்
தாதாவாகவே விஜி செயல்பட்டுள்ளார். கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை
முயற்சி என பல வழக்குகள் அடுத்தடுத்து அவர் மீது பாய்ந்தன.
வடசென்னை ரவுடிகளின் பட்டியலில் விஜியின்
பெயர் இடம்பெற்றது. இதனால் போலீஸாரின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள்
விஜி இருந்துவந்தார்.
வியாழன், 30 நவம்பர், 2017
அன்புசெழியன் ... வட்டி வேண்டாம் முதல் தந்தாலே போதும் ....
வெப்துனியா : சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
சமீபத்தில் முன்ஜாமீன் கேட்டு அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்நிலையில், திடீரெனெ இன்று காலை அவரது வழக்கறிஞர் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னை அன்புச்செழியனின் சகோதரர் அழகர் சமீபத்தில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, அசோக்குமார் விவகாரத்தில் எல்லோரும் ஒருபக்கம் மட்டுமே பார்க்கிறார்கள். இது வேதனையாக இருக்கிறது. நாங்கள் அசோக்குமாரிடம் தவறாக பேசவில்லை. இந்த பிரச்சனை பற்றி அவர் எங்களிடமோ அல்லது சசிக்குமாரிடமோ கூறியிருக்கலாம். இதை பேசி தீர்த்திருக்க முடியும். இனிமேல் சினிமாவிற்கு பணம் கொடுப்பதையே நிறுத்தி விடுவது என முடிவெடுத்துள்ளோம். நாங்கள் கொடுத்த பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும். எங்களுக்கு வட்டி கூட வேண்டாம். இதற்கு அண்ணன் அன்புவும் ஒத்துக்கொள்வார் என தன்னிடம் கூறியதாக பார்த்திபன் தெரிவித்தார்
நீதிபதி லோயா கொலை ,,, அமித் ஷாவை இன்னும் ஏன் கைது செய்யவில்லை? மனம் திறக்கும் குடும்பம்
வினவு :சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா
கடந்த 2014 -ம் ஆண்டு டிசம்பர் 1 -ம் தேதி திருமணம் ஒன்றிற்காக நாக்பூர்
சென்றிருந்த சமயத்தில் திடீரென அகால மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு
மாரடைப்பே காரணமென அப்போது சொல்லப்பட்டது.
எனினும், நீதிபதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று அப்போதே தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக நீதிபதி லோயாவின் உறவினர்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடமும் நீதிபதியின் மரணம் குறித்து தகவல் திரட்டிய பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே, தான் கண்டறிந்தவைகளை கேரவன் இணையப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
நீதிபதி லோயாவின் மரணம் உண்மையில் சந்தேகத்துக்குரியது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. தேசிய ஊடகங்கள் இது குறித்து கள்ளமௌனம் சாதித்தாலும் சமூக வலைத்தளங்களில் இது பற்றி விவாதிக்கப்படுகின்றது. முதுகெலும்பைச் சில்லிட வைக்கும் இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், குஜராத்தில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சில சம்பவங்களில் இருந்து துவங்க வேண்டியது அவசியம்.

உயர் நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம் : செவிலியர் போராட்டத்திற்கு தடை ! பார்ப்பன நீதிபதி இந்திரா பானர்ஜி ...
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி :போராட்டத்தை கைவிட்டால் தான் உங்கள் தரப்பு வாதங்களை கேட்க முடியும் என்றும், “ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது”
வினவு :கடந்த மூன்று நாட்களாக பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிஎம்ஸ் வளாகத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கலைக்க அதிகார வர்க்கமும், போலிசும் என்னவெல்லாம் சதித்திட்டம் தீட்டினர் என்பதை ஏற்கனவே பார்த்திருந்தோம். நான்காவது நாளாக போராட்டம் தொடரும் என செவிலியர்கள் அறிவித்த சூழலில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த போராட்டத்திற்கு கண்டனதடை விதித்துவிட்டு, செவிலியர்கள் மீது அனுதாபம் காட்டவேண்டாம், செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும், இல்லையென்றால் உடனே பணி நீக்கம் செய்யலாம் என்றும் அறிவித்தது.

அகிலா என்கிற ஹாதியா... .savukkuonline.com
Savukku :
ஹாதியா.
