bbc.com: சிட்னி தாக்குதல்: வணிக வளாகத்தில் என்ன நடந்தது? பெண் காவல் அதிகாரி , போண்டியிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மால் ஒன்றில் ஆயுதம் தாங்கிய ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளனர்.
"இந்த செயல் பைத்தியக்காரத்தனம்," என வருத்தத்துடன் விவரித்தார் ஒரு பெண்.
போண்டியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மாலில் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு மேல் இச்சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல அந்நேரத்தில் வணிக வளாகத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்திருந்தனர்.
சனி, 13 ஏப்ரல், 2024
அவுஸ்திரேலியா சிட்னி மாலில் 6 பேர் பேரை சரமாரியாக குத்தி கொலை! கொலையாளியும் சுட்டு கொலை ..
உதயநிதி வீட்டிற்கு எதிரே…பாஜக வேட்பாளர்களுக்குப் போன 65 கோடி…சிக்கிய CCTV கேசவ விநாயகம்?
திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு அந்த பணத்தை எடுத்துச் செல்வதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்ததும் தமிழ்நாட்டையே ஒரு வாரமாக பரபரப்புக்கு உள்ளாக்கியது.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பணம் எடுத்துச் செல்கிறார்கள் என்ற தகவல் முதலில் சென்னை மாநகர உளவுத்துறைக்கும், மாநில உளவுத்துறைக்கும் வந்திருக்கிறது.
ரூ.2 லட்சம் சம்பளத்தில் ரஷ்யாவில் வேலை என்று நம்பிச் சென்ற கேரள இளைஞர்களுக்கு நடந்த கொடுமை
BBC Tamil : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முகநூலில் ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு என்ற விளம்பரம் ஒன்றை பார்த்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த டேவிட் மூத்தப்பன். அதற்கான மாதச் சம்பளம் 2,04,000 ரூபிள் (ரூ.1,82,280) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளிப் படிப்பை கூட தாண்டாத மீனவரான டேவிட்டுக்கு அது பெரும் தொகை.
உடனடியாக ஒப்புக்கொண்டு ரஷ்யாவுக்கும் சென்றுவிட்டார் அவர். ஆனால், அங்கு நடந்ததோ வேறு.
சில வாரங்கள் கழித்து, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு யுக்ரேனின் டொனெட்ஸ்க் நகரில் போர்முனையில் சண்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் டேவிட்.
அங்கிருந்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது, ”எங்கு பார்த்தாலும் மரணமும், அழிவும் நிறைந்திருந்தது,” என்று கூறுகிறார் அவர். பல சோதனைகளைக் கடந்து இவரும், கேரளாவைச் சேர்ந்த மற்றொருவரும் கடந்த வாரம் வீடு திரும்பியுள்ளனர்.
ராகுல் காந்தியின் சுவீட் பாக்ஸ்! மோடியின் அத்தனை ரோடு ஷோக்களும் தூள்!
ராதா மனோகர் : கோவை கூட்டத்திற்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி செய்த ஒரு சம்பவம் மோடியின் அத்தனை ரோட் ஷோக்களையும் தூக்கி சாப்பிட்டு விட்டது
ஒட்டு மொத்த இந்தியாவின் ஊடகங்களையும் ராகுல் காந்தி பாய்ந்து சென்று தெருவின் குட்டிசுவரை கடக்கும் காணொளிதான் ஆக்கிரமித்துள்ளது
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் போது கொடுப்பதற்காக தெருவில் எதிர்பக்கம் தெரிந்த ஒரு பேக்கரியில் இனிப்பு பேட்டி வாங்கினார்
இது ஒரு சாதாரண சம்பவம் ..
தெருவின் குறுக்கே ஒரு இளைஞன் எப்படி தாண்டி செல்வானோ அப்படி சென்றார்
இதிலென்ன சம்பவம் இருக்கிறது?
ஏன் ஊடகங்கள் இதை தூக்கி பிடிக்கின்றன என்று சிலர் கேட்கலாம்.
ராகுல் காந்தியின் பேச்சு நடை உடை பாவனை பாடி லாங்குவேஜ் என்று எந்த திசையிலும் எந்த மைக்கிரோ ஸ்கோபில் உற்று நோக்கினாலும் ,
அங்கே பல பிரதமர்களை கொண்ட ஒரு குடும்ப வாரிசாக தெரிய மாட்டார்
யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் "மடப்பள்ளி" என்ற ஜாதியை சேர்ந்தவர்கள்?
Sivananthan Muthulingam : யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாக உள்ள "மடப்பள்ளி" வம்சங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.
