மின்னம்பலம் Kavi : தமிழகத்தில் பணியாற்றும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12,000 பேர் பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் கடந்த மே மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், மே மாதம் ஊதியம் வழங்கப்படாததால் அந்த மாதம் செலவுக்கு மிகவும் சிரமப்படுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
சனி, 10 ஜூன், 2023
‘ஊதியம் கிடையாது’.. 12 000 பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி
Karnataka ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் பாடம் நீக்கப்படும்" - கர்நாடக அதிரடி
நக்கீரன் : கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி அனைவரையும் சென்றடையும் வகையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆந்திர அமைச்சர் ரோஜா மருத்துவமனையில் அனுமதி
மாலைமலர் : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமாக இருக்கிறார்.
சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. வலியால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ரோஜாவின் கால் வீக்கத்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை" - முதல்வர் ஸ்டாலின்
மின்னம்பலம் Selvam : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 9) ஆய்வு செய்தார்.
பின்னர் திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
தெலங்கானாவிலும் இதே போன்ற சூழல் ஏற்பட்டபோது அம்மாநில ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடினர்.
வெள்ளி, 9 ஜூன், 2023
சுப.வீ' மீது லண்டனில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சீமான் !! ஆதாரத்துடன் அம்பலம் !!
Manoj Kumar : ஆமா !! நாம் தமிழரும்,அய்யா சுப.வீயும் நட்பு சக்திகளா இருக்காங்க,,நான் சண்டை மூட்டி விடறேன்,,
சீமான் வந்து என்கிட்ட வாங்கிய கடனை திருப்பி தராம ஏமாத்தீட்டாரு,,
என்னுடைய சொத்தை எல்லாம் ஆட்டைய போட்டுடாரு,,அதனால சீமான் மேல எனக்கு தனிப்பட்ட வன்மம் !!
எங்கிருந்துயா வர்றீங்க !!
சீமானை எதிர்ப்பதன் நோக்கமே சீமான் பெரியாரை இழிவுபடுத்தறான்,,,கால காலமாக உழைத்த திராவிடர் இயக்க தலைவர்களின் உழைப்பை திருடறான்னு தான்,,,
இதுல சுப.வீ'யை தூண்டி விடறனாம்,,,தூண்டி விட்டா நாளைக்கே சுப.வீ போய் சீமானை தாக்க போறாரா ??
சுப.வீ உள்ளிட்ட எமது திராவிடர் இயக்க தலைவர்கள் எல்லாம் ரொம்ப நாகரீகம் பாக்கறாங்க,,,அவங்க தரத்திற்கு சீமானை எல்லாம் ஒரு ஆளா மதிக்கக் கூடாதுனு இருக்காங்க,,,இந்த அயோக்கிய பையனை அடிப்பதற்கு மூத்தவர்களின் பாணி சரி வராதுனு தான் இவ்வளவு பெரிய வேலையை நான் தனி ஆளா பண்ணீட்டு இருக்கேன்,,,
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒருபோதும் விட மாட்டோம்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்
தினத்தந்தி ; திருச்சி, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த பிறகு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும்.
அதேபோல், காவிரி டெல்டாவின் வேளாண் வளர்ச்சிக்கும், இந்தப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரவும் முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில், காவிரியில் உள்ள பாசன கால்வாய்களைத் தூர்வாரும் பொருட்டு கடந்த 2021-22ம் ஆண்டில், 62 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கூடுதலாக ரூ.10 வாங்குவது அதிகாரிக்குத்தான்- டாஸ்மாக் ஊழியர் பேச்சு வைரலானதால் சஸ்பெண்டு
மாலைமலர் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது.
இங்கு மதுபானம் வாங்க சென்ற குடிமகன் கூடுதலாக ரூ.10 கேட்டதால் தன்னிடம் பணம் இல்லை என்றும், நாளை வரும்போது தருகிறேன் என கூறி உள்ளார்.
ஆனால் ரூ.130 மதுபான பாட்டிலுக்கு ரூ.140 கொடுத்தால்தான் சரக்கு கிடைக்கும் என்றும்,
இல்லையெனில் தர முடியாது எனவும் டாஸ்மாக் ஊழியர் கூறினார்.
எதற்காக ரூ.10 கூடுதலாக கேட்கிறாய் என கேட்டதற்கு ஒரு சில அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.
வைரமுத்துக்கு 'கனவு இல்லம்' அவசியமா? வைரமுத்து தெருவுலயா இருக்காரு.விளாசிய சவுக்கு சங்கர்
சென்னை: பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் விரும்பிய இடத்தில் வீடு வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், "தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய பங்களிப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதுகள், சாகித்ய அகாடமி விருது, கலைஞர் செம்மொழி விருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதை பெற்றவர்களுக்கு 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
வியாழன், 8 ஜூன், 2023
மாநில வாரியாக கூட்டணி: திருமாவளவன் அழைப்பு!
minnambalam -monisha : வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெல்ல, மாநில வாரியாக கூட்டணி அமைக்கப்படவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று (ஜூன் 7) இரவு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலைஞரை புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து, “மாநில அரசுகள் இப்போது தான் குமுற தொடங்கியிருக்கின்றன. மத்தியில் அதிகாரத்தைத் திணித்து ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே ஆட்சி என்கிறார்கள். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.
700 இந்தியர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயம்.. போலி சான்றிதழ்கள் அம்பலம்
மாலை மலர் : புதுடெல்லி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும்,
அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது.
மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இலங்கையில் 3 தொன் ஹெரோயின் போதைப்பொருள்! எரிக்கவும் அனுமதி இல்லை கடலில் போடவும் அனுமதில்லை அரசுக்கு நெருக்கடி
ஹிருனியூஸ் : கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயினை அழிப்பது தொடர்பில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும் என்றும், ஆனால் அதற்கான இடம் இல்லாத காரணத்தால் ஹெரோயின் கையிருப்பு சேகரிக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஹெரோயின் கையிருப்புகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க முடியும் என்றும், ஆனால் அதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, 2020ஆம் ஆண்டு முதல் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கையிருப்பு இன்னமும் அப்படியே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விழுப்புரம் அருகே திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்: பட்டியல் பிரிவு இளைஞர் தாக்கப்பட்டாரா? நடந்தது என்ன?
BBC News தமிழ் , மாயகிருஷ்ணன். க : விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 2022- ஆம் ஆண்டு தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோவிலுக்கு சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை அறிய நேரடியாக மேல் பாதி கிராமத்திற்கு சென்றோம்.
என்ன நடந்தது?
புதன், 7 ஜூன், 2023
600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னையில் போராட்டம்!
hirunews.lk : தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஏதிலி அந்தஸ்து தமது சுதந்திரத்தையும் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.
தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், தனியார் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை, அரச வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
எனவே அவர்களில் பலர் அன்றாடக் கூலி வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஈழ ஏதிலிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூரில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள் மூலம் ஆவினில் பல லட்சம் லிட்டர் பால் திருட்டு
மாலைமலர் : வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம் இயங்கி வருகிறது.
விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்தி 10 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
வேலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் தினமும் 76 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். இது தவிர பல ஆயிரம் லிட்டர் பால் சென்னைக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.
ஆவின் அலுவலகத்தில் பால் திருட்டு அடிக்கடி அரங்கேறி வந்தது. இதனை தடுக்க பொது மேலாளர் உத்தரவிட்டார்.
உக்ரைன் அணை மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா: வெள்ள அபாய எச்சரிக்கை! அச்சத்தில் மக்கள்!
tamil.abplive.com : ஆர்த்தி : உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள காக்கோவ்க அணை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 15 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது.
ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து வருகிறது.
பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.
செவ்வாய், 6 ஜூன், 2023
சென்னை-இலங்கை சுற்றுலா போக்குவரத்துக் கப்பல் சேவை: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்...
தினமணி : சென்னை - இலங்கை இடையிலான சா்வதேச சுற்றுலா கப்பல் போக்குவரத்து சேவையை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை, எண்ணூா் காமராஜா் துறைமுகங்களில் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு, பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துறைமுகங்களின் வளா்ச்சி வீதத்தை உயா்த்துவதற்கு காரணமாக இருந்த தனியாா் நிறுவனங்களை பாராட்டி கேடயங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்.
பி.டி.ஆர். ஆடியோ; சிக்க வைத்த காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி என்பவர்தான்?
பிரவீன் சக்கரவர்த்தி |
நக்கீரன் : தி.மு.க. மேலிடத்தின் கோபத்தைக் கிளறிய பி.டி.ஆரின் ஆடியோவுக்குக் காரணமானவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி என்கிற இண்டலெக்சுவல் திருடர் தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரத்தில் சிக்கியிருப்பவர்.
பி.டி.ஆரை குறி வைத்து, பா.ஜ.க. தரப்பு செய்த சதிதான் அந்த ஆடியோ என ஒட்டுமொத்த தி.மு.க.வும் நம்பி வந்த நிலையில், அதற்கு மாறாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் டேட்டா அனலிசிஸ்ட் பிரிவின் சேர்மனாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி என்பவர்தான் அந்த ஆடியோ வில்லன் எனத் தெரிய வந்திருக்கிறது.
யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தின்னு இவரோட ஜாதகத்தை நாம் கிளறியபோது ஏகப்பட்ட திகீர் பகீர் தகவல்கள் நமக்குக் கிடைத்தது.
தீட்சிதர் குழந்தைத் திருமண வீடியோ- முற்றுப்புள்ளி வைப்பது நல்லது: அமைச்சர் மா.சு.
மின்னம்பலம் monisha : குழந்தை திருமணம் குறித்து ஆளுநர் தெரியாமல் பேசி வருகிறார் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி 169 ஆவது வார்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் ‘அண்ணா சாலை’ பூங்காவிற்கான அடிக்கல் நாட்டினார்.
சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் அதிமுகவில் இணைகிறார்? எந்த அணி? மீண்டும் பரபரப்பு..!
tamil.asianetnews.com - Manikanda Prabu : ;மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் சுப்புலட்சுமி ஜெகதீசன். சுமார் 40 ஆண்டுகாலம் திமுகவில் பயணித்தவர். தமிழக அமைச்சர், மத்திய இணையமைச்சர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி. அத்தகைய பதவியையும் கட்சியின் சீனியர்களில் முக்கியமானவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்தார்.
அத்துடன், ஈரோடு திமுக முகமாக இருந்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
யாழ்ப்பாண பல்கலையில் மோதல்: 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை
ilakkiyainfo.com : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் – கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது.
திங்கள், 5 ஜூன், 2023
பாலியல் தொல்லை - சுவர் ஏறி குதித்து தப்பித்த சிறுவன் - பெண் காப்பாளர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகில் பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காப்பகத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் அடிப்படையில் வசித்து வருகின்றனர். இதில் சில ஆதரவற்ற குழந்தைகளும் உள்ளனர். இந்த காப்பகத்தில் காப்பாளராக சீர்காழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் சேர்த்து 12 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காப்பகத்தில் இருந்து 12 வயது சிறுவன் சுவர் ஏரி குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அதனைப் பார்த்த காப்பக நிர்வாகிகள் சிறுவனை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது தனது பாதுகாவலராக உள்ள 40 வயது பெண்மணி தன்னிடம் கடந்த மூன்று நாட்களாக பாலியல் சீண்டலில் ஈடுபடுபடுவதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் காப்பக நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.