சனி, 20 ஜூன், 2020

மண்ணை காத்த கிழக்கு போராளிகளை கொல்ல ஆணையிட்ட பிரபாகரன்

Reginold  : புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க
மனமில்லாத காரணத்தினால் முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேயாக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையானதொன்றாக இருந்தது. தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் தலைவர் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டக்கூடிய நிலை இல்லாததன் விளைவே தர்பா காட்டு வாழ்க்கையின் பக்கம் தலைவர் பிரபாகரனை அழைத்துச் சென்றது.
இலங்கையில் தமிழர் வாழ்க்கை இத்தனை நெருக்கடிகளைச் சந்திப்பதற்கும் யார்காரணம் ? இத்தனை அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடந்தது ? இதை எமது உலகத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும் ! தலைவர் பிரபாகரனுடன் 25 வருடங்கள் கருணா அம்மான் இருந்துள்ளார். இலங்கை, இந்திய ராணுவத்தினுடனான வெற்றிச் சண்டைகள் அனைத்தையும் கருணா அம்மானே முன்னின்று நடத்தியுமுள்ளார் மட்டக்களப்பு அம்பாரை பேராளிகளை ஒரு கட்டுக்கோப்பான உக்கிர படையணியாக கருணா அம்மான் வழிநடத்தியதன் விளைவாலேயே ஈழ விடுதலை போராட்டம் உலகத்த்தார்களால் அறியத் தொடங்கியது உலக அரசியலின் நவீன ஓட்டத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் அரசியலில் முதிர்ச்சி அடைய வேண்டியது காலத்தின் நியதியாகும். இதைத்தான் அன்று தலைவர் பிரபாகரனிடம் தனி ஒரு மனிதனாக இருந்து துணிந்து நின்று எடுத்துரைத்தார் கருணா அம்மான் அவர்கள்

நடுத்தெருவிலேயே சாதிவெறியர்களால் அடித்து கொலை .. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் மேலப்பாளையூர்

Dharmadurai Re Mu : கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம்
மேலப்பாளையூர் கிராமத்தைச் சார்ந்த ராஜீ என்பவர் நடுத்தெருவிலேயே சாதிவெறியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18-06-20) இரவு 9 மணியளவில் மேலப்பாளையூர் கிராமத்திலிருந்து C.கீரனூர் கிராமத்து மெடிக்கலுக்கு மாத்திரை வாங்குவதற்காக ராஜீ s/o தியாகராஜன் மற்றும் புகழேந்தி s/o மணி மற்றும் வினோத்குமார் s/o வீராசாமி ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 
இவர்களுடைய வாகனம் C.கீரனூர் பேருந்து நிருத்தம் அருகில் செல்லும்போது வேகத்தடையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த C.கீரனூர் படையாச்சி தெருவை சார்ந்த கான்டீபன் s/o தனசேகரன் என்பவர் இவர்களை வழிமறித்து எங்கே செல்கின்றீர்கள் aநீங்கள் எந்த ஊர் என்று கேட்டுள்ளார். அதற்கு தாங்கள் மேலப்பாளையூர் காலனியை சார்ந்தவர்கள் என்றும் மாத்திரை வாங்க செல்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். 

அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா... அமைச்சர்கள் பீதி: துணை முதல்வர் திடீர் பரிசோதனை

தினகரன் :சென்னை : உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதால், அவருடன் நெருக்கமாக இருந்த அமைச்சர்கள் பீதி அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதேபோன்று முதல்வர் சென்னையில் கொரோனா வைரஸ் நோய் அதிகம் பரவுவதை தடுக்க அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 6 பேரை முதல்வர் நியமித்தார். இந்த அமைச்சர்கள் தினசரி நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று களஆய்வு செய்தனர். இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் கார் டிரைவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் காய்ச்சல், சளி இருந்தது. இவர் 3 நாட்களுக்கு முன் சென்னை போரூர் அருகே மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதியானது. இதைதொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அமைச்சர் பென்ஜமின் கார் டிரைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர்க்கட்சிகள் கேள்வி: பிரதமர் அலுவலகம் விளக்கம்!

மின்னம்பலம் : எல்லையில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்தியப் பகுதிக்குள் சீன ஊடுருவல் இல்லை என்றுதான் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 16ஆம் தேதி இந்தியச் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சீன தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அந்நாட்டு அரசு மறுக்கிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழகத்திலிருந்து அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, நமது எல்லைக்குள் சீனா ஊடுருவ வில்லை. இந்தியாவில் ஊடுருவ நினைத்தவர்களுக்குத் தக்க பதிலடி
கொடுக்கப்பட்டுள்ளது. எதிரிப் படைகள் நிலம், வான், கடல் என எந்த வழியாக வந்து தாக்குதல் நடத்தினாலும், அவர்களிடமிருந்து நாட்டை காக்கும் பலம் நமது படைகளிடம் உள்ளது. நம் மண்ணில் ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு நமது படைகள் பலம் வாய்ந்தவை என்று தெரிவித்துள்ளார்.

27% இடஒதுக்கீடு: கொண்டாட வேண்டியதும் - எதிர்க்க வேண்டியதும் !

   சிறப்புக் கட்டுரை: 27% இடஒதுக்கீடு: கொண்டாட வேண்டியதும் - எதிர்க்க வேண்டியதும் !மின்னம்பலம் - விவேக் கணநாதன் : மருத்துவ உயர்கல்வியிலும், பட்டக்கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை அகில இந்திய ஒதுக்கீட்டில் உறுதிசெய்வது குறித்து ஒன்றிய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு, சமூக நீதி அரசியலின் முக்கியக்கட்டங்களில் ஒன்றாக பார்க்கத் தக்கது.
27% இட ஒதுக்கீட்டை, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிறைவேற்றுவதற்கான விருப்பம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது, அரசியல் ரீதியான முக்கிய வெற்றி.ஏனென்றால், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது ஒன்றிய அரசின் கடமை அல்ல என்றே இதுவரை டெல்லி அதிகாரம் சொல்லிவந்தது. ஆனால், இம்முறை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மனு, அகில இந்திய தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டை தன் அதிகாரத்தால் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

"புதிய, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்" - உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை...