Selvaraja Muthali : யாழ்ப்பாணத்தில், பல பிரிவுகள், வெள்ளாளர் " பட்டியலுக்குள் நுளைந்துவிட்டார்கள் ! யுத்தம் : இடம் பெயர்வு போன்ரவற்ரால் இவை சாத்தியமாகியது .இன்றைய சமூகத்திற்கு மடப்பள்ளி, என்றால் யார் என்று தெரியாது. - இவர்களுக்கு ஓர் பழமொழி அந்தகாலத்தில் இருந்தது. அதாவது மட்டக்கரியையும்,: மடப்பள்ளியானையும், நம்பாதே!காரண் தெரியவில்லை. எழுதவும் .
Sivananthan Muthulingam : Selvaraja Muthali மடப்பள்ளிகளுக்குத் தங்களை யாரென்று நன்றாகத் தெரியும். இன்று அந்த சாதி பெயரை சொல்ல கூச்சப்படுகிறார்கள். உதாரணமாக சம்பந்தன் ஒரு மடப்பள்ளி. ஆனா அவரை "வெள்ளாளன்" ஆக்கி உள்ளனர்.
Sivananthan Muthulingam : Ajith Kumar மடப்பள்ளியில் மட்டுமல்ல எல்லா யாழ்ப்பாணிகளும் நீங்கள் சொல்லும் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் எனது அண்ணன். நான் வேறு எந்த அரசியல் தலைவரையும் இப்படி அழைப்பதில்லை” என ராகுல் காந்தி
ராகுல் காந்தி : உலகிலேயே மாபெரும் ஊழல் மோடி செய்ததுதான்: பொள்ளாச்சியில் கடும் தாக்கு
மாலை மலர் : கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இருவரும் பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே, மோடி எல்லாம் செய்கிறார். சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார்.
அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
வெள்ளி, 12 ஏப்ரல், 2024
அண்ணாமலை Files : பாஜக அதிமுக பணத்தை கொள்ளையடித்து வாங்கிய அண்ணாமலை யார் சேம்பர்*
Vasu Sumathi ; அரவக்குறிச்சி தேர்தலில் அண்ணாமலை வசூலித்த ஊழல் பணம் அண்ணாமலையார் சேம்பர் நிறுவனமாக மாறியது எப்படி?
கூட்றா பிரஸ்ஸ, குட்றா பேட்டி.. இது பொய் னு சொல்லு பார்க்கலாம்!
கடந்த 20 21 சட்டமன்றத் தேர்தலில் பாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத்தில் களமிறங்கினார்.
இவருக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரவக்குறிச்சியில் தங்கி பிரச்சாரம் செய்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இவரை ஜெயிக்க வைக்க வேண்டியது அதிமுகவின் பொறுப்பு என்று கூறியதால் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூபாய் ஆயிரம் என 15 கோடிக்கு மேல் செலவு செய்தனர்.
ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்ததை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று உறுதி செய்தார்.
அதிமுகவினரின் பணம் மட்டும் இல்லாமல் பாஜக தேசிய செயலாளர் பிஎல்.சந்தோஷ் மூலம் கர்நாடகாவில் இருந்து கணிசமான பணத்தையும் ஆட்களையும் இறக்குமதி செய்தார் அண்ணாமலை.
ஆனால் அந்தப் பணத்தை முழுவதுமாக செலவு செய்யாமல் முதலீடாக மாற்ற திட்டமிட்டு அதனை தனது சொந்த சகோதரியின் கணவர் சிவக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கரூரில் குவாரி நடத்தி வரும் சிவக்குமார் அடிச்சது லக்கி பிரைஸ் என்று அந்த வசூல் பணத்தில் தேர்தல் முடிந்த ஓராண்டுக்குள் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அமரபூண்டி - புளியம்பட்டி கிராமத்தில் மச்சான் பெயரிலேயே *அண்ணாமலையார் சேம்பர்* என்ற பெயரில் மிகப்பெரிய செங்கல் நிறுவனத்தை அமைத்துள்ளார் இதற்காக 24 ஏக்கர் நிலத்தை அமரபூண்டி -புளியம்பட்டி கிராமத்தில்
(சர்வே நம்பர் 169/B, 20/1A2, 20/1B2 மற்றும் 168)
திண்டுக்கல் சத்திரப்பட்டி செந்தில்குமார் உடன் சேர்ந்து பல கோடியை முதலீடு செய்து சிவக்குமார் வாங்கியுள்ளார்.