இந்தப் பெயர் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிக்
கொண்டிருக்கிறது. ஹாதியாவுக்கு ஆதரவாக ஒரு புறம் இஸ்லாமியர்கள் கச்சைக்
கட்டுகிறார்கள். லவ் ஜிகாத் என்ற பெரும் சதிக்கு எதிராக இந்துக்கள் திரள
வேண்டும் என்று சங் பரிவார் அமைப்புகள் கொதிநிலைக்கு செல்கிறார்கள். இது
சரியா தவறா என்று ஆராய்வதற்கு முன், ஹாதியாவின் வரலாறை பார்ப்போம்.
கேரள மாவட்டம், கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர்தான் அகிலா. அகிலாவின் தந்தை அசோகன் ஒரு கடவுள் மறுப்பாளர். ப்ளஸ் டூவில் ஒரு முறை தோல்வியடைந்த அகிலா, மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்றபின், சேலத்தில் உள்ள சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில், ஹோமியோபதி மருத்துவம் பயில்வதற்காக செல்கிறார். அங்கே ஹாஸ்டலில் தங்காமல், வெளியில் தனியாக வீடெடுத்து இரு பெண்களோடு தங்குகிறார். அவரோடு தங்கியிருந்த இரு பெண்கள் ஃபசீனா மற்றும் ஜசீனா. இவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள்.
6 ஜனவரி 2016 முதல் திடீரென்று அகிலா காணாமல் போகிறார். ஃபசீனா மற்றும் ஹசீனாவின் தந்தை அபுபக்கர் ஆகியோர் தன் மகளை இஸ்லாமியராக மாற்றி கடத்தி வைத்துள்ளனர் என்று அகிலாவின் தந்தை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்கிறார். வழக்கும் பதியப்படுகிறது. ஆனால் அகிலாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

ஸ்டாலின் வைகோ சந்திப்பு ....
மின்னம்பலம் : கோவை விமான நிலையத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.
திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தம்பி மகள் வித்யா கோகுல் உடல்நலக்குறைபாடு காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது, மரணம் குறித்து துக்கம் விசாரிப்பதற்காக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(நவம்பர் 30) கோவை வந்திருந்தார். வித்யா கோகுலின் மரணம் குறித்து துக்கம் விசாரித்துவிட்டு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட அலங்கார வளைவு மோதி, உயிரிழந்த ரகுவின் வீட்டுக்குச் சென்று, அவரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடைவிதித்ததை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு!
நக்கீரன் :மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கடந்த மே மாதம் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடைவிதித்தது. விவசாயத்திற்காக மட்டுமே மாடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய மத்திய அரசு, மாடுகளை விற்பனை செய்ய பல்வேறு விதிமுறைகளையும் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தங்களது மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் உள்ளிட்ட பலர் அவதியுற்றனர்.
மேலும், பசு சேவகர்கள் என சொல்லப்படும் பசு குண்டர்கள், பசுவின் பெயரால் பல்வேறு தாக்குதல்களை நாடு முழுவதும் அரங்கேற்றினர். பலர் கொல்லப்பட்டனர். இது மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆர் கே நகர் மதுசூதனன் போட்டி ... சந்திரலேகா அசிட் புகழ் அதிமுகவின் அதிகார பூர்வ வேட்பாளர்
நக்கீரன் :ட்விட்டர், முகநூல் பதிவுகள் மூலமாக நமது உள்கட்சி சண்டை வெளிப்படுகிறது" என்றார். இதைக் கேட்ட மைத்ரேயன், "நான் அம்மாவின் விசுவாசி. எது பேசினாலும் நேரடியாக பேசுங்கள்" என்றார். அதற்கு பதில் சொன்ன பொள்ளாச்சி ஜெயராமன், "நீங்கள் விசுவாசின்னா நாங்க விஷவாசியா?" என பதில் சொல்ல, ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் எம்.பி. செஞ்சி ஏழுமலையையும் பேச தூண்டி விட்டார். அவர்கள் மைத்ரேயனை ஒருமையில் பேச ஆரம்பித்தார்கள்.
"நீ பி.ஜே.பி.க்காரன்தானே நான் சொல்லவா உன் கதையை, நீ பச்ச துரோகி" என மைத்ரேயனையும் பா.ஜ.க.வையும் சகட்டு மேனிக்கு வாங்கினர். இவர்களுடன் அமைச்சர் கே.சி.வீரமணியும் சேர்ந்து கொண்டார். கிட்டத்தட்ட 50 பேர் சத்தமாக சண்டையிடும் சப்தம் வெளியில் அமர்ந்திருந்த தொண்டர்கள் காதில் விழுந்தது. மைத்ரேயனுக்கு ஆதரவாக கே.பி.முனுசாமி பேச முற்பட்டபோது அவருக்கும் அர்ச்சனை விழுந்தது. ஒரு கட்டத்தில் நாற்காலிகள் நகர ஆரம்பித்ததும் மைத்ரேயன் கையிலிருந்த மைக்கை ஓ.பி.எஸ். வாங்கிக் கொண்டார்.