நக்கீரன் :உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பலிகொண்டுள்ள கரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இதுவரை இந்த வைரஸை குணப்படுத்த மருந்து எதுவும் அதிகாரபூர்வமாக கண்டறியப்படாத சூழலில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “உலகம் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. பலர் வீட்டில் இருப்பதால் வெறுப்படைந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வைரஸ் இன்னும் வேகமாகப் பரவி வருகிறது. பல நாடுகள் தங்கள் சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளை மீண்டும் திறக்க ஆர்வமாக உள்ளன. ஆனால் வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் அனைத்தும் மிக, மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளா

சாதனை படைத்துள்ளார் மா.சுப்ரமணியன். asia book of records) இல் சென்னை முன்னாள் மேயரின் சாதனை ...

Chennai Mayor Ma. Subramanian honour to ASIA BOOK OF RECORDS
tamiloneindia : சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டையின் தற்போதய எம்எல்ஏவுமான மா. சுப்ரமணியன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகள் படைத்துள்ளார். தற்போது தனது வீட்டிலேயே எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை நான் ஸ்டாப் ஆக ஓடி ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் (asia book of records).
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மா. சுப்ரமணியன் அவர் தனது பதிவில், 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள்(22.2 ft✖️15.5 ft) எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடைநில்லாமல் (Non stop running) ஓடி,அது நேற்றைக்கு ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு 'ASIA BOOK OF RECORDS'ல் இடம் பெற்றுள்ளதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

இந்திய இஸ்ரேல் உறவில் நெருக்கம் அதிகரிப்பு இஸ்ரேலிய தூதர் !!


காஷ்மீருக்குள் நுழையும் இஸ்ரேல்  
/tamildefencenews.com : இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரோன் மல்கா தி பிரின்டி ஊடகத்தின் ஷேகர் குப்தாவிடம் அளித்த பேட்டியில் கொரோனா தொற்று காலத்தில் இந்திய இஸ்ரேலிய உறவு பலப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு தொலைபேசி மூலமாக ஆலோசனை மேற்கொண்டதாகவும, கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த இணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இஸ்ரேலின் உயிரியல் ஆராய்ச்சி கல்லூரி ஆகியவை இணைந்து கொரொனா வைரஸ் ஒழிப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் உலகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

சீனாவை விட பாஜக-தான் பெரிய எதிரி: ஆகார் படேல்!... முன்னால் அம்னெஸ்டி இன்டெர்நேசனல் தலைவர்

bjp-is-the-bigger-enemy-china-isn-t-trying-to-destroy-india-internally-aakar-patelhindutamil.in : இந்திய-சீன எல்லையில் கடும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தியுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்தியா அமைதியையே விரும்புகிறது, ஆனால் தொடர்ந்து சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி, “சீனாவுடன் நாம் ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவதெல்லாம் பயன் அளிக்காது, பிரச்சினைத் தீர்க்காது. சீன ராணுவம் திரும்பிப் போகமாட்டார்கள். இந்திய மக்களும், பிரதமர் மோடியும் பொறுமையாக இருக்கமாட்டார்கள்.
இந்த புதிய நிலைப்பாட்டை மோடி ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆதலால், நாம் போருக்குப் போகப்போகிறோம், அது குறிப்பிட்ட இலக்கை நோக்கிய போராக இருக்கலாம். கடந்த 1962-ம் ஆண்டு நம் கழுத்தைச் சுற்றி என்ன தொங்கினாலும் சரி, அதேபோன்ற சூழல் இப்போது இல்லை
கடந்த 1962-ம் ஆண்டில் இருந்ததைப் போன்று இந்தியர்கள் மென்மையாக இருப்பார்கள் என்று சீனா நினைத்துவிடக்கூடாது.” என்று சீனாவுக்கு எதிராக பலரும் குரல் எழுப்ப முன்னாள் அம்னெஸ்டி இந்தியா தலைவர் ஆகார் படேல் தன் சமூகவலைத்தளமான ட்விட்டரில் மேற்கொண்ட பதிவு ஒன்று வைரலானது.

சென்னை முடக்கம்: அரசு முடிவின் முழுப் பின்னணி!

சென்னை முடக்கம்:   அரசு முடிவின் முழுப் பின்னணி!மின்னம்பலம் : நாளுக்கு நாள் பொழுதுக்கு பொழுது சென்னை மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, அதிவேகமாய் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னைக்கு முழு பொது முடக்கம் மீண்டும் அவசியம் என்று ஜுன் முதல் வாரத்திலேயே குரல்கள் எழத் தொடங்கின. ஆனால் அப்போது அரசுத் தரப்பில் சென்னையில் முழு முடக்கம் என்பது வதந்தி என்றும் அப்படி ஒரு திட்டமில்லை என்றும் கூறி வந்தனர். ஒருபக்கம் இப்படிக் கூறினாலும் இன்னொரு பக்கம் சென்னையின் நிலைமை அரசை மிகவும் யோசிக்க வைத்தது.
அரசுத் தரப்பின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்துதான், சீல் வைக்கப்படுகிறது சென்னைஎன்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.