இந்த இடத்தில் பெரிய அளவில் செங்கல் சேம்பர், உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் வசதி, அலுவலகம்,
பணியாளர் அறை என இதுவரை பல கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 10 லட்சம் யூனிட் மண் வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதிலும் மச்சான் சேம்பருக்கு விலை குறைத்து மண் இறக்க வேண்டும் என்று மணல் கரிகாலனை மிரட்டி அண்ணாமலை வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது.
சாதாரணமாக இரண்டு தகர டப்பாவை எடுத்துக்கொண்டு கல்லூரியில் சேர்ந்த அண்ணாமலை குடும்பம் நடத்துவதற்காகவே நண்பர்களிடம் பணம் ஆகும் அண்ணாமலைக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் மச்சான இருப்பது எப்படி என்பது தான் புரியவில்லை.
எம்பி, எம்எல்ஏ , கவுன்சிலர் என எந்த பதவியும் இல்லாத போது இப்படி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அண்ணாமலைக்கு பொறுப்பு கிடைத்தால் என்ன ஆகும்?
ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம்: தமிழ்நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் வட இந்தியாவில் கவனம் செலுத்துங்கள்!
ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி வருவது பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தேர்தல் அறிவிப்புக்கு முன்பும் பின்பும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை இந்த மூன்று மாதங்களில் எட்டு முறை வந்து சென்றிருக்கிறார். ஏப்ரல் 9,10 தேதிகளில் கூட தமிழகம் வந்துள்ளார்.
பிரதமர் மோடி மட்டுமல்ல, பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் என ஒட்டுமொத்த பாஜகவே தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் : ஜூன் 4க்கு பிறகு ஒரு நாள் பாஜக ஆட்சி நீடித்தாலும்! குலுங்கிய மதுரை!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : மதுரை: ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்த பாஜக அரசு ஒரு நாள் நீடித்தால் கூட சட்டம், மக்களாட்சி முறை என நாம் கண்முன் பார்க்கும் இந்த நாடு இப்போது இருப்பது போல் இருக்காது.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ஐ.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுடன் சேர்ந்த தலைவர்களின் புகைப்படத்தை காட்டிப் பேசினார் பிடிஆர்.
Minister PTR Palanivel Thiagarajan aggressive speech against bjp at madurai
வியாழன், 11 ஏப்ரல், 2024
செயின் பறிப்பு வழக்கில் கைதான 3 வடமாநில இளைஞர்களுக்கு எலும்பு முறிவு
மாலை மலர்: சென்னை: செயின் பறிப்பு வழக்கில் கைதான 3 வடமாநில இளைஞர்களுக்கு எலும்பு முறிவு
கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.
இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடேயே தான் போட்டி ... புலம்பித் தள்ளிய உடன் பிறப்புக்கள்
நக்கீரன் : மட்டன் பிரியாணியை எதிர்பார்த்து- கோவை திமுகவினர்...
மேற்கு மண்டலத்தில் வலுவான அ.தி.மு.க.விற்கு சம்மட்டி அடி கொடுப்பதற் காகவே, கோவையை கூட்டணிக்கு வழங்காமல் 1980க்கு பிறகு, அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, முத்துச்சாமி முன்னெடுப்பில் நேரடியாகவே உதயசூரியன் சின்னத்தில் களமிறங்குகின்றது தி.மு.க..
"கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் பல்லடம் சட்டமன்றத் தொகுதிகளில் பல்லடம் மட்டும் திருப்பூர் மாவட்டம் வசம் உள்ளது. மொத்தமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதியில் கோவை தெற்கு மட்டும் பா.ஜ.க. வசமும், மீதமுள்ளவைகள் அ.தி.மு.க. வசமும் உள்ளது.
பாலகிருஷ்ண மேனன் என்கின்ற சுவாமி சின்மயானந்தா! ஒரு ஆர் எஸ் எஸ்அரசியல்வாதியின் ஆத்மீக வேஷம்!
ராதா மனோகர் : 1942 இல் கேரளாவில் திரு பாலகிருஷ்ண மேனன் என்ற இளைஞர் காங்கிரசின் குயிட் இந்தியா Quit India இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டார் . அந்த இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்
இவரை கைது செய்யும் நோக்கோடு போலீஸ் தேடிய பொழுது தப்பி ஓடி அன்றய இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள அபோத்தாபாத் (இன்றைய பாகிஸ்தான்) Abbottabad என்ற சிற்றூரில் ஒழிந்திருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஊரில் வைத்துதான் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா போட்டு தள்ளியது.
இந்த கிராமத்தில் இரண்டு வருடங்கள் ஒழித்திருந்த பின்பு போலீஸார் தன்னை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேறு சில இளைஞர்களோடு பஞ்சாபுக்கு வந்தார்.
