சனி, 16 அக்டோபர், 2010

Diaspora tigers தமக்குள் களையெடுப்புக்களை நடத்தப் போகின்றார்களாம்

நாடு கடந்த தமிழீழத்தார்
தமக்குள் களையெடுப்புக்களை நடத்தப் போகின்றார்களாம்
நாடு கடந்த தமிழீழம் என்று புலம் பெயர் நாடுகளில் தமக்குள் தாமே தேர்தல் நடாத்தி தாமே உறுப்பினர்களை தெரிவு செய்து கொண்டனர். இதற்காக பல ஆயிரம் டாலர்களையும் செலவிட்டனர். இதற்கு பின்புலமாக மேற்குலகமும் மறைமுகமாக நிற்கின்றது என்பதை வரலாறு என்றோ ஒருநாள் நிரூபித்து நிற்கும். நாடு கடந்த தமிழீழ முன் மொழிவை வைத்தவர் பிரபாகரனின் முளம் தள் இட்ட மரணத்தின் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் கேபி ஆவார். இவர் தற்போது இலங்கை அரசின் விருந்தாளியாக இருப்பது வேறு விடயம். கேபி இலங்கை அரசின் விருந்தாளியாக்கப்பட்ட பின்பு 'அமெரிக்க' உருத்திரகுமாரன் தலைவர் பொறுப்பை உத்தியோகபற்றற்ற முறையில் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல், பிரதம பதவி என்று எல்லாவற்றையும் தானே ஏற்றுக் கொண்டார். பதவி, பணத்திற்கு அலையும் இக் கூட்டத்திற்குள் தற்போது பலத்த குத்து வெட்டு. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்து கொண்டனர். இரு குழுக்களும் ஒருவரையொருவர் துரோகிகள் என்று சொல்லி கொள்கின்றனர். இப்ப என்னடாவென்றால் ஒரு குழு மற்ற குழுவை கை நீட்டி களையெடுக்கப் போகின்றார்கள் என்று புறப்பட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக கனடாவில் தமிழ் கடைகளின் சுவர்களில் களையெடுப்பு பற்றிய சுவரொட்டிகளும், துரோகிகளின் பெயர் விபரமும் வெளியாகியுள்ளது. இது நல்ல கூத்துதான். புலியும் புலியும் சண்டையாம்... களையெடுப்பாம்.... மனிதர்கள் நாங்கள் விலத்தி நின்று பார்ப்போம்.
25 வருடங்களாக இவர்களைப்பற்றி நாங்கள் கூறி வருவதை கேட்காமல் தொடர்ந்தும் பகுத்தறிவின்றி  இவர்கள் பின்னால் திரியும் ஒரு கூட்டம் இந்த களையெடுப்பு 'யுத்தம்இன் பிறகாவது உண்மை நிலையை உணருவார்களா? என்று பார்ப்போம். ஏமாளிகளாக நீங்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கப் போகின்றார்கள். ஈழத்திலிருக்கும் தமிழ் மக்கள் யாரும் இந்த நாடு கடந்த தமிழீழம், தேர்தல், பிரதம மந்தரி, தொடர்ந்த குத்து வெட்டு எதனையும் பற்றியும் அக்கறைப்படுவதும் இல்லை, காதில் போட்டுக் கொள்ளதும் இல்லையாம்.
(தானா மூனா)

அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளின் தரம்

ரு மருந்தோ, மருத்துவரோ இல்லாத காரணத்தால் ஒரு நோயாளிக்கு உடலில் உபாதையோ, உயிரிழைப்போ ஏற்பட்டால் நான் அதை பெரிதும் அவமானமாக எண் ணுவேன் என்ற முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதல்படி, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூன்று களங்களில் பணியாற்றி வருகிறது.  முதலாவது சுகாதார மற்றும் நோய் தடுப்புத் துறை நாடெங்கிலும் உள்ள ஆரம்ப சுகாதார மற்றும் துணை சுகாதார நிலையங்கள் மூலம் தடுப்பூசி தாய் சேய் நலம் தடு ப்பூசியால் தடுக்கக்கூடிய வியாதிகள் காலரா வயிற்றுப் போக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தலை சிறந்து விளங்குகிறது. தனியார் மருத்துவமனைகளோ, மருத்து வர்களோ எட்டிப் பார்க்காத குக்கிராமத்தில் கூட இந்த சேவைகள் தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. நம் நாட்டிலிருந்தே பெரிய அம்மை, போலியோ  போன்ற நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதற்கும், காலரா, மலேரியா, டிங்கு காய்ச்சல் போன்ற வியாதிகள் பரவாமல் தடுப்பதற்கும் பன்றிக் காய்ச்சல், எய்ட்ஸ் போன்ற  நோய்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நம் நாட்டில் பிறப்பு, இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைத்தது இந்தத் துறையின் சாதனையாகும். சென்ற ஆண்டு  மட்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் 2,98,000 பிரசவங்கள் நடந்திருக்கிறது.
இரண்டாவது நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரிகள் அனைத்தும்  இணைந்து செயல்பட்டு வருகின்றன. வருமுன் காப்போம், கண்ணொளி திட்டம் இளம் சிறார் இதய அறுவை சிகிச்சை திட்டம், ஊறமுற்றோர் மனவளர்ச்சி குன்றியோர்,  முதியோர் சிகிச்சை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு தேவைப்பட்டால் மேல்  சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் லேபராஸ்கோபிக் குடும்ப நல அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5,000 முதல் ரூபாய்  20,000 வரை செலவாகும். அரசு மருத்துவர்கள்தான் இதில் அனுபவம் மிகுந்தவர்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சைகள் ஒரு மாரடைப்பு நோயாளிக்கோ, பக்கவாத நோயாளிக்கோ மேல்நாடுகளில் சிகிச்சையளிக்கப்படும் அதே மருந்து கொண்டுதான் நம் நாட்டு மக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது என்பது நம்ப முடியாத உண்மை. ஒரு காச நோயாளிக்கு 5000 முதல் 6000 பல மருந்துக்கு கட்டு ப்படாத காசநோய் நோயாளிக்கு ரூ.2,00,000 வரை மதிப்பிலான மருந்துகளும், பாம்புக்கடி நோயாளி உயிரைக் காப்பாற்ற ரூ.10,000 முதல் ரூ.2,00,000 வரை மருந்துகளும்,  மாரடைப்பு, சிறுநீரக, எலும்பு முறிவு, நரம்பு, மூளை அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.3,00,000 வரை ஆன சிகிச்சைகள் இலவசம். ரூ.25 லட்சம் முதல் ரூ.30  லட்சம் வரை செலவாகும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவிலேயே அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இலவசமாக இதுவரை எட்டுப் பேரக்கு செய்யப்பட் டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலகத் தரத்திலான சிகிச்சை குறைந்த கட்டணத்தில்  ஆய்வக வசதியுடன் செய்யப்படுகிறது. ஒரு முறை போய்ப் பாருங்கள். அரசு மருத்துவமனையின் தரத்தை உணருவீர்கள்.

புற்று நோய், இதய சிறுநீரகம், வயிறு மற்றும் மூளை சிகிச்சைகள் சர்க்கரை ஆஸ்த்மா ரத்தக் கொதிப்பு, கால் கை வலிப்பு மற்றும் இதர நோய்களுக்கான சிகிச்சைகள்  அனைத்தும் அரசு மருத்துவமனையில் இலவசம். மேலும் விஷம் அருந்தி பாதிக்கப்பட்டோர், பாம்பு, தேள் கடித்தது, விபத்து மற்றும் தீக்காயங்கள் ஆகியவற்றால்  பாதிக்கப்பட்டோருக்கும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பிறந்த பச்சிளம் குழந்தை முதல் அனைவருக்கும் அனைத்து சிகிச்சைகளும் அனைத்து மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கிறது. இவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகள் அகில இந்திய மருத்துவ கவுன்சிலால் அடிக்கடி தரப்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றவை. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குடல்  அறுவை சிகிச்சைப் பிரிவு, கை அறுவை சிகிச்சைப் பிரிவுகள், உலகத் தர சான்றிதழ் பெற்றவை.

மார்பக புற்றுநோய் கண்டறிய மாமோகிராம், கர்ப்பப்பை புற்று நோய் கண்டறிய பாப்ஸ்மியர் இவை தேவைப்படுவோருக்கு இலவசம். தனியார் மருத்துவமனைகளில் ரூ.2500  முதல் ரூ.4000ம் வரை எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன் ரூ.500க்கு வெளி நோயாளிகளுக்கும் ரூ.350க்கு உள்நோயாளிகளுக்கும் எடுக்கப்படுகிறது. ரூ.5000 முதல் ரூ.8000ம்  வரை மதிப்புள்ள எம்.ஆர்.ஐ.யிலும் ஸ்கேன் ரூ.2500க்கு எடுக்கப்படுகிறது.

தனியார் மருத்துவர்களால் உலக அளவில் மருத்துவ சுற்றுலா வருமானம் உலகளவில் பெருமை என்றாலும் நம் ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் என்றுமே  முதலிடம் அரசு மருத்துவமனைகள்தான். பதினைந்து வருடங்கள் முன்பிருந்த அதே அளவுதான மருத்துவர்கள் என்றாலும் நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்திற்கு  ஏற்ப கட்டிடங்கள் அதிகரித்தாலும் கருவிகள் வந்தாலும் மருத்துவர்களும், ஊழியர்களும், போதவில்லை என்பதே கசப்பான உண்மை. சென்னையில் புதிதாக 200 படுக்கை  வசதி சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் கிமிமிவிஷி தரத்திலான மருத்துவமனைகள் என்று அமைந்தாலும், பெரும்பாலான இடங்களில் இத்தனை  நோயாளிகளுக்கு இத்தனை மருத்துவர், செவிலியர் ஊழியர் என்று இருந்தாலும் பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகைக்கேற்ப படுக்கை வசதிகள்  அதிகரிக்கப்படவில்லை. எனவே ஏராளமான நோயாளிகள் கட்டில் இல்லாமல் பாயிலும் படுக்க வேண்டிய நிலை தரமான சிகிச்சை கிடைப்பதால் இதையெல்லாம் பொருட் படுத்தாமல் எதையும் தாங்கும் இதயத்தோடு சிகிச்சை பெற்றுச் செல்லும் ஒவ்வொரு மக்களும் நன்றி சொல்வது ஆண்டவனுக்கு மட்டுமல்ல. ஆள்பவர்களுக்கும்தான்.

முழு உடல்பரிசோதனைத்திட்டம்
குறைந்த செலவில் மிகுந்த பயன் தரும் முழு உடல்பரிசோதனைத்திட்டம் ரூ.250ல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது. இதில் ரத்தத்தில் சர்க்கரை,  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, வெள்ளை சிவப்பணுக்கள், சிறுநீர், ரத்தத்தில் உள்ள கொழுப்பு, உப்பு, சிறுநீரக, வயிற்று உபாதைகளைக் கண்டுபிடிக்க வயிற்று ஸ்கேன்,  ரத்தக் கொதிப்பு, இதய மின் வரைபடம், மார்பக எக்ஸ்ரே பரிசோதனை, உணவு ஆலோசனை மற்றும் சிறப்பு  மருத்துவ ஆலோசனை அனைத்து அரசு மருத்து வமனைகளிலும் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை 30 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வருடம் ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்வது நோய் வருமுன்  கண்டுபிடித்து காத்துக் கொள்ள இதற்கு முன்பதிவு அவசியம். வெறும் வயிற்றில் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். இதே பரிசோதனைகள் தனியார் மருத்துவமனைகளில்  ரூ.2000 முதல் ரூ.5000ம் வரை செலவாகும்.ஒவ்வொரு முறை அரசாங்க மருத்துவமனைகளுக்கு அருகே வாகனங்கள் போகும் போதும் நான் கவனிப்பது மூக்கைப் பொத்திக் கொண்டே விரைவாகக் கடக்கும் பெரிய  மனிதர்களையும், அதை நோக்கி கையெடுத்து கும்பிடும் அங்கிருந்து குணமாகிச் சென்ற ஆயிரக்கணக்கான நோயாளிகளும் அவர் தம் குடும்பத்தினரும் கண் முன்னே  வருவர். அந்த திருப்தி ஒன்றுதான் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் சம்பாதித்திருக்கும் சொத்து.