சீன பொருட்களை தூக்கி எறியுங்கள் .... தினமலர்

Made in China Patel 
 சீனப் பொருட்களை புறக்கணிப்போம், தூக்கியெறிவோம்! தினமலர் : கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்குவது போல், கடலுக்கு சொந்தக்காரன், மீன் கடன் வாங்குவது போல், சீனாவில் இருந்து தேவையில்லாத பொருட்களை எல்லாம் இந்தியா வாங்கிக் கொண்டிருக்கிறது.
சீனாவில் இருந்து இந்தியா அதிகமாக இறக்குமதி செய்யும் பொருட்களின் சுருக்கமான பட்டியல்: அகர்பத்தி, மிட்டாய், பட்டாசு, பொம்மை, பரிசுப் பொருள், சைக்கிள், பெண்களுக்கான அழகு
சாதனங்கள், ஜவுளி, பர்னிச்சர்கள், கைக்கடிகாரங்கள், செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், உரம், மருந்துகளுக்கான மூலப்பொருட்கள், மருத்துவ சோதனை மற்றும் சிகிச்சை கருவிகள்.இவை எல்லாம், இந்தியாவிலேயே தயாரிக்க முடியாத பொருட்களா என்ன?அதே வேளையில், இந்தியாவில் இருந்து பருத்தி, செம்பு, பெட்ரோலியப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கான சிறிய கருவிகள் ஆகியவற்றை மட்டுமே சீனா இறக்குமதி செய்கிறது.
இந்த இறக்குமதி- ஏற்றுமதி, சீனாவுக்கு அமோக லாபமாகவும், இந்தியாவுக்கு பயங்கர நஷ்டமாகவும் இருந்து வருகிறது. 2001ல் வெறும் 1 பில்லியன் டாலர் (7,600 கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்களை மட்டுமே சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இப்போது, சீனப் பொருட்களின் இறக்குமதி அளவு 70 பில்லியன் டாலர் (5 லட்சத்து, 32 ஆயிரம் கோடி) சீனப் பொருட்கள், இந்தியச் சந்தைகளில் வந்து குவிகின்றன.

வெள்ளி, 19 ஜூன், 2020

திரை இசை கலைஞர்கள் . சங்க உறுப்பினர்கள் 1,248.. .. பெரும்பாலும் வருமானம் அற்ற நிலையில்

vikatan.com - அய்யனார் ராஜன் - ஏ.ஆர்.ரஹ்மான்,: .” கொரோனா லாக்டௌன் மொத்த சினிமாவையும் முடக்கிப்போட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள்,
தியேட்டர் உரிமையாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழிலாளர்கள் என சினிமாவின் அத்தனை அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் இந்த லாக்டௌன் நாள்கள் பெரும் துயரங்களுடனேயே நகர்கின்றன. தயாரிப்பாளர்களுக்கே நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நடிகர்கள் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிலையில் இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களும் இந்த லாக்டெளன் காலத்தில் கடுமையான நிதிப்பிரச்னைகளைச் சந்தித்துவருகிறார்கள். ஒரு பெரிய படத்துக்கான இசையமைப்பு வேலைகள் நடக்கின்றன என்றால் 400-500 இசைக்கலைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும். இதுதான் அவர்களுக்கான பிரதான வருமானம். இதுதவிர கலைநிகழ்ச்சிகள் நடக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற உதவும். ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா மட்டுமல்லாமல், வெளியே நடக்கும் கலை நிகழ்சிகளும் இல்லாததால் இசைக்கலைஞர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதாகச் சொல்கிறார்கள்.
வருமானம் இல்லாமல் தவிக்கும் இசைக்கலைஞர்களுக்கு உதவிகள் செய்ய இப்போது இளையராஜா, ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள்.

10 இந்திய வீரர்களை விடுவித்தது சீனா .. பேச்சு வார்த்தையின் பின்பு ..

பேச்சுவார்த்தைக்கு பிறகு 10 இந்திய வீரர்களை விடுவித்தது சீனாமாலைமலர் :புதுடெல்லி: லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தியா-சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சீன ராணுவம் முதலில் அத்துமீறியதால் மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவம், இந்திய வீரர்கள் அத்துமீறியதாக சீன ராணுவமும் குற்றம்சாட்டுகின்றன.
இந்த மோதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உயர்மட்ட அதிகாரிகள் அளவில் கடந்த 16ம்தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், சீனாவால் சிறைப்பிடிக்கப்பட்ட 2 உயர் அதிகாரிகள் உள்பட 10 இந்திய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வென்டிலேட்டர் இணைப்பை துண்டித்ததால் இறப்பு ... சூடாக இருந்ததால் ஏசி பிளாக்கை .. ராஜஸ்தான் அறிவாளிகள்

Rajasthan shocker! COVID-19 patient dies after family turns off ventilator to switch on cooler
malaimalar :வென்டிலேட்டர் இணைப்பை உறவினர்கள் துண்டித்ததால் கொரோனா நோயாளி உயிரிழந்தது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
வென்டிலேட்டர் இணைப்பை உறவினர்கள் துண்டித்ததால் உயிரிழந்த கொரோனா நோயாளி- சிறப்பு குழு விசாரணை மரணம் கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனையின் கோரோனா சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பற்று வரும் ஒரு நோயாளியை பார்ப்பதற்காக குடும்பத்தினர் வந்துள்ளனர். அந்த நோயாளிக்கு வென்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. . அப்போது, அந்த அறை மிகவும் சூடாக இருந்ததால், வென்டிலேட்டர் இணைப்புக்கான பிளக்கை பிடுங்கிவிட்டு, அதில் ஏர் கூலருக்கான பிளக்கை சொருகி உள்ளனர். வென்டிலேட்டர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பேட்டரி தீர்ந்ததால் நோயாளியின் நிலைமை மோசமடைந்தது. உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். நோயாளியின் உயிரைக் காப்பாற்ற தீவிர முயற்சி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 15ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன : சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.பி.அன்பழகனுக்கு மனப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனையில் பங்கேற்றிருந்தார். கே.பி.அன்பழகனுடன் ஜெயகுமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர்

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது உண்மையில் எப்போது? காட்டிக்கொடுத்த கழிவுநீர்


BBC  : இத்தாலியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது 2020 பிப்ரவரி மாதம்தான் கண்டறியப்பட்டது என்றாலும், அதற்கு பல நாட்களுக்கு முன்னரே அங்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது அங்குள்ள இரு நகரங்களின் கழிவு நீரில் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிலன் மற்றும் டூரின் ஆகிய நகரங்களின் கழிவுநீர் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்றே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கண்டறியப்பட்டுள்ள காலத்துக்கு முன்னதாகவே உலக நாடுகளில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தற்போது உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று பரவுவதற்கு காரணமாக உள்ள கொரோனா வைரஸ் சென்ற ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் முதல் முதலில் கண்டறியப்பட்டது.

