சனி, 24 டிசம்பர், 2016

திருமுருகன் காந்தி :அமித் ஷா வீட்டில் துணை ராணுவ துணையோடு ரெய்டு நடத்த வேண்டும்

May 17 iyakkam wants Income tax raid Amitsha house தமிழ்நாடு, கேரளா, வங்காளம் போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தர விடாமல் கூட்டுறவு வங்கிகளை முடக்கிய பாஜக- மோடி அரசு, தனது குஜராத் மாநிலத்தில் மட்டும் திறந்து விட்டிருக்கிறது. குஜராத்தில் 18 கூட்டுறவு வங்கியில் 17 வங்கிகள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. 

சென்னை: தமிழகத்தில் நடத்தப்பட்டதை போல பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்த வேண்டும் என்று 'மே 17 இயக்கம்' தெரிவித்துள்ளது.
'மே-17 இயக்கம்' வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, நிர்வாக இயக்குனராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கோ- கூட்டுறவு வங்கியில் நவம்பர் 8-12ம் தேதிகளுக்குள் ரூ.500 கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.

சிதம்பரம் கடும் விமர்சனம் ... காசோலைக்கு பணம் இல்லையென்றால் வங்கியை சிறையில் தள்ளவேண்டும்? 45 நாட்களில் 62 முறை நோட்டு மாற்றும் விதிகளை மாற்றிய அறிவாளிகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில்

‘பணமதிப் பிழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றியபோது, பிரதமர் மோடியை மிகக் கடுமையாக சாடியிருக்கிறார். அவர் பேசியதாவது : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று, புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட நோக்கங்கள் தோற்றுவிட்டது. இவற்றை அறிமுகப்படுத்தி தவறு செய்துவிட்டதை மோடி ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி நல்ல நோக்கங்களோடுதான் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். ஆனால் அதனால் சாமானியர்கள் பட்ட துன்பங்களைக் கண்டு, இனிமேல்

இப்படியொரு காரியத்தைச் செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டார். ஆனால் மோடியோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே சாதிக்கிறார்.
தப்புக் கணக்கு
கருப்புப் பணத்தையும் கள்ளப்பணத்தையும் தடுப்போம்; ஊழலை ஒழிப்போம் என்ற அவர்களின் உரைகள் பொய்யாகிவிட்டன.

அதிமுகவின் இன்றய கொள்கை முழக்கம் : நான் உன்னை காட்டி கொடுக்கமாட்டேன் ! நீயும் என்னை காட்டிகொடுக்காதே ! ப்ளீஸ் !

ராமமோகன் ராவ் அலுவலகத்தில் சிக்கிய லேப்டாப்பும் டைரியும்தான் இப்போது, அமைச்சர்கள் பலரை அலறவைத்துக் கொண்டிருக்கிறது. வருமானவரித் துறையின் சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், அடுத்த கட்டமாக ராமமோகன் ராவை சி.பி.ஐ. விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ராமமோகன் ராவை நேரடியாக விசாரிக்க, சட்ட திட்டங்களால் சி.பி.ஐ-க்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் சேகர் ரெட்டி விவகாரத்தில், கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் நபராக ராமமோகன் ராவை கொண்டுவரலாம். அப்படி கொண்டுவரும்பட்சத்தில், அவரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. டெல்லியில் அதற்கான மூவ்கள் நடந்து வருகின்றன. ‘தமிழகத்தில் பிஜேபி காலூன்ற வேண்டுமென்றால் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுக்குமே கெட்டபெயரை உண்டாக்க வேண்டும்.

ஸ்டாலின் :சசிகலா பாதுகாப்பக்கு 240 போலீசார் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் .. தீவிரவாதிகளின் லிஸ்டில் இருக்கிறாரோ?

240 பேர் . இவர்களில் ஒரு சூப்பிரண்டெண்டண்ட் (காவல் கண்காணிப்பாளர்), 4 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 4 துணை கண்காணிப்பாளர்கள், 7 ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) உள்ளனர். மற்றவர்கள் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்), தலைமைக்காவலர்கள், கான்ஸ்டபிள்கள் ஆகியோராவர்
ஸ்டாலின்: போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள அதிகார மீறலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: மறைந்த முன்னாள் முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்தில் அரசியல் சட்டரீதியில் அதிகாரம் பெற்ற யாரும் இல்லாத நிலையில் அதிக எண்ணிக்கையிலான காவலர்களும், உயரதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகார மீறலை காவல்துறையின் தலைவர் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெ.மணியரசன் :கன்னட இனவெறி கொண்ட சங்கரமூர்த்தியை தமிழ்நாடு ஆளுநராக்கக் கூடாது!

2007ஆம் ஆண்டு பிப்ரவரியில், காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியபோது, கர்நாடக மாநில உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த சங்கரமூர்த்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையான காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்பை – கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி எனக் கூறி வெளிப்படையாகவே கண்டித்தார். அத்துடன், கன்னட இனவெறியும் தமிழின எதிர்ப்புணர்ச்சியும் கொண்டுள்ள சங்கரமூர்த்தியை, தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்துவது நரேந்திர மோடி அரசு, சட்டப்படியான தமிழர் உரிமைக்கு எதிராக போர் தொடுப்பதாகவே கருத வேண்டியுள்ளது. தமிழர்களுக்கெதிரான காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒருவர், தமிழ்நாட்டின் ஆளுநராக அமர்த்தப்படுவது, தமிழ்நாட்டில் தொடர்ந்து நிர்வாகச் சிக்கலை உருவாக்கும். ஆளுநரே பிரச்சினைக்குரிய நபராக மாறிவிடுவார். காவிரிச் சிக்கல் கர்நாடகம் – தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே வெகு மக்கள் போராட்டங்களை உருவாக்கியுள்ள நிலையில், கர்நாடகத்திலிருந்து ஒருவரை தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அமர்த்துவது, பா.ச.க. அரசு தமிழர்களை தண்டிக்க விரும்புகிறது என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது!