என்ன தான் தனியார் மருத்துவமனைகள் குணப்படுத்தினாலும், காசு கொடுக்கும்போது மன நிறைவுடன் வயிறு எரியாமல் பணம் கொடுப்பவர்கள் யார் என்றால் அலு வலகத்திலோ, இன்சூரன்ஸ் மூலமோ பணம் கொடுக்கும் மக்களும் தகவல் தொழில் நுட்ப வேலையில் அல்லது உண்மையிலேயே பணக்காரர்கள் 1 சதவீதம் பேர்கள்தான்.

மீதி ஆட்கள் எல்லாம் வீடு வாசல் நிலம், நகை இருப்பதை விற்று கடனுக்கோ, வட்டிக்கோ வாங்கி கவலையோடு பணத்தைக் கட்டி வீட்டுக்கு வருபவர்கள் தாம் இது  போக இருப்பதெல்லாம் தனியார் மருத்துவமனைக்கே கொடுத்துவிட்டு வெறும் கையுடன் வந்த லட்சக்கணக்கானோர் குணமாக்கி வீடு திரும்பும் அதிசயம் எங்கே என்பது  சிலருக்க மட்டுமே அல்ல மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். அவை வெறும் அரசு மருத்துவமனைகள் அல்ல. உயிரைக் கொல்லும் நோயிலிருந்து குணமாக்கும்  கோயில்கள் என்பது அங்கே இருந்து மீண்டவர்களை கேளுங்கள் சொல்வார்கள். அது தெரிந்தும் பழி சொல்லும் மக்களை என்ன செய்வது உண்மையிலே சிறு சிறு கு றைகளை பெரிதுபடுத்தாமல் தங்கி குணமாகிச் செல்லும் அனைவரும் தினசரி அதை கடக்கும்போது கைகூப்பி தொழுவதில் ஆச்சர்யம் இல்லை.

உயிர்காக்கும் 108 சேவை
எங்கெல்லாம் மக்கள் துன்பத்தோடு இருக்கிறார்களோ, அங்கே அவர்களோடு என்னையும் ஒருவனாக இணைத்து, அந்தத் துன்பத்தைக் களைய வேண்டியது முதல்  கடமையாக நான் செய்து வருகிறேன் என்ற தமிழக முதல்வரின் ஆட்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் கனவுத் திட் டமான, எந்த சமயத்தில் அழைத்தாலும், இடுக்கண்களையும் நண்பனைப் போல் ஓடி வந்து உயிர்காக்கும் 108 சேவைக்கு நிகர் எது? இதற்கு முன் தனியார் ஆம்புலன்ஸ்  சேவைகளை அழைத்தவர்களுக்குதான் தெரியும். ஆட்டோக்காரர்களும் எவ்வவு நல்லவர்கள் என்று, வாய்க்கு வந்ததுதான் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 100 ரூபாய்  முதல் ரூ.200 வரை சர்ச சாதாரணமாக கேட்பார்கள்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு என்றால் இரண்டு பக்கமும் வருமானம் எரியும் வீட்டில் பிடுங்குவது லாபம் என்று எவர்கள் அடித்த  கொள்ளைக்கு கலைஞர் வைத்த முற்றுப் புள்ளி ஆம்புலன்ஸ் இதுவரை இதன் மூலம் 5.7 லட்சத்துக்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதே இதன் பயனை  சொல்லும் பிரசவம். விபத்து, மாரடைப்பு, தேள், பாம்பு கடி, தீ, திருட்டு, போலீஸ் என எதற்கு அழைத்தாலும் 20 நிமிடங்களில் உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும்  இந்த இலவச சேவைக்கு நிகர் எது? நீங்கள் விரும்பும் மருத்துவமனை தனியாரோ, அரசோ எங்கும் கொண்டு சேர்ப்பார்கள் உயிர்காப்பார்ககள். தங்க நேரம் என்று  சொல்லப்படும் முதல் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதால் பெரும்பாலான நோயாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள். 366 வண்டிகள் இந்த வண்டிகளால் அரசு  மருத்துவமனைகளுக்கு ஒரு வினோதமான பிரச்சினை ரோட்டில் கிடக்கும் எல்லோரையும் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துவிடுவதோடு இவர்கள் வேலை  முடிந்துவிடுகிறதுகூட ஆட்களில்லாமல் சுயநினைவில்லாமல் இருப்பவர்களை நோயிலிருந்து காப்பாற்றி மருத்துவர்களும், செவிலியர்களும் பிழைக்க வைத்துவிட்டாலும்,  வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஆட்கள் இல்லை. ஒவ்வொரு மருத்துவமனையிலும் சுமார் 30 நோயாளிகள் வரை இந்த வகையில் இருக்கிறார்கள். தனியார் தொண்ட  நிறுவனங்கள் அனைவரையும் அழைத்து செல்ல இயலாத நிலை, உடன் ஆட்கள் இல்லாததால் படுக்கையிலேயே மலம், சிறுநீர் கழித்து சுத்தம் செய்த போதிய ஆட்கள்  இல்லாமல் மருத்துவமனை ஊழியர்கள், அந்த வார்டில் உள்ள பிற நோயாளிகளுக்கும் நோய்தொற்று ஏற்படும் அபாயம். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  வழக்கறிஞர் சக்திவேல் நடத்தும் ஹெல்ப் சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இது போன்ற நோயாளிகளை கவனிக்க துணி மாற்ற, சோப்பு போட்டு துடை த்து, பவுடர் போட்டுவிட என்றே ஆட்களை தேர்வு செய்து சம்பளம் கொடுத்துவந்தது. ஆனால் இது போன்ற சேவைகு எவருமே முன்வருவதில்லை என்பது கசப்பான  உண்மை. வந்த ஓரிருவரும் தங்கள் உடல் நிலையை காரணம் காட்டி நின்றுவிட இப்போது பாதியில் நிற்கின்றது சேவை. இதுபோன்ற அனாதைப் பிணங்களை அடக்கம்  செய்வதற்கு முன்வருபவர்கள் போல தனியார் சேவை நிறுவனங்களின் பார்வை இதுபோன்ற நோயாளிகள் மேலும் விழுந்தால் மிகுந்த பயன்தரும். பிச்சைக்காரர்களுக்கும்,  அனாதைகளுக்கும் புகலிடம் கொடுக்கும் அரசு இந்த விஷயத்திலும் கவனம் செலுத்தினால் நலம்.

குறைந்த கட்டண சடல ஊர்தி
யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆனால் மனிதன் இறந்தாலே ஆயிரம் பொன் பறிக்குமிடம் ஒன்று உண்டென்றால், அது  சடல ஊர்தி கொள்ளைதான் ஒரு கிலோ மீட்டருக்கு 1000 ரூபாய் முதல், கட்டணம் ஆரம்பம் நெருங்கிய உறவினரை சம்பாதிக்கும் குடும்பத் தலைவரை கண்ணுக்கு க ண்ணாக வளர்த்தவரை இழந்து குடும்பமே தலையிலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறும்போது அவர்கள் கழுத்தில் கத்திவைப்பதுபோல் இருக்கும் இவர்கள் கேட்கும்  தொகை கருப்பு பணம் வைத்திருந்தால்தான் கருப்பு வண்டிக்கு பணம் கொடுக்க முடியும் போல என்று புலம்பிக் கொண்டே வேறு வழியில்லாமல் இருப்பதை விற்று  கொடுத்தவர் ஆயிரமாயிரம் பேர் இந்த கட்டண கொள்யை கண்டு விக்கித்து போய் உடலை மருத்துவமனையிலேயே அடக்கம் செய்துவிடுங்கள் என்பவரும் உளர்.

இதை தடுத்து நிறுத்த தனியார் தொண்டு நிறுவனங்கள் குறைந்த கட்டண ஊர்தி சேவை வழங்க முன் வந்தாலும் அவர்களை உள்ளே விட மறுத்து அராஜகம் செய்யும்  கும்பலுக்கு பாடம் புகட்டவும் மக்கள் குறை தீர்க்கவும் வந்தது அரசு தமிழக சுகாதார மேம்பாட்டுத் திட்டம் மூலம் குறைந்த கட்டண அமரர் ஊர்தி சேவை தற்போது  மாவட்ட அளவில் குறைந்த செலவில் குளிர் சாதன வசதியுடன் இதுவரை 17,000 அமரர்கள் உடல் வீடு போய்ச் சேர்ந்து நீத்தார் கடன் தீர்க்க உதவும் இத்திட்டத்தால்  மக்கள் மனதார தமிழக அரசை வாழ்த்துகின்றனர்.

கண்டவர் சொன்னதில்லை சொன்னவர் கண்டதில்லை என்பது அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து குணமாகி சென்றவர்களை கேளுங்கள். அரசு மருத்து வமனைகள் மூன்று காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். முதல் காரணம் குப்பைகள் சுகாதாரம் இன்மை இது மருத்துவமனையில்  பணிபுரிவோர் கொண்டு வந்து போடுவதல்ல நோயாளிகளும் அவர்கள் உறவினரும் போடுவது அள்ளுவதற்கு அங்கே போதுமான ஆட்கள் இல்லை என்பதுதான் உண் மை.

வரும் ஆட்களுக்கு தக்கவாறு பணியாளர்கள் இருந்தால் கண்டிப்பாக சுத்தம் வரும். மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை  தவிர்த்தாலே பாதிக் குப்பை தீர்ந்துவிடும். பார்வையாளர் நேரம் தவிர மற்ற நேரங்களில் நோயாளியின் உறவினர்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம்.

இரண்டாவது காரணம் கூட்டம் அதிகம் தமிழக மக்கள் தொகையில் அறுபது முதல் என்பது சதவீத மக்கள் இதை பயன்படுத்துவதால் தரமானதாக இருப்பதால் கண் டிப்பாக கூட்டம் இருக்கத்தானே செய்யும் தரமில்லாமல் சிகிச்சை அளித்தால் கூட்டம் வருமா? அரசியல் கூட்டம் போல இது கூட்டி வந்த கூட்டம் அல்ல உயிரின்  மதிப்பு தெரிந்த மருந்தின் விலை தெரிந்த கூட்டம் காத்திருந்தாலும், தரமான சிகிச்சை கிடைக்கும் என்பதை உணர்ந்த கூட்டம். கூட்டத்தைக் கட்டுப்படுத்த கோவை மரு த்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்வதைப் போல நிர்மலா மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை உதவியை நாடலாம்.  மகளிர் காவலர்கள் மற்றும் காவல்துறையினரும் அவசியம் ஏற்பட்டால் உதவுவார்கள்.

உண்மையில் மிக திறமைசாலிகள் இருப்பது அரசாங்க மருத்துவமனைகளில்தான் இருக்கின்ற வசதியை வைத்தே தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு  அளிக்கும் வைத்தியம் தனியார் மருத்துவமனைகள் கனவிலும் காணாதவை ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேல் நோயாளிகளை அனாயசமாக சமாளிக்கும் அரசு மருத்து வருடன் ஒரு நாளைக்கு இருபது பேர் மட்டும் பார்க்கும் தனியார் மருத்துவரை ஒப்பிட்டு பார்ப்பதும் தவறு அவர்கள் திறமை வேறு இவர்கள் திறமை வேறு.