ஏ.எல்.ராகவன் காலமானார்.. பழம்பெரும் பாடகர்

பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்மாலைமலர் : பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர் ஏ.எல்.ராகவன். 1950-களில் இருந்து 1970 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இவரது மனைவி பிரபல நடிகை எம்.என்.ராஜம் ஆவார்.
ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இவர் பாடிய காலத்தால் அழியாத சில சிறந்த பாடல்களாவன, எங்கிருந்தாலும் வாழ்க, சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து, பொம்பளை ஒருத்தி இருந்தாளாம் உள்ளிட்ட பல பாடல்களால் நன்கு அறியப்பட்டவர்.

எல்லை மோதல்: மோடியின் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

மின்னம்பலம் :பிரதமர் நரேந்திர மோடி
தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. லடாக்கிலுள்ள இந்திய- சீன எல்லையில் ஜூன் 16ஆம் தேதி இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்தியச் சீன எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (ஜூன் 19) அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 20 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

எடப்பாடியை சந்தித்த முன்னாள் திமுக எம்.பி ராமலிங்கம் .. தி.மு.க.-விற்கு எதிராக மு.க.அழகிரி நகர்வு :

dmk
 நக்கீரன் :சமீபத்தில் மேட்டூர் அணையைத் திறக்கப்போன எடப்பாடியை, தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம்  சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் பின்னணி குறித்து விசாரித்த போது, மேட்டூர் அணை திறப்புக்காக சேலத்துக்குப் போன எடப்பாடியை, கே.பி.ராமலிங்கம் சந்தித்து ஏறத்தாழ 40 நிமிடம் பேசியிருக்கிறார்.
மு.க.அழகிரியின் ஆலோசனைப்படிதான் இந்தச் சந்திப்பு நடந்தது என்று, ராமலிங்கம் தரப்பிலேயே டாக் அடிபடுவதாகச் சொல்கின்றனர். இந்தச் சந்திப்பின் போது, ’ஒன்றிணைவோம் வா’ திட்டம் மூலம் நிவாரண உதவிகளைச் செய்யும் தி.மு.க. அதற்கான 90 சதவிகித நிதியையும், அதற்கான பொருட்களையும் தொழிலதிபர்கள், காண்ட்ராக்டர்கள், வியாபாரிகள் என்று பல தரப்பினரையும் கட்டாயப்படுத்தித்தான் வாங்கியிருக்கிறது என்று எடப்பாடியிடம் ராமலிங்கம் தரப்பு சொன்னதோடு, அது சம்பந்தமான பட்டியலையும் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றனர்.

சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்


மாலைமலர் :எல்லையில் சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பதிவு: ஜூன் 19, 2020 06:58 AM புதுடெல்லி: இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த இந்திய ராணுவத்தின் 76 வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடுமாறி நின்ற வீரரை முன்னே தள்ளிவிட்டு ..பின்னே வந்த போட்டியாளன்


Guru Murugesan : இந்த ஓட்ட பந்தய போட்டியில் முதலில் இருப்பவர்
கென்யாவின் ஆபேல். அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்.
இறுதி சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்துவிட்டோமென்று (எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்தில்) நினைத்துக்கொண்டு நின்று விடுகிறார் ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன.இதல்ல முடியும் எல்லை என்று கூச்சலிடுகிறார்.
ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவரும் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்கு தள்ளி எல்லையை கடக்க வைக்கிறார் .
போட்டி முடிந்து பத்திரிக்கை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்க ஏன் இப்படி செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே.எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்றுவிட்டார்.
அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி விடை பெற்றார்.

ஊதியம் வழங்காவிட்டால் கிரிமினல் குற்ற தண்டனை கொடுக்கப்படும்

சாவித்திரி கண்ணன் : கிரிமினல் தண்டணை கொடுக்கப்படும் ஜாக்கிரதை…! பேரிடர் காலத்தில் உயிரைக் கொடுத்து பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஒழுங்கா சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தால் அதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது…!’’
இப்படியொரு எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும் ,மாநில அரசையும் பார்த்துச் சொல்வது வரலாற்றிலேயே இது தான் முதன்முறையாக இருக்க கூடும் என நினைக்கிறேன்!
சமூக அந்தஸ்த்தின் மிக உயர்ந்த தளத்தில் வைத்து மதிக்கப்பட்டு வருபவர்கள் மருத்துவர்கள்! செவிலியர்கள் எனப்படுபவர்களை மற்றொரு தாயாக பாவிக்கும் சமூகம் இது! அதே போல அடித்தளத்தில் அயராது பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இல்லையென்றால் ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் ஸ்தம்பித்துவிடும்!
உயிரைக் கொடுத்து ஊழியம் செய்யும் தன் ஊழியர்களான இவர்களுக்கு கூட சரியாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள் என்றால், இந்த அரசுகளின் யோக்கியாம்சம் தான் என்ன? நம்பகத்தன்மை என்ன?