உச்சநீதிமன்றம் சவால் : தமிழர்களே காளைகளுக்கு பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா?

காளைகளுக்கு பதில் சிங்கங்களை தருகிறோம் அடக்குகிறீர்களா தமிழர்களே…? உச்சநீதிமன்றம் இப்படி ஒரு கருத்தைக் கூற பத்தி எரிகிறது முக நூல்மற்றும் சமூகவலைத் தளங்கள். முக நூல் போராளிகள் கொந்தளித்து விட்டார்கள். சம்பளத்தை விட ரெண்டு மடங்கு பணம் தந்தால் நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்களா..?? செய்வீர்களா கணம் நீதிபதி அவர்களே! சேகரன் என்கிற முகநூல் பதிவர் தனது பதிவில் சிங்கத்துக்கு ஒரு கிலோ கறி இருந்தால் போதும் அடங்கி விடும் காளைகள் எதற்கும் அடங்காது. நீயா? நானா? வா மோதிப் பார் என்று நம்மை முறைத்து எதிர் கொள்ளும். சர்க்கஸ் களில் கூட சிங்கத்தை அடித்து, அடக்கி ஆள்வார்கள்.

வேலூர் பெண்போலீஸ் மீது ஆசிட் வீச்சு

வேலூர் : வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மர்ம நபர்கள் இருவர் பெண்
போலீஸ் மீது ஆசிட் வீசி தப்பினர்;. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. ஆசிட் வீச்சு : வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் சுரேஷ்,30; இவரது மனைவி லாவண்யா, 28; திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார். இவர் நேற்று(டிச.,23) இரவு 9.40 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர், இரண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை லாவண்யா மீது வீசிவிட்டு தப்பி ஓடினர். தீவிர சிகிச்சை : வலியால் துடித்த லாவண்யாவை மீட்ட போலீசார் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிட் வீசிய மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். பெண் போலீஸ் மீது ஆசிட் வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தினமலர்

ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி .. போரூர் ராமசந்த்ரா மருத்துவமனையில்


திடீர் உடல்நலக்குறைவு : ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சென்னை அருகே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள ராம மோகன ராவ் வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சம்மந்தி வீடு மற்றும் ராம மோகன ராவ் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
மேற்கொண்டனர்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் மொத்தம் 13 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. 2 நாட்கள் இந்த சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணமும், தங்கமும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. ஆனால், சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை சார்பில் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ராமமோகன ராவ் வீட்டில் நடந்த சோதனையின் போது, ‘ரகசிய டைரி’ ஒன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாகவும், அதில் சில அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களை அவர் எழுதி வைத்து இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எதுக்கும் ஒருவாட்டிக்கு இரண்டு வாட்டி ராவுக்கு  இரண்டு கால்களும் இருக்கான்னு செக் பண்ணிகூங்க

நிஜத்திலும் வில்லன் பிரகாஷ் ராஜ் ... லலிதாவையும் இரு பெண் குழந்தைகளையும் கவனிக்காமல் கைவிட்டார்

நடிகர் பிரகாஷ்ராஜ்.. மனித நேயமிக்கவர். கஷ்டப்படும் யாராக இருந்தாலும் தேடித் போய் உதவும் குணம் கொண்டவர். தமிழ் திரையுலத்தில் இவரால் உதவி பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். காவிரி நதி நீர் போராட்டத்தில் கன்னடர்களை “நீங்கள் மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள்” என்று காட்டமாக பேட்டி அளித்தார். ஆனால், இவர் முதல்மனைவியும் நடிகையுமான லலிதா குமாரியை திருமணம் செய்தார். காதல் திருமணம். லலிதா நடிகை டிஸ்கோ சாந்தியின் சொந்த தங்கை. இருவருக்கும் கருது வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பிரகாஷ்ராஜ் பாலிவுட் டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான ஒருவரை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

Appolo Leak : என்னை அடிக்கிறாய்ங்க என்று அழுத ஜெயலலிதா ... கேரளா டாக்டர்.. .. அப்போலோவில் 22 ஊழியர்கள் ஒரே வாரத்தில் பதவி நீக்கம் ..ஏன்?

ஜெ., மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த அந்த 22 தேதி மாலையில் சசிக்கும் ஜெ.,விற்கும் பயங்கர சண்டையும், கை கலப்பும் நடந்தது. அம்மாவைப் பிடித்து கீழே தள்ளி விட்டார். காப்பாற்ற வந்த வேலைக்காரப் பெண்ணும் தாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார் என்கிற செய்திகள் ஊடகங்களில் பரவியது . அது உண்மை என்றால் அப்போலோவில் ஒரு கேரள டாக்டரிடம் அம்மா ஈனஸ்வரத்தில், “என்னை அடிக்கிறாங்க..”என்று குழந்தை போல சொல்லி கண் கலங்கி இருக்கிறார். டாக்டர் திக்கிட்டு நிற்க வேகமாக சசிகலா உள்ளே வந்து விட்டாராம். அந்த டாக்டரை வேகமாக வெளியே இழுத்து வந்த சசி கடுமையாக விசாரித்தார் என்கிறார்கள். அவரோ முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை என்று சமாளிக்க, சசி நம்பவில்லை என்கிறார்கள். மருத்துவமனையின் உயர்மட்ட விசாரணையில் மட்டும் அந்த டாக்டர் உண்மையைச் சொல்லி இருக்கிறார். அதிர்ந்து போனார்கள். ஆனால், சசியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அந்த டாக்டரை வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள் என்கிறார்கள். அந்த சமயத்தில் ஒரே வாரத்தில் 22 ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள் என்கிற விபரமும் பகீர் என்கிறது. இந்த விஷயங்கள் எல்லாம் எது உண்மை? எது பொய் என்று யார் கூறுவார்கள்..!? லைவ்டே 