இருக்கும் வியாதியை கண்ணால் கண்டவுடன் கண்டுபிடிக்கும் மற்றும் சில பரிசோதனைகளிலேயே முடிவுக்கு வரும் அரசு மருத்துவர்களின் திறமை வேறு. அரசு மருத் துவருக்கு ஆயிரம் வேலைகள். வெளி நோயாளிகள், உள்நோயாளிகள், அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை, வருமுன் காப்போம் திட்டம், சிறைவாசிகள்  பரிசோதிப்பு, இளம்கலை, முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும் செவிலியர், அவசர சிகிச்சை உதவியாளர், தொழில் நுட்ப பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும்  பாடம் சொல்லித் தருதல், முக்கிய பிரமுகர்கள் வரும்போது உடன் மருத்துவ வாகனத்தில் தயார் நிலையில் உடன் செல்லுதல் என இதர வேலைகள் இருந்தாலும் பெருகி  வரும் நோயாளிகளின் கூட்டத்திற்கேற்ப போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலையிலும் மிகுந்த வேலைப்பளுவுக்கு இடையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ஒரு  அரசு மருத்துவர் தான் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு முதல் 50 மடங்கு வரை உழைக்கிறார்கள் என்பது அவர்ககள் செய்யும் வேலையைத் தெரிந் தவர்களுக்கு மட்டுமே தெரியும். பிரதம மந்திரியோ, குடியரத் தலைவரோ, முதலமைச்சரோ, அமைச்சர் பெருமக்களோ யாராக இருந்தாலும் அரசு மருத்துவமனையில்தான்  சிகிச்சை பெற்றது ஒரு காலம். என்ன காரணத்தினாலோ அவர்கள் தனியார் மருத்துவமனையை நோக்கி சிகிச்சைக்காக செல்வதால் பத்திரிக்கை மற்றும் மீடியாவின் ஒட்டு  மொத்த கவனமும் தனியார் மருத்துவமனைகள் மீது குவிந்தது.

கலைஞர் கொடுத்த வரம்
உலக அளவில் நமது தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா நகராகி கோடிகளை குவித்தாலும் ஏழ்மையில் தவிக்கும் மக்களுக்கு எட்டாத கனியான தனியார் உயிர் காக்கும் மரு த்துவத்தை கைக்கு எட்ட வைத்தவர் டாக்டர் கலைஞர் என்று சொன்னால்மிகையாகாது. இது கலைஞர் கொடுத்த வரம். கோடிக்கணக்கான குடும்பங்கள் வாழ்த்துவதே இந்த  திட்டத்தின் சிறப்பாகும். இதை தனியார் மருத்துவமனைகள் மற்றொரு வருமான வாய்ப்பாக கருதாமல் சேவையாக செய்ய அரசு ஒரு வாய்ப்பளித்தாலும் சில மருத்து வமனைகள் முன் பரிசோதனை கட்டணம் என்றும் உதாரணமாக இதய பைபாஸ் சிகிச்சைக்கு முன் ஆஞ்சியோ கிராம் எடுக்க பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை  நோயாளியிடம் இதுவரை 1,92,492 பேருக்கு 500 கோடி செலவில் இலவச அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டம் காரணமாக கூட்டம் அதிகரித் தாலும், குறைவான கட்டணமே இன்சூரன்ஸ் கம்பெனி கொடுப்பதால் மக்கள் இரண்டாம் பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதும் உண்மை. ஒரு முன்னணி மருத்து வமனையில் கீழ்க்கண்ட கூத்து நடந்தது. கையில் அடிபட்டு விரல் நசுங்கிய நிலையில் வந்த ஒருவரிடம் விரலை காப்பாற்ற ஐம்பதாயிரம் பணம் கேட்டது மருத்துவமனை  அவர் கலைஞர் காப்புறுதி அட்டையைக் காட்டிய உடன் இந்த அட்டையில் விரலை எடுத்து உயிரை காப்பாற்ற மட்டும்தான் பணம் தருவார்கள். விரலை காப்பாற்ற  வேண்டுமானால் பணம் கட்டு எனக் கூறவே வேறு வழியின்றி வீட்டை வைத்து விரலை மீட்க பணம் கட்டிய கொடுமையும் நடந்திருக்கிறது. எல்லா மருத்துவமனையும்  அப்படியில்லை. சென்னையிலேயே பல மருத்துவமனைகள் ஸ்ரீ சதய சாய் சேவா நிறுவனத்துடன் இணைந்து மாதம் ஒரு நோயாளிக்கு இலவசமாக எல்லாவித  சிகிச்சையும் அளிக்க முன்வந்திருப்பது மிகப் பெரிய விசயமாகும். ஏழைகளோ என்றால் எது பற்றியும் கவலைப்படாமல் அரசு மருத்துவமனைகளின் சிறு சிறு குறைக ளயும் பெரிது படுத்தாமல் வந்து தங்கி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தையும் உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். பெரும் பணக்காரர்கள்  கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அதிநவீன ஐந்து நட்சத்திர சொகுசு சிகிச்சைகளை பெற்றுக் கொள்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு போக மனம் இடம் கொடுக்காமல்  தனியார் மருத்துவமனைக்கு போக பணம் இடம் கொடுக்காமல் இரண்டுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு விழிப்ப்தென்னவோ நடுத்தர வர்க்கத்தினர்தான். இவர்களுக்காக  குறைந்த கட்டணத்தில் காப்பீட்டுத் திட்டம் தர அரசு ஆவன செய்யலாம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளின் தரம்
அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளில் மிக முக்கியமானதும், நோய்கள் வருமுன்பே காக்க வல்ல வரப்பிரசாதமான தடுப்பூசிகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து  பயனாளிகளுக்கு போய் சேரும் வரை ஒரே சீதோஷ்ண நிலை வைக்கப்பட்டால்தான் அது மிகுந்த பலன் தரும்.

அரசு மருத்துவமனைகளில் இவை உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி சரியான முறையில் பாதுகாக்கப்பட்டு

Athirady.com தகவல்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து

அதிரடி” இணையமானது ஆறுவருட சேவையினைச் செவ்வனே பூர்த்தி செய்து 20.10.2010ல் ஏழாவது வருடத்தில் கால் பதிக்கின்றது. நீண்டகால பல்வேறு நெருக்குவாரங்கள், நிதி நெருக்கடிகள், மிரட்டல்கள், பல்வேறு கருத்து முரண்பாடுகள் போன்ற பலவற்றுக்கும் மத்தியிலும் பக்கச்சார்பின்றி, நடுநிலையாகவும் உண்மைக்குப் பாத்திரமாகவும், நேர்மை, நடுநிலை தவறாமலும், உண்மைத் தகவல்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து லேட்டாக தந்தாலும், லேட்டஸ்டாக தெளிவான செய்திகளாகத் தருவதில் முக்கிய இடம் வகிக்கின்றது. அத்துடன் அதிரடியானது தகவல்களை துல்லியமாகக் கணித்து வெளியிட்டு வரும் திறன் யாவரும் அறிந்ததே. எமது இணையதளத்தை முன்னிணியில் கொண்டு வந்து நிறுத்திய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை ஆறு வருடம் பூர்த்தியடைந்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் அதிரடி இணையத்திற்கு தங்களுடைய கருத்துக்களை (வாழ்த்துக்களையோ, வசவுகளையோ) எழுதி அனுப்பி வைக்கலாம் என்பதை அறியத் தருகிறோம். நாகரீகமான வார்த்தைகளைக் கொண்டு எழுதி அனுப்பப்படும் உங்கள் கருத்துக்கள் அதிரடி இணையத்தில் பிரசுரிக்கப்படும். அதாவது எவராக இருப்பினும் தரமான வார்த்தைகளில் நாகரீகமான முறையில் எழுதி அனுப்பும் கருத்துக்களை எமது இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். உங்கள் கருத்துக்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி..!

athirady@yahoo.com

இரவில் வீடொன்றுக்குள் அத்துமீறி புகுந்த படைச் சிப்பாய் வெட்டிக்கொலை



வடமேல் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம் பகுதியில் இரவு நேரத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரகசியமாக வீட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது வீட்டு உரிமையாளர்களும் கிராம மக்களும் இணைந்து குறித்த படைவீரரை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
பலவத்த இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 31 வயதான தினுக் பெர்னாண்டோ என்ற படைச் சிப்பாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரவு நேரத்தில் குறித்த படைச் சிப்பாய் ஏன் வீட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்டார் என்பது இன்னமும் மர்மமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் வடக்கிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போலி சந்தனக் கட்டை: லட்சக் கணக்கில் மோசடி

போலி சந்தனக் கட்டைகளைக் காட்டி லட்சக் கணக்கில் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடுமலை அருகே சந்தன மரங்களை வெட்டி பழனி வழியாக ஒரு கும்பல் கடத்தி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார், மாறுவேடத்தில் சென்று வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களை வியாபாரிகள் என நினைத்து, சந்தனக் கட்டைகள் என காண்பித்து மோசடி கும்பல் பண பேரம் நடத்தியுள்ளது. இதையடுத்து மறைந்திருந்த போலீசார் வனத்துறை ஊழியர் ஒருவர் உட்பட 8 பேரை பிடித்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்கள், மரக்கட்டைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாதாரண மரங்களை சந்தனக் கட்டைகள் எனக் கூறி விற்பனை செய்தது தெரிய வந்தது.

சவூதியில் சம்பள உயர்வு கேட்டு போராடிய சீன தொழிலாளர்கள் நாட்ட‌டை விட்டு வெளி‌‌யேற்றம்

ரியாத்: சவூதி அரேபியாவில் ரயில்வே திட்ட கட்டுமானத்துறையில் பணியாற்றிய சீன நாட்டினர் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்களை அந்நாட்டு அரசு உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தது. சவூதி ‌கெஜட் எனும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது ,சவூதி அரேபியாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் சீன நாட்டினர் 18 மாத ஓப்பந்த அ‌டிப்படையில் பணியில் சேர்ந்தனர். இவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‌பணியில் ‌சேர்ந்தனர். இங்கு அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்காமலும், வேலைப்பளு அதிகம் தரப்படுவதாகவும் கூறி 100 சீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கட்டுமான நிறுவன அலுவலகத்தினையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 16 சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சீன வர்த்தகத்துறை அமைச்சர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதே போன்று சவூதியில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சீனர்களுக்கு அந்நாடு குறைந்த ஊதியமே வங்கிவருகிறது. சீனர்களை ‌ ‌கொத்தடிமைகளாக்குகிறது என்று கூறியள்ளதாக அந்த பத்திரிகையில்கூறப்பட்டுள்ளது.
மனிதன் - குறுக்குதெரு,இந்தியா
2010-10-16 15:20:43 IST
அடே பால பான சீன பயபுல்லைகலா, பாலைவனத்தில் உழைக்க வருவதற்கு முன் இதை யோசிக்க வேண்டும்.உன் நாட்டில் உனக்கு அக்ரி மென்ட் போட்டுதான் இங்கு வேலைக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். இங்கு வந்த பிறகு சம்பளத்தை கூட்டி தா என்றால் எவன் கூட்டி கொடுப்பான்...வகுத்து பொழப்புக்காக இங்கு வருகிறோம்,வந்தோமா,வேலை பார்த்தோமா,சம்பளத்தை வாங்குனோமா,என்று இருக்கணும்.சும்மா உன் சொந்த நாட்டில் செய்யும் இந்தமாதிரி சேட்டைகளை இங்கு செய்தால் வாலை ஓட்ட நறுக்கி விடுவார்கள்...இங்கே வந்து விட்டோம் என்றால் சூத்தை பொத்திக்கொண்டு வேலை பார்க்கணும்.......
கருத்து கண்சாமி - ரியாத்,சவுதி அரேபியா
2010-10-16 15:05:40 IST
வெளி நாடு பிழைக்க போறப்ப சூத்த மூடிகினு போகணும். இல்லேன்னா போவாதடா கசுமாலம்...ஊர்ல மரம் வெட்டி பிழச்சிக்க ..போறது போயிட்டு பிறகு சம்பள உயர்வு குடுக்க மாட்டேங்கிரான்னு சொல்லுவ... அடுத்து சொந்தமா காணி வாங்க ரூல்ஸ் இல்லைன்னு சொல்லுவா...இன்னும் சில வருசத்துல நான் உழைத்து முன்னேத்துன நாடு என்னோடது நு சொல்லுவ....போங்கடா நாதாரிகளா .......
சுவாமிநாதன் - மதுரை,இந்தியா
2010-10-16 14:54:27 IST
தன்னுடைய சொந்த நாட்டிலே போராடினால் சைனாக்காரன் சுத்தி வளைச்சு ரவுண்டு கட்டி சுடுவான். அதே மாதிரி வெளிநாட்டில் போய் போராடினால் அவனை வேலையே வாங்காமல் ராஜ உபசாரம் பண்ணி சம்பளம் கொடுக்கனுமா? அதுக்கு மட்டும் சைனாக்காரன் நீதி நியாயம்னு பேசுவானா? உலக நாடுகள் அனைத்தும் சைனாவில் ஜனநாயகத்தை வற்புறுத்த வேண்டும்....
D.M.Maran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 11:32:42 IST
சீனாவில் உள்ள தொழிலாளர் உரிமையும், பேச்சு உரிமையும், பத்திரிகை சுதந்திரமும் உடனே இந்தியாவில் அமுல் படுத்த செஞ்சட்டை தோழர்கள் போராட வேண்டும். அப்போது தான் அமெரிக்காவை பின் தள்ள முடியும். செய்வார்களா தோழர்கள் ?...
subash - chennai,இந்தியா
2010-10-16 08:55:57 IST
பச்சையாம் கோடி பறக்கும் பாலை மண் அரபு நாட்டில் துச்சமோ உழைப்போர் வர்க்கம் தூங்குதோ அவர்தம் சங்கம் கச்சையாம் அதுவும் கூட சிகப்பிலே அணியும் தோழர் அச்சுறுத் துவார்கள் இங்கே ஆளையே காணோம் அங்கே....

