சனி, 31 ஜனவரி, 2026

எச். ராஜாவுக்கு 'பக்கவாத’ பாதிப்பு : அப்பல்லோ அறிக்கை!

 minnambalam.com -  Kavi  :  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எச்.ராஜா உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா, NDTV தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ”Tamil Nadu Summit” நிகழ்ச்சியில் நேற்று (ஜனவரி 30) கலந்துகொண்டிருந்தார்.  நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே மேடையிலேயே எச்.ராஜா மயங்கி சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் எச். ராஜாவுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்கக் கூடும்  என்று சந்தேகித்து, அதற்கான மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.  அதன்படி பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூர் IT ரெய்டில் தொழிலதிபர் சி.ஜே.ராய் துப்பாக்கியால் சுட்டு கொலை

 minnambalam.com - Mathi   :  கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருமான வரித்துறை சோதனை நடந்துகொண்டிருந்த நிலையில், கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் சுட்டு தற்  கொலை ( ? ) செய்துகொண்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சி.ஜே. ராய், ரியல் எஸ்டேட், திரைப்பட தயாரிப்பு, விளையாட்டு, விமானப் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் எனப் பல்வேறு துறைகளில் கால் பதித்த கான்ஃபிடன்ட் குரூப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்தார்.

India is there. Foreign forces want to remove Ranil from politics and imprison Ranil.

May be an image of one or more people

 Ranil saved the country. China, India and America could not make Ranil dance. Ranil cannot dance to anyone's lyrics. Ranil didn't get submerged to a single country. It was difficult for those countries to help the government and the development of the country.
China helped India Anura to defeat Ranil in the last election. It was clearly visible. That foreign attempt succeeded. Ranil lost.

UNP Island wide ;      The struggle and Ranil. Ranil will be beaten from inside the country and abroad. This is the truth.
    At some time in the history of Sri Lankan, our country became foreign conspiracies. On the previous king's day, most of the invasion came from India. Once upon a time, Dutch Olanda stopped in our sun for invasion. After English took over our country, no other communities were in vain.
    After independence, some political influences from the Muma of development by providing support to our country again. In the sixties, through the embassy of China and Russia, the political political politics of those countries were distributed across the country (today China magazine, Soviet country) and after that, China for its commercial objectives in the sixties. India has affected the country a lot. Similarly India has a lot of influences that China and America military use Sri Lanka as a medium to use them as a month.
    During the Rajapaksha rule, the power that built and stopped the Maththala airport and port and the Colombo port were there.
    At times like this, America is also influenced to spread its power.
    Political history bears witness.

ஈரானை தாக்க அமெரிக்க தயங்கியது ஏன்? மொஸாட் உளவாளிகள் பட்டியலை டென்மார்க் ஈரானுக்கு லீக் செய்ததா?

 Mukinthan Thurairajasingham  :   ஈரான் மீதான தாக்குதலை ட்ரம்ப் திடீரென ரத்து செய்தது ஏன்?
ஜனவரி 2026. மத்திய கிழக்கு நாடுகள் ஒரு மாபெரும் போரின் விளிம்பில் நின்றிருந்தன. அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரான் மீது பாயத் தயாராக இருந்த அந்த நொடியில், ஒரு ட்வீட் (Tweet) உலகையே திகைக்க வைத்தது.
“I greatly respect the fact that all scheduled hangings, which were to take place yesterday, over 800 of them, have been canceled by the leadership of Iran. Thank you.”
வெறும் 800 பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்காகவா ட்ரம்ப் ஒரு ராணுவத் தாக்குதலையே நிறுத்தினார்? 
இல்லை, உட்மையில் இதற்குப் பின்னால் இருப்பது உலக நாடுகள் ஆடிய ஒரு மிக அபாயகரமான உளவுத்துறை விளையாட்டு.
இந்தக் கதையின் ஆரம்பம் ஈரானில் இல்லை, டென்மார்க்கில் (Denmark) இருக்கிறது. ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். "வேண்டியதை நல்ல முறையில் கொடுங்கள், இல்லையென்றால் பலவந்தமாக எடுப்போம்" என்று அவர் டென்மார்க்கை மிரட்டியது நேட்டோ (NATO) கூட்டணியையே சிதைக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது.

தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சி: பாஜகவின் செல்வாக்கும் தொடர்ந்து அதிகரிப்பு இந்து பத்திரிகை

 hindutamil.in  :  மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்று 38 தொகுதிகளைக் கைப்பற்றும் என இண்டியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதால், சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 272 எம்பி-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. இண்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

TVK விஜய் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு

 தினவாசல் : விஜய்க்கு யார் இந்த ஐடியா கொடுத்தாங்கன்னு.. தெரியலையே.. சத்தமே இல்லாம களமிறக்கப்பட்ட மாஸ்டர் பிளான்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்தின் அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. 
இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது.
இது ஒரு "மாஸ்டர் பிளான்" என அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது. தலைநகர் சென்னையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்வதன் மூலம், திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்க்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் மாறும் அரசியல் சமன்பாடு

தேமுதிகவுக்கு திமுகவில் 4 சீட்டு? பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா.

May be an image of one or more people

 தினவாசல் : அடிமாடாய் போன தேமுதிக.. திமுகவில் 4 சீட்டு..! பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா..!
தமிழக அரசியல் கட்சிகளில் 0.45 சதவீதமே வாக்கு வாங்கி வைத்திருக்கக்கூடிய தேமுதிகவிற்கு விஜயகாந்த் மறைவுக்கு பின் அனுதாப அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
 இந்நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அந்த மாநாட்டில் ‘‘கூட்டணி பற்றி முடிவு எடுத்துட்டேன். ஆனால், இப்போது அறிவிக்கவில்லை’’ என சஸ்பென்ஸ் வைத்து மாநாட்டையே முடித்திருந்தார்.

வெள்ளி, 30 ஜனவரி, 2026

வாகன இறக்குமதியால் ஆட்டம் கண்ட இலங்கை வர்த்தகம்!

May be an image of car and road
May be an image of car and text

 வாகன இறக்குமதியால் ஆட்டம் கண்ட இலங்கை வர்த்தகம்! 
புலம் பெயர்ந்தவர்கள் நாட்டுக்கு அனுப்பியது 8 பில்லியன் டாலர்கள்!
வாகன இறக்குமதிக்காக தாரை வார்த்தது 2.08 பில்லியன் டாலர்கள்!
ஏனைய இறக்குமதிகளுக்காக தாரை வார்த்தது மீதி ..
ஆக மொத்தம் வர்த்தக பற்றாக்குறை 7,9 பில்லியன் டாலர்கள்  
ஹிருனியுஸ் : 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையின் தற்போதைய கையிருப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிகத்தைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 
 கடந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இந்த மேலதிக நிலை காணப்பட்டமை பொருளாதாரத்திற்கு ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. 

India Today- திமுக கூட்டணிக்கு 45% வாக்கு! இதைவிட அதிகமாகவே கிடைக்கும் -கே.என்.நேரு கணிப்பு

மின்னம்பலம் - Mathi :  2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 45% வாக்குகள் கிடைக்கும் என்ற இந்தியா டுடேவின் கருத்து கணிப்பே மிக குறைவானதுதான்;; அதைவிட அதிக வாக்கு சதவீதத்தை திமுக கூட்டணி பெறும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.< br />இது தொடர்பாக அமைச்சர்  கே.என்.நேரு கூறியுள்ளதாவது: சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன. நேற்று டெக்கான் க்ரானிகல் பத்திரிகை எழுதியிருந்த ஆய்வு கட்டுரையும், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன.

இஷ்டம் இருந்தால் இருக்கட்டும் இல்லையென்றால் வெளியேறட்டும் - திட்டவட்டமாக முதல்வர்

 dinaseval  :  தவெக என்கின்ற ஆப்ஷனை வைத்துக் கொண்டு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கிடையாது. அதிக தொகுதியும் கிடையாது என்பதில் உறுதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் திமுக எம்பி மாணிக்க தாகூர், ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி ஆகியோர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தமிழக காங்கிரஸில் இருக்கிய முக்கிய புள்ளிகள் திமுகவை விமர்சனம் செய்து வந்தாலும் காங்கிரஸ் டெல்லி தலைமை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது.