கச்சத்தீவு: 250 பக்தர்கள் பங்கேற்பு .. அந்தோணியார் ஆலயத் திறப்பு விழா: இந்தியா - இலங்கையிலிருந்து


கச்சத்தீவு ஆலயத் திறப்பு விழாவில் பங்கேற்க ராமேசுவரத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட மீனவர்கள். கச்சத்தீவு ஆலயத் திறப்பு விழாவில் பங்கேற்க ராமேசுவரத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட மீனவர்கள்.  கச்சத்தீவில் நேற்று நடைபெற்ற அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 250 பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் சேதுபதி மன்னர் களுக்கு சொந்தமாக இருந்தது கச்சத்தீவு. இதை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தி வந்தனர். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் தேவாலயத்தை நிறுவினர். பின்னர் 1974-ம் ஆண்டு இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தப்படி புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பங்கேற்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

என்ன ஆகும் சொத்துக்குவிப்பு வழக்கு ?

jaya-sasiSavukku · அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்படும் வரை, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் எப்போது வெளியிடும் என்று மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மீதம் உள்ள குற்றவாளிகளான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை கிடைக்குமா அல்லது அந்த வழக்கின் ஒரே பொது ஊழியர் மற்றும் முதல் குற்றவாளியான ஜெயலலிதா இறந்துவிட்டதால், குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்படுவார்களா என்று வாதம் நடைபெறுகிறது.

மூத்த வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் பிளவுபட்டே இருக்கின்றனர்.
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற 1991 முதல் 1996 வரையிலான காலத்தில் 66.5 கோடி வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளார் என்று திமுக அரசு வழக்கு தொடர்ந்தது.   இந்த வழக்கு முதலில் சென்னை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

நான்கு அமைச்சர்கள் பதவி பறிபோகுமா? தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக தனது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறைக்கு சென்று அவரை சந்தித்தார். முதல்வர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்திப்பு சிறிது நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக தனியார் துறையில் 100 சதவீதம் கன்னடர்களுக்கே வேலை! புதிய சட்டம் வருகிறது ...?

அரசிதழில் வெளியிட மும்முரம் கன்னடர் என்றால் யார்? சட்டத்தில் திருத்தம் பெங்களூர்: தலைநகர் பெங்களூர் உட்பட, கர்நாடகாவில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்டம் கொண்டுவர உள்ளது. இது பிற மாநில ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர், மைசூர், பெல்காம், மங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் தமிழர்கள் உட்பட பல மாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக அசு கொண்டுவர உள்ள ஒரு சட்டம் பிற மாநில ஊழியர்கள் வயிற்றில் புளியை கரைப்பதாக உள்ளது. சட்டத்தில் திருத்தம் 'கர்நாடக தொழில் வேலை வாய்ப்பு (நிலை உத்தரவு) விதிமுறை 1961' என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, கர்நாடகாவில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பிற மாநில ஊழியர்கள் பணியிடங்களுக்கு வேட்டு வைக்க உள்ளது. இந்த திருத்தம் மூலம் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Late CM ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் .. ஜெயாவின் நெருங்கிய தோழி வக்கீல் கீதா வழக்கு அடித்து கூறுகிறார் !


நக்கீரன் கேள்வி பதில் :
1-ஜெயலலிதாவின் கருப்பு பூனை படை எங்கே போனது ?
2- 1991 இல் திமுக அரசை கலைப்பதாக சந்திரசேகர் வாக்குறுதி கொடுத்து விட்டு பின்பு கலைஞர் நன்றாக ஆட்சி செய்கிறார் எப்படி கலைப்பது என்று பின்வாங்கினர் ,அதனால் வருத்தமுற்ற ஜெயா அரசியலை விட்டு விலகுவதாக கூறினார் . பின்பு சந்திரசேகர் திமுகவை கலைத்தார் . அதனால் ஜெயா என்னை தேர்தலில் அதிமுகவில் வேட்பாளராக என்னை வேண்டினார்.
3- ஜெயாலலிதா  செப்டெம்பர் மாதமே இறந்திருக்க கூடிய சாத்தியம் உள்ளது  எம்பாம் செய்திருப்பது போல தான் தோன்றுகிறது. 
4 -காடியாக் அரெஸ்ட் என்று ஒரு டிராமா ஏன் போட்டாங்க ? அப்புறம் ஆஞ்சியோ என்னாங்க ..அந்த பாத்திமா பாபு ,சரஸ்வதி பேட்டிகொடுக்கிறாங்க ..தமிழ்நாடு ஜனங்க அவ்வளவு முட்டாளா ? காடியாக் அரஸ்ட்டுண்ணா எல்லாம் முடிஞ்சுது அப்புறம் என்ன ஆஞ்சியோ ? ஜனங்க எல்லாம் என்ன படிக்காதவங்களா ?
5 -  8 ந்தேதி  செங்கோட்டையனை  கேட்டேன் , ஒருத்தனாவது அழுதீங்களா .. எல்லாரும் சிரிச்சிகிட்டே இருந்தீங்க .
 6 - ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்காங்க இது நூத்துக்கு நூறு உண்மை.
 7-  அப்புறம் அவுனுங்க : சசிகலா பதவி கேக்கல நாமதான் அவுங்களுக்கு கேக்கிரோம்னாங்க .. இந்த மாதிரி சினிமா கதையெல்லாம் எனேக்கும் தெரியும்னேன் .. அப்புறம் கட்சிய உடச்சிடாதீங்கம்மான்னாங்க . 