இப்படி களேபரத்துடன் நடந்து கொண்டிருந்த விழாவை அமைதிப்படுத்தி ஆட்சி மன்றக் குழுவில் ஓ.பி.எஸ். சார்பாக கே.பி.முனுசாமியும், இ.பி.எஸ். அணி சார்பாக இ.பி.எஸ்.சும், வைத்திலிங்கமும் அறிவிக்கப்பட்டனர்
தினமலர் :சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஏற்கனவே பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.,வின் அவைத் தலைவருமான மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவார் என, கட்சியின் ஆட்சி மன்ற குழு அறிவித்துள்ளது.

ஆர் கே நகர் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி ...
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமினை பொதுப்பார்வையாளர் கம்லேஷ் குமார் பந்த், மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலின் போது வாக்குச்சாவடியில் பணியாற்றக்கூடிய மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று (30.11.2017) வண்ணாரப்பேட்டை அரசு தொழிற்பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது.
இந்த பயிற்சியை தேர்தல் பொதுப்பார்வையாளர் கம்லேஷ் குமார் பந்த், மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன், இருவரும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 27 அடி உயர்ந்தது.. ஒரே நாளில்! கருப்பாநதி அணை நிரம்பியது
மாலைமலர் : நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும்
கனமழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 27 அடி உயர்ந்துள்ளது.
கருப்பாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
நெல்லை:
தென்மேற்கு வங்கக் கடலில் தூத்துக்குடி அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால் தென்தமிழகத்தில் பரவலாக
கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் சூறைக்காற்றுடன் மழை
பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு
பகுதியில் மிக அதிக அளவில் மழை பதிவாகி உள்ளது. இதனால் அணைகள் வேகமாக
நிரம்பி வருகின்றன.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 27 அடி உயர்ந்துள்ளது. இதேபோல்
பாபநாசம் அணை 14 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணையின் மொத்த கொள்ளவான 156
அடியில் 148.62 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. பாபநாசம் அணையின் மொத்த
கொள்ளளவான 143 அடியில் 121.50 அடி நிரம்பி உள்ளது. கருப்பாநதி அணை இன்று
மாலை முழு கொள்ளளவை எட்டியது.
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி கிடையாது. நெடுஞ்சாலை துறை முடிவு!
சில மாதங்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. மைல் கற்களில் இருந்த வாசகங்களும் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில், தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளது. மைல் கற்களில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள இந்தி வார்த்தைகளை அழிக்கவும், புதிய மைல் கற்களில் ஆங்கிலம் மற்றும் தமிழை மட்டுமே பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேச நதி கறுப்பாகியது .. சீனர்கள் சுரங்கம் அமைக்கின்றனரா?
மின்னம்பலம் : அருணாச்சலப்
பிரதேச மாநிலத்தில் முக்கிய ஆறாக இருப்பது சியாங் நதி. இது பல மக்களுக்கு
வாழ்வாதாரமாக இருக்கும் இந்த ஆறு திடீரென்று கறுப்பாக மாறியதைப் பார்த்து
மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நதியை யாரும் பயன்படுத்த வேண்டாம்
என்று அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு சியாங் மாவட்டத்தில் இந்த நதியின் அடிப்பகுதியில் சிமென்ட் கழிவுகள் பல கிலோமீட்டர் தொலைவுக்குப் பரவியுள்ளது. இதனால், நதிநீர் கறுப்பு நிறத்துக்கு மாறி, எதற்கும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த நதியில் தொடர்ந்து மீன்களும் இறந்து வந்துள்ளன.
இதுகுறித்து கிழக்கு சியாங் மாவட்ட அரசு அதிகாரி டம்யோ டலாக் கூறுகையில், “மழைக்காலத்தில் நதியின் நீர் கறுப்பு நிறத்துக்கு மாறுவதை இயல்பானதாகவே எடுத்துக்கொண்டோம். நவம்பர் மாதத்திலிருந்து நதி நீர் தெளிந்த நீரோடைபோல ஓடத்தொடங்கும். ஆனால், நதி நீரில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீர் தொடர்ந்து கறுப்பு நிறத்திலேயே ஓடியது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)