ஆதவ் அர்ஜுனா... நம்பி மோசம் போன விஜய்... சபரீசன் ஆபரேஷன் சக்ஸஸ்...

dinaseval.com     சபரீசன் SLEEPER CELL ஆதவ் அர்ஜுனா... நம்பி மோசம் போன விஜய்... சபரீசன் ஆபரேஷன் சக்ஸஸ்...
விஜயின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய வேகத்திலேயே முடிந்துவிடும் பரிதாபத்தில் இருக்கிறது.  குறிப்பாக விஜய் முழுக்க முழுக்க ஆதவ் அர்ஜனா கட்டுப்பாட்டிற்குள் வந்ததின் காரணமே விஜயின் அரசியல் வாழ்க்கையை கச்சிதமாக முடிவுக்கு கொண்டு விட்டார் ஆதார் அர்ஜுனா என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
 அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்த பின்பு தொடர்ந்து விஜயை எப்படியாவது NDA கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என எடப்பாடி தரப்பும், அமித்ஷா  தரப்பும் தொடர்ந்து விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது ஆதவ் அர்ஜுனா  தான் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.

பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! - சல்லியா சல்லியா நொருங்கும் கூட்டணி.. எல்லாமே போச்சு..

May be an image of one or more people

 News4 Tamil Digital :  சல்லியா சல்லியா நொருங்கும் கூட்டணி.. எல்லாமே போச்சு.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக கூட்டணிக்குள் நிலவும் முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தெரிய் தொடங்கியுள்ளன. 
குறிப்பாக, தேமுதிக, பாமக ராமதாஸ், ஓ. பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்தால், அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதே எடப்பாடி பழனிச்சாமியின் முக்கிய கவலையாக இருப்பதாக கூறப்படுகிறது. 
அதனால் தான், பாஜக தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவர் தடையாக நிற்கிறார் என்கின்றனர்.

வியாழன், 29 ஜனவரி, 2026

பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், தலித்துகளுக்கு கிடைக்க வேண்டிய.. அடிப்படை நீதி

UGC 2026

 tamil.oneindia.com  : டெல்லி: இந்திய உயர்கல்வியில் சமத்துவத்தை உறுதி செய்யும் விதமாக, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) 2026 ஆம் ஆண்டுக்கான சமத்துவ மேம்பாட்டு (உயர்கல்வி நிறுவனங்களில்) விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால், முன்னேறிய ஜாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவுக்கு ஆதரவாக இருந்த குறிப்பிட்ட ஜாதியினரும் கூட. பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிக்கிறார்கள். இந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தால் இந்த விதிமுறைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு. கல்வி நிலையங்களில், பாகுபாடு இல்லாமல் கண்ணியத்தையும் சம வாய்ப்பையும் உறுதி செய்வதே இந்த 2026 விதிமுறைகளின் முக்கிய நோக்கம். அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ கொள்கை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டன.

கூட்டணி திருப்தி தரவில்லையென்றால் .. தாரளமாக விஜயுடன் சேர்ந்து கொள்ளுங்கள்! முடிவாக சொன்ன .....

 vikatan.com : “கூட்டணிப் பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்காக இரண்டு மாதங்களாகக் காத்திருக்கிறோம்"- கிரிஷ் ஜோடங்கர்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. 
ஒருபுறம் அதிமுக- பாஜக தலைமையிலான NDA கூட்டணி, கட்சிகளை ஒன்றிணைத்துத் தங்கள் கூட்டணியைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மறுபுறம் திமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாமல் இருக்கிறது. 
தேசிய ஜனநாயகக் கூட்டணி
குறிப்பாகத் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் நேற்று (ஜன.27) தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேட்டி அளித்திருக்கிறார்.
திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம்?

புதன், 28 ஜனவரி, 2026

சென்னையில் 5 பிகார் கொலையாளிகள்- மனைவி, குழந்தையுடன் பிகார் இளைஞர் கொலை.. சிக்கந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், பிகாஸ் உள்பட

 BBC News தமிழ் :  சென்னையில் பிகார் மாநில இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை அடையாறு இந்திரா நகரில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் அருகே கடந்த 26 ஆம் தேதியன்று சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில் இருந்து ரத்தம் கசிவதைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அடையாறு காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்துள்ளனர். முகம் மற்றும் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் சடலம் இருந்துள்ளது.

அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்- மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு! Mamata Banerjee makes shocking allegation

 மின்னம்பல -Mathi :  மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், விமான விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார், மும்பையில் இருந்து பாராமதி சென்ற போது அவர் பயணித்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் உயிரிழப்பு- மஹாராஷ்டிரா

தினமலர் : மும்பை: மஹா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சிறிய ரக விமான விபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் இறுதி சடங்குகள் நாளை(ஜன29) நடக்கிறது.
மஹாராஷ்டிராவில் மும்பையில் பாராமதிக்கு 8 பேர் இருக்கை கொண்ட விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் துணை முதல்வர் அஜித்பவார் உட்பட 6 பேர் பயணம் செ ய்துள்ளனர். பாராமதியில் விமானம் தரையிறங்க முயன்ற போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.

புலிகளின் திட்டமிட்ட முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு .. ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்

May be an image of ‎text that says "‎முஸ்லம் உறவும் யாழ். முல்லிம்களின் வெளி வெளியேற்றமு் தமிழ் (களக்கில் நின்றவர்களின் நேரடி சாட்சியம்) வட்ட ลนาลใส IFTH. .EBRATIO LICE DI فان கிஹமான் பாறூக் அப் பதுல் காதர் முபீன் அவர் அவர்களின் களின் விசேட நேர்காணல் நேர் காணல் இதுவாகும். இം சந்திப்பு யா ாழ்ப்பா ணம், முஸ்லிம் கல்லூரி விதியில் ்ள அவர து விட்டில் மல 04-03-2018.A திக.தி இடம்பெற்றது. (நேர்காணலின் போது பிடிக்கப்பட்ட புகைப்படம் கணளியில் யில் ருந்து அழிந்து போனதால் இப்புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளத‎"‎

Mhm Ibrahim :   வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளினால் திட்டமிட்டே வெளியேற்றப்பட்டனர்! 
களத்தில் நின்றவரின் நேரடி சாட்சியம்! தொடர் (1)
​“யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னரும் வெளியேற்றப்படும் போதும் தமிழ் - முஸ்லிம் உறவினில் எவ்வித வீழ்ச்சியும் இருக்கவில்லை. 
மிக நெருக்கமாகத்தான் உறவு இருந்தது. 
90 காலகட்டமானது போராட்டக் காலமாகும். 
அரசாங்கத்திற்கும் - புலிகள் இயக்கப் போராளிகளுக்குமிடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 80ஆம் ஆண்டுகளில் இருந்து யாழ்ப்பாணத்தில் பலதரப்பட்ட இயக்கங்கள் செயற்பட்டு வந்தன. 
இறுதியாகப் புலிகள் இயக்கம் டெலோ இயக்கத்தைத் தாக்கி அழித்து அரசாங்கத்துடன் பலமாக மோதும் நிலைக்கு வந்தது.
​அக் காலகட்டத்தில் இயக்கப் போராட்டத்திற்கு எதிரானவர்கள், இராணுவத்துடன் இணைந்து செயற்படுபவர்கள், தமிழ் தேசியத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் எனத் தமிழ் மக்களில் கனபேர் புலிகளால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

செவ்வாய், 27 ஜனவரி, 2026

துபாயில் வீடு வாங்கும் தமிழ் சினிமாகாரர்கள் அஜித் சிம்பு நயன்தாரா யுவன் சங்கர்வீ...

 மாலை மலர் : திரை உலக பிரபலங்கள் பலர் துபாயில் வீடு வாங்கி வருவது அதிகரித்து வருகிறது. தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் மட்டுமல்ல பாலிவுட், தெலுங்கு, மலையாள திரை உலகில் பலரும் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளனர். தமிழ் திரை உலகில் அஜித், நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் வீடு வாங்கி இருக்கும் நிலையில் நடிகர் சிம்புவும் துபாயில் தற்போது சொந்தமாக ஒரு வில்லாவை வாங்கி இருக்கிறார்.
அஜித் வீட்டின் அருகே இருக்கும் இந்த ஆடம்பர வில்லாவின் விலை ரூ.57 கோடி என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீட்டிற்கான அட்வான்ஸ் தொகை ரூ.22 கோடியை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்து இருக்கிறார்.