ரெயிட் ! தூக்கம் தொலைத்த அதிமுகவும் பாஜகவும் .. ஏவி விட்டவர்களே மாட்டுப்படும் அசம்பாவிதம்?


முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்' என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்தே தகவல் வெளிவருகிறது. ' அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படாமல் இருப்பதற்காக கார்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 
தமிழக அரசின் துறைகளை நோக்கி வருமான வரித்துறையின் பார்வை தீவிரமடைந்து வருகிறது. சேலம், கடலூரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கிகளைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. " ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக்
ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் கோட்டையில் உள்ள அதிகாரிகள்.

ஆக்ரமிப்பில் போயஸ் வேதா நிலையம் ? சசிகலா வீட்டை காலி செய்ய நீதிமன்றத்தை நாடும் ....

Savukku · போயஸ் தோட்டத்தில் உள்ள பெரிய கதவுகள் திறக்கின்றன.   பத்துக்கும் மேற்பட்ட அதிமுக கரை வேட்டி கட்டியவர்கள் நுழைகின்றனர்.   சசிகலா சோகம் ததும்பும் முகத்தோடு அவர்களை வரவேற்கிறார்.  வருகை தந்தவர்களில் பலர் காலில் விழுகின்றனர்.  காலில் விழுவதற்கு எந்த தடையும் சொல்லாமல் சசிகலா அவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொள்கிறார்.      ஜெயலலிதாவின் காலில் அதிமுகவினர் விழுகையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவரின் காலிலேயே பழக்கத்தை மாற்றாமல் அதிமுகவினர் விழுகின்றனர்.   நபர் மட்டும்தான் மாறியுள்ளார்.    காட்சிகள் மாறவில்லை.    கிட்டத்தட்ட ஒரு மகாராணி தர்பார் நடத்துகையில் தன் பிரஜைகளை சந்தித்து குறைகளைக் கேட்டறிபவர் போல இக்காட்சிகள் அரங்கேறுகின்றன.   

போயசுக்கு போகாத ஒ.பன்னீர்செல்வம் .. டெல்லியில் இருந்து வந்தபின்பு போயசுக்கு முழுக்கு ..

Raj  டெல்லி பயணத்துக்குப் பின்னர் போயஸ் கார்டனுக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செல்லாதது சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழக நலன்சார்ந்த கோரிக்கைகள், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது, நாடாளுமன்ற வளாகத்தில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மனுவையும் மோடியிடம் கொடுத்தார் பன்னீர்செல்வம். பின்னர் தமிழக நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இதன்பின்னர் டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் முற்றாக மாறிப் போயுள்ளதாக கூறப்படுகிறது. விரும்பாத மத்திய அரசு விரும்பாத மத்திய அரசு முதல்வராக இருந்தும் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் ஏதுமில்லாத சசிகலாவை சந்தித்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம். எந்திரன் சிட்டிக்கு கோபம் வந்திடுச்சி

டிஜிடல் அக்கிரமம் ..... மருந்தகத்தில் பணம் செலுத்த வரிசையில் நின்றேன்.. வெகு வெகு வெகு நேரமாச்சு,, அப்புறமா பாத்தா டெலிபோன் வேலை செய்யல .. முடியல்ல

Umanath Selvan மருந்தகம் ஒன்றில் சுமார் 800 ரூபாய்க்கு மருந்து வாங்கி பணம் செலுத்த வரிசையில் நின்றேன். வரிசை நகரவே இல்லை. காரணம் எல்லோரிடமும் பணம் இல்லாததால் கார்டில் தேய்க்க காத்திருந்தனர். இரண்டு லேண்ட் லைன் இருக்கின்றது. ஒன்று வர்தா புயலுக்கு போனது வாபஸ் வரவில்லையாம். மற்றொன்றில் தான் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். கால் மணி நேர போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. கடைசியாக மருந்தகத்திற்கு போன் செய்தவர் அழைப்பினை கட் செய்யவில்லையாம். மறுமுனையில் கட் செய்யவில்லை என்றால் அழைப்பு கட் ஆகாதாம். ஸ்பீக்கரில் போட்டு கேட்டால் வீட்டில் ஏதோ பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அந்த எண்ணிற்கு வேறு செல்லில் இருந்து அழைத்தோம், Engaged. ஏதாச்சும் செல் மினுக்கி போன் எடுப்பார்கள் என நப்பாசை. நான்கு பேர் கத்தினோம். ஒரு அம்மணி பதறியபடி எடுத்து ஓ ஓ ஓகே என அழைப்பினை கட் செய்தார்கள். இந்த நாடகம் நடக்கும்போதே சிலர் கிளம்பிவிட்டனர்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

இந்திய பூணூல் கம்யுனிஸ்டுகள் ..போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4

சாதி – மத அமைப்பை உருவாக்குவதில் திட்டமிட்ட கொள்கையும் சூழ்ச்சியும் ஆரிய பார்ப்பனர்கள் பயன்படுத்தியதைப் போலவே இந்தப் இந்திய போலி மார்க்சிஸ்டுகள்
nambhuthiri
நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, மிகக் கொடிய சாதிய அமைப்பையும், சனாதன மதத்தையும் உருவாக்கியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தாம். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த அமைப்புக்கும் அதை உருவாக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கும் எதிராக நியாயமான வெறுப்பும் ஆத்திரமும் கொண்டுள்ளார்கள். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கவும் திசை திருப்பவும் போலி மார்க்சிஸ்டுகளான சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் முயலுகிறார்கள். அதற்காக நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, சாதிய அமைப்பு சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தானே உருவானது அதை நியாயப்படுத்தும் நோக்கம், தத்துவத் தேவையை ஒட்டி உருவானதுதான் இந்துமதம் என்று காட்டமுயன்றுள்ளனர்.