புலிகளின் இரகசிய முகாம் ஒன்று மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு!!

மட்டக்களப்பு தொப்பிகலை பிரதே சத்தின் அலியாஓடை பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்ட இரகசிய முகாம் ஒன்று அமைந்துள்ளதாக விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
புலிகளால் குறித்த முகாமுக்கு  ‘போ சிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது.  விடுதலைப் புலிகள் கிழக்கில் பலமாகச் செயற்பட்ட காலத்தில் அந்த முகாம் அருணா,  குமாரப்பன்,  நியூட் டன் மற்றும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘போ சிக்ஸ்’  முகாமில் ஏராளமான புலி உறுப்பினர்கள் தங்கியிருந்ததுடன் முகாமிலும் அதனைச் சுற்றிய பகுதியிலும் பெருமளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் விசேட அதிரடிப்படை புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு மேலாக முகாமைச் சுற்றிலும் கொடிய முதலைகளைக் கொண்ட நீர் அகழி அமைந்திருப்பதன் காரணமாகவும் அப்பிரதேசத்தில் காணப்படும் மலைக்குகைகள் காரணமாகவும் கிழக்கை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கையின் போது  இராணுவத்தினரால் குறித்த முகாமை கைப்பற்ற முடியாது போயிருந்தது.
ஆயினும் அரசாங்கம் அதனை வெளிக்குத் தெரியாவண்ணம் மூடிமறைத்திருந்தது.     புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து குறித்த முகாமில் இருக்கும் புலி உறுப்பினர்களுடன் அரசாங்கத்தின் இன்றைய பிரதியமைச்சர் ஒருவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தற்போது அவர்கள் அனைவரும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருவதாகவும் அதிரடிப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் உட்பட கிழக்கில் அரச ஆதரவுடன் செயற்படும் ஆயுதக் குழுக்களுக்கும் அங்கு வைத்தே ஆயுதப் பயிற்சியளிக்கப்படுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘போ சிக்ஸ்’ முகாம் தொடர்பான தகவல்கள் கசியத் தொடங்கிய காரணத்தால் அப்பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படையினரை விலக்கி விட்டு அப்பிரதேசத்தை முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் உடனடி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகின்றது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தலிபான் முக்கியப்புள்ளியை அமெரிக்கா கொன்றது; பாக்.,வனப்பகுதியில் விமானம்

Top news
இளம்பிராயத்தில் இருந்து பயங்கரவாத பயிற்சியில் ஈடுபட்டு தலிபான்களின் அமைப்பில் 2 ம் கட்ட தலைவராக இருந்த ஹாரி ஹூசைன் மசூத் என்பவரை அமெரிக்க படையினர் வான்வழித்தாக்குதலில் கொன்று இருக்கின்றனர்.
இது தலிபான்கள் அமைப்பினருக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஆப்கான், பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருக்கிறது.
 
கடந்த 3 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வர்ஜீஸ்தான் பகுதியில் உள்ள மச்சிகைல் என்ற பகுதியில் அமெரிக்க உளவு விமான படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  ஹாரி ஹூசைன் மசூத் என்பனும் அடங்குவான். இவன் திக்ரிக் இ தலிபான் அமைப்பின் துணை தளபதியாக இருந்து வந்தான்.
 
கடந்த செப்டம்பர் மாதம் பத்திரிகைக்கு அனுப்பிய செய்தியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு எதிராக பெரும் தாக்குதல் நடக்கும் என எச்சரித்திருந்தான். மசூத் தனது சிறு வயதில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றவன்.

தற்கொலைபடை தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக்கொடுப்பதில் கில்லாடியாம். பல்வேறு தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த முக்கியப்புள்ளியும் ஆவான். இவனது மரணத்தை பாக்., உளவு துறையினர் உறுதி செய்துள்ளனர். 

புலிவலம்,இந்தியா
2010-10-16 16:58:10 IST
பெயரிலேயே!!!சொந்தமில்லாமல் அந்நியனாக கருத்து சொல்ல வந்த வீர சிங்கமே!!! தாலிபான்கள் உன் போன்ற பெயரை உடைய அந்நியர்களை விரட்ட போராடுகிறார்கள். அவர்களைப்பற்றி ஆப்பு வாங்கி முடித்துவிட்ட ரஷ்யாவையும், வாங்கிக்கொண்டிருக்கும் ஆப்பை வெளியில் சொல்ல முடியாமல் வலிக்காத மாதிரியே நடிக்கும் நேட்டோவிடம் அங்கே சென்று தாங்கள் ஆய்வு செய்தால் தெரியுமையா! ( இன்றைய செய்தி தினமலரில்தான்,தாலிபான்களிடம் பேச தயார்,நேட்டோ அறிவிப்பு ) நீங்கள் பாதுகாப்பாக இங்கே கருத்து சொல்கிறீர்கள்.அந்த மக்களுக்கு அவர்கள் தான் போராட வேண்டும்....
எந்திரன் - சென்னை,இந்தியா
2010-10-16 16:49:13 IST
பல்லிருக்கிற அமெரிக்காகாரன் பக்கோடா திங்கிறான்..இதுல உங்களுக்கு ஏனப்பா எரிச்சல்..இங்கே சில கருத்து காலிபாக்களை பாருங்க..தலிபான்களுக்கு புல் சப்போர்ட்டு..விட்டா நிதி உதவி செய்வாங்க போலிருக்கு..ஆனாலும் இந்தியாவிலே வாழ்ந்துக்கிட்டு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்றதுக்கான நல்ல மனசை உங்களுக்கு இறைவன் கொடுத்திருக்காண்டா..ம்ம்ம்...நல்லா இருங்கடா......
நண்பன் - டவல்,இந்தியா
2010-10-16 16:20:27 IST
This matter not that much true. if its true means why NATO call Taliban for compromise speech. This arranged by US Military head..Last one week 16 US led soldiers killed by Taliban...
Anniyan - Chennai,இந்தியா
2010-10-16 15:21:51 IST
இன்னும் நிறைய தீவிரவாதிகளை கொத்து கொத்தாக கொன்றது என்ற செய்தியை காண ஆவலோடு உள்ளேன்.. பஞ்சப் பரதேசிகளா சுத்திக்கிட்டு இருந்த ஆப்கானிகள் அமேரிக்கா குடுக்கும் வேலையால நல்ல சாப்பாடு சாப்பிடுகிறான்.. இந்த பணக்கார நாடுகளான துபாய், சவ்தி அரேபியா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தானையும் கூலிக்கு மாரடிக்கும் பரதேசிகளாகவே பாவித்து உதவி செய்வதாக சொல்லிக் கொண்டு தீவிர வாதிகளுக்கு பணம் கொடுத்து உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலா இருக்கின்றன.. முடிந்தால் இந்த துபாய், சவ்தி அரேபியா, ஈரான் போன்ற உலகின் சாபக் கேடான நாடுகளையும் ஒரு கை பார்த்தால் நமது எதிர் காலம் நன்றாகவே இருக்கும்.. சும்மா இருந்தான், அவன் பில்டிங்க்ள போய் ஃபிளைட்ட பார்க் பண்ணிட்டு காலம் போனாக் கடைசியில லொங்கு லொங்குனு ஓடிக்கிட்டு இருக்கான் கிழக் கபோதி "பின்னு லேடன்" நாதாரி.. ஓடி ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும் போதே சூளுரை வேறு காமெடி பீசுகளுக்கு.. அனேகமா புல் தடுக்கி விழுந்து அவனே செத்து போயிருப்பான் புல் தடுக்கி பயில்வான் "பின்னு லேடன்".. அக்பர் அவர்களே, தாங்கள் சொல்வது தாலிபான்கள் கிடையாது.. அமெரிக்காவோட கால கழுவுறேன்னு நாடகம் ஆடிட்டு அவன் குடுக்குற எலும்புத் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டும் அவனுக்கே திருப்பி ஆப்பு வைக்கும் பச்சை துரோகி பொறுக்கிஸ்தானோட வேல.. தாலிபன்களால நேட்டோவோட மயிற கூட மோந்து பாக்க முடியாது.....
logu - Dubai,இந்தியா
2010-10-16 15:20:33 IST
இங்கே செய்தியை படித்து விட்டு கருத்து சொன்ன வாசகர்களை இரண்டு ரகமாக பிரித்து பாருங்கள் எல்லாமே புரியும். நம் நாட்டிலேயே நிறைய தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று. வெட்கபடுகிறேன் இதை வெளியே சொல்ல. ஜெய் ஹிந்த்....
வினோத் - சென்னை,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-16 14:57:06 IST
இவர்களை போன்ற தீவிரவாதிகளை அடக்க அமெரிக்காவாவது துணிந்து செயல்படுகிறதே, இல்லை என்றால் உலகம் தீயவர்களுக்கு அடிமையாக போயிருக்கும்.... பாராட்டுக்கள் அமெரிக்கர்களே...
sdf - madurai,இந்தியா
2010-10-16 14:28:21 IST
அமெரிக்காவில் இரண்டு கட்டடங்களை இடித்து விட்டார்கள் என்பதற்காக, இப்படி உலகெல்லாம் வெறித்தனமாக அப்பாவிகளை கொன்று குவிக்கிறது அமெரிக்க ராணுவம்....
R V சுப்பையா - தோஹா,கத்தார்
2010-10-16 14:20:20 IST
தினமலர் செய்திகளை முந்தித் தருவதில் ஒரு மணிமலர் தான். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். 100 % உண்மை....
இபு பாரிஸ் - SARCELLES,பிரான்ஸ்
2010-10-16 13:40:11 IST
இவ்வளவு அறிவியல் சமாசாரம் இருந்தும் தலிபானை அழிக்க முடியவில்லை. நேடோ படையில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு இழப்பு என அவர்கள் சொல்வதில்லை. இந்த மாதிரி சமாச்சாரங்களை வெளி கொண்டு வர ஆரம்பித்தது தான் "அல் ஜெசீர "டிவி ;நேடோ அமெரிக்க கூலிப்படை!!!தலிபான் அப்படியல்ல!!ரஷியா எப்படி அமைதியாக இருக்கான்? அவனுக்கு தெரியும் கடந்த கால "வலி"!!!!!...
sakthivel - Alanganoor,இந்தியா
2010-10-16 13:19:49 IST
அருமையன் செய்தி தேங்க்ஸ் தினமலர் கே.சக்திவேல் அலங்கனூர்...
Rajamohan - Chidambaram,இந்தியா
2010-10-16 13:18:52 IST
Dinamalar Simple & Best...
அக்பர் - புலிவலம்,இந்தியா
2010-10-16 12:45:40 IST
இன்னும் நான்கு நாட்கள் கழித்து நேட்டோ படையினரின் டேங்கர் வாகனங்கள் 25 தகர்ப்பு என்று செய்தி நீங்களே வெளியிடுவீர்கள். நேட்டோவுக்கும் தாலிபான்களுக்கும் இதே வேலை.......
சோமன் - தோஹா,கத்தார்
2010-10-16 12:42:54 IST
அட போங்கப்பா... நீங்க இப்படி செய்தி போடுறீங்க. கொஞ்ச நாள் கழிச்சு அவன் அல் ஜஸீரா ல வந்து பேட்டி குடுப்பான். காஷ்மீர், கோழிக்கோடு, ஹைதராபாத் போன்ற பகுதிகள்ல நல்லா தேடி பாருங்க. அங்க இருந்தாலும் அதிசயப்படுரதுக்கில்ல....
நண்டு முருகன் - திருச்சி,இந்தியா
2010-10-16 12:37:12 IST
அமெரிக்கா காரனை பாருங்கடா அருமையாக பிளான் போட்டு ஆள தூக்குறான். பேச்சுவார்த்தை அது இது என்று நாளை கடத்தாமல் எல்லாத்தையும் சுளுக்கு எடுத்து விடுறான்....
iyerarp - riyadh,சவுதி அரேபியா
2010-10-16 12:13:19 IST
தினமலர் முதன்மையில் உள்ளது செய்திகள் தருவதில்...
prabha - bangalore,இந்தியா
2010-10-16 12:07:59 IST
போட்டு தாக்கு, போட்டு தாக்கு....
முஹம்மத் - சென்னை,இந்தியா
2010-10-16 11:44:15 IST
இந்த அமேரிக்கா காரங்க எத்தனை முறை இந்த மசூத் என்பரை கொன்றதாக செய்தி வெளிட்டார்கள், உங்க பத்திரிக்கையிலேயே செய்தி வந்துள்ளது.வேற ஏதாவது வேலை இருந்தால் போய் பார்க்க சொல்லவும். அமெரிக்காவுல நூற்றில் எழுபது பேருக்கு வேலை இல்லையாம். அதெல்லாம் போய் பார்க்க சொல்லவும். அதை விட்டுட்டு அப்பாவிகளை கொன்று அவனை கொன்னுட்டேன் இவனை கொன்னுட்டேன்னு சவடால் பேச்சு....
2010-10-16 11:34:06 IST
பாகிஸ்தானில் இன்னும் சில முக்கிய தீவிரவாதிங்க இருக்காங்க, அவங்களை (முஷாரப்) -யும் ஒழித்துக்கட்டிட்டு அப்பறம் நீங்க நாடு திரும்புங்க அமெரிக்க படையினரே...

மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி உயிருடன் எரிப்பு-கணவன் வெறிச்செயல்

தூத்துக்குடியில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி. திருமணமாகி 9 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு மார்க்கரெட், மான்சி என்னும் இரு மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான ஜோசப்ராஜ் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இது தவிர குடிக்கப் பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயராணி மீது ஜோசப்ராஜ் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தென்பாகம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ஜோசப்ராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AR.Rahman:யாரையும் கவராத காமன்வெல்த் தீம் பாடல்-மன்னிப்பு கேட்டார்

AR Rahmanகாமன்வெல்த் போட்டிக்காக தான் போட்டுக் கொடுத்த தீம் பாடலின் ட்யூன் பிரபலமாகமால் போனதற்காக மன்னிப்பும், வருத்தமும் தெரிவிப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும்.

இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது ஏமாந்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.

அடுத்த முறை இதுபோல நேரிடும்போது மிகவும் கவனமாக இருப்பேன்.
அனைவருக்கும் பொருத்தமான பாடலையும், ட்யூனையும் தேர்வு செய்வேன் என்றார் ரஹ்மான்.

காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடல் யாரையும் கவரவில்லை என்ற தகவல் பரவியதைத் தொடர்ந்து அதை சரி செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டார் ரஹ்மான். இருப்பினும் இந்தப் பாடல் யாருக்குமே பிடிக்காமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.

மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ். விஜயகுமாரன் மாரடைப்பால் மரணம்!


மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகுமாரன் மாரடைப்பு காரணமாக இன்று 16 ஆம் திகதி தனது 55 வயதில் காலமானார்.நேற்று காலையில் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன்போது இவரை உறவினர்கள் உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணியளவில் இவர் உயிரிழந்ததாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரியாக செயற்பட்ட இவர் 1989 ஆம் ஆண்டு முதல் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுவிலும் பின்னர் கவுன்சிலிலும் அங்கத்துவம் பெற்ற இவர், கடந்த 6 வருடங்களுக்கும் அதிகமாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றி வந்தார்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் நம்பிக்கைக்குரியவராக இவர் செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை பசுமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தற்போது ஹட்டன் நகரில் மல்லியப்பூ வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இவரின் மனைவி ஓர் ஆசிரியராவார். இவருக்கு இரண்டு பிள்ளைகள்

சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்படுவர் : டக்ளஸ்

சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்படுவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதற்காக சிங்கள மக்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றப்படுவதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களை சந்தித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்களின் தேசிய அடையாள அட்டையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.போதியளவு ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட்டால் மட்டுமே குறித்த சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பின்னணியில் தெற்கு மக்களை கூடிய விரைவில் மீள் குடியேற்றுவது சாத்தியமாகாது எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

தெற்கில் தங்களது சகல சொத்துக்களை இழந்த பல தமிழர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இரண்டு தரப்பினருக்கும் இடையில் பிழையான அபிப்பிராயம் ஏற்பட்டுவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி ஸ்டைலில் சூர்யா


      ‘கஜினி’ பட வெற்றி போல் மீண்டும் ஒரு வெற்றி ஃபார்முலாவுடன் ஏ.ஆர். முருகதாஸ் - சூர்யா கூட்டணி அதிரடி வேகம் காட்டிவரும் படம் ‘ஏழாம் அறிவு’. சர்க்கஸ் கலைஞனாக சூர்யா திறமைகாட்டி வரும் இந்தப் படத்தில் சில நவீன தொழில் நுட்பத்தையும் கையாள உள்ளனராம்.


டெக்னிக்கல் ரீதியாக உலக தரத்திற்கு தமிழ் சினிமாவை உயர்த்தி இருக்கிறது எந்திரன். தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட்டை மிஞ்சும் படங்கள் வருவதற்கு பாதை வகுத்துள்ளது எந்திரன். இந்தப் பாதையில் தற்போது பயணிக்க உள்ளதாம் ஏழாம் அறிவு. 


எந்திரனில் பயன் படுத்தப்பட்ட டெக்னிக்கல் விஷயங்களை ‘ஏழாம் அறிவு’ படத்திலும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.  இதற்காக எந்திரனில் டெக்னிக்கல் காட்சிகளுக்கு பணியாற்றியது ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்புதல் வாங்கி இருக்கிறதாம் ஏழாம் அறிவு படக்குழு. 


இதன்படி ஹாலிவுட் படங்களுக்கு நிகரான டெக்னிக்கல் காட்சியமைப்புகள் எந்திரனுக்கு பிறகு ஏழாம் அறிவுலும் தொடரவுள்ளது.

‘கஜினி’  மூலம் பாலிவுட் சினிமாவை கலக்கினார் ஏ.ஆர். முருகதாஸ்.  இப்போது ‘ஏழாம் அறிவு’ மூலம் ஹாலிவுட் தரத்துக்கு படம் தரப்போகிறார் என்பது தமிழ் சினிமாவுக்கு மற்றொரு பெறுமைக்குறிய விஷயம்தான்.

வீடியோ காட்சி வெளியாகி நிதி வசூலித்த விதம் அம்பலம்.காங்கிரஸ்பேரணிக்கு நிதி வசூலிக்கப்பட்ட விதம

மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியா கலந்து கொள்ளும் பேரணிக்கு நிதி வசூலிக்கப்பட்ட விதம் குறித்து இரு காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்ட வீடியோ காட்சி வெளியாகி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இன்று காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இதில் சோனியா பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்குத்தான் நிதி வசூல் செய்வது குறித்து பேசி சிக்கலில் மாட்டியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்.

தங்கள் முன்பு வீடியோ காமரா இருப்பது கூடத் தெரியாமல் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரேவும், காங்கிரஸ் தலைவர் சதிஷ் சதுர்வேதியும் படு சீரியஸாக சோனியா கூட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நிதி குறித்துப் பேசிக் கொண்டிருந்துள்ளனர் அந்தக் காட்சியில்.

இந்த பேரணிக்காக ஒவ்வொரு அமைச்சரும் ரூ. 10 லட்சமும், முதல்வர் சவான் ரூ. 2 கோடி கொடுத்ததும் பற்றி பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவர்களிடம் இருந்து ரூ. 10 லட்சம் வாங்கினோம். அதை வைத்து தான் செலவு செய்தோம் என்று தலைவர்கள் பேசியுள்ளனர். மேலும், அதில் அவர்கள் முதல்வர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் 2000 பேருந்துகளுக்கு இன்று ரூ. 2 கோடி டெபாசிட் செய்வதாகத் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

மாணிக்ராவ் தாக்கரே மற்றும் சதிஷ் சதுர்வேதி ஆகியோர் பேசியது தெளிவாகப் பதிவாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், என்னிடம் இந்த விஷயம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை. இது குறித்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மொட்டையாக முடித்துக் கொண்டார்.

இந்த சர்ச்சை குறித்து முதல்வர் சவான் கூறுகையில்,

வசூலிக்கப்பட்ட பணத்திற்கு முறையான கணக்கை காட்டி, அதை ஒழுங்காக செலவழித்தால் எந்தப் பிரச்சனையும் வராது என்று நான் நினைக்கிறேன். மும்பையில் தசரா பேரணிகளுக்கு செலவாகும் பணத்தைப் பற்றியும் பாருங்கள்.