திமுக ஆதரவா? ‘No சீட்’- ஆர்டர் போட்ட ராகுல்? கோபத்தில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது?

 minnambalam.com :  “பொறுமைக்கும் எல்லை உண்டு” என்பது பொருத்தம்தான் என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா எந்த கட்சி தலைவரோட பொறுமையை பத்தி சொல்றீரு?
சிஎம் ஸ்டாலினின் பொறுமையைத்தான் சொல்றேன்.. இப்ப நிலைமைக்கு இன்னமும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியா முடிவாகலங்கிறதுதான் நிஜம்.. ”ஆட்சி அதிகாரத்துல பங்கு.. அதிக இடம்”னு ஸ்டாலின் கிட்ட காங்கிரஸ் ஐவர் குழு சொல்லிட்டுப் போச்சு.. ஸ்டாலினும், ”கூட்டணி ஆட்சி கிடையவே கிடையாது”ன்னு ஆ.ராசா மூலமாக ராகுல் காந்திக்கு சொல்லி அனுப்பிட்டாரு..
இதுக்கு பிறகு, கூட்டணியை உறுதியும் இறுதியும் செய்யுறதுக்கு ரெண்டு தரப்பும் எந்த மூவ்-ம் செய்யவும் இல்லை..

மாணிக்கம் தாகூர் எம்.பி : தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது

மின்னம்பலம் - Pandeeswari Gurusamy :  அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பற்றி, திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி, “காங்கிரசில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல எனக்கு என்ன பயமா ? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது.

அடையாறு ஆனந்த பவனில் வடநாட்டு பணியாளர்கள்! மெதுவாக தமிழ் உணவுகள் விடை பெறுகிறதா?

Adyar Ananda Bhavan - South Indian Best ...

 James Vasanthan :  சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இதே  Facebook-ல் எழுதியிருந்தேன் - நான் A2B ரசிகன்/ஆதரவாளன் என்று. குறிப்பாக, அவர்களுடைய மதிய உணவு-சாம்பார், ரசம், கூட்டு போன்றவை.
ஆனால், அண்மையில் - கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவர்களுடைய தர அடையாளம் தேய்ந்துகொண்டே வருகிறது.
ரொம்ப நாளாக சொல்ல நினைத்தேன்... ஒரு நல்ல தமிழ்மண் உணர்வுள்ள தொழிலதிபர்... அவர் காதுகளுக்கு எப்படியும் செல்லும், சரிசெய்து விடுவார் எனக் காத்திருந்தேன். அது நிகழாததால், இந்தப் பதிவு.

திங்கள், 26 ஜனவரி, 2026

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு - காங்கிரஸுக்கு கூடுதல் இடங்கள் இல்லை - உள்ளே வரும் தேமுதிக

May be an image of dais

 one india : கூடுதல் சீட் கிடையாது.. காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்.. உள்ளே வரும் தேமுதிக.. ஆட்டம் மாறுதே
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸுக்கு கூடுதல் இடங்கள் இல்லை, புதிய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம், தேமுதிக போன்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கூட கொடுக்கலாம் என்று ஸ்டாலின் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராகி வருகிறது. இருப்பினும், பழைய கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க திமுக தலைமை முன்வராது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் திட்டம்

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு - பாஜக விஜய்க்கு கண்டிஷன்... ஆட்சியில் பங்கு