தமிழகத்தை கொள்ளையடித்த கூட்டம் .. வினைக்கள்ளன் , வியாதிக்கள்ளன், விளையாட்டுக்கள்ளன் எல்லா கள்ளனும் போயஸ் வார்ப்புதாய்ன்

சென்னை: வரலாறு காணாத வகையில் தமிழகத்தைச் சுரண்டி நகைகளும், பணமுமாக குவித்த கும்பல் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டுள்ளது. அதிமுக வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும், தமிழக மக்களின் பணத்தையும், வளத்தையும் மிகப் பெரிய அளவில் சூறையாடியுள்ளனர் என்பதன் ஒரு அங்கம்தான் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், சேகர் ரெட்டி போன்றோர். வரைமுறையே இல்லாமல் பாரபட்சமே இல்லாமல், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து மட்ட அதிகாரிகள் மிகப் பெரிய சூறையாடலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையே ராமமோகன் ராவ் வீடுகளில் சிக்கிய தங்கக் குவியலும் சேகர் ரெட்டியின் பணம் மற்றும் தங்கக் குவியலும் வெளிக்காட்டுகிறது. இதற்கு முன்பு கரூரில் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது இருப்பிடங்களில் நடந்த ரெய்டுகளும் இதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 

முதல்வர் நாராயணசாமி : பண அட்டை பரிவர்த்தனை முடியாது! ... ஆளுநர் கிரண் பேடி :டிஜிடல் கக்கூஸ் கட்டியே தீருவேன்


போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால் பண அட்டை பரிவர்த்தனையை புதுவையில் நிறைவேற்ற முடியாது என நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பணத்தட்டுப்பாடு காரணமாக பணமில்லா பரிவர்த்தனையை நாடு முழுவதும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. புதுவை மாநிலத்தில் 100 சதவீதம் பண அட்டை மூலமான பரிவர்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு புதுவை தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுவையின் கிராமப்புறங்களில் வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் இல்லை. அனைவரிடமும் வங்கி கணக்கும் இல்லை. போதுமான அளவிற்கு ஸ்வைப் மி‌ஷன்களும் இல்லை என்பதால் பண அட்டை மூலமான வர்த்தகத்தை புதுவையில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் புதுவை கவர்னர் கிரண்பேடி பண அட்டை மூலமாக பரிவர்த்தனைய நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.

தலைமை செயலக ரெயிட் .. பீதியில் மந்திரிங்க ... சேகர் ரெட்டியின் முதல்வகுப்பு வரை பேசிக்கிட்டாய்ங்க

ரெய்டுகள் வெளியில் நடந்த நிலையில் அது தலைமைச் செயலகத்திற்குள்ளே நடக்கும் என்பதை முதல்வர் பன்னீர் செல்வமோ, அமைச்சர்களோ எதிர்பார்க்கவில்லை. நேற்று முன் தினம் (21-12-2016) தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்த போது முதல்வர் பன்னீர் அலுவலகத்தில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி,வேலுமணி, சின்னசாமி, விஜயபாஸ்கர், கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவையும் கடந்து ரெய்டு தொடர்ந்த நிலையில் , மாலை வரை அச்சத்தோடு பேசிக் கொண்டிருந்தவர்கள் மாலைக்குப் பிறகு கலைந்து சென்றார்கள். தலைமைச் செயலகத்தில் ரெய்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முதலமைச்சரின் அறையில் நள்ளிரவு வரை முதல்வர் பன்னீர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னரே முதல்வர் தனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றுள்ளார்.
ரெய்டு உருவாக்கிய அச்சம் அமைச்சர்களையும் அவருக்கு வேண்டியவர்களிடமும் கடும் பீதியை உருவாக்கியிருக்கிறது. மின்னம்பலம்

ராம் மோகன் ராவ் .. அவன் இவன் என்று குறிப்பிடும் தினமலர் ..

c0u0drzveaavbd9thetimestamil :இன்றைய தினமலர் நாளிதழில் , வருமான வரித்துறை சோதனையை அடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள  ராம் மோகன் ராவ் பற்றி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“நீக்கம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தலைமை செயலாளராக பதவி வகித்த ராம் மோகன் ராவை “அவன்” என்று ஏக வசனத்தில் எழுதப்பட்டுள்ளது, நாளிதழை வாசித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமலரின் அந்த வரிகளை உங்களுக்காக இங்கே எழுத்து வடிவில் தருகிறோம்.
/வருமான வரித்துறை சோதனையை அடுத்து, தமிழக தலைமை செயலர் பதவியில் இருந்து, ராமமோகன ராவ் நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளான். புதிய தலைமை செயலராக, நில நிர்வாக கமிஷனர், கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், அரசியல்வாதிகள் அடிமையாக செயல்பட மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது./
/ தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அவனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், திடீர் சோதனை நடத்தினர்.