காங்கிரஸ் பேரணிக்கான செலவுக் கணக்கு முறையாக உள்ளது. அதில்

S.S.Chandran.என் மூச்சு அடங்குறது பொதுக்கூட்ட மேடையாத்தான்

ஒரே ஒரு கடமைதான் பாக்கி இருக்கு! டாக்டருக்கு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டேன்னா பொறுப்பு முடிஞ்சிரும். பிறகு வீட்டைப் பத்தின கவலை இல்லாம இருப்பேன்.என் மூச்சு அடங்குறது பொதுக்கூட்ட மேடையாத்தான் இருக்கும்!’’என்று அடிக்கடி சொல்வார் எஸ்.எஸ்.சந்திரன்!
மகன் ரங்கராஜனை ‘டாக்டர்’ என்றுதான் அழைப்பார். அவர் சொன்னதில் மரணம் மட்டும் சாத்தியமாகி இருக்கிறது.மகனை மணமேடையில் பார்ப்பதற்குள் இயற்கை அவரை தகன மேடைக்கு அனுப்பி விட்டது.
சிவகங்கையில் பிறந்து வளர்ந்து கொழும்புவில் சில காலம் நாடக நடிகனாக வாழ்ந்து சென்னைக்கு வந்தவரை திரை உலகம் ஏற்றுக்கொள்ள, 850 படங்கள் நடித்து முடித்திருக்கிறார். சந்திரனின் தொடக்க கால வாழ்க்கை சிறு சேமிப்புத் திட்டம், குடும்பக் கட்டுப்பாடு பிரசார நாடகங்களைச் சுற்றியே அமைந்திருந்தது!
காலையில் 9 மணிக்கு நடக்கத் தொடங்கியவர் பிற்பகல் 2 மணிக்கு ஈரோடு சென்று இரவில் நாடகம் நடத்தியிருக்கிறார்.
நாடகக்குழுவினருடன் பஸ்சில் சென்றவர் இயற்கை உபாதையால் வழியில் இறங்கிக் கொள்ள,பஸ் புறப்பட்டுவிட்டதால் நெடிய பாதயாத்திரை! ‘‘கடும் வெயில்! கையில் காசு இல்லை! சொன்ன நேரத்தில் நாடகம் நடக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்பதால் நடந்தேன்! கால் வலியைப் பொறுத்துக் கொண்டு நடித்தேன்.கால் வீங்கிவிட்டது! மருத்துவரைப் பார்க்கவும் வசதி இல்லை!காவிப் பத்துப் போட்டுக் கொண்டு பயணம் தொடர்ந்ததை என்னால் மறக்க முடியாது!’’என்று சந்திரன் அடிக்கடி சொல்வார்.
நாடகக் குழுவில் நடித்தவர்களில் பெரும்பாலோர் ஹோட்டலில் வேலை பார்த்தவர்கள் என்பதால் அடிக்கடி அவர்களைப் பார்க்கப் போய்விடுவார்.
சாப்பாடு பிரச்னையை இப்படி சமாளித்ததும் உண்டு.ஒரு சிசர் சிகரெட், டீயுடன் காலை நேரப் பசியைத் தணித்துக் கொண்டதும் உண்டு!
மதுரைக்குப் பக்கத்தில் கொடிமங்கலம் என்கிற கிராமத்தில் அவர் நடத்திய நாடகத்தைப் பற்றி சிரிக்கச் சிரிக்கச் சொல்வார்.அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய நாடகம் அது! நாடகத்தின் இடையில் ஊர்ப் பெரியவர் வந்து பபூனையும் ஸ்திரீ பார்ட்டையும் ஆடச் சொல்லி அரிவாளைக் காட்டினாராம்.
‘இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் உயர்ந்த நிலைக்கு வந்தேன்.
கஷ்டப்பட்ட காலத்தில் சாப்பிட வசதி இல்லை! காசு இருக்கிற காலத்தில் இஷ்டப்பட்டதைச் சாப்பிடமுடியல!சிரிப்பு நடிகனின் வாழ்க்கை ரொம்பவும் ரிஸ்க்! தூங்கும்போது கூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்.
இல்லேன்னா முடிஞ்சிருச்சு கதைன்னு நம்மை முடிச்சிருவாங்க! என்பார்.
எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த சந்திரனுக்கு ‘சிவப்புமல்லியில் நல்லவேடம் கொடுத்தவர் ராம.நாராயணன். இவருடன் சேர்ந்த பின்னர்தான் விஜயகாந்த், ராதாரவி, சந்திரசேகர் ஆகியோருடன் நெருக்கம் ஏற்பட்டது.
மு.க.முத்து, ராதாரவி, சந்திரசேகர் ஆகியோருடன் தி.மு.க. பிரசார நாடகங்களில் நடித்திருக்கிறார். அரசியலில் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தார்.
வைகோ தனிக்கட்சி ஆரம்பித்தபோது இவரும் தி.மு.க.வில் இருந்து விலகினார்.அங்கிருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா.2001-லிருந்து ஆறாண்டு காலம் எம்.பி.யாக இருந்தார்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் விழாவுக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு காரில் பயணம் செய்த போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது! அவ்வளவாக போக்குவரத்து இல்லை!வெயிலும் காற்றும் கடுமையாக இருந்தது! அரசியல், நாட்டு நடப்பைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்.
சாலை ஓரமாக ஒரு முதியவர் மேலாடை இல்லாமல் முண்டாசுக் கட்டிக் கொண்டு தேய்ந்த ரப்பர் செருப்புடன் நடந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டார்.
அம்பாசிடர் காரில் பின் சீட்டில் சந்திரனைச் சேர்த்து மூன்று பேர். முன் சீட்டில் டிரைவருடன் மூன்று பேர் நெருக்கியடித்துக் கொண்டு தான் உட்கார்ந்திருந்தார்கள். அந்த முதியவரை தன் பக்கமாக உட்கார வைத்துக் கொண்டு தூத்துக்குடியில் இறக்கிவிட்டு கைச்செலவுக்கு நூறு ரூபாயும் கொடுத்ததை அவரது இரக்க குணத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் அரசியல் என்று மேடை ஏறிவிட்டால் அனல் பறக்கப் பேசுவார்! ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த திரை உலக கலைஞர்களில் இவர்தான் முதலாவது ஆள்! சக கலைஞர்களை உறவு முறை சொல்லி ‘மாப்ளே’, ‘தம்பி’ என்று பாசமுடன் பேசுவார். பிற கலைஞர்களும் இவரை அன்புடன் ‘மாமா’ என்று நேசமுடன் அழைப்பார்கள்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கலைஞர்களுடன் இவர் பேசினாலும் சிலர் இவருடன் பேசுவதற்குத் தயங்கினார்கள்.
காதல் மனைவியுடன்தான் வாழ்க்கை!நாடக வாழ்க்கையில் அரும்பிய காதலுக்கு அடையாளமாக இருமகன்கள், ஒருமகள். மகன் ரோகித்தை கலை வாரிசாகக் கொண்டு வந்தார். கல்யாணத்தில் முடிந்தது. மகள் கண்மணிக்கு திருமணம் முடிந்துவிட்டது. டாக்டர் ரங்கராஜனுக்கு பெண் தேடிக் கொண்டிருந்தபோதுதான் மரணம் அவரைத் தேடி வந்தது.
உடல்நலம் குன்றிய பிறகு மேடைப்பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளுமாறு டாக்டர்களும்,கட்சித் தலைமையும் எஸ்.எஸ்.சந்திரனைக் கேட்டுக்கொண்டும் அவர் பொருட்படுத்தவில்லை.கட்சிக் கூட்டம் பேச மன்னார்குடி சென்ற இடத்தில் மாரடைப்பால் அவர் இறந்து போனார்.
விசுவாசத்திற்கு விலையாக தன் உயிரையே கொடுத்திருக்கிறார் எஸ்.எஸ்.சந்திரன்.    
- தேவிமணி

தாய்லாந்தில் கைது செய்யப்பட்டோர் நாடுகடத்தப்படும் சந்தர்ப்பம் குறைவு..

தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்ட 130க்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படக்கூடிய சந்தர்ப்பமில்லை என தாய்லாந்து நாட்டிற்கான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுப் பிரதிநிதி சுனை பாசுக் தெரிவித்துள்ளார். தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த தாய்லாந்து வெளிவிவகாரத்தறை ஊடகப்பேச்சாளர் தனி தொங்பஹாடி, கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறியமையாலேயே கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆட்கடத்தல்களை தவிர்க்கும் முகாமாகவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாய்லாந்து நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றில் 500 மேற்பட்டவர்கள் கனடாவிற்கு சென்றிருந்மை குறிப்பிடத்தக்கது. ...............................

RCMP in Lanka .கனடாவின் பொலிஸ் பிரிவு இலங்கையில் நிறுவப்படவுள்ளது

கனடாவின் ஆர் சீ எம் பி பொலிஸ் பிரிவு ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கனேடிய அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ரொறன்டோ ஸ்டார் இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கனடா செல்லும் தமிழ் அகதிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொலிஸ் பிரிவின் முதற் செயற்பாடாகவே, தாய்லாந்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 155 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டமை கருதப்படுகிறது.
இதேவேளை இலங்கையில் அச்சமான சூழ்நிலை இருப்பதாக கனடாவுக்கு வரும் இலங்கை அகதிகள் கூறுவதில் உண்மை இல்லை என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்
கனடாவுக்கு வரும் இலங்கைக்கு வரும் அகதிகள், பொருளாதாரத்தை மையமாககொண்டு வரும் அகதிகள் என தெரிவித்துள்ள அவர், கனடா, அவுஸ்திரேலியா பின்பற்றும் நடைமுறையை பின்பற்றவேண்டும் என கேட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வானது அமைச்சர் கூறியிருப்பதில் சில உண்மையிருப்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடத்தில் அமைதி திரும்பியிருக்கிறது. ஆயினும், தமிழர்கள் இலங்கையை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
2009 மே இல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கனடாவில் புகலிடம் வழங்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் கோப்புகளை கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயம் ஆய்வு செய்தது.
இவற்றில் அரைவாசிக்கு மேற்பட்ட அகதிகள் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளனர். கனடிய பிரஜாவுரிமையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்திருக்கின்றார்கள்.
இந்த விடயமானது நிச்சயமாக சிந்திக்க வேண்டியதொன்றாகும் என்று கனடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜாஸன் கெனோய் அண்மையில் புதுடில்லியில் வைத்து "த ஸ்ரார்" க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
பாதுகாப்பான அந்தஸ்தைப் பெற்றுக்கொண்ட பலர் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர். எமது புகலிட முறைமையானது பரந்தளவில் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறதென நாம் நம்புகிறோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
கனடாவிற்கு குடியேற்றவாசிகள் செல்வதைத் தடுக்கும் புதிய முயற்சியாக கொழும்பில் கனடா அலுவலகமொன்றை திறக்கவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வடக்கில் நவம்பர் இறுதிவரை வாக்காளர் பதிவு நடைபெறும்!

வடக்கில் வாக்காளர் பதிவு எதிர்வரும் நவம்பர் இறுதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நவம்பர் மாதம் இறுதிவரை வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.மீள்குடியேற்றம் நடைபெறும் முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்ளுக்கென உதவி தேர்தல் ஆணையாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாக்காளர் பதிவுகளை மேலும் இலகுவாக்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி கச்சேரியில் தற்காலிக தேர்தல் அலுவலகமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கை வட மாகாணம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜூன் முதலாந் திகதி ஆரம்பமானது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடமாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைப் பதியும் பணிகள் இம்முறையே முதன் முதலாக மேற்கொள்ளப்படுகிறது.பதிவு செய்யும் நடவடிக்கைகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ளன.
எனினும், பெருந்தொகையான இடம்பெயர் மக்களையும் முகாம்களில் தங்கியிருப்பவர்களையும் கொண்டுள்ள வடமாகாணத்திற்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ம்.வி.சன்.சி கப்பலில் பயணித்து போலியான ஆவணத்தை சமர்பித்த கணவன் மனைவி கைது

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை வந்தடைந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் 492 பேரில் கணவன் மனைவி இருவர் போலியான ஆவணத்தை சமர்பித்தமையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் யானைகளுக்கும்-மனிதருக்கும் இடையிலான மோதல்கள்

இலங்கையில்,  கடந்த மூன்று சகாப்த காலமாக  சிங்கத்துக்கும்  (சிஙகளவர்களுக்கும்) – புலிகளுக்கும்  (தமிழர்களுக்கும் )  இடையே நடைபெற்ற மோதல்கள்  முடிவடைந்து  இப்போ  இலங்கையில் மனிதருக்கும்,   யானைகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.   உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விலங்கான யானைகளின் முக்கியமான வாழ்விடங்களில் இலங்கையும் ஒன்று. இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், சுவடு தெரியாமல் இன்னுமொரு பிரச்சினை அங்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆளுடன் ஆள் மோதியது முடிந்து, இப்போது ஆனைகளுக்கும், ஆளுக்கும் இடையில் மோதல் நடக்கிறது.   மனிதனுக்கும், யானைகளுக்கும் இடையிலான இந்த  சண்டை நடப்பது நிலத்துக்காக.   இதுவும் ஒருவகை சுதந்திரத்திற்கான போராட்டம்தான்.   யாணைகள் தங்கள் தங்கள் பிரதேசங்களில் சுதந்திரமாக இயங்குவதற்கு விரும்புகின்றன.   ஆனால் மனிதர்கள்  அவைகளின்  பிரதேசத்தில்  சுதந்திர நடமாட்டத்துக்கு இடையூறு  செய்கிறார்கள்.  அதனால் இரு பகுதியினருக்கும் இடையே  மோதல்கள் நடைபெறுகின்றன.
இந்தப் மோதல்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 80 ஆட்களும் 225 யானைகளும் பலியாக நேர்கிறது. அது மாத்திரமல்லாமல், இந்த யானை- மனித மோதல்களால் இலங்கையில் மொத்தம் உள்ள 9 மாகாணங்களில் 8 மாகாணங்கள் பாதிக்கப்படுகின்றன.
கடந்த 5 நாட்களில் 4 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளால் அடிபட்டு இறந்திருக்கிறார்கள்.
நாட்டின் பெரும்பாலும் எல்லாப் பகுதிகளிலும்   யானைகள் சுதந்திரமாக நடமாடிவருவதால் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு தீரும் என்று தெரியவில்லை. இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை ஒரு நெருக்கடி என்று வர்ணிக்கிறார்கள்.
மனிதர்கள், யானைகளின் வாழ்விடங்களில் குடியேறிவிட்டார்கள் என்று சுற்றுச் சூழலாய்வாளர்கள் கூறுகிறார்கள்.   அதனால், மனிதர்களின் பண்ணைகளில் யானைகள் அத்துமீறி நுழைவதுடன் அவர்களது பயிர்களையும், அவர்களையும் அழிக்க முனைகின்றன.
இது உண்மையில் ஒரு நெருக்கடி நிலை என்கிறார் இலங்கை வன விலங்கு இலாகாவைச் சேர்ந்த ரவி கொரியா .ஆனால், யானைகள் இலங்கையில் இன்னமும் ஒரு கலாச்சார, சமய சின்னமாகவே பார்க்கப்படுகின்றன.  வன பாதுகாப்பு சங்கத்தின் உதவியுடன் சில கிராமங்களில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படூகின்றன.