 K.K.   :  ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு... பாஜக பக்கம் சாயும் விஜய்... பாஜக விஜய்க்கு போட்ட கண்டிஷன்... 
ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், தற்பொழுது இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. தவெக என்கிற ஆப்சன் இருப்பதை பயன்படுத்தி கொண்டு திமுகவிடம் அதிக தொகுதிகள் மிரட்டு பெற்று விடலாம் என காங்கிரஸ் போட்ட திட்டம் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் போட்ட கூச்சலுக்கு திமுக செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் திமுக உடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தவெக பக்கம் செல்வதா என காங்கிரசை கட்சி ஆலோசனையில் சமீபத்தில் ஈடுபட்டது, அப்போது செல்வப்பெருந்தகை உட்பட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள்  திமுக உடன் கூட்டணியை தொடரவில்லை என்றால் வரும் சட்டசபை தேர்தலில் 1 தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது, தொடர்ந்து திமுக மீது சவாரி செய்து தான் நமக்கு தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என தங்கள் தரப்பு வாதத்தை வைத்து இருக்கிறார்கள்.

”பனையூர் பண்ணையார்”, “ப்ளாக் டிக்கெட்” விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்

AIADMK Vijay

  minnambalam.com - Mathi   :  அதிமுகவை விமர்சித்து பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அக்கட்சியின் ஐடி விங் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரத்தில் இன்று ஜனவரி 25-ந் தேதி நடைபெற்ற தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல் சக்தி என்றும் பாஜகவுக்கு அடிமை கட்சி என்றும் விமர்சித்தார்.
இதற்கு அதிமுகவின் ஐடி விங் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதில்: பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய்
@actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.

தார் ரோட்டில் காயவைக்கும் நெல் தாரொடு சேர்த்து உண்ணவைக்கும்

May be an image of combine and text that says "P ரோட்டில் நெல்: விஷம் கலந்த சோறு -விழித்துக்கொள்!"
Atputha Piratheep : நம்ம ஊர் 'விஞ்ஞானிகள்' செய்யும் இந்த 'காப்பெட்ரோட் களம்' நெல் காயப்போடும் வைபவத்தை, கொஞ்சம் அறிவியலையும் கலந்து மூளையை களட்டி கிணத்து தண்ணீல கழுவீட்டு வாசியுங்கோ.....
இதை வாசிக்கும்போது சில 'மோட்டு மேதாவிகளுக்கு' கோபம் வரலாம். வரட்டும், அதுவும் ஒருவிதத்தில் உடம்புக்கு நல்லதுதான்!
#கார்ப்பெட் ரோட்டு தார் #tar. இது நெல் காயப்போடும் களம் அல்ல, எமன் பாசம் வீசும் தளம்!
எங்கடை சனத்துக்கு எப்பவுமே ஒரு 'விபரீத புத்தி' உண்டு. "அரசாங்கம் நமக்காக ரோடு போட்டிருக்கு" எண்டு நினைச்சியளோ? இல்ல, நம்மட ஆட்கள் அதை 'இலவச களம்' (Free Drying Floor) எண்டுதான் நினைப்பினம் விளங்குதோ மோனே??
தார்ப்பாய் வாங்க காசு செலவழிக்க மனமில்லாம, "ரோடு கறுப்பா இருக்கு, வெயில் நல்லா அடிக்கும்" எண்டு வியாக்கியானம் பேசுற கூட்டத்துக்குத் தெரியறதில்லை, அவங்கள் அரிசியோட சேர்த்து 'விஷத்தையும்' அவிச்சுச் சாப்பிடுறாங்கள் எண்டு.
அந்த 'ரோட்டு நெல்' தின்னும்போது இலவசமாகக் கிடைக்கும் 'சத்துக்கள்'...?!
1. தார் (Bitumen) எனும் ஸ்லோ பொய்சன் (Slow Poison)

திமுக கூட்டணியில் தொகுதிகள் ஓரளவு தீர்மானிக்கப்பட்டுள்ளது லீக்கான பட்டியல்

No photo description available.

 Oneindia Tamil: ஏரியா பிரிச்சாச்சு.. கமலுக்காக விட்டுக் கொடுத்த திமுக! காங்கிரஸுக்கு அதே தான்! லீக்கான திமுக லிஸ்ட்!
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் களத்தில் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், கூட்டணியின் இறுதி வடிவம் குறித்த விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக போன்ற பல கட்சிகள் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மக்களவைத் தேர்தலில் தான் மக்கள் நீதி மய்யம் அந்த கூட்டணியில் இடம்பெற்றது.