75,000 கோடி ரூபாய்; ராம் மோகன் ராவ் வீட்டில் கைபற்றப்பட்ட பணம் இதுதானா ?…

.thetimestamil :Rajarajan RJ :தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரி சோதனை டிசம்பர் 21ம் தேதி நடந்தது. இதனை அடுத்து சேகர் ரெட்டி என்பவர் அதே நாளில் கைது செய்யப்பட்டார். இப்போது, இந்த வருமான வரி சோதனைகளை பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது.
தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே உண்மையான சொத்து மதிப்பு விவரங்கள் தெரியவரும்’ என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வருமான வரி சோதனையில் ரூபாய் 75,000 கோடி மதிப்புள்ள பணம், தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கிடைத்ததாக செய்திகள் கசிந்து இருக்கிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நிறைய பதிவுகள் வர ஆரம்பித்து இருக்கிறது.
தலைமைச்செயலரின் சொத்துக்கணக்கே 75 ஆயிரம் கோடிகள் என்றால், அதிமுக மந்திரிகள், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிபடுமா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ராமமோகன் ராவ் தலைமை செயலராக நியமிக்கப்பட்ட 6 மாதங்களில் இவ்வளவு ஊழலா என்ற அதிரிச்சியான கேள்வியை பலர் எழுப்புகிறார்கள்.  பாவம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாம்மா .... இது ஒண்ணுமே தெரியாமல்(?) ...  குமாரசாமி, மோடி ,அருண் ஜெட்லி எல்லாரையும் வாங்க தெரிஞ்சவங்களுக்கு .... வாங்க தெரியல்லையே?

கலைஞர் வீடு திரும்பினார். அவருக்கு முழு ஓய்வு தேவை : காவேரி மருத்துவமனை

சென்னை காவேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர், இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’கலைஞர் தொண்டை, நுரையீரல் தொற்று முழுவதுமாக குணமடைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கலைஞர் முழு ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால் பார்வையாளர்கள் அவரை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும். தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள சுவாச கருவி சில வாரங்கள் இருக்க வேண்டியுள்ளது. வீட்டிலேயே கலைஞரின் உடல்நிலையை காவேரி மருத்துவமனை தொடர்ந்து கண்காணிக்கும்’’ என்று தெரிவித்துள்ளது நக்கீரன்

சசிகலா ஜெயலலிதாவின் பினாமியாக ..45 நிறுவனங்கள் .. 5000 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கள் ...

IS THE  BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை 'அறப்போர் இயக்கம்' என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை அதில் இணைத்துள்ளனர்.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்  31 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக சொல்லியிருந்தார். எஞ்சிய 12 புதிய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்யமுடியாது என்பதால், பல புதிய நிறுவனங்களை சசிகலா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தொடங்கியுள்ளதாகவும் இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது.வெறும் 7 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரராக இருந்தவர், எந்த வேலையும் செய்யாமல் எந்த அலுவலகமும் செல்லாமல் எவ்வாறு பல கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனார். என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.'பினாமியாக இருந்த சசிகலா, தற்போது அந்த நிறுவனங்களின் உரிமையாளராக ஆகியுள்ளார்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவாள் சாப்பிட்டபிறகு மிச்சம் இருந்தால் சூத்திரகளுக்கு .. காஞ்சி மடதுலதான்யா .. கிரிஜா வைத்தியநாதனுக்கும் இதுக்கும் தொடர்பில்லை.... ஆமா!

காஞ்சி மடத்தில் மத்திய உணவு....
முதலில் பிராமணர்களுக்கு ....அவாள் எல்லாம் சாப்பிட்ட பிறகு மிச்சம் இருந்தால் .... சூத்ராளுகளுக்கும் போடப்படும்...பஞ்சமர்கள் உள்ளே வரவே கூடாது....இது தான் மனுதர்மம்...பார்ப்பன நியதி....இன்றளவும்....
அதே போல தான்....
மருத்துவ பொறியியல் கல்லூரி இடங்கள்....
முதலில்.... அவாளுக்குத்தான் வழங்கப்படும்...
மிச்சம் மீதி இருந்தால் சூத்ராளுக்கு கொடுப்பார்கள்...

உயர் படிப்புக்கு இனி....தோளில் பூணூல் இருந்தால் மட்டும் போதும்...அறிவு ஆற்றல் மதிப்பெண்கள் எல்லாம் தானாக வந்துவிடும்...
பூணூல் இல்லாதவர்கள் எல்லோரும் திறமை இல்லாத முட்டாள்கள்...தகுதியற்றவர்கள் என்பதே பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை...
இதை அமல் படுத்துவதற்கு...அவர்கள் கண்டு பிடித்த குறுக்கு வழிதான்...நுழைவுத் தேர்வு ... திறமை அடிப்படையில் இடம் என்பது...
இந்துத்வா சாணக்கியர்களின் சூழ்ச்சிப்படலம்.  முகநூல் பதிவு

ரெய்டில் சிக்கிய புதிய ரூபாய் நோட்டுகள் அரசின் கருவூலங்களுக்கு வந்தவையா? ஓ.பி.எஸ் மீது மு.க.ஸ்டாலின் சந்தேகம்!

உயர்ந்த பொறுப்பில் இருப்போர் பணியாற்றக்கூடிய தலைமைச் செயலகத்தில் துணை ராணுவத்தின் பாதுகாப்போடு மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான முன்னுதாரணம் படைத்த ராம மோகன் ராவ் ஐ.ஏ.எஸ் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சஸ்பெண்ட் நடவடிக்கைக்குள்ளாகி, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை.
தமிழக அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதை தலைமைச் செயலாளர் பி.ராம்மோகன ராவ் வீட்டில் நடந்திருக்கின்ற வருமானவரித்துறை ரெய்டு பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது. அதை விடக் கொடுமை, ஊழல்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க அனுமதி வழங்கும் மாநில விஜிலென்ஸ் ஆணையர் பதவியிலும் இதே ராம்மோகன ராவ் நீடித்திருந்தார் என்பது தான்.