யானையால் உடைக்கப்பட்ட ஒரு வீடு
அதற்காக சில இடங்களில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.     அந்த வேலிகள் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி யானை பயந்து ஓடச்செய்ய உதவும். ஆனால், யானையை அது கொல்லாது.
யானைகளை சுதந்திரமாக மேய்ந்துவர அனுமதிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுவதால், அவற்றை சுற்றி அல்லாமல்,கிராமங்களைச் சுற்றியே இந்த வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை இன்னமும் ஒரு முறையும் இங்கு பயன்படுத்தப்படுகிறது.    இதற்கு எலி அலர்ட் என்று கூறப்படுகின்றது. அதாவது யானைகள் வந்து இந்த வேலிகளை உடைக்கும் போது, அந்த முறைமை தானாகவே கிராம முக்கியஸ்தர்களின் கைபேசிகளுக்கு டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்பும். இதனை அறிமுகப்படுத்தியவர், லங்கா விஜேசிங்க. இது கிராம மக்களுக்கு மேலதிக பாதுககாப்பை வழங்குவதாக அவர் கூறுகிறார்.
இந்த வேலிகளுக்கு பக்கத்தில் பாதுகாப்பாக மரம் ஒன்றில் தங்கும் வாடி வீடுகளையும் சில குடும்பங்கள் அமைத்துள்ளன. வேலி நிலைமைகளை மேம்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
யானைகள் குறித்த அச்சமும், அழிவும் இன்னமும் தொடருகின்றன அதேவேளை கலாச்சார ரீதியாகவும் மத ரீதியாகவும் யானைகளைப் போற்றும் தன்மையும் இன்னமும் அங்கு இருக்கிறது.

வெடி பொருட்களுடன் முன்னைநாள் புலி உறுப்பினர் கைது!


முன்னைநாள் புலி உறுப்பினர் ஒருவர் கிளேமோர் குண்டு மற்றும் அரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து என்பனவற்றுடன் தலவாக்கொல்லை பகுதியில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

இலங்கையில் ஆண்,பெண் சமத்துவம் கடைப்பிடிக்கப்படுவது மிக உயர்ந்த மட்டத்தில்

உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றிலும் பார்க்க இலங்கையில் ஆண்,பெண் சமத்துவம் கடைப்பிடிக்கப்படுவது மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. உலக பொருளாதார அமைப்பின் சர்வதேச பால்நிலை இடைவெளி தொடர்பான 2010 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் பிரகாரமே இந்த விபரம் வெளிவந்திருக்கிறது. உலக பால்நிலை இடைவெளி சுட்டியில் இலங்கை 16 ஆவது இடத்தில் உள்ளது.அமெரிக்கா 19வது இடத்திலும் கனடா 20 ஆவது இடத்திலும் உள்ளன. நான்காவது வருடமாக தொடர்ந்து முதல் 20 இடங்களுக்குள் இலங்கை இருந்து வருகிறது விசேடமாக குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். கல்வி, சுகாதார விடயங்களில் சராசரி நிலைமையிலும் பார்க்க இலங்கை உயர்மட்டத்தில் இருக்கிறது. அரசியல் ரீதியான அதிகாரமளிக்கப்படும் விடயத்திலும் சிறப்பான நிலைமையில் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெற்கு,தென்கிழக்காசியப் பிராந்தியத்திலும் இலங்கையிலும் பார்க்க ஆண்பெண் பால்நிலை சமத்துவத்தை பேணுவதில் பிலிப்பைன்ஸ் உயர் மட்டத்தில் (9ஆவது இடம்) உள்ளது. வடதுருவ நாடுகளான ஐஸ்லாந்து (1), நோர்வே(2), பின்லாந்து(3), சுவீடன்(4) என்பன தொடர்ந்து முன்னணியில் உள்ளன.அயர்லாந்து 6ஆவது இடத்திலும் சுவிட்சர்லாந்து 10ஆவது இடத்திலும் ஸ்பெயின் 11ஆவது இடத்திலும் ஜேர்மனி 13ஆவது இடத்திலும் பிரிட்டன் 15ஆவது இடத்திலும் உள்ளன. 134நாடுகள் மத்தியில் இந்த உலக பால்நிலை இடைவெளி சுட்டெண் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மக்கள் தொகையின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் வளங்கள், வாய்ப்புகள் பகிரப்படுகின்றன என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு இச்சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பங்களிப்பு, வாய்ப்பு, சம்பளம் பங்களிப்பு மட்டம், உயர்மட்ட தேர்ச்சிபெற்ற வேலைவாய்ப்பு, அடிப்படை மற்றும் உயர்கல்வி அடைவுமட்டம், தீர்மானம் எடுத்தல் தொடர்பான அரசியல் அதிகாரம், ஆயுள்கால எதிர்பார்ப்பு தொடர்பான சுகாதார நிலைமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சுட்டெண் மதிப்பிடப்படுகிறது.

Cricket ‌தோல்வி ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர

புதுடில்லி: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்‌வி அடைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆஸ்திரேலியர்கள், புதுடில்லியில் வெறியாட்ட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இத்தகைய அநாகரிகமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், வீரர்களுக்கான கிராமத்தில் தங்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றினர். காமன்வெல்த் போட்டிகளில் அதிகப் பட்ச பதக்கங்களைக் குவித்திருந்தபோதும், கிரிக்கெட்டில் கிடைத்த தோல்வியை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
விளையாட்டு கிராமத்தில் இருந்த மின்சார சாதனங்களையும் மேஜை நாற்காலிகளையும் அவர்கள் போட்டு உடைத்தனர். இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர். அவர்கள் தங்கி இருந்த 8வது மாடியிலிருந்து ஒரு வாஷிங் மிஷினைத் தூக்கி எறிந்தனர்.
செவ்வாய் கிழமையன்று சச்சின் இரட்டை சதம் அடித்ததும், ஆஸ்திரேலியர்களின் வெறியாட்டம் தொடங்கியது. அங்கு இருந்த இந்திய ஊழியர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். டில்லி போலீசாருக்கு இது குறித்து புகார் தரப்பட்டும், இந்த சம்பவங்கள் ஆஸ்திரேலியாவுடன் அரசு ரீதியாக மோதலை ஏற்படுத்தும் என்று கருதி, அந்த புகாருக்கு முக்கியத்துவம் தரவில்லை. இது குறித்து போலீசார் கூறுகையில், விளையாட்டு கிராமத்துக்குப் பொறுப்பான குழுவினரிடமிருந்து புகார் வராததால் வழக்கு பதிவு செய்வில்லை என்றனர். இந்த சம்பவம் குறித்து விளையாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய விளையாட்டுக்குழுத் தலைவருடன் விவாதித்த பின்னர், புகார் தருவதில்லை என முடிவு செய்தோம் என்றனர். விளையாட்டு வீரர்கள் இந்த செயலுக்காக மன்னிப்பு தெரிவித்தனரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர்கள் கருத்து கூற மறுத்து விட்டனர்.
குண்டலகேசி - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-15 15:59:02 IST
இங்கிலாந்துல இருந்து நாடு கடத்தப்பட்ட வம்சத்துல வந்த நாய்களுக்கு நாகரீகம் எப்படி தெரியும் .என்ன பிரச்சனையா இருந்தாலும், முறைப்படி புகார் பண்ணு . நடவடிக்க எடுக்கலைனா ,டிவி காரன் உன்பின்னாடியே வந்து, நீ கக்கா போறத கூட எடுத்து ஒளிபரப்புரானே ,அவன்கிட்ட சொல்லு, அத விட்டுட்டு நிற வெறி பிடிச்ச வெள்ள நாயே . கலாட்டாவா பண்ணறே .லைட் ஆப் பண்ணீட்டு ,நாலு சாத்து சாத்திருக்கணும். அப்புறம் எங்க போனாலும் வால ஆட்ட மாட்டானுக...
பாஸ்கரன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-15 15:57:03 IST
INTHA PASANGALAI ODA ODA VIRATTI ADIKKANUM APPO THAN PUTHI VARUM...
muthu - theni,இந்தியா
2010-10-15 15:55:02 IST
australiavuku one day matchla irrukku...
DT லண்டன் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-10-15 15:47:12 IST
What else can you expect from the Australians. They are the descendents of the criminals and life prisoners. No decent behaviour anywhere at all. The shameless creatures !! At the same time, Indian Governement is also run by shameless zombies. Italians are famous for their shameless behaviour too. India is now run by an Italian through a sardarji!! So I am not surprised....
jayaram - Chennai,இந்தியா
2010-10-15 15:46:07 IST
இது போல சிங்கப்பூரில் நடந்தால் சும்மா இருப்பார்கள? நாம் சும்மா வெட்டி பயளுகள....
srinivasankrishnaveni - bangalore,இந்தியா
2010-10-15 15:40:02 IST
shameless beggars. they think that they wont they cant face any defeeeeeets , net result will be a great problem for the Indians who are living in their country, THUS THEY PROVED THAT THEY ARE No1 BARBERIYANS...
கோ. விஜயராஜ் - ஷிபா.ரியாத்,சவுதி அரேபியா
2010-10-15 15:29:05 IST
இந்தியா எதிரியையும் மன்னிக்கும் குணம் உள்ளவர்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனா இந்தமாதிரி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியர்கள் செய்தார்கள் என்பதை உலகம் முழுவதும் செய்தியை பரப்ப வேண்டும். அந்த வேலையை தினமலர் தான் செய்ய வேண்டும். அவர்கள் வெறியாட்டம் ரூமுக்குள் இருக்க வேண்டும். இப்படி பொருட்களை சேதபடுத்தி சேவை செய்பவர்களை அசிங்கபடுதி இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டது ஒருபோதும் விட கூடாது ஊர் அறிய நாட்டாமை முன்னாடி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்....
சிங்கா - சிங்கப்பூர்,இந்தியா
2010-10-15 13:09:18 IST
சில காலம் முன்பு ஒன்றுமே செய்யாத ஒரு இந்திய டாக்டரை உள்ளே போட்டார்கள் ஆஸ்திரேலியர்கள். இங்கு அவர்கள் எல்லாம் செய்தும் ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற செயல்களாலேயே 'ரொம்ப நல்லவர்' என்ற பெயரை மன்மோகன் எடுத்துள்ளார்....
karthick - vancouver,கனடா
2010-10-15 12:59:20 IST
ஏற்கனவே அவன் ஊர்க்கும் நம்ம ஊர்க்கும் வாய்க்கா தகறாரு இருக்கு இதுல இது வேறையா ???...

நாங்க எந்த விளையாட்டிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, உங்கள மாதிரி கீழ்த்தரமான புத்தி எங்களுக்கு கிடையாது. நீங்களே தப்பு பண்ணியிருந்தாலும் அத பெருந்தன்மையா பேசறது தண்டா இந்த இந்தியன் ....
சிவா பாலா - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-15 12:46:39 IST
ஒரு நாளைக்கு மட்டும் கண்ட படி சாக்கடையில் கிடந்த 6000 ஆணுறைகள் இந்தியாவின் மானமும் சாக்கடையில்....