இந்திய மாநிலங்களுக்கு இணையான அதிகாரம் .... இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 6

   அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் :
16-ந் திகதி டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட அகில உலக
அமரர் .நீலன் திருச்செல்வம்
பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு மகாநாடு கூட்டப் பட்டது. பல மணித்தியாலங்கள் அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து எமது பிரச்சனையையும், அதற்கான பரிகாரத்தையும் பாரறியச் செய்ய ஒரு வாய்ப்பை இந்திய அரசே ஏற்படுத்தி கொடுத்தத. அப்பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு டாக்டர். நீலன் திருச்செல்வம் தலைமை தாங்கினார். அதே தினம் ராஜ்யசபையில் திருமதி இந்திரா காந்தி பேசும்போது இலங்கையில் இனக்கொலை (Genocide) நடப்பதாகக் கூறி உலகின் முன் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அன்றே கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. ராஜாராம் தலைமையில் நான் ஆற்றிய உரை பொதுநல நாடுகளின் பாராளுமன்றக் குழுக்கள் எல்லாவற்றிற்கும், தமிழ்நாடு சட்டமன்ற குழுவின் சார்பில் அதன் தலைவர் என்ற முறையில், திரு. ராஜாராம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டது. இப்படியே உலக நாடுகளுக்கெல்லாம் எம் நிலையை விளக்க நாம் எடுத்த முயற்சி, மக்கள் துன்பப்பட ஓடிப் பதுங்கும் செயலா, அல்லது துன்பம் துடைக்க இந்திய உதவியை, அதற்கு உலகின் ஆதரவை திரட்டும் முயற்சியா? என்பதை நம்மக்கள் நிச்சயம் அறிந்தே இருக்கின்றனர்.

வியாழன், 18 ஜூன், 2020

ராணுவத்தில் ஒருவர் கூட குஜராத்தியர்கள் இல்லை .. ஆட்சியில் .... உள்ளார்கள் ..

Maha Laxmi : இந்திய படை வீரர்கள்
1 சந்தோஷ் பாபு - ஹைதராபாத் (தெலுங்கானா)
2 நுணுரம் சோரன் - மயூர்பானிஜ் (ஒடிஷா)
3 மந்திப் சிங் - பாட்டியாலா (பஞ்சாப்)
4 சத்னம் சிங் - குருதேவ் புரதம் (பஞ்சாப்)
5 K.தங்கம் - மதுரை (தமிழ்நாடு)
6 சுனில் குமார் - பாட்னா (பீகார்)
7 பிபுல் ராய் - மிர்சா (உத்திரபிரதேசம்)
8 தீபக் குமார் - (மத்திய பிரதேசம்)
9 ராஜேஷ் முகூர்த்தி - பிர்பாம் (மேற்கு வங்காளம்)
10 சாஹிப் கஞ் (ஜார்கண்ட்)
11 கணேஷ் ராம் - கங்கின் (சத்யா)
12 சந்திரயான் பிரைம் - கந்தமால் (ஒடிஷா)
13 அன்குஷ் தாகூர் - ஹிமாச்சல் பிரதேஷ் (ஹிமாச்சல் பிரதேஷ்)
14 குர்பிந்தர் - சங்க்ருர் (பஞ்சாப்)
15 குருதேஜ் சிங் - மான்சா (பஞ்சாப்)
16 தொடர்புக்கு (பீகார்)

சாலை டெண்டர்கள் கைவிடப்பட்டது .. ஆர் எஸ் பாரதி வழக்கை வாபஸ் பெற்றார்

  மாலைமலர் : சென்னை: கிராமப்புற இணையதள சேவைக்கான பைபர் நெட் டெண்டர்
மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘டெண்டரில் யாரும் பங்கேற்காதபோது ஊழல் நடந்துள்ளதாக, அரசியல் காரணங்களுக்காக வழக்குத் தொடரபட்டுள்ளது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
‘ஆர்.எஸ். பாரதி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்துவிட்டது.

தமிழக ஊர்களின் பெயர் மாற்றம் கைவிடப்படுகிறது .பிந்திய செய்தி

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள், இடங்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்பக ஆங்கிலத்தில் ஒலிக்கும் வகையில் திருத்தி வெளியிடப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.
  தினகரன் :சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள் செய்து தமிழக அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது. இதில், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள த என்ற எழுத்திற்கும், ‘Th’ என்று உள்ளது. அதுபோலவே, பல ஊர்களில் த என்ற எழுத்திற்கு ‘Th’ என எழுதி இருக்கிறார்கள். ஆனால், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களின் பெயர்களில், த என்ற எழுத்திற்கு வெறுமனே  T என்ற ஆங்கில எழுத்து மட்டுமே உள்ளது. வேலி என்பதற்கான நெடில் எழுத்திலும் மாற்றம் இல்லை. எனவே, அதை முன்பு போலவே, டிருநெல்வெலி என்றே வாசிக்க முடியும்.  அதேபோல, தென்காசி என்பதும் ஆங்கிலத்தில் டென்கசி என்றே வாசிக்கக்கூடியதாகவே இருக்கிறது. திருத்தம் தேவை.

பாசஞ்சர் ரயில்கள் இனி எக்ஸ்பிரஸ் ரயில்களாம்.. அதாவது கட்டண உயர்வு~

train வெப்துனியா : பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற திடீர் உத்தரவு: பயணிகள் அதிர்ச்சி பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற திடீர் உத்தரவு
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் மாநில மற்றும் மத்திய அரசுகள் வருமானத்தைப் பெருக்குவதற்காக மறைமுகமாக பல கட்டணங்களை உயர்த்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பாசஞ்சர் ரயில்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணித்து வந்த நிலையில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலாக அவை மாற்றப்படுவதால் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.

அண்ணா பல்கலையை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை...

Chennai  Corporation Announces anna universityநக்கீரன் : நாளை முதல் சென்னையிலும்,  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரின் சில பகுதிகள் ஆகியவற்றில்  கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றே தலைமை செயலாளர் நடத்திய ஆலோசனையில் சென்னையில் வாகன கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை நேற்று சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.