ஆனால் அங்கு இவரும் இவரது நண்பர்களும் போலீசிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சில மாதங்களில் சிறையில் பாலகிருஷ்ணா மேனனுக்கு கடுமையான தொற்று நோய் ஏற்பட்டது.
அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கூட இருந்த இளைஞர்கள் ரகசியமாக இவரை தூக்கி கொண்டுபோய் .ஏதோவொரு தெருவோரம் போட்டு விட்டு ஓடிவிட்டனர்
: எ.வ.வேலு : அதிமுக எப்படியாவது 2ஆவது இடத்துக்கு வந்துருங்க... பிஜேபிய விட்றாதீங்க...
மின்னம்பலம் -Kavi : “மக்களவைத் தேர்தலில் அதிமுகவினர் எப்படியாவது இரண்டாவது இடத்திற்கு வந்துவிடுங்கள், பாஜகவை இரண்டாவது இடத்துக்கு விட்டுவிடாதீர்கள்” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் எம்.கலியபெருமாள், பாஜக சார்பில் அஸ்வத்தாமன், திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், பிரதமர் மோடியிடம் சொல்லி திருவண்ணாமலையில் ஏர்போர்ட் அமைக்கப்படும். கிரிவலப்பாதை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரயில் பாதை, மாதம் ஒருமுறை இலவச வேலைவாய்ப்பு முகாம், திருவண்ணாமலை கோயிலை மத்திய அரசின் கீழ் கொண்டுசெல்வேன் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
புதன், 10 ஏப்ரல், 2024
சேலம்: செல்வகணபதியின் பாசவலையில் அதிமுகவினர்... எடப்பாடி ஷாக்! மாம்பழத்தின் நிலை என்ன?
சேலம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாம்பழம். மாம்பழ நகரம் என அழைக்கப்படும் சேலம், இரும்பு ஆலை, மின் உற்பத்தி ஆகியவற்றுக்கும் புகழ்பெற்றது.
சேலத்தில் அதிகளவில் கொலுசு உறுபத்தியும் செய்யப்படுகிறது.
ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு, டெல்டாவையே ஊட்டி வளர்க்கும் மேட்டூர் அணை, கோட்டை மாரியம்மன் கோயில், சங்ககிரி கோட்டை, கிள்ளியூர் அருவி என ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. கடந்த மார்ச் 29ஆம் தேதி சேலத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கோட்டை மாரியம்மனை வணங்கி உரையை தொடங்குவதாக கூறினார்.
செவ்வாய், 9 ஏப்ரல், 2024
மலையக காய் கறிகளின் விலை வீழ்ச்சி! கவலையில் மலையக விவசாயிகள்
மலையோரம் செய்திகள் : மலையக மரக்கறிகளின் விலைகள் நாளாந்தம் வீழ்ச்சியடைந்து வருவதால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட சிறு மலையக மரக்கறி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மலையகத்தில் அனைத்து மரக்கறிகளின் விலையும் மிகவும் குறைந்துள்ளது,
ஒரு கிலோ வெண்டைக்காய் 170 ரூபாவாகவும்,
கெரட் ஒரு கிலோ 270 ரூபாவாகவும்,
ஒரு கிலோ முட்டைக்கோஸ் 170 ரூபாவாகவும்,
உருளைக்கிழங்கு ஒரு கிலோ 260 ரூபாவாகவும்,
ஒரு கிலோவாகும். சோளம் 70 ரூபாவாகவும்,
பீட்ரூட் கிலோ 120 ரூபாவாகவும்,
கீரை கிலோ 70 ரூபாவாகவும்,
நேற்று (09) ஒரு கிலோ மிளகாய் மொத்த விலையில் 400 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ந
ுவரெலியா மாவட்டத்தில் சிறிய அளவிலான மலையக மரக்கறி செய்கையாளர்களும், பாரிய தோட்டத்தில் சிறிய அளவிலான மலையக மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
120 அடி தேர் சரிந்து விழுந்து விபத்து; தலைதெறிக்க ஓடிய பக்தர்கள்-
பெங்களூருவில் புகழ் பெற்ற மதுராம்மா கோயிலின் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராம்மா ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றுள்ள நிலையில் தேர் எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது.
மகாராஷ்டிராவில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!
நக்கீரன் : மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
ஆர்.எம்.வீரப்பன் காலமானார்- தலைவர்கள் இரங்கல்!
tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 98) முதுமையால் காலமானார்.
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன் எனும் இராம.வீரப்பன், பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக இருந்தார்.