ஆஸ்திரேலியா கைதிகளின் நாடு. அந்த பரம்பரை குற்றபரம்பரை. ஆகவே அபபடித்தான் நடந்துப்பாங்க....
RAJAVARMAN - TRICHI,இந்தியா
2010-10-15 12:40:04 IST
முதலில் நம்மூர் மீடியாக்கள் பொய் சொல்லுவதை நிறுத்த வேண்டும் இந்த அதிகபிரசிங்கி ஜி.பன்னாடை பாண்டியன் வெறும் சட்டியில் தாளம் போடுவதை நிறுத்தவேண்டும்,உண்மை தெரியாமல் பேசக்கூடாது . ஆஸ்திரேலியர்கள் அதிகம் தங்கம் வாங்கிய மகிழ்ச்சியில் நல்ல போதையில் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. கல்மாடியை இந்த மீடியாக்கள் குறை சொல்லாத நாட்களே இல்லை. சிறிதாக பாலத்தின் மேற்கூரை யில் இருந்து ஒரு சிறிய கல் பெயந்ததர்க்கு சுனாமியில் ஒரு சிட்டியே காணாமல் போனமாதிரி இந்த மீடியாக்கள் அலறியது. வெளிநாட்டவர்கள் இங்கே வரவே பயந்தார்கள்,...
2010-10-15 12:33:00 IST
இந்திய ஒரு சுதந்திர நாடு அப்படின்றத அவங்க நிருபிக்கிராங்க, ஆஸ்திரேலியாக்கு பதிலடி கொடுக்கணும்ன நாம ஜெயிக்கணும் ஜெயிக்கணும் ஜெயிசிக்கிட்டே இருக்கணும், அது தன நாம அவங்களுக்கு கொடுககுற சரியான பதிலடி.......,...

2010-10-15 11:30:49 IST
வணக்கம் சகோதரர்களே, காசுக்காக நாட்டை, நமது கலாச்சாரத்தை மறைப்பவர்கள் வோட்டுக்காக நம்நாட்டை, நாட்டு மக்களை முட்டாளாக்கும் இந்த மத்திய அரசாகம் இருக்கும் வரை இது எல்லாம் சகஜம். வந்தே மாதரம்...
பொன்முடி - அபுதபி,இந்தியா

2010-10-15 10:19:27 IST
அதாவது இந்தியா வந்து சமாதான நாடு. ஆனல் ஆஸ்திரேலியா வெள்ளை ஓநாய்கள். முதலில் இந்தியாவ விட்டு துரத்து. துடப்பத்த எடுத்து அடி...
பிரின்ஸ் - டெல்லி,இந்தியா
2010-10-15 10:15:03 IST
இச்செயல் அவர்களின் நாகரீகத்தை காட்டுவதாகக் கொள்வோம். பதிலுக்கு நாம் நமது நாகரீகத்தை காட்டுவோம்... மறப்போம்..! மன்னிப்போம்...!!...

முகுந்தன் - Singapore,சிங்கப்பூர்
2010-10-15 09:47:09 IST
என்ன கொடுமை சரவணன்! வெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டு சென்று 63 வருடம் ஆனாலும் அவன் நம்மில் விதைத்த அடிமை தனம் நம்மை விட்டு போவதாக இல்லை. இவ்வாறு நாம் அடங்கி போகும் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் அது அப்பட்டமாக வெளிப்படுகிறது. சிந்தித்து பாருங்கள் நாம் அங்கு சென்று எதாவது இப்படி செய்திருந்தால் என்ன ஆகி இருக்கும். இப்படி நாம் அமைதியாக இருந்தால் ஒரு ஆஸ்திரேலியன் எப்படி இந்தியனை மதிப்பான். சுயமரியாதையை இழப்பதில் நமக்குத்தான் முதலிடம். இதை நானும் ஒரு இந்தியனாக இருந்து சொல்லிகொள்வதில் வெக்கபடுகிறேன். நாம் இவ்வுலகில் தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமென்றால் இந்நிலை மாற வேண்டும்....

ஜி.கே. சிவராமகிருஷ்ணன் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-15 09:03:59 IST
இது ஒரு நல்ல உதாரணம் - அதாவது வெள்ளைக்காரர்கள் எவ்வளவு கீழ் தரமானவர்கள் என்பதற்கு. நம் ஜனங்கள்தான் வெள்ளைக்காரனை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவது. அவர்களுடன் தினமும் பழகுவதிலிருந்தே புரிகிறது அவர்கள் தரமற்றவர்கள் என்று. ஒரே ஒரு நல்ல விஷயம் அவர்களின் நேரம் தவறாமை....
பிரேம்குமார் - சூரத்,இந்தியா
2010-10-15 09:03:54 IST
தூக்கி உள்ள போட வேண்டியதுதானே ? கொட்ட கொட்ட குனிஞ்சி கிட்டே இருங்கடா ! அது ஆஸ்திரேலியாவா,பாகிஸ்தானா,சீனாவா,இலங்கையா யாரா இருந்தாலும் சரி ! கையாலாகாத அரசு !...
கணேஷ் - டோக்யோ,ஜப்பான்
2010-10-15 09:02:12 IST

அழகிரிக்கு பாதுகாப்பு ,தி.மு.க.வினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடும்

மு.க.அழகிரிக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, மாநகர போலீஸ் கமிஷனர் பால சுப்பிரமணியனிடம் மதுரை மாவட்ட திமுகவினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

மதுரையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வேண்டுமென்றே தி.மு.க.வினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் கெட்ட எண்ணத்தோடும் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும் பல்வேறு அச்சுறுத்தும் சுவரொட்டிகளை ஒட்டி ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், வருகிற 18 ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு எந்த மந்திரியும் தொகுதிக்குள் நுழைய முடியாது என எச்சரித்துள்ளார்.

அவரது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு முன்னாள் அமைச்சர்களான பன்னீர்செல்வம், செங்கோட்டையன் மற்றும் கட்சி முன்னணி பிரமுகர்கள் பல நாட்களாக மதுரையில் முகாமிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மதுரையில் கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் உள்ள மதுரையில் திட்டமிட்டு வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை கெடுக்க பார்க்கிறார்கள்.

அவர்களுக்குள்ளேயே அசம்பாவிதங்களை ஏற்படுத்திக் கொண்டு அப்பழியினை தி.மு.க.வினர் மீது போட சதி செய்து வருகிறார்கள். எனவே வருகிற 18 ந் தேதி மதுரைக்கு வரும் அனைத்து வாகனங்களையும், மதுரையில் உள்ள அனைத்து விடுதிகளையும் கடுமையாக சோதனை போட வேண்டும். மேலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிவரும் முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளின் செயல்களை போலீசார் தீவிரமாக கண் காணிக்க வேண்டும்.

இத்தகைய செயல்களால் மதுரை மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர். எனவே முன்னாள் 
அமைச்சர்கள் மீதும், சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மக்களின் அச்சுறுத்தல்களை போக்கும் வகையில் மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு முதல்வர் கருணாநிதி, போலீஸ் டி.ஜி.பி., உள்துறை செயலாளர் ஆகியோருக்கும் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற இலங்கையர் இருவர் கைது

இலங்கையர் இருவர் உட்பட மீன்பிடிபடகு ஒன்றில் அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற சட்டவிரோத பயணிகள் 31 பேரை கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு கடலோர காவல் துறையினர் இடைமறித்துப் பிடித்துள்ளார்கள். இச்சட்டவிரோத பயணிகளில் 19 பேர் ஹெய்ட்டியையும்,06 பேர் பிறேசிலையையும் மற்றும் 04 பேர் ஜமெய்க்காவையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத பயணிகள் தெற்கு புளோரிடா மாநிலத்தைச் சென்றடைய முயன்றபோது பொயன்டன் கடற்கரையை அண்டிய கடல் பரப்பில் வைத்து காவல்துறையினரின் படகுகளால் சுற்றி வளைக்கப்பட்டார்கள்.

சட்டவிரோத பயணிகள் மாத்திரம் அன்றி அவர்களை படகில் அழைத்து வந்த கணவன் - மனைவி இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். படகு இவர்களுடையது எனவும், அவர்கள் மியாமி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் இதற்கு முன்பும் ஆட்கடத்தல்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள் எனவும் சட்டவிரோத பயணிகள் இப்பயணத்துக்காக தலா 5000 அமெரிக்க டொலர் வரை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கலாம் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக அறிவித்ததா ஐ.நா.?

Abdul Kalamஐ.நா சபை: இந்தியாவின் பெருமைக்குரிய தலைமகனாகப் போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. சபை அறிவித்ததாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இதுதொடர்பாக ஐ.நா. இணையதளத்தில் எந்த தகவலும் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எளிமை, நேர்மை, நாட்டுப் பற்றுக்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர் அப்துல் கலாம். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, விஞ்ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ஆராய்ச்சிகளிலேயே இளமையைக் கரைத்துக் கொண்டு, வெளிநாட்டு உதவிகளுக்காக காத்து நின்ற இந்தியாவுக்கென்று சுயமான தொழில்நுட்பத்தில் ஏவுகணையை வடிவமைத்தவர் டாக்டர் கலாம். அக்னி, பிருத்வி போன்றவையெல்லாம் உருவானதில் டாக்டர் கலாமின் பங்கு ஏராளம்.

பொக்ரான் அணு குண்டு வெடிப்புச் சாதனைகளில் முக்கியப் பங்காற்றியவர்.

இந்தியாவின் முதல் சுய தொழில்நுட்ப செயற்கைக்கோளான எஸ்எல்வியை வடிவமைத்த பெருமையும் இவருக்கே சொந்தம்.

2002 முதல் 2007 வரை இந்தியாவின் மகா எளிமையான குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் கலாம். வெட்டி செலவு, பந்தாவில் நம்பிக்கையில்லாத இந்த மனிதர், குடியரசுத் தலைவரான தன்னைப் பார்க்க வந்தவர்களைச் சந்திக்க மறுத்ததில்லை.

மாணவர்களுக்கு மிகப் பிடித்தமான ஒரே தலைவர் டாக்டர் கலாம்தான் என்று சொல்லும் அளவுக்கு மாணவர்கள் மத்தியிலேயே எப்போதும் இருந்து வருகிறார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது வாழ்நாள் முழுவதையும் மாணவர்களின் கல்விக்காக, அவர்களின் முன்னேற்றுத்துக்காகவே செலவிட்டு வருகிறார் இந்த 79 வயது பிரம்மச்சாரி!

உலகம் முழுவதும் 1 கோடி மாணவர்களைச் சந்தித்து உரையாடி அவர்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்தியுள்ள இந்த மாமேதையை கவுரவிக்கும் வகையில் ஐநா சபை, அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஐ உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளதாக இன்று செய்திகள் பரவின.

இருப்பினும் இதுதொடர்பாக ஐ.நா. சபை எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. ஐ.நாவின் சிறப்பு நாட்கள் குறித்த பட்டியலிலும் இதுகுறித்த தகவல் ஏதும் இல்லை. எனவே கலாம் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக குழப்பம் நிலவுகிறது.

MV.Sunsea கனடா சென்ற கப்பலின் உரிமையாளர் தமிழ்ப்பெண்ணா?



எம் வீ சன் சீ கப்பலின் உரிமையாளர்களாக இருக்கலாம் என்ற ரீதியில் பெண் ஒருவரும், அவரது கணவரும் விசாரணைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கர்ப்பிணியான குறித்த பெண், நான்கு கட்ட அகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் இதுவரையில் அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் அவா வெவ்வேறு பெயர்களை வழங்கியதன் காரணமாகவே அவரை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக, கனேடிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த குற்றசாட்டில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள அவரது கணவர், வன்குவாரின் சீர்திருத்த முகாமில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண், விசாரணையின் போது சமர்ப்பித்த பெயருக்கும், அவரது ஆவணங்களில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் காணப்படுகின்ற நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பவற்றில் உள்ள பெயருக்கும், திருமணச் சான்றிதழில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருப்பதாக அகதிகள் ஆர்வலர் ரொன் யமாச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது கணவரின் விருப்பத்தின் பேரிலேயே தாம் பெயரை மாற்றிக் கொண்டதாக விசாரணைகளில் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.  எவ்வாறாயினும் தமிழ் பெண்கள் திருமணத்தின் பின்னர் தமது பெயரை கணவன் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள் என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.