பீலா ராஜேஷுக்கு புதிய பொறுப்பு . பீலா கட்டிய பிரமாண்ட மாளிகை வீடியோ


மின்னம்பலம் : முன்னாள் சுகாதாரத் துறை செயலாளருக்குத் தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்தது போல, தற்போது கொரோனாவை தடுக்க மேலும் 33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.
திண்டுக்கல் மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக மன்கத் ராம்சர்மா, ஈரோடு - உஷா, கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி, கரூர் - விஜயராஜ் குமார், திருச்சி -ரீட்டா ஹரீஷ் தாக்கர், மதுரை - தர்மேந்திர பிரதாப் யாதவ், புதுக்கோட்டை- ஷம்பு கல்லோலிகர், தஞ்சாவூர்- பிரதீப் யாதவ், நாமக்கல் - தயானந்த் கட்டாரியா, சேலம்- நசிமுதீன், விருதுநகர் - மதுமதி, தூத்துக்குடி - குமார் ஜெயந்த் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ அதிசயம்; 5 நாட்களில் நலமடையும் கரோனா நோயாளிகள்; சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்; அன்புமணி

.hindutamil.in :நோயாளிகள் 5 நாட்களில் குணமடைவதால், கரோனா அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான
இது தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா வைரஸ் நோயை சித்த மருத்துவத்தின் மூலம் 5 நாட்களில் நலமாக்கி சாதனை படைத்து இருப்பதாகவும், கரோனா மையங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனையாகவே தோன்றுகிறது.

“சீன ராணுவத்தினரோடு கைகலப்புக்கு அனுமதி தந்திருக்க கூடாது” – முன்னாள் தளபதி வி.பி.மாலிக்

(கோப்புப்படம்)BBC : எல்லையோரத்தில் சீனப் படையினரோடு கைகளால் சண்டை போடுவதற்கு இந்தியப் படையினருக்கு அனுமதி அளித்திருக்க கூடாது என கருத்துத் தெரிவித்துள்ளார் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி வி.பி.மாலிக்.
இந்தியா – சீனா இடையே உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் பதற்றம் ஏற்படுவதற்கு எதிராளிதான் காரணம் என்று இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக்கொள்கின்றன.
ஜூன் – 15/16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையிலான மோதலில் தங்கள் தரப்பில் 20 பேர் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தங்கள் தரப்பு இழப்பு குறித்து இதுவரை சீனா ஏதும் தெரிவிக்கவில்லை.

புலியின் மீது சவாரி விட்டவர்கள் பல ரகம் . .. புலிகளின் இஸ்லாமியர்கள் மீதான போர்குற்றங்கள் ..


Nilaviniyan Manikkam :புலியின் மீது சவாரி விட்டவர்கள் பல ரகம் . உண்மையாகவே புலியால் சொல்லொணா துன்பம் அனுபவித்தவர்கள் பெரும்பாலும் தாங்கள் புலி இயக்கத்தை பற்றி கொண்டிருந்த அபிப்பிராயங்கள் பலவும் மிக தவறானவை என்பதை காலம் கடந்தாவது புரிந்து கொண்டார்கள் .
புலி இயக்கத்தை வைத்து பணம் சேர்த்தவர்கள்தான் இன்றும் தங்கள் வியாபாரத்தை தொடர துடிக்கிறார்கள்.
இவர்களால் ஸ்ரீ லங்கா அரசை எதிர்த்து பெரிதாக குரல் எழுப்பி விட முடியாது. ஸ்ரீ லங்கா அரசின் மீதுள்ள பயம் மட்டும் காரணம் அல்ல . அதை விட முக்கியமான பல விடயங்கள் உள்ளன.
முதலில் இவர்கள் மீதெல்லாம் எக்கச்சக்கமான சட்ட விரோத குற்றங்கள் அல்லது  சந்தேகங்கள் பல நாடுகளிலும் உள்ளன . எந்த நேரமும் எந்த வழக்கு பாயுமோ எந்த வில்லங்கத்தில் மாட்டுவோமோ என்ற பயம் ஒருபக்கம்.
புலி மாபியா பண கொடுக்கல் வாங்கல் தகராறுகள் இத்தாலிய மாபியாக்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது . அடிக்கடி மேற்கு நாடுகளில் இடம்பெறும் சூட்டிங்ஸ் மற்றும்  விபத்து போன்றவைகளின் பின்னணியில் இந்த பங்கு பிரித்தல்களும் உண்டு.
இலங்கை அரசு மீது போர்குற்ற விசாரணை என்பது  ஒரு பொழுது போக்கு நாடகம். இரு பகுதியினரும்  அறிந்த விடயம் அது .
போர் குற்ற விசாரணை என்றால் வெறுமனே ஸ்ரீ லங்கா அரசு மீது மட்டுமல்ல.. ..  புலிகள் மீதும் போர்குற்ற விசாரணை நிச்சயம் வரும்.
குறைந்த பட்சம் புலிகளின்  முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் இன சுத்திகரிப்பு குற்றச்சாட்டுக்கள் .எல்லாம்   மிக மிக பாரதூரமானவை என்பது எல்லோருக்கும் தெரியும் .

ஆன்லைன் வகுப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!.. நிழல் நிஜமாகாது

மின்னம்பலம் : ஆன்லைனின் வகுப்பு நடத்துவதற்கு திமுக, பாமக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் இயல்பான சூழலில் 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனினும் மத்திய அரசு வெளியிட்ட ஊரடங்கு வழிகாட்டுதல்களில் ஆன்லைன் வழிக் கல்வி ஊக்குவிக்கப்படுவதாகத் தெரிவித்தது. இத்தகைய சூழலில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்துவருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், வை-ஃபை மற்றும் பிராட்பேண்ட் வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. குறிப்பாகக் கிராமங்களில் இந்த வசதிகள் கிடைப்பதே மிகவும் அரிது.