தினமும் ஊடக அதிபர்களும் பிரமுகர்களும் சின்னம்மாவை சந்திக்கிராக .. மரியாதை நிமித்தமாம்


Mayura Akilan சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் போயஸ் கார்டன் வீடு தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது பிற கட்சியினரும், தொழில் அதிபர்களும், கல்வி நிறுவன அதிகாரிகளும், துணை வேந்தர்களும் சசிகலாவை சில தினங்களாக சந்தித்து பேசி வருகின்றனர். செய்தி நிறுவன அதிபர்கள், தொலைக்காட்சி நிறுவன அதிபர்கள், செய்தி ஆசிரியர்களும் கூட போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தது சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர்.  மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்தார். ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜ்ஸ்ரீபதி, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொதுச் செயலாளர் எஸ். பாபு, ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர்.

அதிமுக பொதுக்குழு 29- ந்தேதி கூடுகிறது .. சசிகலா பொதுசெயலாளராக தேர்வு செய்யப்படும் சாத்தியம் உள்ளது

சென்னை: அதிமுக பொதுக்குழு வரும் 29-ந் தேதி கூடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.  முதல்வர் ஓ. பன்னீர்செல்வமே அதிமுக பொதுச்செயலராவார் எனக் கூறப்பட்டது. ஆனால் திடீரென ஜெயலலிதாவின் தோழி சசிகலா தம்மை அதிமுக பொதுச்செயலராக்கும் முயற்சியில் இறங்கினார். நாள்தோறும் அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு சசிகலாவிடம் நீங்களே பொதுச்செயலராகுங்கள் என கோரிக்கை விடுக்கும்படி சொல்ல வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வரும் 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படக் கூடும் என தெரிகிறது. அதே நேரத்தில் சசிகலா எதிர்ப்பு அணியினர் அதே நாளில் பகிரங்கமாக போர்க்கொடி தூக்குவர் எனவும் கூறப்படுகிறது.tamiloneindia

கார்பாக்கிங் வசதி இல்லாதவர்களுக்கு இனி கார் கிடையாது .. அதாவது பதிவு கிடையாது..

வெங்கையா நாயுடுசாலைகளில் நெருக்கடிveerakumaran. டெல்லி: பார்க்கிங்கிற்கு இடம் இல்லாதவர்களுக்கு கார் பதிவு கிடையாது என்ற புது விதிமுறையை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
ஈ.எம்.ஐ மூலமான கார் விற்பனை, இந்தியர்களின் சராசரி வருமான உயர்வு போன்றவற்றால் கார் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக நகரங்களில் கார் வைத்திருப்பது கவுரவம் சார்ந்த விஷயமாகிவிட்டது.
இதனால் சென்னை, கோவை, பெங்களூர் என எந்த ஒரு நகராக இருந்தாலும் கார் இல்லாத மத்தியத்தர, உயர்தட்டு வீடுகளை பார்க்க முடியாத சூழல். அதேநேரம், காருக்கான பார்க்கிங் வசதியை பெரும்பாலானோர் செய்வதில்லை. வீட்டுக்கு வெளியே சாலையை அடைத்தபடி, தெருவை ஆக்கிரமித்தபடி காரை நிறுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் அந்த வழியாக போகும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுவது வாடிக்கையாகிவிட்டது.  இப்படியே போனால் பணம் இல்லாதவங்க உயிரோட இருக்க அனுமதி கிடையாது என்பாங்க?

ஜெயா வழங்கிய மோடியின் "பன்னீர்" ரிலீஸ் .. ஷீலா பாலக்கிருஷ்ணன் வகையறா கலக்கத்தில் .

அம்மா இருந்தவரை சாதுவாகவே இருந்த முதல்வர் டெல்லி போய் பிரதமரைப் பார்த்து வந்த பின்னர் புயலாக மாறி விட்டார். தமிழகம் வந்த மறுநாளே ராம்மோகன் ராவ் வீட்டில் அதிரடி ரெய்டும் பதவி நீக்கமும் செய்யப்பட்டார். மேலும் ரெட்டி வீடுகளிலும் தொடர்ந்து அதிரடிகள் தொடர்கிறது. ஒரு விஷயத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். நல்ல ஆட்சிக்கு யார் யாரெல்லாம் தடையாக இருந்தார்களோ, இருக்கிறார்களோ, அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்களோ அவர்களை தடையறத் தாக்குவது, தடைகளை உடைப்பது. ஜெ., உடல் நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது மேல் நிலை அதிகாரிகளில்சில கருப்பு ஆடுகள் புகுந்து விளையாடி இருக்கிறார்கள். சில பண முதலைகளுக்கு உடந்தையாக பல பைல்கள் கையெழுத்தாகியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் இடைக்கால முதல்வர் பன்னீரை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. மேலும், எதாக இருந்தாலும் நேராக மருத்துவமனைக்கு சென்று சசிகலாவிடம் தான் அனுமதி பெறுவது அரசு முடிவுகளை எடுப்பது என நிழல் முதல்வராகவே சசியை நடத்தி இருக்கிறார்கள்.

RMR ஜெயலலிதா + சசிகலாவின் கஜானாவாக செயல்பட்டாரா ? ops ஒப்புதலோடுதான் ரெயிட்? ஆர். எம்.ஆரின் 500 கோடி சொத்து!!… .மீதம் எங்கே?.