பின்னர் தந்தை பெரியாரிடமும் உதவியாளராக இருந்தார்.
1950களில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சினிமா நிறுவனங்களைத் தொடங்கிய போது அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளரானார்.
1963-ம் ஆண்டு எம்ஜிஆர் தாயார் சத்யா பெயரில் சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன்.
பிரியங்கா காந்தி கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவாக ரோடு ஷோ
மாலையாமலர் : சென்னை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தலைவர்களும் முற்றுகையிட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார். நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்கிறார்.
அதை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்துக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
தருமபுரி ரிப்போர்ட்...மாவட்டச் செயலாளர்களை வெளுத்துக் கட்டிய அமைச்சர்!
மின்னம்பலம் -vivekanandhan : முதல்வருக்கு கிடைத்த தருமபுரி ரிப்போர்ட்…மாவட்டச் செயலாளர்களை வெளுத்துக் கட்டிய அமைச்சர்!
தருமபுரி நாடளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு பிரச்சார வேலை மந்தமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பு அமைச்சரைக் கேட்டதால், கோபமான அமைச்சர் தருமபுரி மாவட்டச் செயலாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அ.மணி, பாஜக கூட்டணியில் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி, அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
:ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது இந்தியாதான்! -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
வீரகேசரி :ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது இந்தியா தான் என்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த மாதம் அவர் திடீரென ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யாரென தனக்குத் தெரியும் எனக் கூறினார்.
அதனை பகிரங்கப்படுத்தினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்கினால் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் அளிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டார்.
அதையடுத்து அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஐந்தரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு, நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது.
திங்கள், 8 ஏப்ரல், 2024
கன்னியாகுமரி: எக்ஸ்பிரஸ் வேகத்தில் விஜய் வசந்த்... கை கொடுக்கும் தாரகை... ஏனோதானோ தளவாய்... என்ன செய்வார் பொன்னார்?
தமிழ்நாடு முழுதும் களம் திமுகவுக்கும், அதிமுகவுக்குமான போட்டியாக இருந்தாலும், கன்னியாகுமரியில் மட்டும் பெரும்பாலான நேரங்களில் போட்டி காங்கிரஸ் Vs பாஜக என்று தான் இருக்கும்.
இரண்டு தேசியக் கட்சிகளும் செல்வாக்கு செலுத்தும் தொகுதியாக கன்னியாகுமரி இருக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பியாக இருக்கக் கூடிய விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் பசிலியன் நசரேத் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரிய ஜெனிஃபர் போட்டியிடுகிறார்.
நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீட்டில் பணம் பறிமுதல்; திமுக பரபரப்பு புகார்!
முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
கேரளா மாணவர் தற்கொலை ..29 மணிநேரம் சி பி எம் மாணவர்கள் ராக்கிங்
tamil.oneindia.com - Vigneshkumar : திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில் 20 வயது கால்நடை மருத்துவ மாணவர் உயிரிழப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வழக்கு விசாரணை இப்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
ராகிங் என்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும். பல கல்லூரிகளில் ராங்கிங்கை தடுக்கவும் மாணவர்கள் நலனைக் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அதையும் தாண்டி ராகிங் கொடுமையால் சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடும்.
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிப். மதம் நடந்தது.
கொடூரம்: அங்கே வயநாடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் சித்தார்த்தன்.
ஞாயிறு, 7 ஏப்ரல், 2024
குஷ்பு தேர்தல் பரப்புரையில் இருந்து விலக்கினார்.. உடல் நிலை காரணமாம்?
நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு,
மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
விக்கிரவாண்டி MLA புகழேந்தி. 50 ஆண்டு திமுக பயணம்... கடைசி மூச்சும் கட்சிக்காகவே... யார் இந்த புகழேந்தி?
minnambalam.com - Kavi : கிளைச் செயலாளராக திமுகவில் தனது பணியைத் தொடங்கி மாவட்டச் செயலாளராக பணியாற்றி கடைசி மூச்சு வரை கட்சிப் பணியை மேற்கொண்டு காலமாகியிருக்கிறார் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி.
ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் விக்கிரவாண்டியில் விழுப்புரம், கடலூர் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதற்காக தனது உடல் நலம் சரியில்லாத நிலையிலும் அரும்பாடு பட்டார் புகழேந்தி.
விஜய பிரபாகரன் தம்பிக்கு Porsche கார் பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார்! இதற்குத்தானா ஆசைப்பட்டாய் ரசிகா
மாலை மலர் நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமான சூழலில் அவரது சமாதிக்கு தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்தவண்ணம் உள்ளனர்.