BBC சென்னையிலிருந்து கூட்டமாக வெளியேறும் மக்கள்.. கொரோனா வைரஸ் ஊரடங்கு

சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த மாத இறுதிவரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பும் பலரை செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பார்க்க முடிகிறது. செய்தியாளர்: முரளிதரன் காசி விஸ்வநாதன் bbc tamil

கொரோனா இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலி - உயிரிழப்பு அதிகரித்ததின் காரணம் என்ன? தினத்தந்தி ":  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை இந்தியாவில் குறைவாகவே இருந்து வந்தது. குறிப்பாக கடந்த 6 தினங்களாக இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 300 முதல் 400-க்குள் இருந்தது.
ஆனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 2,003 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

`6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!' - கீழடி ஆச்சர்யம்

இலந்தக்கரையில் சிரியா நாட்டு தங்க நாணயம்
கீழடி (அகரம்)   விகடன் :இலந்தக்கரையில் சிரியா நாட்டு தங்க நாணயம் கீழடி அகழாய்வின் தொடர்ச்சியான அகரத்தில் கி.பி 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி யில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியைக் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.
கீழடி (அகரம்) கொரோனா ஊரடங்கு காரணமாக அகழாய்வுப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கின. ஆனால் மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கிய சில நாள்களில், கடுமையான மழைப்பொழிவு காரணமாகப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அகழாய்வுப் பணி நடைபெறும் குழிகளில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, மீண்டும் பணிகள் முழுவீச்சில் தொடங்கினஅதனைத் தொடர்ந்து மணலூரில் உலை போன்ற அமைப்பும் கீழடியில் பெரிய அளவிலான விலங்கின் எலும்புகளும் கொந்தகையில் முதுமக்கள் தாழியும் மனித எலும்புகளும் கிடைத்தன.
இந்நிலையில் அகரத்தில் கி.பி- 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதனால் கீழடி 6-ம் கட்ட தொல்லியல் ஆய்வில் 4 இடங்களிலும் முக்கியமான தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

மிரட்டும் கொரோனா... விரட்டும் வி.ஐ.பி-க்கள்!

எடப்பாடி பழனிசாமிஸ்டாலின் விகடன் : ஆர்.பி. அ.சையது அபுதாஹிர் ந.பொன்குமரகுருபரன் : . மூலிகைக் குளியல்... அசத்தும் எடப்பாடி! - மகனுடன் உடற்பயிற்சி... உடலினை உறுதிசெய்யும் ஸ்டாலின்! - அறைக்குள் முடங்கிய ரஜினி, கமல்
தமிழகத்தின் தலைமைச் செயலகம் தொடங்கி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை கொரோனாவுக்கு பேதம் இல்லை.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், இளவரசர் சார்லஸ், இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் யாக்கோவ் லிட்ஸ்மேன், கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி என வி.வி.ஐ.பி-க்களையும் விட்டுவைக்கவில்லை கொரோனா. தமிழகத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உயிரையே பறித்திருக்கிறது கொரோனா. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான பழனி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

டெல்லியில் உலகின் கவனத்தை தமிழர் பக்கம் திருப்பிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ..... இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 5

அமரர் அப்பாபிள்ளை  அமிர்தலிங்கம்  ( இலங்கை முன்னாள் எதிர்கட்சி தலைவர்)
இந்த சூழ்நிலையில் இலங்கைக்குத் தன் வெளிநாட்டு அமைச்சர் திரு.
நரசிம்மராவ்   அவர்களை அனுப்பினார் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா
காந்தி. ஜூலை 29-ந் திகதி இந்திய அமைச்சரின் வருகைக்குப் பின் தான்
ஜனாதிபதி ஜயவர்த்தனா நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். இதைத் தொடர்ந்து இந்திரா அம்மையாரைத் திருப்திப் படுத்துவதற்காக       தன் சகோதரர் திரு. எச். டபிள்யூ. ஜயவர்த்தனாவை டெல்லிக்கு அனுப்பிவைத்தார். இச்சந்தர்ப் பத்தில் தான் பாரதப் பிரதமர் இலங்கையின் இனப்பிரச் சனையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் நல்லெண்ணச் சேவையை நல்க, முன்வந்தார். ஜனாதிபதியோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு
A.Amirthalingam - M.Sivasithambaram MP
பேசியபின் இலங்கை அரசு அச்சேவையை ஏற்றுக்கொள்வதாகத் திரு. எச். டபிள்யூ. ஜயவர்த்தனா அறிவித்தார். தமிழ் மக்களின் உண்மை நிலையைப் பாரதப் பிரதமருக்கு எடுத்து விளக்குவதற்காக  நான் டெல்லி செல்ல வேண்டுமென்று நமது மக்களில் பலர் கேட்டுக் கொண்டதன் பேரில் நான் மாறுவேடத்தில் கொழும்பு சென்று ஆகஸ்ட் 13-ந் திகதி தமிழ் நாடு வந்து சேர்ந்தேன்.
மக்கள் துன்பப்பட அவர்களைக் கைவிட்டு என்னைக் காத்துக் கொள்ள நான் இந்தியா வரவில்லை. இந்தியாவின் உதவியோடு ஏற்கனவே நாம் பாரதப் பிரதமரோடு சில ஆண்டுகளாக ஏற்படுத்திய தொடர்பைப் பயன்படுத்திக், காலத்திற்குக் காலம் பலிக்களத்தில் நிறுத்தப்படும் இலங்கை தமிழ் மக்களின் இன்னலுக்கு ஓர்  நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்னும் ஒரே உறுதியோடுதான் இந்தியா வந்தேன்.

புதன், 17 ஜூன், 2020

சமஸ்கிருதமாக உருமாறிய சில தமிழ் சொற்கள் ....

ஆனந்தமூர்த்தி  :குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
அருள்மிகுவை சிறீயென ஆக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
நீரை ஜலமாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
கதிரவனை சூரியனாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
ஐயாவை ஜீயாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
மழையை வருணணாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
தீயை அக்னியாக்கி குண்டத்தை யாகமாக்கி
காற்றை வாயுவாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
பூவை புஷ்பமாக்கி பூசனையை பூஜையாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி படையலை நைவய்தியமாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி பிணத்தை சவமாக்கி
மக்களை ஜனங்களாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஒன்பதாம் நாளை நவமியாக்கி பத்தாம் நாளை தசமியாக்கி பிறந்தநாளை ஜெயந்தியாக்கி பருவமடைதலை ருதுவாக்கி அறிவைப் புத்தியாக்கி
ஆசானைக் குருவாக்கி.  மாணவனை சிஷ்யனாக்கி

தமிழ்நாடு அரசு பணிகளில் வட இந்தியர்கள் .. பெயர்களை பாருங்கள் .. தமிழக இளையோர் நடுத்தெருவில் ..?

தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேளையில், தமிழக மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கியுள்ளது தமிழக அரசு..
சிங்கராயர் ஆரோக்கியசாமி  : இந்த பெயர்களை எல்லாம் படிங்க..!
இவர்கள் தான் இனி ந‌ம் பகுதிக‌ளின் T.N.E.B Department A.E-க்க‌ள்.
*1) Satya Kumar Behera*
*2) Pendyala Jothsna Praveena.P*
*3) Nimmala Meher Santhosh*
*4) Suparna .M.Das*
*5) Soni Kumari.S*

மோடி சீன நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்.. (மோடி : paytm கரோ ..)

Karthikeyan Fastura : 56' சீனாவுக்கு இப்படி அநியாயத்திற்கு குனிஞ்சு போறாரேன்னு எல்லாம் கோபப்பட கூடாது.
பணமதிப்பிழப்பு நடந்த பிறகு மின்னல் வேகத்தில் paytm மூலம் இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவிற்கு அழைத்து வந்து அதற்கு வெடச்சு நின்னு விளம்பரமும் கொடுத்தாரே. அப்பவே சீனாவிற்கு தலையாட்டி பொம்மையாகிவிட்டார். paytmல் அதிக பங்குகள் வைத்திருப்பது அலிபாபா தான். அது தனியார் நிறுவனம் என்று சொல்லிக்கொண்டாலும் சீன அரசின் முழுக்கட்டுப்பாட்டில் முழு ஆசிர்வாதத்தில் தான் இயங்குகிறது. இல்லையென்றால் இந்தளவிற்கு எல்லாம>் வளர வாய்ப்பில்லை. ஒரு சீன நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிடராக போஸ் கொடுத்தவரை பதிலடி கொடுங்க என்றால் எப்படி கொடுப்பார்?
எள்ளளவும் தேசப்பற்றோ, தலைமைபண்போ, சுயசிந்தனையோ இல்லாத ஒரு தலைவரை பெற்றிருக்கிறோம்.

முன்னாள் திமுக எம் எல் ஏ கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி மாலைமலர் :  திமுக நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி விபி கலைராஜன் சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக ஆயிரத்திற்கும் மேல் சென்ற பாதிப்பு நேற்று மட்டும் ஆயிரத்திற்குள் வந்துள்ளது. இந்நிலையில்
இன்று திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வி.பி.கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது

வசூலில் அடிவாங்கிய அன்பே சிவம் ... நொந்து நூடுல்ஸ் ஆனோம் ... குஷ்பு சுந்தர்

கமல் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை... ரசிகருக்கு பதிலடி கொடுத்த குஷ்புமாலைமலர் : அன்பே சிவம் படத்தால் சுந்தர்.சி-க்கு ஏற்பட்ட நிலைமை... ரசிகருக்கு விளக்கம் கூறிய  குஷ்பு
குஷ்பு ட்வீட்சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோரின் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் அன்பே சிவம். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை.  இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட தமிழ் படமாக அன்பே சிவம் இருப்பதாக கமல் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர் இரண்டு வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது” என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், வின்னர் 2001-ம் ஆண்டு படமாக்கப்பட்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்விக்கு பின்னர் சொந்தமாக கிரி படத்தை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது.
அன்பே சிவம் 2003-ம் ஆண்டிலும், கிரி 2004-ம் வருடமும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்.
அதனால் ரொம்ப அதிக பிரசங்கம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளி நினைச்சிட்டு முட்டாளா தெரியுரிங்க ” என்று அந்த நெட்டிசனுக்கு பதிலளித்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரணம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கின் பின்னணி!

சுஷாந்த் சிங் மரணம்: சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கின் பின்னணி!minnambalam.com:
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், கரண் ஜோகர் உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டார்.
எதிர்காலம் குறித்த ஏராளமான கனவுகள் கண்ட இளம் நடிகரின் இந்த திடீர் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக பாலிவுட் பிரபலங்கள் சல்மான் கான், கரண் ஜோகர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 பேர் மீது சுதீர் குமார் என்னும் வழக்கறிஞர் பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

தேசபக்தி போர்வையில் திரைப்பட விளம்பரம்

தேசபக்தி நிவாரணமா? படத்துக்கான விளம்பரமா?மின்னம்பலம் : தேசபக்தி நிவாரணமா? படத்துக்கான விளம்பரமா? அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், வெற்றி பெற்ற சினிமா படங்களின் கதாநாயகர்கள் போன்றவர்களின் முகமூடி அணிந்து அவரது தொண்டர்கள், ரசிகர்கள் கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடுவது தமிழகத்தில் அன்றாட வழக்கமாக இருந்து வருகிறது
இந்த சூழ்நிலையில் இந்தியா-சீன எல்லையில் நடந்த ராணுவ தாக்குதல்களில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரை சினிமா நடிகருக்கு இணையாக ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள க/பெ. ரணசிங்கம் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விருமாண்டி இயக்கியுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளில் வரும் வசனங்கள் சாதி மத, அரசியலைத் தாண்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இன்னைக்கு தண்ணீர், காற்றை வைத்துத் தான் உலக அரசியல் நடக்கிறது.
“இது புறம்போக்கு இடம்.. அதை எப்படி பட்டா போட்டீங்க, 2000 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு, விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்” “நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிட்டு இருக்காங்க, அந்த (சோலார்) கரெண்ட் கம்பெனி காரன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கிறான் பிளேட் கழுவ. பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா?” ஆகிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.