வரி ஏய்ப்பு செய்ததாக கூறி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம் மோகன்ராவ் வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்தினர். சென்னை, சித்தூர், கர்நாடக உள்ள ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம், அவரது மகன் விவேக் வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள் வீடு என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 100 கோடி மதிப்புள்ள ஆவணங்கள், 50 கிலோ தங்கம் மற்றும் ரூ.48 லட்சம் புதி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், உண்மையாக ராம் மோகன் ராவின் மொத்த சொத்து மதிப்பு 500கோடி என கூறப்படுகிறது. வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கியது 150கோடி மட்டுமே. பிறகு மிதமுள்ளசொத்துக்கள் என்ன வாயிற்று? அவை எங்கே போனது? அவை பதுக்கப்பட்டதா என பல கேள்விகள் எழுகின்றன. காரணம், ரெய்டு நடக்கப்போவது குறித்து இரு தினங்களுக்கு முன்பே ராம் மோகன் ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆனால், என்ன நடந்தது என்பது மட்டும் மறைக்கப்பட்டுவிட்டது

தூத்துக்குடியில் பதட்டம் .. துணை இராணுவம் விரைவு ... இரு வேறு சாதிகளுக்கு இடையில்...

Paramilitary forces hold flag march in Tuticorin Essaki தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மோதல்கள் தலை தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
கோவையில் இருந்து அதி விரைவு படை உதவி கமாண்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 40 அதி விரைவுப் படையினர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்ட கொங்கராயன்குறிச்சி, தோழப்பண்ணை, பத்மநாபபுரம், வெள்ளூர், பேரூர், ஆயத்துறை, சீரமங்கலம் ஆகிய பகுதிகளில் திடீர் அணிவகுப்பில் ஈடுபட்டனர். ஸ்ரீவைண்டம் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உடன் சென்றார்.

அதிமுக + பாஜக பார்ட்னர்களுக்குள் குத்து வெட்டு ... இரட்டை இலைக்குள் தாமரை.. பார்பன சூழ்ச்சி!

தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். ‘ஒரு வார காலத்திற்கு யாரும் வீட்டுப் பக்கமே வந்துவிட வேண்டாம்’ எனவும் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். வேலூரைச் சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரரும் கார்டன் வட்டாரத்திற்கு மிகவும் நெருக்கமானவரான சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட, வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலும் ஆவணங்களை வைத்துக் கொண்டும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை நெருக்கினர். நேற்று காலை முதலே தலைமைச் செயலாளரின் அண்ணா நகர் வீட்டை வளையத்திற்குள் கொண்டு வந்தனர் அதிகாரிகள். துணை ராணுவப் படையின் பாதுகாப்போடு சோதனை நடத்தப்பட்டதையும் அதன்பிறகு, கோட்டைக்குள் நுழைந்ததையும் அமைச்சர்களால் நம்ப முடியவில்லை. “தலைமைச் செயலகத்திற்குள் வருவமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தவுடனே, பல அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அடுத்து எங்கே ரெய்டு என தங்களுக்குத் தெரிந்த வட்டாரத்திற்குப் போன் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர். நேற்று இரவு பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் தலைவராக இருக்கும் சேலம் கூட்டுறவு வங்கிகளில் ரெய்டு நடத்தும் தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போனார்கள் சேலம் அ.தி.மு.கவினர்” என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

மதுசூதனன் : மத்தியரசு தமிழக அரசை உள்நோக்கத்துடன் குறிவைத்து தாக்குகிறது

தமிழக அரசையும், ஆளும் கட்சியையும் குறிவைத்து தமிழகத்தில் நடத்தப்படும் சோதனைகள். ஒரே நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளையும், அரசியல் கருத்துகளையும் உருவாக்கியிருக்கிறது.
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து மத்திய அரசு எங்களை மிரட்டிப் பார்க்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கண்டனம் தெரிவித்துள்ளார்.மணல் குவாரி மற்றும் ஒப்பந்தப்பணி தொழில் செய்து வந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி நுற்றுக்கணக்கான கோடி ரூபாய்களையும், கிலோ கணக்கில் தங்க நகைகளையும் அள்ளிச் சென்றனர். அதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரிடம் அவருக்கு மிகநெருக்கமானத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, ராமமோகன் ராவ் வீட்டிலும், அவரது மகன் விவேக் இல்லம், அலுவலகம், சித்தூர், பெங்களூர் உட்பட 14 இடங்களில் நேற்று முன்தினம் (21/12/2016) வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

ஒதுங்கிய காரணம் என்ன? - கிரிஜஸ்ரீ.. துணிச்சலான தொகுப்பாளியின் பேட்டி டாக்!

மின்னம்பலம் :தமிழ்ப் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் உலகம் முழுவதும் பிரபலமானவர் கிரிஜஸ்ரீ. பாலியல் கல்வி குறித்த பல நிகழ்ச்சிகளை தொகுத்து அளிப்பதன் மூலம் துணிச்சலான பெண் தொகுப்பாளர் என்னும் புகழை பெற்றவர். கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். நிறைய திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் இவரது வாசல் கதவை தட்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக எந்த மீடியாவுக்கும் பேட்டி அளிக்காத கிரிஜஸ்ரீயை மின்னம்பலம்.காம்-க்காக சந்தித்தோம்...
(குறிப்பு: இவர் பெயர் கிரிஜாஸ்ரீ அல்ல. கிரிஜஸ்ரீ தான்)
டி.வி வாய்ப்பு ஏற்பட்டது எப்படி?