Alfred Duraiapa |
ராதா மனோகர் ; இன்று திரு அமிர்தலிங்கம் அவர்களின் 35 ஆண்டு நினைவு நாள்!
இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானதில் திரு அமிர்தலிங்கம் அவர்களின் பங்கு தலையாயது!
திராவிட இயக்கத்தில் தனது அரசியலை ஆரம்பித்து பின்பு திரு செல்வநாயகத்தின் தமிழ் தேசியத்தை நம்பி அதில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார்
செல்வநாயகத்தின் தமிழ் தேசியம் மக்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பல தவறுகளை திருத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
ஆயுத குழுக்களிடம் இருந்து மக்களை மீட்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டார்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாகக்கியத்தில் திரு அமிர்தலிங்கம் அவர்களின் பங்கே பிரதானமானது.
(இது பற்றிய ஒரு விரிவான நூலை திரு கௌரா ராஜசேகரன் Gowra Rajasekaran அவர்களின் சீதை பதிப்பகம் வெளியிடுகிறது)
இதன் காரணமாகவே அவர் அரசியல் அரங்கில் இருந்து கொடூரமாகon 13 July 1989 இல் அகற்றப்பட்டார்
ஜனாதிபதி திரு பிரேமதாசாவோடு புலிகள் ஹனிமூன் கொண்டாடிய காலம் அது
இதன் மூலம் அவர்கள் தங்கள் கொலை வெறியாட்டத்தை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்த காலம் அது!